Monday, September 10, 2007
யாருடையது இந்தப் பங்களா?
நேற்று நண்பர்களோடு பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு சென்று வந்தேன். ஒவ்வொரு முறை நான் செல்லும்பொழுதும், அம்பாசமுத்திரம் எல்கையைத் தாண்டி விக்கிரமசிங்கபுரம் தொடங்கும் இடத்தில் இதோ இந்தப் பராமரிக்கப்படாத பங்களாவை கவனிக்கத் தவற மாட்டேன்.
சாலையிலிருந்து சிறிது உயரத்தில் அழகான வடிவமைப்பில் கட்டப்பட்டிருக்கின்றது. பேய்ப் படங்களில் காட்டப்படுகின்ற பங்களா போல பயமாகவும் இருக்கும். முன்பு யாரோ நன்றாக வாழ்ந்த இடம் என்று மட்டும் தெரிகின்றது
வீட்டின் முன்னால் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு பாட்டியிடம் கேட்டபொழுது, இது மன்னர் வாழ்ந்த வீடு எனவும். இதனைச் சுற்றி இதுபோன்ற சிறு சிறு வீடுகள் சேதமடைந்து நிறைய இருப்பதாகவும் கூறினார்கள். நாங்களும் அந்த வீட்டினுள் சென்று பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இதே போன்ற வீடுகள் ஆங்காங்கே சேதமடைந்து பராமரிக்கப்படாத நிலையில் இருந்தது.
இப்பொழுது இந்த இடம் மடத்தின் பொறுப்பில் இருக்கின்றதாம். இந்த பங்களாவில் வாழ்ந்த மன்னன் யார்? எங்குள்ளவன்..? ஒரு வேளை ஆங்கிலேயர்கள் தாங்கள் இளைப்பாறிச் செல்வதற்காக கட்டினார்களா..? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.
- ரசிகவ் ஞானியார்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
படிப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. நீங்கள் அந்த பகுதியை
சேர்ந்தவர் என்பதால் நீங்கள்தான் இதன் மறுபக்கத்தை சொல்லவேண்டும்
paal adaintha pangkalavai paarkumpothu, enakku thonuvathu athil vazhntha manitharkal, avarkal nadamaatam, santhosam,etc etc.
// Raja said...
படிப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. நீங்கள் அந்த பகுதியை
சேர்ந்தவர் என்பதால் நீங்கள்தான் இதன் மறுபக்கத்தை சொல்லவேண்டும் //
நன்றி ராஜா..கண்டிப்பாக முயற்சி செய்கின்றேன்.
//Anonymous said...
paal adaintha pangkalavai paarkumpothu, enakku thonuvathu athil vazhntha manitharkal, avarkal nadamaatam, santhosam,etc etc. //
இதே உண்ர்வுதான் எனக்கும்
நன்றி நண்பா
Post a Comment