காதல் அரசாங்கம்
காதலும் அரசாங்கமும்
ஒன்றுதான்
சாதி மதம் பார்க்காததால்
காதல் ஒரு
சமத்துவபுரம்
தன்னைத்தானே
உருக்கிக் கொள்வதால்
காதல் ஒரு
நமக்கு நாமே திட்டம்
இன்ப துன்பங்களை
இணைந்தே கடப்பதால்
காதல் ஒரு
மேம்பாலத்திட்டம்
இருவருக்குமே
லாபம் கிடைப்பதால்
காதல் ஒரு
உழவர் சந்தை
ஆகவே
காதலும் அரசாங்கமும்
ஒன்றுதான்
- ரசிகவ் ஞானியார்
16 comments:
very nice rasikav
/*சமத்துவபுரம்*/
/*நமக்கு நாமே திட்டம்*/
/*மேம்பாலத்திட்டம்*/
/*உழவர் சந்தை*/
என்ன ரசிகவ் எல்லாமே கலைஞர் தாத்தாவோட திட்டமா இருக்கு...
கலைஞர் நிச்சயம் இந்தக் கவிதையை ரசிப்பார்... இப்படிக்கு மு.க பதிவிற்கு பிராயச்சித்த பதிவு மாதிரி இருக்கு
//என்ன ரசிகவ் எல்லாமே கலைஞர் தாத்தாவோட திட்டமா இருக்கு... //
அந்தக் காதல் திமுக ஆட்சி நேரத்தில தோன்றியது ப்ரியன் அதான்..
ம் ஆளுங்கட்சியா இருக்கிறதால அப்படித்தான் சொல்லியாகணும்..இல்லைனா நாம் காலி..
//கலைஞர் நிச்சயம் இந்தக் கவிதையை ரசிப்பார்... இப்படிக்கு மு.க பதிவிற்கு பிராயச்சித்த பதிவு மாதிரி இருக்கு //
நன்றி தேவ்..
கலைஞரின் இமெயில் முகவரி கொடுங்களேன். அனுப்பித்தான் பார்ப்போம். ஏதாவது பதவி கொடுக்கிறாரான்னு பார்ப்போம்.
:)
//kettabaiyan said...
very nice rasikav //
நன்றி கெட்டப்பையா.. ( ஒருவேளை எதிர்கட்சியாக இருக்குமோ )
:-) இப்ப புரியுது
உங்க vote யாருக்கு என்று
:-)
கவிதை வித்தியாசமாய் இருக்கு..!
நேசமுடன்..
-நித்தியா
பி.கு.
என்னை யாரும் "இன்னும்" நாடு
கடத்தலை..!
:-)
// நித்தியா said...
:-) இப்ப புரியுது
உங்க vote யாருக்கு என்று
:-)//
நன்றி நித்தியா..
ஓட்டு போட்டதை சொல்வது சட்டப்படி குற்றம்.
//பி.கு.
என்னை யாரும் "இன்னும்" நாடு
கடத்தலை..!
:-) //
கடத்தப்பட்டது நாடா இல்லை இதயமா என்று தெரியவில்லை..? :)
அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவ ஓட்டு போட்டு கழட்டிவிட்டுருவாங்களோ(சும்மா டமாசுக்கு)
// ILA(a)இளா said...
அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவ ஓட்டு போட்டு கழட்டிவிட்டுருவாங்களோ(சும்மா டமாசுக்கு) //
போங்க நண்பா..
உங்க சொந்த அனுபவத்தையெல்லாமா இங்கே சொல்றது ( சும்மா டமாசுப்பா ) :)
"காதலும் அரசாங்கமும் ஒன்றுதான்".
ஆமாம் ஞானியாரே!காதலியெனும் கூட்டணிக்கட்சியை நம்பியிருக்கும்
போதும்,எதிர்பாராமல் கவிழும்போதும்
"காதலும் அரசாங்கமும் ஒன்றுதான்".
அன்புடன்,
துபாய் ராஜா.
இன்னும் எத்தனை காலத்துக்குப்பா இந்த மாதிரி எழுதியே பொழச்சிட்டிருப்பே :)
//ஆமாம் ஞானியாரே!காதலியெனும் கூட்டணிக்கட்சியை நம்பியிருக்கும்
போதும்,எதிர்பாராமல் கவிழும்போதும்
"காதலும் அரசாங்கமும் ஒன்றுதான்".//
அட கலக்குறீங்க ராஜா..
//அய்யாக்கண்ணு said...
இன்னும் எத்தனை காலத்துக்குப்பா இந்த மாதிரி எழுதியே பொழச்சிட்டிருப்பே :) //
சரக்கு தீருற வரைக்கும் அய்யாக்கண்ணு..
" அட கலக்குறீங்க ராஜா.."
இன்னும் எவ்வளவோ இருக்கு!என் வலைப்பூவில் எடுத்துவிடுகிறேன்.
எதிர்பாருங்கள்.
அன்புடன்,
துபாய் ராஜா.
//இன்னும் எவ்வளவோ இருக்கு!என் வலைப்பூவில் எடுத்துவிடுகிறேன்.
எதிர்பாருங்கள்.//
ம் எதிர்பார்க்கின்றேன் ஆவலோடு
Post a Comment