Wednesday, July 02, 2008

அவனுக்கு பெயரே இல்லை




சில நேரம் சுரண்டுவாள்
சில நேரம் கால்சட்டை பிடித்திழுப்பாள்
சில நேரம் காலில் விழுவாள்
சில நேரம் கைவலிக்க கும்பிட்டுக்கொண்டிருப்பாள்

பொம்மைகள் பிடிக்கும் விரல்களில்
சில்லறைகள்

அறைந்துவிடலாம் போலத்தோன்றும்
அந்தச் சிறுமியின் தந்தையை!

ஆனால்
அவனை நான் பார்த்ததேயில்லை

- ரசிகவ் ஞானியார்

6 comments:

Anonymous said...

indha mathiri enakku naraiya thonum.. ana onnum panna mudiyathu.. itha encourage panna koodathu-nu andha chinna pasangal avoid pannavum mudiyathu... avangalukku verum coins kuduthu anuppavum mudiyatha neram romba kashtama irukkum...

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Anonymous Ezhilanbu said...

indha mathiri enakku naraiya thonum.. ana onnum panna mudiyathu.. itha encourage panna koodathu-nu andha chinna pasangal avoid pannavum mudiyathu... avangalukku verum coins kuduthu anuppavum mudiyatha neram romba kashtama irukkum...//

ம் நன்றி விமர்சனத்திற்கு

காசு போட்டாலும் கனத்த மனதுடன்தான் போடவேண்டியதிருக்கும்

MyFriend said...

//பொம்மைகள் பிடிக்கும் விரல்களில்
சில்லறைகள்//

ம்ம்.. கனமான தருணம். தந்தால் எங்கே இது இப்படியே தொடருமோ என்ற பயம். தரலைண்ணா அந்த பிஞ்சு வயிறு காயுதே என்ற வருத்தம்.

இரண்டுக்கும் நடுவில் குழப்பத்துடன் எப்போதுமே நான். :-(

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Blogger .:: மை ஃபிரண்ட் ::. said...

ம்ம்.. கனமான தருணம். தந்தால் எங்கே இது இப்படியே தொடருமோ என்ற பயம். தரலைண்ணா அந்த பிஞ்சு வயிறு காயுதே என்ற வருத்தம்.

இரண்டுக்கும் நடுவில் குழப்பத்துடன் எப்போதுமே நான். :-(//



ம் நிறையபேருக்கு இந்த அனுபவங்கள்தான்

நன்றி

King... said...

என்ன செய்வதென்று தெரியாமல தவிக்கும் தருணங்களில் இதுவும் ஒன்று...:(

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Blogger King... said...

என்ன செய்வதென்று தெரியாமல தவிக்கும் தருணங்களில் இதுவும் ஒன்று...:(//


ம் நன்றி நண்பரே..

இரண்டு நிலையான இதயம் செய்வதறியாது திகைக்கும்

தேன் கூடு