Wednesday, March 19, 2008
செல்போன் தேவதை தமிழில் பேசினால் ?
செல்போனில் சரியான எண்ணை அழுத்தாமல் தவறாகிவிட்டால் செல்போன் தேவதையிடமிருந்து இந்தப் பதில் வரும்
"This is not the valid no. please check the no. u have dialled."
இப்ப இதே தேவதை சென்னைத் தமிழ், கோவைத்தமிழ் ,ஈழத்தமிழ் ,தஞ்சை தமிழ் , மதுரை தமிழ் , நெல்லை தமிழ் இப்படி எல்லா வகையான தமிழிலும் இன்னமும் விட்டுப்போன மண்வாசனைத் தமிழிலும் பேசினால் எப்படியிருக்கும்னு சின்ன கற்பனை..
முத்தமிழ் குழும நண்பர்களில் சிலர் இப்படிக் கூறியிருந்தார்கள்.
நான் நெல்லைத் தமிழில் இருந்து ஆரம்பிக்கின்றேன்..
நெல்லைத் தமிழ்
எல எண் சரியா இருக்கான்னு பாருல.. நீ போட்ட எண் செல்லாதுல..எடுபட்ட பயல..
- ரசிகவ் ஞானியார்
கன்னியாகுமரி தமிழ்
நீங்கள் சுழற்றிய எண்கள் தற்சமயம் உபயோகத்தில் இல்லை.
தயவு செய்து எண்களை சரிபார்க்கவும் நன்றி.....
- செல்வசுரேஷ்
கோவைத் தமிழ் இதுவா?.
ஏனுங்க நீங்க போட்ட நம்பர் தப்புதானுங்களே.. தயவு செய்துங்க எண்ணைங்க சரி பாருங்கங்க..!
யாழ் தமிழ்
இஞ்சாருங்கோ நீங்கள் கூப்பிட்ட எண் பிழை, இலக்கம் சரியா எண்டு பார்த்து திரும்ப கூப்பிடுங்க சரியே
- சாந்தி
சென்னை தமிழ்:
XXXXXX XXXX
[போடுவேன்.. யாராவது அடிக்க வருவாங்க அதான் போடல.. சாரி..]
- காமேஷ்
அடங் உன் மூங்சில என் பிச்சாங்கைய வைக்க நம்பரை சரி பாருமே. ராங் நம்பரை போட்ட ராங்க போயிரும்
- லாவண்யா
பாலக்காடு தமிழ்
யேய்... நீங்க் சொழற்றின எண்ணெல்லாம் இப்போதைக்கு உப்யோகத்துல இல்ல கேட்டியோ தயவுபண்ணி சரி பாத்துக்கோ ஆமா?
-ஷைலஜா
வடாற்காடு மாவட்டம் தமிழ்
டேய் நாயே, நம்பர ஒழுங்கா பாத்து போடுடா, தப்பு நம்பர போட்டுகீரபாரு...:)
- சிவ சங்கர்
அப்புறம் நீங்க உங்க தமிழில் சொன்னா எப்பயிருக்கும்னு மண்வாசனை மாறாம சொல்லுங்க:
இப்ப உங்க தமிழில் ஆரம்பியுங்க மக்களே...
- ரசிகவ் ஞானியார்
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
அடடா... சூப்பரப்பு.... :-)
// ச்சின்னப் பையன் said...
அடடா... சூப்பரப்பு.... :-)
March 20, 2008 3:43 AM
//
நன்றி நண்பா அப்படியோ உங்க பாஷையையும் எடுத்து விடுறது
ஏலே என்னடே!சரியான நம்பரைப் பார்த்துப் போடக் கூடாதாலே?
என்னமோ சொல்லுறேன்லே பார்த்துக்கோ..அவ்வளவுதான் சொல்வேன் பார்த்துக்கோ மக்கா!
இது தூத்துக்குடித் தமிழுங்கோ!!
அன்புடன் அருணா
//aruna said...
ஏலே என்னடே!சரியான நம்பரைப் பார்த்துப் போடக் கூடாதாலே?
என்னமோ சொல்லுறேன்லே பார்த்துக்கோ..அவ்வளவுதான் சொல்வேன் பார்த்துக்கோ மக்கா!
இது தூத்துக்குடித் தமிழுங்கோ!!
அன்புடன் அருணா
//
ம் கிட்டத்தட்ட திருநெல்வேலி தமிழ் மாதிரி இருக்குது..நன்றி அருணா
குழுமத்தில் பதிலளித்தவர்கள்:
==========================
தஞ்சாவூர்காரர்கள் புத்திசாலிகள் இலக்கத்தை சரியாகவே அழுத்துவார்கள்.
அன்புடன்
சாபு
------------------------------
மதுரை தமிழ்:
============
அடி ஆத்தீ, நெம்பர் தெப்பாமுல்ல.. செரி பாத்துட்டுதேன் போடுரது.இதுக்கு இந்த பேச்சு பேசணுமாய்க்கும்.?
நாகர்கோவில் தமிழ்:
=================
ஏல மக்கா, நம்பர சாரி பாக்க மாட்டியளோ?. மயிரு நீர் போட்ட நம்பர் தப்பாண்டே!.
நெல்லைத் தமிழ்
===============
ஏ அண்ணாச்சி இந்த நம்பர சரிபாக்கலியோ. தப்பால்ல இருக்கு.. என்ன நாஞ்சொல்தது சரிதானே அண்ணாச்சி..?
அய்யராத்து தமிழ்:
================
ஏன்னா செத்த உங்க நம்பர சரி பாப்பேளோன்னோ?.. பாத்துண்டே பேஷா, ராங் நம்பர் போடாதேங்கோ!.நேக்கும் வேலையிருக்குன்னா...
தாய்லாந்து பாஷையில்:
===================
கா தோட் காப்.. பெர் தோ பிட் ன காப்.. தோ ஈக் க்ருங் ன காப்..
- சாந்தி.
==================================
==================================
Good try... enjoyed reading :-)
Post a Comment