இதனை எழுதலாமா வேண்டாமா என்று கூடத் தெரியவில்லை..? எழுதுவதற்குண்டான விசயங்கள் இதில் இருக்கிறதா என்பதைப் பற்றியும் கவலையில்லை.
ஆனாலும் மனதில் குழப்பமாக இருக்கின்றது. இங்கே சுற்றியிருக்கும் நண்பர்கள் யாரிடமும் கூறினால் அவர்கள் உடனே சிரிக்க ஆரம்பிக்கின்றார்கள். அதனால் யாரிடமாவது இதனைச் சொல்லியே தீர வேண்டும் என்று தோன்றிதால் நெருங்கிய நண்பர்களான உங்களுடன் பகிர்கின்றேன்.
இன்று 6-6-6 என்ற தேதியாக இருப்பதனால் என் மனஓட்டத்தை இன்று எழுதுவதற்கு சரியாண தருணமாக இருக்க கூடும் என்று எழுதுகின்றேன்.
நீங்கள் எப்பொழுதாவது நேரம் பார்க்கும்பொழுது 11:11 , 10:10 , 2 :22 என்று யதேச்சையாக பார்க்க நேரிட்டால் மனதில் ஒரு சின்ன சந்தோஷம் .
உடனே பக்கத்தில் உள்ள நண்பர்களிடத் காட்ட முயல்வோம்.
"ஏய் இங்கே பாரு டைம் 4:44 ன்னு காட்டுது.."என்று
எனக்கும் அதே சந்தோசம்தான். பார்க்கும்பொழுதெல்லாம் 11 :11 , 10:10 , 3 :33 என்று வருகின்றது. ஆச்சர்யமாக இருந்தது. "என்னடா பார்க்கும்பொழுதெல்லாம் இப்படி ஒரே எண்ணாக தோன்றுகின்றது" என்று.
ஆனால் கடந்த 3 வாரங்களாக இது அடிக்கடி நிகழகின்றது. ஒரு நாளைக்கு சுமார் 5 முறையாவது இவ்வாறு பார்க்க நேரிடுகின்றது. எனக்கு கடிகாரம் கட்டும் பழக்கமில்லை. வேலை நேரத்தில் எப்பொழுதாவது மொபைலில்தான் டைம் பார்ப்பேன். அப்படி பார்க்கும்பொழுதெல்லாம் அதுபோன்ற ஒத்த எண்களாகவே வருகின்றது.
இது 1 நாள் அல்லது 2நாள் என்று இருந்தால் கூட யதேச்சையாக இருக்கலாம் என்று எண்ணிக்கொள்ளலாம். ஆனால் கடந்த 3 வாரங்களாக இப்படி வருவதால் மனதில் இந்தச் சஞ்சலம் ஏற்பட்டது.
நேற்று முன்தினம் இப்படித்தான் இந்தியாவுக்கு போன் செய்து விட்டு எவ்வளவு நேரம் பேசியிருக்கிறேன் என்பதைப் பார்த்தால் ஆச்சர்யம் 04:44 நிமிஷங்கள் பேசியிருந்தேன்.
பின் அடுத்த அரைமணிநேரத்தில் மறுபடியும் போன்செய்து விட்டு நேர அளவு பார்த்தால் 06:06. எனக்கு மிகுந்த ஆச்சர்யமாகி விட்டது. டைம்தான் இப்படி என்றால் பேசிய நேரங்கள் கூட இப்படியா..?
பின் மொபைலைச் சார்ஜரில் வைத்து விட்டு எடுப்பதற்காக முயன்றபொழுது 11:11
ஷாப்பிங் செல்லும்பொழுது திடீரென ஞாபகம் வந்தவனாய் நேரம் பார்ப்பதற்காக மொபைலை எடுத்தபொழுது 08:08..
நண்பர்களுடன் தேநீர் அருந்திகொண்டு பேசிக்கொண்டிருக்கும்பொழுது "டேய் டைம் என்னடா ..நேரமாச்சு போவோமா" என்று கேட்கும் சமயம் டைம் பார்க்கும்பொழுது 12:12
அலுவலகம் விட்டு அறைக்குத்திரும்பும்பொழுது 06:06 என்று இந்த நிகழ்வுகள் என்னைத் பின் தொடர்ந்து வருகின்றது.
இன்று கூட இதனை தட்டச்சு செய்து கொண்டிருக்கும்பொழுது ஆபிஸ்பாயிடம் தேநீர் கொண்டு வரச்சொல்ல,
அவனும் "என்ன சாப்பாடு நேரமாச்சு இப்ப தேநீர் சாப்பிடுறீங்க? " என்று கேட்க,
நானும் "என்ன சாப்பாடு நேரமாச்சா?" என்று நேரம் பார்க்க 11:11 என்று காட்டுகிறது. இன்னமும் குழப்பம் அதிகரிக்கின்றது.
ஏன் 11:12 , 3:15 என்று காட்டக் கூடாது. இதனை தற்செயல் என்று என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
கெட்ட நேரம் நல்ல நேரம் என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. காலங்கள் இறைவன் சம்பந்தப்பட்டவை. ஆகவே அவற்றில் குறை கூறுதல் இயலாது.
இது எதனால் இப்படி ஏற்படுகின்றது என யாரிடமாவது விளக்கம் கேட்க அவர்கள் ஏதாவது அவர்கள் இஷ்டத்திற்கு கூறிவிட்டால் பின் அதற்கும் சஞ்சலமடைந்து கொண்டு இருக்க நேரிடும். ஆகவே யாரிடமும் விளக்கம் கேட்கவில்லை..
நேற்று கூட என் நண்பன் ஹைதர் அறைக்கு சென்று அவனுடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுது 10:10 மணி காட்டவே.."அட இங்க பாரு " என்று அவனிடம் சொல்ல ,
"என்ன ஞானி.. நேரமாச்சா" - ஹைதர்
அவனிடம் வேறு வழியின்றி உண்மையைச் சொல்லவேண்டியதாயக் போயிற்று..
அவர் "இது ரொம்பச் சாதாரணம்டா நீ டைம் பார்க்காம இருந்து பாரு..அது மாதிரி தெரியாது..

இதுக்கு போய் யாரும் வருத்தப்படுவாங்களா..? " என்று ஆறுதல் படுத்தினான்.
ஆனால் திரும்ப திரும்ப இப்படி நடந்து கொண்டே இருக்கின்றது. அவன் கூறியபடி நான் நேரமே பார்க்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்து பின்பு அலட்சியமாக எப்பொழுதேனும் பார்க்கும்பொழுது கூட அது மாதிரி நிகழ்கின்றது.
இன்றைக்கு மட்டும் இரண்டு முறைப் பார்த்துவிட்டேன்.
முதல் முறை பார்க்கும்பொழுது 09:09

அதன்பிறகு 11 : 11
மனக்குழப்பத்தில் தொடர்கின்ற இந்த நிகழ்வுகள் எனக்கு சஞ்சலத்தை தந்தாலும் இது தற்செயல்தான் ..தற்செயல்தான்..தற்செயல்தான்..என்று எனக்குள்ளேயே ஆறுதல் படுத்திக்கொண்டு இருக்கின்றேன்..
- ரசிகவ் ஞானியார்
42 comments:
மனப்பிராந்திதான் காரணம். உதாரணத்துக்கு உங்களது இப்பதிவு பதிந்த நேரம் 1.15 AM என்று காண்பிக்கிறது. 13.13 அல்ல. அதெல்லாம் மனதில் பதிவதில்லை அதுதான் விஷயம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அட உங்க பதிவ படிச்சுட்டு நானும் மணி பார்த்தேன் 2.22 இதெல்லாம் ஒரு தற்செயல் நிகழ்வு அவ்வளவுதான். :)
மணி பாக்கறதுல பிரச்சன, அதனால
நீங்க இனிமே டிஜிட்டல் வாட்ச்ல டைம் பாக்காம, அனலாக் வாட்சுல டைம் பாருங்க!
;-)
மனக்குழப்பத்தில் தொடர்கின்ற இந்த நிகழ்வுகள் எனக்கு சஞ்சலத்தை தந்தாலும் இது தற்செயல்தான் ..தற்செயல்தான்..தற்செயல்தான்..என்று எனக்குள்ளேயே ஆறுதல் படுத்திக்கொண்டு இருக்கின்றேன்..//
இந்த பதிவு ச்சும்மா ஒரு டைம் பாஸ்க்காக எழுதுனதுதானே?
இல்ல உண்மையிலேவா?
06-06-06 ஆயிரம் வருசத்துக்கு ஒருமுறைதான் வருமாம்.. அந்த தேதியில பிறந்தவங்க தலையில 666ன்னு இருக்குமாம்.. அது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்குத்தான் நீங்க சொன்ன நிகழ்வுகளும் இருக்கும்னு நினைக்கிறேன்..
இல்லன்னா ஒங்களுக்கு உண்மையிலேயே இமாஜினேஷன் கொஞ்சம் ஜாஸ்தி.. சரியா:)
//மனப்பிராந்திதான் காரணம். உதாரணத்துக்கு உங்களது இப்பதிவு பதிந்த நேரம் 1.15 AM என்று காண்பிக்கிறது. 13.13 அல்ல. அதெல்லாம் மனதில் பதிவதில்லை //
ம் யோசிக்க வேண்டிய விசயம்தான்
நன்றி டோண்டு.. ( நீங்க உண்மையான டோண்டா..:) )
//அட உங்க பதிவ படிச்சுட்டு நானும் மணி பார்த்தேன் 2.22 இதெல்லாம் //
நான் எவ்வளவு சீரியஸா சொல்றேன்
நீங்க நக்கல் பண்றீங்களே.. :(
//ஒரு தற்செயல் நிகழ்வு அவ்வளவுதான். :)//
உங்களுக்கு அடிக்கடி அப்படி பார்க்க நேர்ந்தா தற்செயல்னு சொல்வீங்களா..?
//இந்த பதிவு ச்சும்மா ஒரு டைம் பாஸ்க்காக எழுதுனதுதானே?
இல்ல உண்மையிலேவா?//
அட நிசமாத்தான்ங்க சொல்றேன்..
//06-06-06 ஆயிரம் வருசத்துக்கு ஒருமுறைதான் வருமாம்.. அந்த தேதியில பிறந்தவங்க தலையில 666ன்னு இருக்குமாம்.. //
6-6-6 ல் சாத்தான் பிறக்கும்னு சொல்வாங்க.. :)
//உண்மையிலேயே இமாஜினேஷன் கொஞ்சம் ஜாஸ்தி.. சரியா:) //
எனக்கு இமாஜினேஷன் ஜாஸ்தியா இருக்குற மாதிரி தெரியலையே..
எனக்கு இது காரின் ஓடா மீட்டர் பார்க்கையில் சில பல நேரங்களில் நிகழ்வதுண்டு. உங்களைப்போல் எப்போதுமல்ல....
//நீங்க இனிமே டிஜிட்டல் வாட்ச்ல டைம் பாக்காம, அனலாக் வாட்சுல டைம் பாருங்க!//
அட இந்த ஐடியா புதுசா இருக்கு
நன்றி ஞான்ஸ்
எல்லாம் 'அந்த' பயம்தான்.விடுங்க
ஞானியாரே!இன்னும் ஒரு மாசத்துல
எல்லாம் தெளிஞ்சுறும்.
இதே மாதிரி சில நேரங்களில் நானும்
உணர்ந்திருக்கிறேன்.எல்லாம் நன்மைக்கே என்று கொள்ளுங்கள்
ஞானியார்!!!!!!.
Ayya,
Intha pathiva ithuku munnal engayo paditha naabagam....
Mansoor
//Ayya,Intha pathiva ithuku munnal engayo paditha naabagam....
Mansoor //
இங்கதான் படிச்சிருப்பீங்க மன்சூர்
ஒருவேளை உங்களுக்கு கஜினி மாதிரி மறதி அதிகமோ?
நல்ல டைம்லே படிச்சேங்க உங்க போ ஸ்ட்ட...இப்போ 4.44 ஆச்சு!!
ஏதோ ஆனதும் மாதிரி உங்களுக்கு தோன்றினாலும் எல்லாமே எதார்த்தமாய் நிகழ்தல்தான் ரசிகவ் இரண்டு நாட்களுக்கு "நேரம்" பாக்காமே எல்லாம் செய்யுங்கள்..அப்புறம் கவனுச்சு பாருங்க...இதையே நினைத்துக் கொண்டிருந்தால்தான் என்ன ஆச்சு எனக்கு னு தோணும்..கவனத்தை வேறு எதிலாவது திருப்புங்கள்...(சீரியசான அட்வைஸ் நண்பா)...
சரி எங்கே பிடிச்சீங்க குழந்தை & நிலவு படம் அழகா இருக்கு கண்பட போகுது சுத்திப் போடுங்க :)
பக்கத்துல யார்கிட்டயாவத்து முதலில் மணி கேட்டு, அது இந்த மாதிரி வில்லங்கமா இல்லாத பட்சத்தில் மட்டும் நீங்கள் மணி பார்க்கலாமே.
என்னவோ போங்க..
ஒண்ணு வேணா பண்ணலாம்.. இந்த 1:11, 2:22, 3:33 மணி எல்லாம் காட்டாத கடிகாரமா வாங்கி வச்சிக்குங்க.. அதுல மட்டும் மணி பாருங்க.. 1:10 வரைக்கும் காட்டணும்.. அதுக்கப்புறம் ஒரு செகண்டுக்கு ஓடவே கூடாது. அடுத்து 1:13காட்டணும்... பாத்தீங்களா எத்தனை விஞ்ஞானப்பூர்வமான யோசனை சொல்லிருக்கோம்... :)))
இதைப்பற்றி சீனு என்பவர் ஏற்கனவே எழுதி உள்ளார்.
இது தான் அவரது தளம்.
http://jeeno.blogspot.com/
இல்லை ரசிகவ்.
எனக்கும் முன்னாலே எங்கியோ படிச்ச ஞாபகம்.
'நம்பிக்கை'யிலே போட்டுருந்தீங்களா?
நானும் இப்படி சில நேரம் நினைத்திருக்கிறேன்.
எதற்கும் Schizophrenia வைப்பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.
ப்யூட்டிஃபுல் மைண்ட் படம் இதை அடிப்படியாகக் கொண்டதே..
http://www.world-schizophrenia.org/disorders/schizophrenia.html
இதைப் படித்துப் பாருங்கள். உபயோகப்படலாம்.
//
Thought Disturbances: Often called muddled thinking by those who experience them, thought disturbances are characterized by an inability to concentrate, to connect thoughts logically, or to think clearly. Thought processes may speed up (racing thoughts) or slow down, or may seem blocked so that the person's mind feels completely blank. Disturbances in thinking are sometimes compared to a broken filter that allows everything that enters the mind to have the same importance — for example, attaching the same significance to licence plate numbers as to a questions from a teacher.
//
பயமுறுத்துவதாக நினைக்க வேண்டாம்; சீரியஸாக கேட்டதால் எழுதினேன் :)
சுகா
அட எங்க வீட்டிலேயும் இரண்டு மாதமாக இப்படித்தான் சொல்லிக்கொண்டுள்ளார். அது ஒன்றுமில்லை, மற்ற நேரங்களிலும் மணி பார்த்தாலும், வித்தியாசமான நேரங்கள் மட்டும் மனதில் ஆழப்பதிகிறது. அவ்வளவுதான்.
//பக்கத்துல யார்கிட்டயாவத்து முதலில் மணி கேட்டு, அது இந்த மாதிரி வில்லங்கமா இல்லாத பட்சத்தில் மட்டும் நீங்கள் மணி பார்க்கலாமே. //
அட நல்ல யோசனையா இருக்கே.. நன்றி ..
//நல்ல டைம்லே படிச்சேங்க உங்க போ ஸ்ட்ட...இப்போ 4.44 ஆச்சு!! //
அப்போ ஒரு பதிவைப் போட்டுறுங்க நாகு :)
//இந்த 1:11, 2:22, 3:33 மணி எல்லாம் காட்டாத கடிகாரமா வாங்கி வச்சிக்குங்க//
ம் என்ன பொன்ஸ்..திடீர்னு வாட்ச் கடை ஆரம்பிச்சிட்டீங்களோளோளோளோன்னு நினைச்சேன்.. :)
இங்க ஒருத்தருக்கும் இதேதான் நடக்குது. அவருக்கு இந்தப் பதிவின் சுட்டி கொடுக்கறேன்.
(தனியா இல்லேனு சந்தோசப்பட்டுக்கோங்க!) :O)
//இல்லை ரசிகவ்.
எனக்கும் முன்னாலே எங்கியோ படிச்ச ஞாபகம்.
'நம்பிக்கை'யிலே போட்டுருந்தீங்களா? //
இல்லையே துளசி அக்கா
நான் நம்பிக்கையா சொல்றேன்..
நான் எங்கேயும் இந்தப்பதிவைப் போடலையே..?
//கவனத்தை வேறு எதிலாவது திருப்புங்கள்...(சீரியசான அட்வைஸ் நண்பா)...//
ரொம்பப் பரியமாக சொன்னதற்கு நன்றி ப்ரியன்..
//சரி எங்கே பிடிச்சீங்க குழந்தை & நிலவு படம் அழகா இருக்கு கண்பட போகுது சுத்திப் போடுங்க :) //
எல்லாம் கூகுள் மயம்தான்
//manasu: எனக்கு இது காரின் ஓடா மீட்டர் பார்க்கையில் சில பல நேரங்களில் நிகழ்வதுண்டு//
ம் ஓடா மீட்டர் ஓடுதான்னு பார்த்தீங்களா..?
//எல்லாம் 'அந்த' பயம்தான்.விடுங்க
ஞானியாரே!//
அட என்ன ராஜா இப்படி பயமுறுத்துறீங்க..
//இதைப்பற்றி சீனு என்பவர் ஏற்கனவே எழுதி உள்ளார்.
இது தான் அவரது தளம்.
http://jeeno.blogspot.com/ //
அட சத்தியமா சொல்றேங்க..
இந்தப்பதிவை நான் இப்பத்தாங்க பார்க்குறேன்..எனக்கு உள்ள அதே பிரச்சனைதான் அவருக்கும்..
நானும் வாட்ச் கட்டமாட்டேன் மொபைலில்தான் மணிபார்ப்பேன். அவரும் அப்படித்தான்
எனக்கு உள்ள அதே பிரச்சனை அவருக்கும்தான்..
இது கூட எனக்கு குழப்பமா இருக்குதுங்க..அது எப்படிங்க ஒரே பிரச்சனை ரெண்டு பேருக்கும் வருது..?
புத்திசாலிகள் எப்போதும் ஒரே மாதிரிதான் சிந்திப்பாங்கன்னு சொல்றது உண்மைதானோ..? :)
//பயமுறுத்துவதாக நினைக்க வேண்டாம்; சீரியஸாக கேட்டதால் எழுதினேன் :)
சுகா //
நன்றி சுகா..
ஆனாலும் பயம் வருவதை தவிர்க்க முடியலைப்பா..
//மற்ற நேரங்களிலும் மணி பார்த்தாலும், வித்தியாசமான நேரங்கள் மட்டும் மனதில் ஆழப்பதிகிறது. //
அட இந்தப்பதில் கொஞ்சம் யோசிக்க வைக்குதே..? நன்றி கஸ்தூரிப்பெண்..
//இங்க ஒருத்தருக்கும் இதேதான் நடக்குது. அவருக்கு இந்தப் பதிவின் சுட்டி கொடுக்கறேன்//
யாருங்க சீனுவைத்தானே சொல்றீங்க..?
http://jeeno.blogspot.com/
அவருக்கும் எனக்கும் ஒரே உணர்வுகள்..? ரொம்ப ஆச்சர்யமாக இருக்குது..
சீனு இல்லை.இவர் வேற.(இன்னும் வலைப்பதிவராப் பிறவிப்பயன் அடையலே! :O)
//நானும் "என்ன சாப்பாடு நேரமாச்சா?" என்று நேரம் பார்க்க 11:11 என்று காட்டுகிறது. இன்னமும் குழப்பம் அதிகரிக்கின்றது.
ஏன் 11:12 , 3:15 என்று காட்டக் கூடாது.//
11.11 காட்டுனவுடன 1,2,3 எண்ண ஆரம்பியுங்க .100 ஆனவுடன மறுபடியும் வாட்சை பாருங்க 11.12 அல்லது 11.13 -ன்னு இருக்கும் ..ஹி..ஹி
//சீனு இல்லை.இவர் வேற.(இன்னும் வலைப்பதிவராப் பிறவிப்பயன் அடையலே! :O) //
யாருங்க அது..உங்களுக்கு வேண்டப்பட்டவரா.. :)
//11.11 காட்டுனவுடன 1,2,3 எண்ண ஆரம்பியுங்க .100 ஆனவுடன மறுபடியும் வாட்சை பாருங்க 11.12 அல்லது 11.13 -ன்னு இருக்கும் ..ஹி..ஹி //
மனிதர் பரிந்து கொள்ள இது மனித விமர்சனம் அல்ல..ல்ல..ல
அதையும் தாண்டி பனிதமானது..னிதமானது..னது..து :)
//மனிதர் பரிந்து கொள்ள இது மனித விமர்சனம் அல்ல..ல்ல..ல
அதையும் தாண்டி பனிதமானது..னிதமானது..னது..து :)//
உண்டான சந்தேகம் இங்கு
தன்னாலே மாறிப்போன மாயமென்ன
ஞானியாரே ஞானியாரே
எந்த மேட்டர் ஆன போதும்
வலைப்பதிவில் கேட்டுக்கொள்ளும்
வந்த பதில் தாங்காது
ஞானியாயே ஞானியாரே
இதையும் பாருங்க.. அப்புறமா ஒரு முடிவுக்கு வரலாம்...
என்ன ஒரே குழப்பமா இருக்குது...
Change your mobile time - faster or slower - by 5 minutes. Appavum kaattichinna, kandippa neenga maatha vendiyathu mobile mattume! Vera onnum ille.
Ithu nilavu nanban ezuthiya pathivu maathiriye illai... namba mudiya villaii...illai..illai...
//எந்த மேட்டர் ஆன போதும்
வலைப்பதிவில் கேட்டுக்கொள்ளும்
வந்த பதில் தாங்காது
ஞானியாயே ஞானியாரே //
உந்தன் பாசம்
என்னை ஆற்றும்
என்னை ஆற்றும்
என்றெண்ணும்போது
சோகம் போனது
//இதையும் பாருங்க.. அப்புறமா ஒரு முடிவுக்கு வரலாம்...
என்ன ஒரே குழப்பமா இருக்குது... //
ம் எனக்கு இதனைப் பார்க்கும்போது குழப்பம் இன்னமும் அதிகரிக்குது
//Ithu nilavu nanban ezuthiya pathivu maathiriye illai... namba mudiya villaii...illai..illai... //
அறிவுரைக்கு நன்றி
பின்னே வைரமுத்து வந்தா எழுதிக்கொடுத்திட்டு போனது? :P)
Post a Comment