இங்கிலாந்தில் மிகப்பெரிய கோடீசுவரர் லட்சுமி மிட்டல். அவரது சொத்து மதிப்பு 13 லட்சத்து 50 ஆயிரம் கோடியாகும். ( இப்பவே கண்ணைக் கட்டுதே)
உலக பில்லியனர்கள் பட்டியலில் இந்தியாவைச் சார்ந்தவர்கள் 40 பேர் இடம்பெற்றுள்ளனர்.
உலகக் கோடீசுவரர்கள் எண்ணிக்கையில் ஜப்பானை, இந்தியா மிஞ்சிவிட்டதாம்.
உலக லட்சாதிபதிகள் வரிசையில் இந்தியா எட்டாவது இடத்தைப் பிடித்திருக்கின்றதாம்
சாப்ட்வேர் இஞ்சினியர்களின் வருடச் சம்பளம் இத்தனை லட்சம், அத்தனை லட்சம் என்று உயர்ந்து கொண்டிருக்கின்றது.
இந்தியாவில் தனி மனித சம்பளம் லட்சங்களைத் தாண்டி கோடிகளை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.
உலக கோடீசுவரர்களின் பட்டியலில் இந்தியர்களின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் இருக்கின்றது .
இந்தியர்களின் வளர்ச்சி அதீத வேகத்தில் சென்றுகொண்டிருக்கும் இந்த நிலையில் இந்தியாவில்தான் இன்னமும் அடிப்படை வசதிகளையே நிறைவேற்றிக்கொள்ளாத மக்களும் இருக்கின்றார்கள்.
30 கோடிக்கும் மேல் உள்ள மக்கள் 3 வேளை உணவு கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலையில் வறுமைக் கோட்டிற்கு கீழேதான் இருக்கின்றார்கள் என்பது வருத்தமான உண்மை.
கடுமையான வெயிலில் இதோ இந்தத் தாத்தா ஆடு மேய்த்துக் கொண்டிருக்கின்றார். அந்த வெயிலின் சூட்டினை என்னாலையே தாங்க முடியவில்லை ஆனால் வயதான அந்தத் தாத்தா எப்படி சமாளித்துக் கொண்டிருக்கின்றார்? என்ற அனுதாபத்தில் அருகே சென்று விசாரித்தேன் .
"தாத்தா..தாத்தா "
காதினில் கை வைத்துக் கொண்டு மெல்ல என் பக்கம் வந்து கேட்டார்..
"என்னப்பா... என்ன..? "
நான் மறுபடியும் சப்தமிட்டு கேட்டேன். "இந்த வெயிலில் நிற்கிறீங்களே..தலையில் துண்டு போட்டுட்டு நிற்க வேண்டியதுதானே..வெயில் ஜாஸ்தியா அடிக்குதுல்ல.. "
லேசாய் புன்னகை உதிர்த்துவிட்டு "பழகிப்போச்சுப்பா" என்று கூறினார்
"உங்க ஆடுகள் எங்கே..? இந்த வயசுல இந்த வெயிலில ஏன் மேய்க்க வர்றீங்க..? "
"அதோ 10 ஆடுகள் நிற்குது பாருங்க .." என்று சுட்டிக்காட்டிவிட்டு சிரித்தபடி கூறினார் "வேற என்னப்பா செய்ய..? பொழைக்க வேண்டாமா..? "
"சரி எவ்வளவு சம்பளம் கிடைக்குது தாத்தா..? "
"மாசம் 300 ரூ கிடைக்கும் பா…" என்று கூறினார்
அட தினமும் 300 ரூ சம்பளம் வாங்குபவர்களுக்கு மத்தியில் மாசம் 300 ரூபாயா..? இதனால் அவரது அடிப்படை தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாதே..?
"இது எப்படி தாத்தா கட்டுபடியாகும்..?" என்று கேட்டேன்.
"ஏதோ வாழ்க்கை ஓடுதுப்பா" என்று ரொம்பவே ஆதங்கப்பட்டார்.
இந்த வயதிலும் உழைத்துப் பிழைக்க வந்த அந்த தாத்தாவிடம் பணம் ஏதும் கொடுக்க எனக்கு ஒரு மாதிரியாக இருக்க தலையில் உள்ள தொப்பியை கழற்றி கொடுத்தேன்.
"அட நீ போட்டுக்கப்பா எனக்கெதுக்கு..? " என்று என்னிடம் திருப்பித்தர
"இல்லை தாத்தா நீங்க போட்டுக்கோங்க எங்கிட்ட இன்னொன்ணு இருக்குது.. வெயில்ல அலையுறீங்க.. நீங்க போட்டுக்போங்க" என்று வலுக்கட்டாயமாய் அவரது தலையில் தொப்பியை மாட்டினேன்.
வாயெல்லாம் பல் தெரிய மகிழ்ச்சியில் முதன் முதலாய் தொப்பி போட்ட வெட்கத்தில் புன்னகைத்தார். "எதுக்குப்பா போட்டோல்லாம் எடுக்குற?" என்று இன்னமும் மகிழ்ச்சியில் அதிகமாகவே புன்னகைத்தார்
"நல்லதுப்பா..நல்லதுப்பா .. " என்று திருப்பி திருப்பி கூறிவிட்டு தொப்பியையும் கழற்றி கழற்றி மாற்றினார். அவரது முகத்தில் தெரிந்த சந்தோஷத்தினை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
அவரிடம் தொப்பியை மட்டுமல்ல மனசையும் விட்டுவிட்டு வந்துவிட்டேன்.
- ரசிகவ் ஞானியார்
18 comments:
ஹ்ம்ம்ம்ம். நியாயமான கேள்விதான்.
நியாயமான கேள்வி.
நல்ல செயல்.
அருமையான பதிவு.
// ILA(a)இளா said...
ஹ்ம்ம்ம்ம். நியாயமான கேள்விதான். //
நன்றி இளா
// வெங்கட்ராமன் said...
நியாயமான கேள்வி.
நல்ல செயல்.
அருமையான பதிவு. //
ம் அந்தக் கேள்விக்கு என்று விடை கிட்டுமோ..?
நன்றி வெங்கட்ராமன்
இந்த தாத்தாவைப் பார்த்தா என்னோட தாத்தா மாதிரியே இருந்துச்சு...:(
300 ரூபாதானா??..அதுவும் ஒரு மாததிற்கு??..நெனைச்சுக்கூட பார்க்க முடியல...:(
அவருக்கு தனது தொப்பியைத் தந்து உதவிய நீங்கள் வாழ்க!!..என்றென்றும்....:)
//மல்லிகை said...
இந்த தாத்தாவைப் பார்த்தா என்னோட தாத்தா மாதிரியே இருந்துச்சு...:(
300 ரூபாதானா??..அதுவும் ஒரு மாததிற்கு??..நெனைச்சுக்கூட பார்க்க முடியல...:(
அவருக்கு தனது தொப்பியைத் தந்து உதவிய நீங்கள் வாழ்க!!..என்றென்றும்....:) //
மயிலுக்கு போர்வை தந்தான் பேகன்
தாத்தாவுக்கு தொப்பி தந்தான் இந்தப் பேரன். :)
விமர்சனத்திற்கு நன்றி மல்லிகை
மயிலுக்கு போர்வை தந்தாரா பேகன்??..என்னங்க இது கதையா இருக்கு??..அவர் leather jacket இல்ல கொடுத்தாரு?? :))
இந்த தாத்தா ரொம்ம்ம்ப க்யூட்...பாத்துட்டே இருக்கலாம் போல இருக்கு...மொகத்துல எவ்வளவு innocence பாருங்க...
பணம் இல்லாத போதுதான் மனிதனின் முகத்தில் உண்மையான அழகு தெரியுமோ!!!
தாத்தாவின் சந்திப்பிற்கும் அதனை தொடர்ந்த சந்தோஷ நிமிடங்களுக்கும் ஒரு :-)
ரசிகவ்!
நிச்சயமாக முன்னேறியது இந்தியனே!ஆனால் அது இந்தியன்களாக மாறும் போது, இந்தியா முன்னேறும்...பொறுப்போம்.
தங்கள் உரையாடல்,உதவி,,பெரியவர் மகிழ்ச்சி பிரமாதம்.
இந்த ஏழ்மையிலும்,கொடுத்த தொப்பியைக் கூட 'எனக்கெதுக்கு' என்று சொல்லும்..'வறுமையிலும் செம்மை' இதுதான் நம் நாட்டின் பாங்கு.
ஏழையின் சிரிப்பில் இறைவன் உள்ளான்.
வறுமைக்கு காரணமும், விளைவுகளும்
செல்வசெழிபிற்க்கு அருகமையில், கடுமையான வறுமையய் காணும் பெரும்பாலான, மனிதநேயங்கொண்டவர்கள் இந்த முரண்பாட்டிற்க்கு காரணம் முதலாளித்துவ பொருளாதார கொள்கைகளே என்ற தவறான முடிவுக்கு வருகின்றனர்.
இரண்டாம் உலக்ப்போரில் முற்றிலும் அழிந்த ஜெர்மனியில், 1945ல் வறுமை, பசி, வேலையில்லா திண்டாட்டம் மிக அதிகமாக இருந்தது. சந்தை பொருளாராத கொள்கைகளை, கடும் எதிர்பிற்கிடையில் அமல் படுதிய பின் பத்தே ஆண்டுகளில் ஜெர்மனி மீண்டும் தலை நிமிர்ந்தது. "ஜெர்மன் மிராக்கில்" என்று இன்றும் போற்றப்படுகிரது.
1947இல், நம்மைவிட மிகவும் கீழ் நிலையில் இருந்த மலேசயா, சிங்கப்பூர், தைவான், தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளும் சுதந்திர சந்தை பொருளாதார கொள்கைகளை பின்பற்றி இன்று நம் நாட்டை விட பல மடங்கு சுபிட்சமாக உள்ளன. சைனாவும் முதலாளித்துவ பாதைக்கு வந்து, வேகமாக வளம் பெற்று வருகிரது.
1950 முதல் இடதுசாரி, சோசியலிச கொள்கைகளை பின்பற்றியதின் விளைவாக, நாம் 1991ல் திவால் நிலையில் இருந்தோம். அரசு, தங்கத்தை அடமானம் வைத்து இறக்குமதிக்கான் டாலர்களை பெற வேண்டிய நிலை உருவானது. அதன் பிறகு, சுதந்திர சந்தை பொருளாதார கொள்கைகளை அமல் படுத்தியதன் விளைவாக, இன்று மீண்டு வருகிரோம். அந்நிய செலவாணிக்காக் ஐ.எம்.எfஇடம் கை ஏந்த வேண்டிய நிலை இன்று இல்லை. பல கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு மேல் எழும்ப முடிந்தது. தொழில் துறையின் வளர்சியால் புதிய வேலை வாய்ப்புகளும், அரசுக்கு பெரிய அளவில் வரி வசுலும் உருவாகிரது. அதை வைத்து அரசு, பல நலத்திட்டங்களை செயல்படுத்த முடிகிறது. ராணுவதிற்க்காக வருடம் சுமார் 93,000 கோடி ரூபாய் செலவிடுவது நமக்கு மிக அதிகமான சுமை. இது போன்ற பல சுமைகளை விலைவாசி உயர்வு என்ற மறைமுக வரியாக நாம் அனைவரும், குறிப்பாக ஏழைகளும் சுமக்க வேண்டியுள்ளது.
இன்னும் வெகு தூரம் போக வேண்டியதுள்ளது. எழ்மை ஒழிப்பு, விவசாயம், கல்வி, சுகாதாரம் போன்ற அடிபடை வசதிகாளுக்காக அரசு பல லச்சம் கோடி ரூபாய்கள் செலவிட்டாலும், அதில் பெரும்பாண்மையான தொகை அரசு எந்திரத்தாலும், அரசியல்வாதிகளாளும் திருடப் படுகிரது. அரசு மான்ய தொகை, பணக்கார விவசாயிகளுக்கே பெரும்பாலும் சேர்கிரது. உண்மையான ஏழைகளுக்கு இவை கிடைக்கும்படி செய்ய, ஊழல்மயமான நம் அரசு எந்திரத்தை சீர் படுத்த வேண்டும். அதுவே நமக்கு முதல் வேலையாகும். அதை செய்யாமல், வறுமைக்கு காரணமாக முதலாளித்துவ பொருளாராதார் கொள்கைகளை காரணமாக காட்டுதல் தவறு.
---------
நரகத்திற்கான பாதை நல்லெண்ணத்தினாலும் உண்டாகிறது
இந்தியர்களான நாம், நேர்மை மற்றும் உண்மை போன்ற மிக முக்கிய குண நலன்களை, சுதந்திரத்திற்குப் பிறகு இழந்துள்ளோம். ஊழல் பெருகியுள்ளது. அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் மட்டும் குறை சொல்லிப் பிரயோஜனமில்லை. வாக்களிக்கும் பொதுமக்கள் பணம் மற்றும் இலவசங்களுக்கு ஆசைப்பட்டு வாக்குகளை விற்கின்றனர். மக்களுக்க ஏற்ற அரசாங்கமே அமையும் என்பது பொது விதி.
சோசியலிசக் கொள்கைகள், உயர்ந்த லட்சியம் உள்ள தலைவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டன. சித்தாந்தம் என்பது வேறு, நடைமுறை என்பது வேறு. "நரகத்திற்கான பாதை நல்லெண்ணத்தானாலும் உண்டாகிறது" என்பது ஒரு பழமொழி.
பணக்காரர்கள் மீது மிகக் கடுமையான வரி விதித்து அதை ஏழைகளுக்கு பயன்படும் வகையில் செலவு செய்ய முயன்ற சோசியலிஸக் காலங்களில் உச்சக்கட்டமாக 98 சதவீத வருமான வரி விதிக்கப்பட்டது (1971). மனிதனின் இயல்பான குணம் சுயநலம். தனக்கு ஒரு லாபம் அல்லது ஆதாயம் முழுமையாகக் கிடைத்தால் மட்டுமே ஒரு செயலை முழு மனதுடனும், ஊக்கத்துடனும் செய்வான். அச்செயலினால் கிடைக்கும் லாபத்தைப் பாதுகாக்க சட்டத்தை மீற முற்படுவான். அதனால் நேர்மை குறையும்.
அதுதான் இங்கு நடந்தது. வருமான மற்றும் உற்பத்தி வரிகளை ஏய்க்க முற்பட்டனர் முதலாளிகள். அதிகாரிகள் அதற்குத் துணை போயினர். பெர்மிட், லைசன்சு தருவதற்கு லஞ்சம் கேட்டனர் அரசியல்வாதிகள். கடமையை செய்யாமல் உரிமையை மட்டும் கருத்தாக கேட்டனர் அமைப்பு சார்ந்த மற்றும் அரசாங்க அமைப்புகளைச் சார்ந்த தொழிலாளர்கள். லைசன்ஸ் மற்றும் கட்டுப்பாடுகளால் கடுமையான பற்றாக்குறை உண்டானது. சிமிண்டு இன்று எளிதாக கிடைக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன் சிமண்ட் உற்பத்தியில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்ததால் கடும் பற்றாக்குறை. கருப்பு மார்க்கெட், லஞ்சம், பதுக்கல், கடத்தல், இன்று கேட்க தமாஸாக இருக்கிறதா? பழையக் கருப்பு வெள்ளைப் படங்களில் வில்லன்கள் சிமிண்ட், சர்க்கரை மற்றும் பருத்தி நூல் பேல்களை பதுக்கி வைப்பர். கடத்துவார்கள்!
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, தனியார் உற்பத்தி வேண்டிய அளவு பெருக தாரளமாக அனுமதிக்கப்பட்டவுடன் இன்று அந்த மாதிரியான தமாஸ் காட்சிகள் இல்லை. உற்பத்தியைப் பெருக்கி, பொருளாதாரத்தை மேம்படுத்தி விடலாம். ஆனால் இழந்த குணங்களை மீண்டும் உயிர்ப்பிக்க பல காலமும் பல தலைமுறைகளும் பிடிக்கும் போல் தெரிகிறது.
சர்வ சாதாரணமாக நாம் அனைவரும் அரசாங்க விதிகளையும் சட்டங்களையும் மீறும் தன்மையைப் பெற்று விட்டோம். அளவுக்கு அதிகமான வருமான வரியை ஏமாற்ற ஆரம்பித்து இன்று அனைத்து வரிகளையும் ஏமாற்றுவதை ஒரு கலையாகக் கற்றுள்ளோம். சாலை விதிகள், மென்பொருள் மற்றும் சினிமா துறைகளின் காப்புரிமை விதிகளை மீறுகின்றோம். திருட்டு விசிடி, மென்பொருள்களையும் பயமின்றி கூச்சமின்று பயன்படுத்துகிறோம்.
வேலை செய்யாமலேயே ஊதியம், தகுதி இல்லாமலும் மான்யம், இலவசங்களுக்காக தன்மானத்தையும் நேர்மையையும் இழந்துள்ளோம். பிச்சைக்காரப் புத்தி மிகவும் அதிகரித்துள்ளது. ஓசியில் கிடைச்சா பினாயிலைக் கூட குடிக்கத் தயாராக உள்ளோம். ஒரு LPG சிலிண்டருக்கு அரசாங்கம் நமக்கு ரூபாய் 200 மான்யமாக, இனாமாக தருவதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறோம். குறைக்க முற்பட்டால் எதிர்க்கிறோம்...
http://nellikkani.blogspot.com/
//மல்லிகை said...
மயிலுக்கு போர்வை தந்தாரா பேகன்??..என்னங்க இது கதையா இருக்கு??..அவர் leather jacket இல்ல கொடுத்தாரு?? :))//
அப்படியா..? உங்ககிட்ட கேட்டுட்டுத்தான் கொடுத்தாராங்க....:)
//Thekkikattan|தெகா said...
தாத்தாவின் சந்திப்பிற்கும் அதனை தொடர்ந்த சந்தோஷ நிமிடங்களுக்கும் ஒரு :-)//
நன்றி தெகா
//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
ரசிகவ்!
நிச்சயமாக முன்னேறியது இந்தியனே!ஆனால் அது இந்தியன்களாக மாறும் போது, இந்தியா முன்னேறும்...பொறுப்போம்.//
நன்றி யோகன்..
தங்களின் கனவு நிச்சயமாய் பலிக்கட்டும்
//K.R.அதியமான். 13230870032840655763 said...
வறுமைக்கு காரணமும், விளைவுகளும்
செல்வசெழிபிற்க்கு அருகமையில், கடுமையான வறுமையய் காணும் பெரும்பாலான, மனிதநேயங்கொண்டவர்கள் இந்த முரண்பாட்டிற்க்கு காரணம் முதலாளித்துவ பொருளாதார கொள்கைகளே என்ற தவறான முடிவுக்கு வருகின்றனர்.//
நன்றி அதியமான்
தங்களின் பதிவையே பின்னூட்டமாகஇட்டதற்கு
i know a senior person in my company who has been to US many times, and is knowledgeable . he said, in US, rich ppl give donations like anything but make publicity out of that close to nothing. i mean they dont publisize like us.
here rich in india and rich indian nri's dont do like that i think.
even if they do, our population is too large for them to cover
//here rich in india and rich indian nri's dont do like that i think.//
ம் உண்மையில் பாராட்டுக்குரியவர்கள்தான் நன்றி
இந்த பதிவினால் என்னன்னு சொல்லத் தெரியாத உணர்வுகளை என் மனசுல ஏற்படுத்திட்டீங்க ரசிகவ்.
அருமையான பதிவு.
- சகாரா.
//சகாரா said...
இந்த பதிவினால் என்னன்னு சொல்லத் தெரியாத உணர்வுகளை என் மனசுல ஏற்படுத்திட்டீங்க ரசிகவ்.
அருமையான பதிவு.
- சகாரா.//
விமர்சனத்திற்கு நன்றி சகாரா.
Post a Comment