Sunday, January 21, 2007

ஏதாவது செய்யுங்க அன்புமணி அய்யா..?



Photobucket - Video and Image Hosting
மந்ருந்ந்ந்துந்ச்ந் சீந்ட்ந்டுந்


"என்னடா என்ன எழுதியிருக்கான்னு குழப்பமா இருக்கா? மருந்து சீட்டுங்கிறதான் இப்படி எழுதியிருக்கேன்பா.. "


நேற்று எனது உறவினரின் ஒருவருக்கு மாத்திரைகள் வாங்குவதற்கா மருத்துவர் எழுதிக்கொடுத்த கோழிக்கிறுக்கல்களை எடுத்துக்கொண்டு பார்மஸிக்குச் சென்றேன்.


அவன் பார்த்த உடனையே 2 மாத்திரைகள் எடுத்துக் கொடுத்தான்.


"ஹலோ என்ன தந்திருக்கீங்க "


"குரோசின் சார் அதானே எழுதியிருக்கு "


"குரோசின் இல்லைங்க நல்லா படிச்சுப் பாருங்க..குராடன்" - வேறு ஒரு மருந்து எழுதப்பட்டிருந்தது.


"அய்யோ! சாரி சாரிங்க அவங்க அதுமாதிரிதான் எழுதியிருக்காங்க என்ன செய்ய? "என்று மாத்திக் கொடுத்தார்


னக்கு மருந்து கடைக்காரர் மீது ஆத்திரம் வரவேயில்லை. மாறாக அதனை எழுதிக்கொடுத்த டாக்டர்மீதுதான் கோபமாக வந்தது.

டாக்டர்னா என்னங்க கொம்பா முளைச்சிருக்கு? ஏன் இப்படி கோழி கிறுக்குற மாதிரி கிறுக்குறாங்க.. இல்லை அவங்க மருத்துவ படிப்பில் ஏதேனும் சட்டதிட்டம் இருக்கா..இப்படித்தான் எழுதணும்னு? ஒழுங்கா தெளிவா எழுதுன அவங்க கௌரவம் குறைஞ்சாங்க போயிடும்.

Photobucket - Video and Image Hosting

ல்லை மருத்துவக் கல்லூரிக்கும் கோழிகளுக்கும் கையெழுத்து விசயத்தில் பரஸ்பர ஒப்பந்தம் பண்ணியிருக்காங்களோ..? அல்லது அவங்க எல்கேஜியில எழுத பழகியதை இன்னமும் மறக்காமல் இருக்கின்றார்களா?


ரு டாக்டர் இப்படி எழுதுனா சரி கையெழுத்து அப்படி என்று அவர் தலையெழுத்தை நொந்து கொள்ளலாம் . ஆனால் சொல்லிவைத்தாற்போன்று எல்லா மருத்துவர்களும் இப்படித்தான் எழுதுறாங்க..

து மக்களின் உயிர் சம்பந்தப்பட்ட விசயங்க..அதனால மருத்துவர்கள் எல்லாம் கவனமா எழுதிக் கொடுக்கணுங்குறதுதான் என்னோட கோரிக்கை..

ரு திரைப்படத்தில் மருத்துவக் கல்லூரி மாணவனாக நடித்த விவேக் ஒரு காட்சியில்

"அய்யா என்னய்யா எழுதியிருக்கீங்க ஒண்ணுமே புரியமாட்டேங்குது ? "


"சும்மா விக்ஸ்ங்கிறதத்தான்டா அப்படி சுத்தி சுத்தி
எழுதியிருக்கின்னு."

இது நகைச்சுவையாக அவர் சொன்னாலும் சிந்திக்க வேண்டிய விசயம். அப்படி எழுதுனாத்தான் மக்கள் அவரை ஒரு பக்குவப்பட்ட மருத்துவராக ஏற்றுக்கொள்வார்களோ..?


நான் கூட ஒரு கவிதையில் குறிப்பிட்டிருந்தேன்


மெடிக்கல் ரெப்பின் காதல் கவிதை


கடைசி வரை புரியவேயில்லையடி ...

உனது
காதல் !

அந்த

டாக்டரின் கையெழுத்துப்போலவே !



இப்படி கோழிகிறுக்கல்களினால் என்றேனும் பயங்கர உயிர்ப்பலிகள் நேர்ந்தவுடன்தான் அரசாங்கம் இதனைக் கவனிக்குமோ?


எதுக்கெல்லாமோ போராடுறாங்க..இதுக்கு மக்கள் எல்லாம் ஒன்று கூடி போராடக்கூடாதாங்க..


ஏதாவது செய்யுங்க அன்புமணி அய்யா..?



- ரசிகவ் ஞானியார்.

8 comments:

Anonymous said...

இது போல் எனக்கும் நடந்துள்ளது.

இலவசக்கொத்தனார் said...

ரசிகவ் அண்ணா,

உங்க பதிவு இப்போ நெருப்பு நரியில இந்த டாக்டருங்க எழுதறது மாதிரித்தான் தெரியுது, அந்த அலைண்மெண்டை ஜஸ்டிபய்டா இல்லாம இடது பக்க அலைன்மெண்டா மாத்துனீங்கன்ன சரியாத் தெரியுங்க.

Hariharan # 03985177737685368452 said...

அன்புமணி அய்யா எதுக்காகவோ எய்ம் பண்ணின எய்ம்ஸ்-வேணுகோபால் வெவகாரத்துல அவரா ஆப்புல போய் உக்காந்ததுலேர்ந்து இப்பதான் வெளிய வந்திருக்காரு (முழுசா வந்துட்டாரா?)

எல்லா டாக்டருமா மணியான கையெழுத்துக்காக அம்புமாதிரி கையெழுத்து இயக்கம் நடத்தி தலைவலி தந்து தைலம்பூசி தைலாபுரத்துக்கு அனுப்ப நல்ல வழி சொல்லியிருக்கீங்க. :-))

அன்புமணியை அம்புல சிக்கவைத்து மணிமகுடத்தை கழட்டவைக்கும் விஷயம் ஆனாலும் ஆகிடும் இது.:-))

அப்போ மக்கள் கதி.... நூத்தி ஒண்ணாவது சிக்கல்..

தலையெழுத்துன்றது இது தாங்க :-(

நாமக்கல் சிபி said...

நல்ல கோரிக்கையைப் பதிவு செய்துள்ளீர்கள்!

தெளிவாக எழுதிக் கொடுத்தால் மக்கள் சொந்த வைத்தியம் (சொ.செ.சூ) பார்த்துக் கொள்ளத் தொடங்கி விடுவார்களே என்ற அச்சம் இருந்தால்

எல்லா மருத்துவர்களும் ஒரே மாதிரி என்கோடிங் செய்து எழுதுமாறும், அதை எல்லா மருந்துக் கடைக்காரர்களும் ஒரே மாதிரி (டிகோடிங்) புரிந்து கொள்ளுமாறு செய்யவும் ஆவண செய்யலாம்!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// நாமக்கல் சிபி said...
நல்ல கோரிக்கையைப் பதிவு செய்துள்ளீர்கள்! //

நீங்க சொல்ற மாதிரி முயற்சித்துப் பார்க்கலாமே..? :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Anonymous said...
இது போல் எனக்கும் நடந்துள்ளது.//

அப்படினால் போராட்டம் தொடங்கிவிடலாம் என்கிறீர்கள்..?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//இலவசக்கொத்தனார் said...
ரசிகவ் அண்ணா,

உங்க பதிவு இப்போ நெருப்பு நரியில இந்த டாக்டருங்க எழுதறது மாதிரித்தான் தெரியுது, அந்த அலைண்மெண்டை ஜஸ்டிபய்டா இல்லாம இடது பக்க அலைன்மெண்டா மாத்துனீங்கன்ன சரியாத் தெரியுங்க. //


சரி நண்பா..அடுத்தபதிவை டாக்டரின் கையெழுத்துப்போல இடமாட்டேன். சரியா..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// Hariharan # 26491540 said...
அன்புமணி அய்யா எதுக்காகவோ எய்ம் பண்ணின எய்ம்ஸ்-வேணுகோபால் வெவகாரத்துல அவரா ஆப்புல போய் உக்காந்ததுலேர்ந்து இப்பதான் வெளிய வந்திருக்காரு (முழுசா வந்துட்டாரா?) //




உங்க கவலை பதவியைப் பற்றித்தான் இருக்குது ஹரி..எதிர்காலத்துல சிறந்த அரசியல்வாதியா வருவீங்க :)

தேன் கூடு