Saturday, May 13, 2006

நினைவுகளின் பாரம்




"இந்தக் கால்சட்டை
உனக்கு பொருத்தமாக இருக்கின்றது"


சுற்றுப்புரத்தின்
ஓ... ஓ...
சப்தங்களுக்கிடையே
சிரித்துக்கொண்டே சொன்ன...
சீனியர் அக்காவும்,


"நீ அணிகின்ற
எல்லா ஆடையிலும்
இது மட்டும்
ரொம்ப அழகாய் இருக்குதுடா"
சொல்லிவிட்டு
நன்றியும் நட்பும் ...
வாங்கிவிட்டுச் சென்ற
வகுப்பறைத் தோழியும்,

"அந்த சட்டைக்கு
இந்த கால்சட்டைதான்
அழகாய் இருக்கும்"
என்று
தனது தோழிகளுடன் அவள்
சாதாரணமாய் பேசியதை
நான் நிஜமாக்கி வந்தபொழுது
சிரித்து வெட்கப்பட்டு என்னிடம்
காதல் வாங்க முயற்சித்த
அவளும்,

ஏதோ ஒரு பெண்ணின்
புகைப்படம்
பாக்கெட்டில் இருப்பதாக
அம்மாவுக்குத் தெரியாமல்
என்னிடம் தந்துவிட்டு
எதையும் வாங்க முயற்சிக்காமல் சென்ற
வண்ணாணும்,


பேருந்தில் தொங்கிக்கொண்டே
வரும்பொழுது
காதல் கோட்டைகளை உருவாக்குகின்ற ...
பாளையங்கோட்டை அருகே
"ஏறுடா..உள்ள ஏறுடா"
என்று பலமாய் அடித்து
தூசி துடைத்த காவலரும்

ஞாபகத்தில் வருவதை ...
தவிர்க்க முடியவில்லை!
அளவு குறைந்துவிட்டதென்று
பழைய பாத்திரக்காரனிடம்
அந்தக் கால்சட்டையை
அம்மா கொடுக்கும்பொழுது..

அளவு குறைந்தது
கால்சட்டை மட்டும்தான்
நினைவுகள் அல்ல என்று
அம்மாவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை..


பழைய பாத்திரக்காரன்
புறப்பட்டுவிட்டான்
கனமான பாரங்களோடு..

- ரசிகவ் ஞானியார்

24 comments:

அனுசுயா said...

எப்படீங்க இப்படி ஒரு சாதாரண பழைய கால்சட்டையில் இத்தனை நினைவுகளா? நல்லா எழுதியிருக்கீங்க பாராட்டுகள்.

Anonymous said...

அளவு குறைந்தது
கால்சட்டை மட்டும்தான்
நினைவுகள் அல்ல என்று
அம்மாவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை..

ஞானியார்,
நினைவுக்ளின் பாரங்களை
நினைவு படுத்தி விட்டீர்கள்.

அன்புடன்
துபாய் ராஜா.

ப்ரியன் said...

கால் சட்டையில் காலமும் கரைந்து தங்கியிருக்கு என்ற அர்த்தமும் சொல்லிய விதமும் அருமை

> "இந்தக் கால்சட்டை
> உனக்கு பொருத்தமாக இருக்கின்றது"
>
> சுற்றுப்புரத்தின்
> ஓ... ஓ...
> சப்தங்களுக்கிடையே
> சிரித்துக்கொண்டே சொன்ன...
> சீனியர் அக்காவும்,
>
எங்க கல்லூரில இப்படி சொல்வாங்க ஒ...ஒ...ஒ...ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
>
> "நீ அணிகின்ற
> எல்லா ஆடையிலும்
> இது மட்டும்
> ரொம்ப அழகாய் இருக்குதுடா"
> சொல்லிவிட்டு
> நன்றியும் நட்பும் ...
> வாங்கிவிட்டுச் சென்ற
> வகுப்பறைத் தோழியும்,
எனக்கும் சொல்லியிருக்காள் ஒரு தோழி :)
> ஏதோ ஒரு பெண்ணின்
> புகைப்படம்
> பாக்கெட்டில் இருப்பதாக
> அம்மாவுக்குத் தெரியாமல்
> என்னிடம் தந்துவிட்டு
> எதையும் வாங்க முயற்சிக்காமல் சென்ற
> வண்ணாணும்,
இது அருமை
>
>
> பேருந்தில் தொங்கிக்கொண்டே
> வரும்பொழுது
> காதல் கோட்டைகளை உருவாக்குகின்ற ...
> பாளையங்கோட்டை அருகே
> "ஏறுடா..உள்ள ஏறுடா"
> என்று பலமாய் அடித்து
> தூசி துடைத்த காவலரும்
ஹஹஹ நான் பேருந்தில் தொங்காத பையன் ;)

Anonymous said...

அளவு குறைந்தது
கால்சட்டை மட்டும்தான்
நினைவுகள் அல்ல என்று
அம்மாவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை..

ஞானியார்,
நினைவுக்ளின் பாரங்களை
நினைவு படுத்தி விட்டீர்கள்.

அன்புடன்
துபாய் ராஜா.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//அளவு குறைந்தது
கால்சட்டை மட்டும்தான்
நினைவுகள் அல்ல என்று
அம்மாவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை..

ஞானியார்,
நினைவுக்ளின் பாரங்களை
நினைவு படுத்தி விட்டீர்கள்.

அன்புடன்
துபாய் ராஜா. //




நன்றி துபாய் ராஜா..

அட தமிழில் தட்டச்சு செய்ய ஆரம்பிச்சிட்டீங்க போல..வாழ்த்துக்கள்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//கால் சட்டையில் காலமும் கரைந்து தங்கியிருக்கு என்ற அர்த்தமும் சொல்லிய விதமும் அருமை//

நன்றி ப்ரியன்..


//எங்க கல்லூரில இப்படி சொல்வாங்க ஒ...ஒ...ஒ...ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ//

ம் எல்லா காலேஜ்லேயம் இது தத்துவபாடமாக்கிட்டாங்க போல..


>
// நன்றியும் நட்பும் ...

> வாங்கிவிட்டுச் சென்ற
> வகுப்பறைத் தோழியும்,

எனக்கும் சொல்லியிருக்காள் ஒரு தோழி :)//

அவளும்; நட்பை மட்டும்தான் வாங்கிச் சென்றாளா ப்ரியன்.. :)


//ஹஹஹ நான் பேருந்தில் தொங்காத பையன் ;)//

நீங்கல்லாம் ஒரு காலேஜ் ஸ்டுடண்டா ப்ரியன்.. :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//அனுசுயா said...
எப்படீங்க இப்படி ஒரு சாதாரண பழைய கால்சட்டையில் இத்தனை நினைவுகளா? நல்லா எழுதியிருக்கீங்க பாராட்டுகள். //


நன்றி அனுசுயா..

நீங்களும் அடிக்கடி உபயோகிக்கிற ஒரு பொருளை எடுத்து உதாரணமா சீப்பு - கைப்பை - வழக்கமாக செல்லும் பேருந்து - கைப்பைக்குள் ஒளித்து வைத்திருக்கும் முக கண்ணாடி :)
இப்படி பல பல..அதைப்பற்றி ஞாபகப்படுத்திப் பாருங்க..நிறைய ஞாபகங்கள் கிடைக்கும்..

Anonymous said...

துபாய் ராஜா..
அட தமிழில் தட்டச்சு செய்ய ஆரம்பிச்சிட்டீங்க போல..வாழ்த்துக்கள்.

ஆமாம்.கூடிய விரைவில் ப்ளாக்கும் ஓப்பன் பண்ணிட வேண்டியது தான்.ஓய்வு நேரத்தில் உதவுங்கள்.

அன்புடன்
துபாய் ராஜா.

Anonymous said...

துபாய் ராஜா..
அட தமிழில் தட்டச்சு செய்ய ஆரம்பிச்சிட்டீங்க போல..வாழ்த்துக்கள்.

ஆமாம்.கூடிய விரைவில் ப்ளாக்கும் ஓப்பன் பண்ணிட வேண்டியது தான்.ஓய்வு நேரத்தில் உதவுங்கள்.

அன்புடன்
துபாய் ராஜா.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ஆமாம்.கூடிய விரைவில் ப்ளாக்கும் ஓப்பன் பண்ணிட வேண்டியது தான்.ஓய்வு நேரத்தில் உதவுங்கள்.

அன்புடன்
துபாய் ராஜா. //


ம் வாழ்த்துக்கள் துபாய் ராஜா..கண்டிப்பாய் உதவுகின்றேன்..

Anonymous said...

//"அந்த சட்டைக்கு
இந்த கால்சட்டைதான்
அழகாய் இருக்கும்" என்று
தனது தோழிகளுடன் அவள்
சாதாரணமாய் பேசியதை
நான் நிஜமாக்கி வந்தபொழுது
சிரித்து வெட்கப்பட்டு என்னிடம்
காதல் வாங்க முயற்சித்த
அவளும்,//

hi rasigav,

she got married now :)

- subramani

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//hi rasigav,

she got married now :)

- subramani //

காதல் வாங்க முயற்சித்ததாகதானே கூறினேன்

காதல் வாங்கியதாக கூறவில்லையே நண்பா..

Chandravathanaa said...

அளவு குறைந்தது
கால்சட்டை மட்டும்தான்
நினைவுகள் அல்ல


nallayirukku kavithai

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//jansi said...
kavithai arumai.......Sugamana Sumaigal..... //



ம் நன்றி ஜான்ஸி..

சுமைகள் சுகங்கள் ஆகலாம்
சுகங்கள் சுமையாகக் கூடாது :)

Anonymous said...

அழகான கவிதை..

நேசமுடன்..
-நித்தியா

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// நித்தியா said...
அழகான கவிதை..

நேசமுடன்..
-நித்தியா //



நன்றி நித்தியா..

வலைப்பூ பக்கம் உங்கள் நடமாட்டத்தையே காணவில்லையே
எங்கேனும் நாடு கடத்தப்பட்டீர்களோ?

Radha N said...

//அளவு குறைந்தது
கால்சட்டை மட்டும்தான்
நினைவுகள் அல்ல என்று
அம்மாவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. //


வருங்கால மனைவிக்குத் தெரிவிப்பீர்களா?

Anonymous said...

கவிதை அருமை. ஆனாலும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் பெயரை இந்தமுறையில் பயன்படுத்தியிருப்பது சற்று நெருடலாக உள்ளது.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// நாகு said...
வருங்கால மனைவிக்குத் தெரிவிப்பீர்களா? //



அட இதெல்லாம் சொல்லிகிட்டு இருக்க முடியுமா :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//கவிதை அருமை. ஆனாலும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் பெயரை இந்தமுறையில் பயன்படுத்தியிருப்பது சற்று நெருடலாக உள்ளது. //



நன்றி நண்பா..

அந்த சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் குறிப்பிடவில்லை நண்பா..

வழக்கமாக அழைக்கும் தொனியில் புழக்கத்தில் உள்ள நிலையில்தான் குறிப்பிட்டேன்..

meenamuthu said...

ரசிகவ்,இப்படியான நினைவுகள்.. (இல்லாதவரும் இருப்பரோ?)ஒவ்வொன்றிலும் தொடர்கிறது!

ரொம்ப நல்லாருக்கு
அன்பு
மீனா.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ரசிகவ்,இப்படியான நினைவுகள்.. (இல்லாதவரும் இருப்பரோ?)ஒவ்வொன்றிலும் தொடர்கிறது!
ரொம்ப நல்லாருக்கு
அன்பு
மீனா. //



நன்றி மீனா

ம் நினைத்தாலே இனிக்கின்ற பாரங்கள்..

கார்த்திக் பிரபு said...

hello sir do u remember me..busy a??

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//karthick said...
hello sir do u remember me..busy a?? //



நண்பர்களை மறக்கமுடியுமா..?

மறந்தவர்களெல்லாம் நண்பர்களாக முடியுமா..?

( அய்யோ நான் என்ன சொல்ல வந்தேன்னு மறந்து போச்சே )

தேன் கூடு