Tuesday, January 23, 2007

இறைவனின் சிறப்புக் குழந்தைகள்

"அட அநாதைப்பயலே.. "

"நீ ஒரு அநாதைடா.. "


என்று சினிமாத்தனமான வசனங்கள் நிறைய கண்டிருக்கின்றோம். ஆனால் அவ்வாறு சொல்லப்படும்பொழுது அந்த அநாதைகளின் மனநிலை எப்படியிருக்கும்?


Photobucket - Video and Image Hosting

பார்த்திபனின் கிறுக்கல்கள் கவிதைத் தொகுப்பில் ஒரு கவிதை:

இன்னொரு மனிதன்

இருக்கும்வரை

எவனுமே அநாதையில்லை.


இந்த மனிதநேய உணர்வுகள் அனைவருக்கும் வந்துவிட்டால் அநாதைகள் என்ற வார்த்தை அநாதையாகிவிடும்.

தந்தை தாயை இந்தியாவில் விட்டுவிட்டு அயல்தேசத்தில் பணிபுரிபவர்களிடம் கேட்டுப்பார்த்தால் தெரியும் பிரிவின் வலி. வீட்டில் இருக்கும்பொழுது அம்மா சமைத்துக்கொடுப்பதைக் குறைசொல்லிக்கொண்டிருப்பார்கள். ஆனால் அதனை விடவும் திருப்தியில்லாத உணவு கிடைக்கும்பொழுதுதான் அம்மாவின் சமையல் அருமை புரிய ஆரம்பிக்கும்.

குறைசொல்லியே ...
சாப்பிட்ட நான்,
இப்பொழுது
குறைகளை மட்டும்தானம்மா ..
சாப்பிடுகின்றேன்!


கொஞ்சநேரம் அம்மா வீட்டில் இல்லையென்றாலே மனசு என்னவோ மாதிரி இருக்கின்றது. ஆனால் அம்மா அப்பாவே இல்லாத வாழ்க்கை என்பது நினைத்துப்பார்க்கவே முடியாத ஒன்று.

இன்று திருவனந்தபுரம் சென்று விட்டு வரும்பொழுது பாதையில் ஒரு மொட்டை மனிதர் வெயிலில் கிழிந்த அழுக்கு ஆடையணிந்து கையில் வெற்று தண்ணீர் பாட்டிலுடன் நடந்து கொண்டிருந்தார்.

பார்ப்பதற்கு பாவமாய் இருந்தது. நண்பனிடம் காரை நிறுத்தச்சொல்லிவிட்டு கையில் வைத்திருந்த கேக் பொட்டலத்தை அவரிடம் கொடுத்தேன். ஆவலுடன் வாங்கி தின்று கொண்டே அந்த கடும் வெயிலில் நடந்து சென்றார். ஆனால் அடுத்தவேளை உணவுக்கு அவருக்கு யார் கொடுப்பது? எங்கு செல்வார்?

நான் கொஞ்சநேரம் உணவருந்த தாமதமாகிவிட்டாலே அம்மாவின் குரல் ஓங்கி கேட்க ஆரம்பித்துவிடும்

"அங்க என்னடா பண்றே..வந்து சாப்பிடுடா "

"டேய் என்னடா இன்னமுமா சாப்பிடலை.."

நமக்கு பசிக்குமோ, இல்லையோ? நம்முடைய பசியை தாங்கிக்கொள்ளும் சக்தி எந்த தாய்க்கும் கிடையாது.

ஆனால் அந்த மொட்டை மனிதர் சாப்பிட தாமதமாகி விட்டாலோ அல்லது சாப்பாடே கிடைக்கவில்லையெனில் அவருக்கு யார் வந்து கேட்ககூடுமோ..?

"தாயின் காலடியில்தான் சொர்க்கம் இருக்கிறது" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்.

இறைவன் தான் எங்கும் வந்துகொண்டிருக்கமுடியாது என்றுதான் அன்னையை படைத்ததாக தாயின் பெருமையைப்பற்றி சிறப்பித்துக் கூறுவார்கள்.

ஆனால் இறைவன் தாயில்லாமல் இருப்பவர்களுக்கு தானே நேரடிக் கண்காணிப்பில் வைத்திருக்கின்றானோ..?

உடல் ஊனமுற்றவர்களை, மாற்றுத்திறன் உடையவர்கள் என்று அழைப்பது போல அநாதைகளை, அநாதைகள் என்று அழைக்காதீர்கள், இறைவனின் சிறப்புக் குழந்தைகள் என்று அழையுங்களேன் ப்ளீஸ்..


"இறைவனின் சிறப்புக்குழந்தைகள் காப்பகம் "

"டேய்! நீ அப்பா அம்மா இல்லாத இறைவனின் சிறப்புக் குழந்தைடா "


என்று சொல்ல ஆரம்பித்தால் எவ்வளவு இனிமையாக இருக்கும் எண்ணிப்பாருங்கள்.? யாரிடம் முறையிட்டு இவற்றை மாற்றச் சொல்வது?

அது மட்டுமல்ல இதுபோன்ற வெளியில் திரிகின்ற இறைவனின் சிறப்புக் குழந்தைகளை அரசாங்கம் கவனித்து அவர்களுக்கு ஏதேனும் தொழில் கற்றுக்கொடுக்கலாமே..?-ரசிகவ் ஞானியார்

7 comments:

மரைக்காயர் said...

//"தாயின் காலடியில்தான் சொர்க்கம் இருக்கிறது" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்.//

நல்ல கட்டுரை நிலவு நண்பரே, மேற்கண்ட பொன்மொழியைச் சொன்ன நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் பிறக்குமுன்பே தந்தையை இழந்து பிள்ளைப் பருவத்திலேயே தாயையும் இழந்து 'இறைவனின் சிறப்புக் குழந்தை'யாகவே வளர்ந்தவர் என்பதும் இங்கு நினைவுகூரத் தக்கது.

Anonymous said...

manasu valikka thaan seigiradhu, yaar maatra pogiraro namey arambiththu vaippom. ini oruvaraiyum yarumilladhar endru alaikkamal aandavanin pillaigal endrey alaippomey........

-deepa

நிலவு நண்பன் said...

// மரைக்காயர் said...

நல்ல கட்டுரை நிலவு நண்பரே, //


நன்றி மரைக்காயர்..

நிலவு நண்பன் said...

//Anonymous said...
manasu valikka thaan seigiradhu, yaar maatra pogiraro namey arambiththu vaippom. ini oruvaraiyum yarumilladhar endru alaikkamal aandavanin pillaigal endrey alaippomey........
-deepa //

ஆதரவுக்கு நன்றி தீபா...

pria said...

Moon: Damn true. You are only left alone in tis crappy world, but not born alone.

How r you by the way??

Anonymous said...

Nalla sinthanai oottam ithu, namma anathai nu sollama irukirathu moolama ethuvum avangalukku seiya mudiyutha ? Apdi seiya mudincha nijamma athu nalla vishayam. Ipdi parithabathukuriya niraiya perai paarthavathu naama saapatta waste pannama illathavangalukku tharanum nu chinna urithi mozhiyavathu eduththu athai olunga senja namma varaila konjam thrupthi erpadalamo?! Intha mathri sambavangal sattunu manasai vittu agalrathu illai. Thai ku nam pasi thaangathu arputhamana vaarthaigal nanba.

Iniyal.

நிலவு நண்பன் said...

//Thai ku nam pasi thaangathu arputhamana vaarthaigal nanba.

Iniyal. //


நன்றி. தங்களின் விமர்சனம் மற்றும் மனிதாபிமான குணத்திற்கும்

தேன் கூடு