Friday, July 25, 2008

எதிர்வினை



"இன்றைய குண்டுவெடிப்பு
சேதம் குறைவுதான்

ஒரே ஒரு பெண் மட்டும் இறந்தாள்"

அலட்சியமாய் சொல்லும்
அரசாங்கத்திற்குத் தெரியுமா?

பிணத்தின் முன்
கதறிக்கொண்டிருக்கும்
குழந்தையின் துயரம்

- ரசிகவ் ஞானியார்

5 comments:

சந்தனமுல்லை said...

மனதை அறுக்கும் உண்மை..ஒன்று என்றாலும் இழப்பு இழப்புதான்!!

Aruna said...

அரசாங்கத்திற்கு ஓட்டுக்களாகட்டும்........இறப்புகளாகட்டும் எப்போதும் எண்களைத் தவிர எதுவும் தெரிவதில்லை......
அன்புடன் அருணா

Anonymous said...

இறப்பின் எண்ணிக்கை
அதிகமாக இருந்திருந்தால்
இறந்தவர்களின் வீட்டிர்க்கு சென்று
ஆறுதல் என்ற பெயரில்
ஆதரவு திறட்டியிருப்பர்
அவர்களின் கட்சிக்கு

உதவுகிறோம் என்று கூறி
ஊர்வளத்தை நடத்தி
கூட்டனி கட்சியிடம்
தான் கூட்டிய
கூட்டத்தை காட்டி
மந்திரி பதவிகளில் பங்கு கேட்டிருப்பர்

பாவம்
இறப்பு கம்மியென்பதால்
இவர்களால்
எதுவும் செய்ய இயலவில்லை
அந்த வெருப்பில் வந்ததே
இந்த வார்த்தைகள்
பிணங்களை கொண்டு
அரசியல் நடத்தும்
இவர்களுக்கு என்ன தெறியும்
பிணத்தின் முன்
கதறிக்கொண்டிருக்கும்
குழந்தையின் துயரதை பற்றி
நண்பரே!
உண்மை சொன்னாய்
இந்த உலகிற்க்கு

தமிழ்போராளி said...

vanakkam..ayyaaa
ungal ella kavithaigalaum padithan
rompa nalla erukku thudarnthu elutha vaalthukiren
veera
dubai

zeenathvenkat said...

Nan ungal kavithaigalai padipadhu idhuve mudhal murai.
ungal kavithaigal en unarvugalai prethipalikindrana. Thodarattum ungal payanam.

தேன் கூடு