Wednesday, September 12, 2007
ஹையா..எங்க ஊர்ல அமெரிக்க மருத்துவமனை
திருநெல்வேலி பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 15 கிலோமீ தொலைவில் நாகர்கோவில் செல்லும் சாலையில் இருந்து பிரிந்து செல்கின்றது தண்டித்தான் குளம் என்கிற குக்கிராமம். அதன் அருகே தருவை என்கிற கிராமத்தில் உள்ளது ஒரு அமெரிக்கன் மருத்துவமனை.
"என்ன கிராமத்தில் அமெரிக்கன் மருத்துவமனையா?" என்ற ஆச்சர்யம்தான் என்னை இந்தப் பதிவு எழுத வைத்தது.
கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் வீடுகளை தேடித் தேடி ஒவ்வொன்றாக தட்டுப்படுகின்ற கிராமம். சுமார் 1 மணி நேரம் காத்திருந்தால் ஏதாவது ஒரு மனிதர்கள் தட்டுப்படுவார்கள் என்ற அளவுக்குத்தான் மக்கள் தொகை.
அப்படிப்பட்ட கிராமத்தில் அமெரிக்க மருத்துவமனை கட்டிய புண்ணியவான் யார்..? என்கிற ஆச்சர்யத்தோடு கண்ணில் யாரேனும் தட்டுப்படுவார்களா என தேட ஆரம்பித்தேன்.
இறுதியில் பக்கத்தில் ஒரு குவாரியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு தொழிலாளியைப் பிடித்து கேட்டேன். "அய்யா இங்க என்ன அமெரிக்கன் மருத்துவமனை? "
இந்தக் கிராமத்தில் படித்த ஒருவர் இப்போது அமெரிக்காவில் வேலை கிடைத்து நன்றாக வாழ்கின்றார் எனவும் அந்த மனிதர் தனது கிராமத்து மக்களுக்காக ஏதாவது செய்யவேண்டும் என்று இந்த மருத்துவமனையைக் கட்டினார் எனவும் அவர் கூறியது எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தையே அளித்தது.
அந்த மருத்துவமனையில் மிகவும் குறைந்த கட்டணமே வசூலிப்பதாகவும் சில நேரம் மிகவும் வறியவர்கள் என்றால் கட்டணமே வாங்கமாட்டார்கள் என்றும் கூறினார்
இங்குள்ளவர்களுக்கு உடல் நலம் சரியில்லை என்றால் சுமார் 15 கி.மீ தாண்டித்தான் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியதிருக்கின்றது. இந்த மருத்துவமனை இங்குள்ள சொற்ப மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கின்றது என்றும் கூறினார்.
எந்த நாட்டில் இருந்தாலும் தன்னுடைய கிராமத்தையும் மறக்காமல் அங்குள்ளவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கும் அந்த முகம் தெரியாத மனிதருக்கு இந்தியக் குடிமகன் சார்பில் வாழ்த்துக்கள்.
இதுபோன்று ஒவ்வொருவரும் தன்னிச்சையாகவோ அல்லது குழுமமாகவோ இணைந்து தான் வளர்ந்த பகுதிகளை தத்தெடுத்து ஏழ்மையைக் கண்டறிந்து அதனைத் துடைப்பதற்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்தால் இனி வரும் இந்தியா ஏழ்மையற்ற இந்தியாவாக மாறிவிடாதா..?
- ரசிகவ் ஞானியார்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
அப்படியா நிஜமாகவே இருக்கிறதா? கொஞ்சம் கூட்டிட்டுப் போங்களேன்?
//Kumar said...
அப்படியா நிஜமாகவே இருக்கிறதா? கொஞ்சம் கூட்டிட்டுப் போங்களேன்? //
நீங்க எங்கே இருக்கீங்க..? அதை முதலில் சொல்லுங்க. :)
nilavu nanba.. there is no school in this hamlet... those days there was a high school in Maruthakulam only.. the students to walk more than 5to 6 kms. to reach the school.. it is wonder to know a person from this village in State//
intha village yaiyum veli ulagatthukku konduvanthirikeenga
good post
//nilavu nanba.. there is no school in this hamlet... those days there was a high school in Maruthakulam only.. the students to walk more than 5to 6 kms. to reach the school.. it is wonder to know a person from this village in State//
intha village yaiyum veli ulagatthukku konduvanthirikeenga
good post//
நன்றி நண்பரே..... இன்னமும் வெளி உலகத்திற்கு தெரியாத நிறைய விசயங்கள் உள்ளன..ஏன் உங்களைச் சுற்றிக் கூட இருக்கலாம்...
ரொம்ப நல்ல விஷயம்
Post a Comment