Wednesday, March 26, 2008

படிக்கட்டா? பாடைக்கட்டா?

கூட்டமான நேரங்களில் மட்டுமல்ல மற்ற நேரங்களில் கூட சும்மா வெட்டி பந்தாவிற்காக பேருந்தின் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு வருபவர்கள் சில நேரங்களில் விபத்துக்குள்ளாக நேரிடுகின்றது

என்னதான் நடத்துனர் வந்து காட்டுக் கத்தாய் கத்தினாலும் இவர்களின் காதுகளில் ஏறாது..யாரோ எவரோ கத்துகிறார் என்று அலட்சியப்படுத்திவிடுவார்கள்..

நான் கல்லூரியில் படிக்கும்பொழுது எனது கல்லூரிப் பேருந்திலும் அப்படித்தான். சீனியர் மாணவர்கள் படிக்கட்டில் தொங்க வேண்டும். முதலாமாண்டு மாணவர்கள் பேருந்துக்குள்தான் இருக்கவேண்டும் வெளியே வரக்கூடாது.

படிக்கட்டில் நின்று கொண்டு அவர்கள் போடுகின்ற ஆட்டத்தைப் பார்க்க வேண்டுமே... அதனைப் பற்றி ஒரு புத்தகமே போடலாம் அந்த அளவிற்கு சேட்டைகள் - விளையாட்டுகள் - ஓடி வந்து ஏறுதல் - பேருந்தின் பின்புறம் உள்ள ஏணியில் நின்று கொண்டு வருதல் - சில சமயம் பேருந்தின் கூரையின் மீதே ஏறி தாளமடித்துக் கொண்டு வருதல் என்று ஏகப்பட்ட கூத்துக்கள் நடக்கும்.

அதனை விடவும் நான் சென்னையில் கல்லூரி மாணவர்கள் அடிக்கின்ற கூத்தினை கண்டு ரசித்திருக்கின்றேன். இதற்காகவேனும் சென்னையில் படித்திருக்ககூடாதா என்று ஏக்கப்பட்டிருக்கின்றேன். அவர்களுக்கு எங்கிருந்துதான் வருமோ தெரியல கானாப்பாட்டு...கலக்கிடுவானுங்க பசங்க..

இப்படி படிக்கட்டில் தொங்கிகொண்டு அபாயகரமான விளையாட்டுக்களை நடத்தி வருபவர்களை கண்டிக்க வழிதெரியாமல் அரசாங்கம் புதிய முடிவை எடுத்திருக்கின்றது..

அதுதான் இது..

- ரசிகவ் ஞானியார்

8 comments:

மங்களூர் சிவா said...

இன்னுமா இந்த படம் ப்ளாக்ல சுத்திகிட்டிருக்கு?????????

ரிஸ்க் எடுக்க்றதெல்லாம அவிங்களுக்கு ரஸ்க் சாப்பிடறமாதிரியாம்!!!!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//மங்களூர் சிவா said...
இன்னுமா இந்த படம் ப்ளாக்ல சுத்திகிட்டிருக்கு?????????

ரிஸ்க் எடுக்க்றதெல்லாம அவிங்களுக்கு ரஸ்க் சாப்பிடறமாதிரியாம்!!!!
//

நன்றி சிவா

இப்படி படிக்கட்டு இருந்தா லிப்ட்தான் வைக்கணும் ஏறுவதற்கு. :)

Anonymous said...

nalla iruku rasikav

nalla comdeiyana picture

- kumar

Anonymous said...

i read in newspaper y.day (28.3.08) one school going girl caught in the back wheel of the bus -spot out-- her head was smashed . people here utter that the driver took the bus no longer the girl got in the bus.... Its a KTC bus... Many report that its all because of the bus pass... If there is no bus pass ..poor children may not be able to go to school.

//Anonymous said...
nalla iruku rasikav

nalla comdeiyana picture

- kumar
//

ஆனால் நடவடிக்கைகள் நல்லாயில்லையே

நன்றி குமார்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Vennila said...
i read in newspaper y.day (28.3.08) one school going girl caught in the back wheel of the bus -spot out-- her head was smashed . people here utter that the driver took the bus no longer the girl got in the bus.... Its a KTC bus... Many report that its all because of the bus pass... If there is no bus pass ..poor children may not be able to go to school.
//

சோகமான நிகழ்வு

கண்டிப்பாக இந்த ஒழுங்கீனங்கள் ஒழுங்குப்படுத்தப்படவேண்டும்

Unknown said...

அடக் கொடுமையே :(

இந்த பிரச்சினை தீர, கதவுகள் பொறுத்துவது சிறந்த தீர்வு. ஆனா, இருக்குற மக்கள் தொகைக்கு, அது சாத்தியப் படுமா?

தேன் கூடு