Friday, January 05, 2007

ஏதாவது செய்யணும் சார்..?"ம்பி கோர்ட்டுக்கு எப்படி போகணும்..?"

சுமார் 70 வயது இருக்கும் அந்தப் பெரியவர்க்கு. அழுக்கு ஆடையணிந்தாலும் கண்ணியமான தோற்றம். கையில் ஒரு பாலிதீன் பை.

"ந்த ரோட்டுல நேராக போனீங்கன்னா ஒரு ரோடு வரும். அங்கிருந்து பஸ்ல போகணும்..பக்கம்தான் ரெண்டு ஸ்டாப்புக்கு பிறகு இறங்கிருங்க.. "

என்று சொல்லிக்கொண்டிருக்கும்பொழுதே தனது பெரிய பாலிதீன் பையை சரிப்படுத்திக்கொண்டு நான் கூறியதை காதில் வாங்கியும், வாங்காததுமாய் நான் சுட்டிக்காட்டிய திசையைநோக்கி மெதுவாய் நடக்க ஆரம்பித்தார்

டக்க முடியாமல் அவர் விந்தி நடக்கின்றதைப்பார்த்து இதயம் லேசாய் சிந்தியது உடனே அவரை அழைத்தேன்..

"லோ என் வண்டியில வாங்க நான் உங்களை அந்த ஸ்டாப்புல இறக்கி விடுறேன்" என்று நான் அவரை அழைத்தேன்..

ப்படி யாராவது சொல்ல மாட்டார்களா? என்று ஏங்கியது போல் ஒரு பார்வை பார்த்து தனது வயதுக்குண்டான முக சுருக்கங்களில் மலர்ச்சி அரும்ப என்னை நோக்கி வந்தார்

பார்ப்பதற்கு பாவமான தோற்றம். முகத்தினில் அனுபவம் கலந்த முதிர்ச்சி. பார்வையில் ஒரு விதமான ஏக்கம்.

என் அருகே வந்து எனது வண்டியில் ஏறிக்கொண்டார். கண்களில் லேசாய் திரண்டிருக்கும் நீர்த்துளிகளோடு

"ம்பி ரொம்ப நன்றிப்பா.. என்னால உங்களுக்கு தொந்தரவு..
நான் சங்கரன்கோவிலில் இருந்து வருகின்றேன்.."
என்றார்

"ம்.."என்றேன்;.

"நான் நல்லா வாழ்ந்தவன்பா..இப்படியெல்லாம் வாழணும்னு தலை விதி"
என்று அவர் நொந்து புலம்பும்பொழுதே தெரிந்துகொண்டேன். அவர் மனதில் ஆழமாய் ஏதோ ஒரு சோகம் ஓடிக்கொண்டிருக்கின்றது.

"ஏன் என்ன ஆச்சுங்க..?" மெல்ல கேட்டேன்

"ன்னுடைய பசங்களால இப்படி ஆயிட்டேன். யாருமே என்னை கவனிக்கறது இல்லைப்பா.." அழுகுற தொனியில் கூறினார்

"ங்க பசங்க என்ன பண்றாங்க..?" ஆறுதலாய் கேட்டேன்

"ம் பொறுப்பத்த பயலுவ.. மனுசங்களா அவங்க.." என்று திட்டினார்

நான் இதனை எதிர்பார்த்தேன்.
"ஏன்..? அவங்க உதவுறது இல்லையா..? "

"வங்கவங்க நல்லா வாழுறானுங்க..என்னைய தனியா விட்டுட்டானுங்க.." என்று ஏக்கத்தோடும் ஒருவிதமான சலிப்போடும் கூறியபடி தொடர்ந்தார்

"நான் டிப்ளமோ சிவில் படிச்சேன்..பெங்களுர்ல நல்ல வேலை -கை நிறைய சம்பளம் அதுமட்டுமல்ல மிலிட்டரியில வேற கொஞ்ச நாள் சர்வீஸ் பண்ணினேன்..
நான். நடந்ததே இல்லைப்பா எங்கே போனாலும் கார்தான்....இப்ப பாவிங்க நடக்க வச்சுட்டானுங்க.."

புரிந்துகொண்டேன் ஒரு காலத்தில் நல்லா வாழ்ந்தவர். இப்போ வயதானவுடன் மகன்களின் ஆதரவு கிடைக்காமல் துரத்திவிடப்பட்டவர் என்று.

"எதுக்கு கோர்ட்டுக்கு போறீங்க..?"

"ரு வழக்கு சம்பந்தமாக மனு ஒன்று கேட்டேன். அனுப்புறேன்னு சொன்னவங்க இழுத்தடிக்குறாங்கப்பா அதான் நேர்ல வந்து பார்க்கலாம்னு வந்தேன்.."

ன்ன வழக்கு என்று சொல்ல மறுக்கின்றார். சரி எதற்கு நோண்டி நோண்டி கேட்க வேண்டும் என விட்டுவிட்டேன். பின் அவர் இறங்க வேண்டிய இடம் நெருங்கும்பொழுது

"ப்பா..யப்பா.. இப்படி பண்ணிட்டாங்களே நல்லா வாழ்ந்தேனே" என்று புலம்பிக்கொண்டே வந்தார். ஒருவித ஏக்கத்தில் குரல் பிசிறிப்போய் அவர் அப்படி கூறியது எனக்கு மனசே சரியில்லாமல் போனது..

வரைப் பார்க்கின்ற வழிப்போக்கர்கள் கூட பரிதாப்பட்டு அவருக்கு ஏதாவது உதவவேண்டும் என்று நினைப்பார்கள். அந்த அளவிற்கு அமைதியான முகம். ஆனால் அவருடைய மகன்களுக்கு எப்படி மனசு வந்தது இவரை அநாதையாக்குவதற்கு? அவரின் மகன்களின் மீது கோபம் கோபமாய் வந்தது.

"ங்கே இறங்கிக்கோங்க..தூத்துக்குடி வண்டி வரும் அதில ஏறி நீதிமன்றம்னு சொல்லுங்க இறக்கி விட்டுறுவாங்க.."என்று சொன்னேன்..

அவரும் மெதுவாய் இறங்கினார்.

"கால் விளங்காம போயிடுச்சுப்பா அதான் இறங்குவதற்கு சிரமமா இருக்கு" என்று சொல்லியபடி மெதுவாய் இறங்கினார்..

திரும்பி பார்த்தேன்
விந்தி விந்தி நடக்கின்றது
அவருடைய
கால்களும் கனவுகளும்.


விளங்காமல் போனது அவருடைய கால்கள் அல்ல, அவருடைய மகன்கள்தான் என்று மனசுக்குள் எண்ணிக்கொண்டு அப்பொழுது கடந்து போன மணல்லாரியை விடவும் அதிகமான மனபாரத்தோடு விடைபெற்றேன்.

ந்தப்பெரியவரைப்போல எத்தனையோ பேர் சொந்த மகன்களால் துரத்தப்பட்டு வீதியில் அலைந்து கொண்டிருக்கின்றார்கள்.

ரு காலத்தில் நன்றாக வாழ்ந்து, குழந்தைகளை கள்ளம் கபடமில்லாமல் கொஞ்சி மகிழ்ந்து , தன்னுடைய வருமானத்தில் முக்கால்வாசியை குழந்தைகளின் படிப்புக்காய் செலவிட்டு, அவர்களை முன்னேறவிட்டுவிட்ட பிறகு கடைசிகாலங்களில் அவர்கள் தங்களை காப்பாற்றுவார்கள் என்று எண்ணிய அவர்களது கனவுகளில் மண்ணை அள்ளி வீசுகின்றார்கள் மகன்கள்.

வனுங்கள எல்லாம் தேசத்துரோகிகள் என்று தூக்குத்தண்டனை கொடுத்தால்தான் என்ன..?

நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த

நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்....னைவியை அடித்தால் தண்டனை என்ற சட்டத்தைப்போல தந்தையை அல்லது தாயை வீட்டை விட்டு விரட்டிய மகன்களுக்கும் தண்டனை தரவேண்டும் என்று ஒரு சட்டம் இயற்றக்கூடாதா..?

கண்டிப்பா ஏதாவது செய்யணும் சார்?- ரசிகவ் ஞானியார்

10 comments:

ஸயீத் said...

சே! என்ன மனிதர்களோ, நெஞ்சு கனக்கிறது பெற்றோரை மதிக்கா இது போன்ற மனிதர்களைக் Sorry விலங்குகளைக் காணும்பொழுது.

த.அகிலன் said...

ம் கண்டிப்பா ஏதாவது செய்யணும் சார்.
நான் நேற்று நினைத்துக்கொண்டேன் எதிர்ப்படுகிற பிச்சைக்காரனிற்கு பிச்சை போடலாமோ இல்லயோ இந்த அரசியல் வாதிகளிற்கு ஓட்டே போடப்படாது என்று.

nagoreismail said...

சிறிய வயதில் நாம் யார் என்றே நமக்கு தெரியாது?

பெயர் என்ன? தெரியாது..

பசிக்கிறதா..? அழுதோம்,

பால் குடித்த பின் கழிவு வெளியாகிறதா..? அழுதோம்,

தன் பசி மறந்து பால் கொடுத்தது தாய் தான்,

கழிவு வெளியாகிய போது அப்படியே விட்டிருந்தால் நாறி போயிருப்போம், கழுவி விட்டு சுத்தப்படுத்தியது தாய் தான்,

ஆனால் வளர்ந்து ஆளான பிறகு பெற்றவர்களிடமே, நான் யார் தெரியுமில்ல என்று கேட்கின்ற பிள்ளைகள் ஈரமில்லாத பிள்ளைகள் ஏராளம்..

குரானில் பெற்றோர்களை கவனிக்கும் படி சொல்லும் போது நீங்கள் குழந்தையாக இருக்கும் போது உங்களை பார்த்து கொண்டார்கள் அல்லவா அதை போல் கவனித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது முதுமை என்பதும் ஒரு வகை குழந்தை பருவம் போல் தான், பெற்றோர்கள் எனும் குழந்தையை பெற்றோர்கள் நாம் குழந்தையாக இருந்த போது நம் மீது காட்டிய பிரியத்துடன் பாசத்துடன் கவனித்து கொள்ள வேண்டும், இல்லையெனில் நீங்கள் எழுதியிருப்பது போல் அது தண்டனைக்குறிய குற்றம் தான் - நாகூர் இஸ்மாயில்

வெங்கட்ராமன் said...

நல்ல பதிவு. நல்ல உணர்வு.

இது போல் ரயிலில் பிச்சை எடுக்கும் பெரியவர்களை பார்க்கும் போது ஏற்படும் பரிதாபத்தை விட, இவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய பிள்ளைகள் மீது அதிக கோபம் வருகிறது.

கோபி(Gopi) said...

ரசிகவ்,

இது குறித்து எனக்கு சில கருத்துக்கள் உண்டு..

1) பெற்ற பிள்ளைகளை படிக்க வைப்பது, நல்ல வேலையில் அமர்த்தி வாழ்க்கையை அமைத்து கொடுப்பது என்பன பெற்றோரின் கடமை. அதற்கு கைமாறாக வயதான காலத்தில் பிள்ளைகள் பாத்துக் கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு தவறானது. இது கொடுக்கல்-வாங்கல் அல்ல.

2) வயதான பெற்றோரை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது பிள்ளைகளின் கடமை இந்தக் கடமையிலிருந்து தவறும் யாருமே அற்பப் புழுவினும் கீழானவர்கள். வன்மையாய் கண்டிக்க/தண்டிக்கப் படவேண்டியவர்கள்.

3) பெற்றோர் தம் வயதான காலத்தில் தம்மை கவனித்துக் கொள்ள எப்போதுமே கொஞ்சம் சேமிப்பை வைத்திருக்க வேண்டும். எந்தக் கணத்திலும் வேறு எதற்காகவும் அதை செலவிடக் கூடாது.

4) அடுத்தநாள் பணியிழந்தால்/வருவாய் இழந்தால் எத்தனைக் காலம் பணியில்லாமல், வருவாய் இல்லாமல், பரம்பரை சொத்தின் துணையில்லாமல் தன் சொந்த சேமிப்பை மட்டுமே வைத்து நல்ல வாழ்க்கை வாழ முடியும் என்று அனைவரும் எப்போதும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். (எனக்குத் தெரியும் உங்களுக்கு?)

நிலவு நண்பன் said...

ஆதங்கப்பட்டவர்களுக்கும் விமர்சனம் தந்தவர்களுக்கும் என் நன்றி...

Kumar said...

மனசை பிசைகிறது ரசிகவ்.

-குமார்

ஜி said...

இதேப் போலத்தான் ஒரு முதியோர் இல்லத்தில் எத்தனையோ சேகக் கதைகள் :(((

முத்துலெட்சுமி said...

//தந்தையை அல்லது தாயை வீட்டை விட்டு விரட்டிய மகன்களுக்கும் தண்டனை தரவேண்டும் என்று ஒரு சட்டம் இயற்றக்கூடாதா..? //

கண்டிப்பாக.

அது மட்டுமில்லாமல் வீட்டில் வைத்து கொண்டு படுத்தினால் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் complain செய்தால் கூட தண்டிக்கவேண்டும்.

நிலவு நண்பன் said...

//லட்சுமி said...

கண்டிப்பாக.

அது மட்டுமில்லாமல் வீட்டில் வைத்து கொண்டு படுத்தினால் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் complain செய்தால் கூட தண்டிக்கவேண்டும். //உண்மைதான் நிறைய இடங்களில் பக்கத்தில் வைத்துக்கொண்டே மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்துகின்றார்கள்

தேன் கூடு