Thursday, September 06, 2007

ஒரு காலாட்படையே கவிழ்ந்துகிடக்கின்றதே?

ன்று காலையில் நான் எனது இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த பொழுது எதிரே அந்த மனிதர் தடுமாறி தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கின்றார்

ன்னடா... நேராக வருகிறாரா? இல்லை எனக்கு இடது புறம் போகப்போகின்றாரா? வலது புறம் போகப்போகின்றாரா? என்று கணிக்க முடியாத அளவுக்கு வந்துகொண்டிருக்கிறார். அவரின் தடுமாற்றம் என்னை ரொம்பவே தடுமாற்றியது.

ண்டியின் வேகத்தைக் குறைத்துவிட்டு என்னதான் நடக்குதென்று பாரக்கலாமென்று அவருடைய போக்கில் விட்டுவிட்டேன். அவர் வேகமாய் வந்து இடது பக்கமாய் திரும்பி ஒரு மரத்தின் வேரில் முட்டி மோதி தொங்கிக்கொண்டிருந்தார்.

கிளையில் தொங்கியவர்களைக் கண்டிருக்கின்றேன். இவர் என்னடா வேரில் தொங்குகின்றார்?

நான் தப்பித்ததேன் என்று நிம்மதியாக இருந்தாலும், அவர் விழுந்துவிட்டாரே? பாவம் பெரிய மனிதர்.. ஏதாவது உதவி செய்யலாம் என்று வாகனத்தை நிறுத்தி விட்டு மெல்ல பக்கத்தில் சென்றேன்.

வருடைய வாகனத்தின் பின்னால் எழுதப்பட்டிருந்தது Ex-Army என்று. மிடுக்காக இராணுவத்தில் பணியாற்றியவரா இப்படி கவனமில்லாமல் வாகனத்தை ஓட்டுகிறார் என்று பக்கத்தில் சென்றால் ஏதேதோ உளறுகின்றார்.

மிகவும் பக்கத்தில் சென்றதும்தான் அந்த வாசனையும் அவருடைய போதையும் காட்டிக்கொடுத்தது. அந்த மதிப்புமிக்க இந்தியக் குடிடிடிடிடிடிமகன் போதையில் விழுந்திருக்கின்றார் என்று.

க்கத்தில் துணிகளை தேய்த்துக் கொடுக்கும் கடைக்காரர், நிகழ்ந்த சம்பவத்தை கண்டும் காணாமல் அலட்சியமாக தனது பணியை தொடர்ந்து கொண்டிருந்தார்.

ல்லையில் குளிரில் நின்று நம்மை காத்தவரை, இப்படி அநாதையாக விட மனமின்றி அந்த கடைக்காரரை அழைத்தேன்.

"ஹலோ வாங்க கொஞ்சம் உதவி பண்ணுங்க..யாருன்னு தெரியல "

"அட போப்பா இவருக்கு வேற வேலை இல்லை தினமும் குடிச்சிட்டு வந்து விழுந்து கிடப்பார்..பக்கத்துலதான் அவருடைய ஆபிஸ்.."
என்று சொல்லிவிட்டு யாருடைய கலைந்த சட்டையின் மடிப்பினையோ தேய்த்துக்கொண்டிருக்கின்றார் தன்னுடைய மனம் கலைந்துபோனது தெரியாமல்.

ரி பாவம் என்று வேரில் தொங்கிக்கொண்டிருக்கும் மனிதரை உசுப்பி இன்னொரு ஆட்டோ ஓட்டுனரின் உதவியுடன் மெல்ல அந்த மரத்தின் பக்கத்தில் உள்ள சிமெண்ட் தரையில் படுக்க வைத்தோம்.

தன் பின்னர் தகவல் தெரிந்து அவரது அலுவலகத்தில் இருந்து யாரோ வந்து முகத்தில் தண்ணீர் தெளிக்க ஆரம்பித்தார்கள்.

ந்தக் குடியில் அப்படி என்னதான் இருக்கோ தெரியலைங்க..? பக்கத்துல கொண்டு வந்தாலே ஒரு மோசமான வாசைனை வீசுது. இதை எப்படி குடிக்கிறாங்கன்னு ஆச்சர்யமாக இருக்கு?

பாருங்க இந்தியாவையும், இந்தியக் குடிமகன்களை காக்கும் மிகப்பெரும் பொறுப்பில் இருந்தவர் இப்படி அனாதையாக சாலையில் ..........பார்க்கவே வேதனையாக இருக்குங்க…

Photo Sharing and Video Hosting at Photobucket

வருடைய மனைவி - குழந்தைகள் - உறவினர்கள் எல்லாம் இந்த நிலையில் இவரைக் கண்டுவிட்டால் அதன் பின்னர் எப்படி இவருக்கு மரியாதை கொடுப்பார்கள்.? அது சரி அதுக்கெல்லாம் கவலைப்பட்டா எப்பவோ குடிமகன்கள் திருந்தியிருப்பார்களே?


ரு
காலாட்படையே
கவிழ்ந்து கிடக்கின்றதே?

தடுமாறி விழுந்தது
நீ மட்டுமல்ல ...
உன்னுடைய சுயமரியாதையும்தான் !

இந்தியாவின் பாதுகாப்புக்காக ...
தீவிரவாதிகளோடு போரிட்டிருப்பாய்!

ஆனால்
குடும்ப மரியாதையை
பாதுகாக்க இயலாமல் ...
போதை என்னும் தீவிரவாதியிடம்
சரணடைந்துவிட்டாயே?

உன்னால்
கொடிநாள் குடிநாளாகிப் போனது!

உண்மையைச் சொல்
நீ
முன்னால் கொடிமகனா? குடிமகனா?


- ரசிகவ் ஞானியார்

6 comments:

Anonymous said...

அய்யா நிலவு நண்பா, அவுரு மேலே தப்பில்லப்பா. எங்காவது தமிழ்மணத்தை இந்த பத்து நாளா படிச்சிருப்பாரு. புட்டுக்கிச்சு,சாஞ்சுட்டாரு. போலி,அல்லக்கையி,டோண்டு, டூண்டு,நோண்டு எல்லாத்தையும் பாத்துட்டு வாழ்க்கை வெறுத்துட்டாரு. லுசுல உடு நண்பா.

Thamizhan said...

தமிழ்நாட்டின் ஒரு மிகப் பெரிய அவலத்தைச் சொல்லியிருக்கிறார்,அதிலே போய் கும்மி அடிக்கிறார்.
குடி ஒரு மன நோய் என்பதை உலகெங்கும் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்க அனைத்து வழி முறைகளையும் செய்து வருகிறார்கள்.
இது ஒரு தனி மனித வேதனையல்ல.ஒரு குடும்பப் போராட்டம்,குடும்பப் புற்று நோய்.வாடும் பல குடும்பங்களைக் காப்பாற்ற,இள வய்தினரைத் தடுக்க,புகை பிடித்தலுக்குக் கொடுக்கும் தடுப்பு ஏற்பாடுகள் குடி,போதைப் பொருள்களுக்கும் செய்வது முக்கியம்.சமுதாயத் தொண்டர்கள் வழி காட்டுவார்களாக.

ILA (a) இளா said...

சராசரி இந்தியனின் பொறுப்பும் சில வெறுப்புகளும் உங்கள் பதிவில் பளிச்சிடுகிறது. நல்ல வேளை. அவர சரியான இடத்தில் படுக்க வைத்தீர்களே அதுவே உங்கள் மனிதாபிமானத்துக்கு சான்று

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ILA(a)இளா said...
சராசரி இந்தியனின் பொறுப்பும் சில வெறுப்புகளும் உங்கள் பதிவில் பளிச்சிடுகிறது. நல்ல வேளை. அவர சரியான இடத்தில் படுக்க வைத்தீர்களே அதுவே உங்கள் மனிதாபிமானத்துக்கு சான்று //


தடுமாறிப் போன மனிதரைப் பற்றிய உங்கள் தடுமாறாத விமர்சனத்திற்கு நன்றி இளா
:)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Thamizhan said...

இது ஒரு தனி மனித வேதனையல்ல.ஒரு குடும்பப் போராட்டம்,குடும்பப் புற்று நோய்.வாடும் பல குடும்பங்களைக் காப்பாற்ற,இள வய்தினரைத் தடுக்க,புகை பிடித்தலுக்குக் கொடுக்கும் தடுப்பு ஏற்பாடுகள் குடி,போதைப் பொருள்களுக்கும் செய்வது முக்கியம்.சமுதாயத் தொண்டர்கள் வழி காட்டுவார்களாக. //

நன்றி தமிழன்...உங்கள் எண்ணப்படி நடக்க பிரார்த்திக்கின்றேன்...

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//உங்கள் தமிழன் said...
எங்காவது தமிழ்மணத்தை இந்த பத்து நாளா படிச்சிருப்பாரு. புட்டுக்கிச்சு,சாஞ்சுட்டாரு. போலி,அல்லக்கையி,டோண்டு, டூண்டு,நோண்டு எல்லாத்தையும் பாத்துட்டு வாழ்க்கை வெறுத்துட்டாரு. லுசுல உடு நண்பா. //


தமிழ்மணப் பதிவுகள் அந்த அளவுக்கு தடுமாறுதுன்னு சொல்றீங்களா..? :)

தேன் கூடு