Saturday, September 01, 2007
வாழ்க்கைப் பயணம்
நீ யாராகிலும் இருக்கலாம்
உன் எண்ணங்கள் ...
உன் பழக்கங்கள் ...
உன் கலாச்சாரம் ...
வேறாயிருக்க கூடும் !
என் பயணம் முழுவதும் ...
நீ வேண்டும் !
உன் ஜாதி , மதம் , மொழி பற்றி
எனக்குக் கவலையில்லை
என் பயணம் ...
உன்னால் இனிமையாக வேண்டும்
அவ்வளவுதான்!
எனக்காக நீயும் ...
உனக்காக நானும் ...
சின்ன சின்ன விட்டுக்கொடுத்தல்கள் !
காத்திருந்து உணவுண்ணும்
கண்ணியம் !
நீ எனக்குமாய் ...
நான் உனக்குமாய் ...
தவணை முறை பாதுகாப்புகள் !
தங்குகின்ற இடம் ...
யாருக்கும் நிரந்தரமில்லை!
நட்பு நிரந்தரமாகட்டும் !
பேச்சு, சிரிப்பு, அன்பு
எல்லாம் ...
பொய்யின்றி கடைசிவரை !
என் பயணத்தின்
இறுதிவரையிலும் இப்படியே ...
இனிய துணையாக
அமைந்துவிட்டால் ...
அழகாகவே இருக்ககூடும்
இரயில்பயணமும், வாழ்க்கையும் !
- ரசிகவ் ஞானியார்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நண்பரே நல்ல கவிதை
வாழ்க்கை பயணத்திற்க்கு இரு சக்கரம் தேவை.
தொடர்ந்து எழுதுங்கள்
//தாசன் said...
நண்பரே நல்ல கவிதை
வாழ்க்கை பயணத்திற்க்கு இரு சக்கரம் தேவை.
தொடர்ந்து எழுதுங்கள் //
விமர்சனத்திற்கு நன்றி தாசன்...
Post a Comment