Friday, July 25, 2008

பெங்களுரில் 6 இடங்களில் குண்டு வெடிப்பு

பெங்களுரில் 6 இடங்களில் , ஒசூர் ரோட்டில் உள்ள மடிவாளா செக்போஸ்ட், மைசூர் ரோட்டில் உள்ள நாயந்தஹள்ளி, கோரமங்களா-ஆடுகோடி பகுதியில் ஒரு இடத்திலும், கண்டோன்மென்ட் லாங்போர்ட் டவுனிலும் இந்த குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன.

இப்போது கிடைத்த தகவல்படி 3 பேர் மரணமடைந்துள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர். அதிகரித்துக் கொண்டே வருகின்றது
இன்று பிற்பகல் 1.30 மணியளவில் மடிவாளா செக்போஸ்ட் அருகே உள்ள போரம் மால் அருகே முதல் குண்டு வெடித்துள்ளது. இரண்டாவது குண்டு மைசூர் ரோட்டில் வெடித்தது.

மூன்றாவதாக கோரமங்களா-ஆடுகோடி பகுதியிலும், பின்னர் லாங்போர்ட்டவுனிலும் குண்டுகள் வெடித்தன.

வெடித்தவை அனைத்துமே குறைந்த சக்தி கொண்ட குண்டுகளே என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் நகர எல்லையில், ஓசூர் செல்லும் சாலையில் மடிவாளா உள்ளது. இதையடுத்து கோரமங்களா உள்ளது. ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதிகள் இவை.

இவை தவிர மேலும் இரு இடங்களிலும் குண்டுகள் வெடித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

உடனடியாக Bomb disposal squads விரைந்து சம்பவ இடத்திற்குச் சென்றது. குண்டு வெடித்த பகுதிகள் மிகவும் பரபரப்பானவை. மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதிகள்.
ஆகவே பெங்களுர் கொஞ்சம் பதட்டமாக உள்ளது.


- ரசிகவ் ஞானியார்

7 comments:

HASANI said...

அமைதியை சீர்குலைக்கும் இந்தத் தீவிரவாதச் செயலுக்குப் பின் இருக்கும் அரசியலை உடனே அறிந்து அநியாயக்காரர்களின் முகங்களில் கரி பூச வேண்டும்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// HASANI said...

அமைதியை சீர்குலைக்கும் இந்தத் தீவிரவாதச் செயலுக்குப் பின் இருக்கும் அரசியலை உடனே அறிந்து அநியாயக்காரர்களின் முகங்களில் கரி பூச வேண்டும்.//

உயிர்ப்பலிகளால் மதங்களையோ தலைவர்களையோ திருப்தி படுத்திவிட முடியும் என நினைக்கின்றார்கள்

வல்லிசிம்ஹன் said...

இப்போது பங்களூரின் முறையா.

பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி எப்போது.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Blogger வல்லிசிம்ஹன் said...

இப்போது பங்களூரின் முறையா.

பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி எப்போது.//


முறைகள் மாறினாலும் செயல்கள் மாறவில்லை

rapp said...

:(:(:(

நாமக்கல் சிபி said...

:((

NewBee said...

:((((((

தேன் கூடு