Tuesday, January 16, 2007

எண்(ன்) குழப்பம்


Photobucket - Video and Image Hostingன்று வங்கியில் பணம் எடுப்பதற்காக சென்று செக்கில் One Hundred Thousand Only (100,000/-) என்று எழுதி அவர்களிடம் கொடுத்தேன். வாங்கிய அதிகாரி ஏதோ நான் கொலைக்குற்றம் செய்தது போல குதிக்கிறார்.

ந்தச் செக்கை பக்கத்தில் உள்ள அதிகாரியிடம் கொடுத்து விவாதிக்கின்றார். அவர் அவருக்கு பக்கத்தில் உள்ள பெண் ஊழியரிடம் காண்பித்த நக்கலாகச் சிரிக்கிறார்.


"இல்லை சார் திருப்பிக் கொடுத்துறுங்க.. "


"இது என்ன இப்படி எழுதியிருக்காங்க" என்று ஆளாளுக்கு சத்தம் போட நான்


"சார்.. சார்ர்ர்.. என்று கத்தினேன்.


என்னடா வங்கியில் இப்படி கத்துகிறார் என்று அவர்கள் திரும்பி பார்க்க.


"வெளிநாடுகளில் எல்லாம் இப்படித்தான் சார் எழுவாங்க..அதான் அப்படி எழுதிட்டேன். "- என்று கூறினேன்


"எந்த நாடு சார்? "


"துபாய்ல .."


"நீங்க இப்ப இந்தியால இருக்கீங்க சார் முதல்ல இந்தியாவுக்கு வாங்க..? "


"அப்படின்னா நான் பணத்தை வங்கியில் போடும்பொழுது இருந்த செக்கில் இப்படித்தானே எழுதியிருந்துச்சு அப்ப யாரும் ஒண்ணுமே சொல்லலையே. பணம் போடும்போது கண்டுக்கமாட்டீங்க..எடுக்கும்போது மட்டும் நக்கலா பார்க்குறீங்க..இது என்ன நியாயம் சார்? "


"அந்த செக் துபாய்ல இருந்து வந்ததுனால அவங்க வழக்கப்படி எழுதியிருக்காங்க.." என்று விளக்கமளித்தார்.


ப்படியோ விவாதத்திற்குப் பிறகு பணத்தைக் கொடுத்துவிட்டார்கள். பணத்தைப்பெற்றுக்கொண்டு நக்கலடித்த ஊழியர்களைப் பார்த்து லேசாய் புன்னகை சிந்திவிட்டு நகர்ந்தேன்.


ப்படியே கண்களுக்கு முன்னால் ஒரு கொசுவர்த்தி சுருள் ஒன்று வலம் வருகின்றது. அதான்ங்க ப்ளாஷ்பேக்..

Photobucket - Video and Image Hosting


நான் துபாயில் வேலைக்கு சேர்ந்தபொழுது இதே பிரச்சனை ஏற்பட்டது
யாருக்கோ பணம் கொடுப்பதற்காக சுமார் 2,50,000 பணத்தை Two Lakhs Fifty Thousand என்று எழுதினேன்.


ப்புதல் வாங்குவதற்காக மேலாளரிடம் கொண்டு சென்றபொழுது அந்த எகிப்து மேலாளர் என்னைக் கடிச்சித் துப்பிட்டாருப்பா..


"என்ன எழுதியிருக்கீங்க ?"


" சரியாத்தானே எழுதியிருக்கேன்" என்று மறுபடியும் நான் எழுதியதை சரிபார்த்தேன்.


"இது என்ன Lakhs ..?"என்று விநோதமாய் கேட்டார்


ன்னடா முட்டாப்பசங்களா இருக்காங்க லட்சம்னா என்னன்னு தெரியாதா இவங்களுக்கு என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு 2 லட்சம் என்று விளக்கினேன்.


ஒன்றுமே பேசவில்லை சரியாய் எழுதிவிட்டு வருமாறு கூறினார்.


நான் குழப்பத்துடன் வந்து அமர்ந்தேன். எதைத் திருத்தச் சொல்றார். ஒருவேளை ( , )கமா எதுவும் போடாமல் விட்டுவிட்டோமா என்று பார்த்தேன் சரியாகத்தான் போட்டிருந்தேன்.

னது அலுவலகத்தில் வேலை பார்க்கும் இந்திய நண்பரிடம் கேட்டேன்.
அவர்தான் விளக்கினார். "இவங்க இப்படி எழுதமாட்டாங்க என்று Two Hundred Fifty Thousand என்று எழுதிக்காட்டினார்.


ப்பொழுதான் எனக்கு விளங்கியது அட இவனுங்க லட்சத்தை உபயோகிக்க மாட்டங்க என்று. லட்சத்தையெல்லாம் ஆயிரத்தில் தான் உச்சரிக்கின்றார்கள். லட்சம் என்பது இந்தியாவில் மட்டும்தானா? இல்லை மற்ற நாடுகள் எங்கேனும் கடைப்பிடிக்கின்றார்களா? யாராவது சொல்லுங்களேன்.- ரசிகவ் ஞானியார்

19 comments:

பெத்த ராயுடு said...

நிலவு நண்பரே,

லட்சம், கோடியெல்லாம் நம்மூருல மட்டும்தான்.

1,00,000 - ஹண்டர்ட் தவுசண்ட்
1,000,000 - ஒரு மில்லியன்
1,000,000,000 - ஒரு பில்லியன் = ஆயிரம் மில்லியன்
1,000,000,000,000 - ஒரு ட்ரில்லியன் = ஆயிரம் பில்லியன்

போதுமுன்னு நெனக்கிறேன் :)))))

பெத்த ராயுடு said...

அட துபாய் சமாச்சாரமெல்லாம் எதுக்குங்க?

கணினித்துறையில இருக்கறவங்க மெயில் கடிதங்களில் இடது பக்கம் பெயர எழுதற வழக்கம் தெரிந்ததுதானே?

ஒருவாட்டி ஊருல என்பெயருக்கு வரும் பதிவுத்தபாலை என் தந்தை பெறவேண்டியிருந்தது. அதுக்காக லோக்கல் போஸ்ட்மேன் ஒரு அத்தாட்சிக் கடிதம் கேட்டார். நானும் வழக்கம்போல இடதுபக்கம் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துட்டேன். பொஸ்ட்மேனுக்கு ஒரே குழப்பம், அந்த அத்தாட்சிக் கடிதத்தை வாங்குவதா வேண்டாமா என்று. ஒரு வழியாக அவரை சமாதானப்படுத்தி ஏற்றுக்கொள்ள வைத்தேன். யோசிச்சுப்பாத்தா, சிலர் செக்குமாடு மாதிரி யோசிக்கவே மாட்டாங்களோண்ணு தோணுது. அரசாங்க வேலையில எல்லாமே முன்மாதிரிய வச்சித்தானே? இல்லைனா சீட்டுக்கு ஆப்பு வெச்சிறமாட்டாங்க? இன்னொன்னு, இப்ப இருக்கிற தெளிவு அப்ப இருந்திருந்தா, 5 நிமிஷம்ன்னு சொல்லி, அவர் விருப்பட்ட மாதிரியே எழுதிக் கொடுத்திருந்திருக்கலாம். ஆடுற மாட்ட ஆடித்தான் கறக்கவேண்டியிருக்கு.

sivagnanamji(#16342789) said...

வங்கித்துறையிலும் மண்டூகங்கள் உண்டு என்பதை இந்நிகழ்ச்சி நிரூபிக்கின்றது..

எனக்கும் இதுபோல் ஒரு அனுபவம்:

நாட்டுடைமையக்கப்பட்ட வங்கி ஒன்றில் கணக்கு துவங்க சென்றேன்.
வங்கி அதிகாரி சொன்னார்:'வாடிக்கையாளர் அல்லது வங்கி அலுவலர் ஒருவர் உங்களை
அறிமுகப்படுத்த வேண்டும்'

நான்:இல்லை. யாரையும் தெரியாது.இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்த அடையாள அட்டை உள்ளது.இதோ...

அவர்:அது தேர்தலில் ஓட்டு போடுவதற்கு...இங்கே ஒருவர் அறிமுகப்படுத்தினால்தான்...

எதால் அடிப்பது என்று எனக்குத் தெரியவில்லை

(நிகழ்ச்சி நடந்த ஊர்: சென்னை)

அப்துல் குத்தூஸ் said...

இதேப் பிரச்னை எனக்கும் ஏற்பட்டது நண்பரே! அப்புறம் உங்க விளக்கத்தைத்தான் நான் அவங்களுக்கு கொடுத்துவிட்டு பணத்தைப் பெற்றேன். அப்ப லட்சத்திற்கு ஸ்பெல்லிங் உடன் ஞாபகம் வரவில்லை. அப்ப இந்தமாதிரி போட்டு மாட்டிக்கொண்டு முழித்தேன்.

வாசகன் said...

நம்மட 'லட்சம்'லாம் அவிங்களுக்கு 'ஆயிரந்'தான் போல.:-))

நாம எழுதறது பிரிட்டிஷ் மெதட். அவிங்களுக்கு அமெரிக்கன் மெதட்.

'ஆயிரந்' தான் இருந்தாலும் இத வெச்சுலாமா பதிவு போடறது?:-))

Jazeela said...

இந்தியாவில் மட்டும்மல்ல ஞானி இலங்கை, வங்காளம், பாகிஸ்தான் என்று நம்ம பக்கத்து நாடுகளிலும் உபயோகிக்கப்படுகிறது லட்சம். லட்சம் என்ற வார்த்தை எந்த மொழியிலிருந்து வந்திருக்கும் என்று தெரியவில்லை. 100 லட்சம் தான் 1 கோடி அல்லது 10 மிலியன். லட்சத்தைப் பற்றி Indian Numbering System -ல் நீங்கள் சின்ன வயதில் படித்திருப்பீர்கள். படிச்சத்தெல்லாம் நினைவிருக்கவா செய்கிறது?

வல்லிசிம்ஹன் said...

பணத்தால் எப்பவுமே பிரச்சினையோ?:-)

தாணு said...

nice confusion

சிவகுமார் said...

Elevan thousand elevan hundred eppadi ezhuthuveenga nilavu nanba?

my blog http://mithra11.blogspot.com

Anonymous said...

//லட்சம் என்பது இந்தியாவில் மட்டும்தானா? இல்லை மற்ற நாடுகள் எங்கேனும் கடைப்பிடிக்கின்றார்களா? யாராவது சொல்லுங்களேன்.//

லட்சம் என்பது இந்தியாவில் மட்டும்தான் உபயோகிக்கிறார்கள். வேறு எங்கும் இல்லை.
லட்சம் என்பதே இந்தி வார்த்தை எனவே மற்ற நாட்டவருக்கு லட்சம் என்றால் புரியாது. One hundred thoudand 99 hundred thousand வரை இப்டியும், பின்பு million யிலும் குறிப்பிடுவார்கள்.
கருப்பசாமி

ஜி said...

இங்க அமெரிக்காவிலும் லட்சம் உபயோகிப்பதில்லை. ஆயிரத்துலத்தான் சொல்றாங்க. அதுக்கப்புறம் மில்லியன், ட்ரில்லியன்னு போறாங்க

நிலவு நண்பன் said...

//பெத்த ராயுடு said...
நிலவு நண்பரே,

போதுமுன்னு நெனக்கிறேன் :))))) //

நன்றி நன்றி

போதும் போதும்.......100,000

நிலவு நண்பன் said...

//பெத்த ராயுடு said... ஆடுற மாட்ட ஆடித்தான் கறக்கவேண்டியிருக்கு. //

வேற என்ன செய்ய அவங்க வழியிலதான் போகணும்

நிலவு நண்பன் said...

//sivagnanamji(#16342789) said...
வங்கித்துறையிலும் மண்டூகங்கள் உண்டு என்பதை இந்நிகழ்ச்சி நிரூபிக்கின்றது..//

ம் உண்மைதான் நண்பா

நிலவு நண்பன் said...

//வாசகன் said...
'ஆயிரந்' தான் இருந்தாலும் இத வெச்சுலாமா பதிவு போடறது?:-)) //

லட்சம் பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லைப்பா

நிலவு நண்பன் said...

//Jazeela said...
இந்தியாவில் மட்டும்மல்ல ஞானி இலங்கை, வங்காளம், பாகிஸ்தான் என்று நம்ம பக்கத்து நாடுகளிலும் உபயோகிக்கப்படுகிறது லட்சம். . படிச்சத்தெல்லாம் நினைவிருக்கவா செய்கிறது? //

விளக்கத்திற்கு நன்றி

லட்சம் இந்தியிலிருந்து வந்திருக்கலாம் என்று நண்பர் கூறுகின்றார்.

படிச்சாத்தானே ஞாபகம் இருக்கும்

நிலவு நண்பன் said...

// வல்லிசிம்ஹன் said...
பணத்தால் எப்பவுமே பிரச்சினையோ?:-) //


ம் மனித இனம் அழியும்வரை இருக்கலாம்

//தாணு said...
nice confusion //


எண் குழப்பம் உங்களுக்கும் வந்திருக்கா தாணு

//Sivakumar said...
Elevan thousand elevan hundred eppadi ezhuthuveenga nilavu nanba?

my blog http://mithra11.blogspot.com //

என்னய வச்சி காமெடி கீமெடி பண்ணலையே :)

நிலவு நண்பன் said...

//லட்சம் என்பதே இந்தி வார்த்தை எனவே மற்ற நாட்டவருக்கு லட்சம் என்றால் புரியாது. One hundred thoudand 99 hundred thousand வரை இப்டியும், பின்பு million யிலும் குறிப்பிடுவார்கள்.//

நன்றி கருப்பசாமி

நிலவு நண்பன் said...

//ஜி said...
இங்க அமெரிக்காவிலும் லட்சம் உபயோகிப்பதில்லை. ஆயிரத்துலத்தான் சொல்றாங்க. அதுக்கப்புறம் மில்லியன், ட்ரில்லியன்னு போறாங்க //

நன்றி ஜி

தேன் கூடு