Monday, March 27, 2006

ஒருநாள் அத்தனையும் மீறப்படும்
வீதி மங்கைகள்..
விளையாடிய
பல்லாங்குழிகளில்,
புளியங்கொட்டைக்குப்பதிலாக...
மனித இரத்தங்கள்!

கடற்கரைச் சிறுவர்களின்..
மணல் வீட்டில்
எலும்புகள்தான்..
கூரைகள்!

வீதிகளில் விட்டுவந்த
பம்பரங்கள்...
இன்னமும்
இதயத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது!

நாங்கள்
பாயில் தூங்கிய ...
நாட்களை விடவும்,
பயத்தில் தூங்கிய ..
நாட்கள்தான் அதிகம்!


வாழப்போகிற தலைமுறைக்காய்
சாவை விரும்பும் ..
சந்ததிகள் நாங்கள்!
அழியப்போகும் ஆதிக்கமே! - உன்
சாவுக்கு ஊதுகிற
சங்கொலிகள் நாங்கள்!

உங்களுடைய
வாழ்க்கையெல்லாம்..
மரணத்தோடு முடிகிறது!
எங்களுடைய
வாழ்க்கையோ..
மரணத்தில் விடிகிறது!

சற்று உற்றுப்பாருங்கள்
எங்கள்
தலையில் சுமந்திருப்பது
கோணிகளா இல்லை
கோபத்தின் கொப்புளங்களா..?

நாங்கள்
விட்டுவந்தது ..
தாய் மண்ணைத்தான்
தைரியத்தை அல்ல..

நாங்கள்
அகதிகள் அல்ல ..
உங்களை
புதைக்க வரப்போகிற..
சகதிகள்!

புறநானூற்று தமிழ் - இனி
புல்லட்டுகளோடு வரும்

காத்திரு!
அத்து மீறியவனே - ஒருநாள்
அத்தனையும் மீறப்படும்- ரசிகவ் ஞானியார்

23 comments:

பிருந்தன் said...

அருமையான கவிதை, கவிதைக்கு வாழ்துக்கள், தொடருங்கள் உங்கள் பணி.

நிலவு நண்பன் said...

நன்றி பிருந்தன்..

( உங்க வலைப்பூவுல இருக்கிறது உங்களோட சின்ன வயசு புகைப்படமா அது )

Dharan said...

Ilainargal thaan nalaiya

thalaivargal....endru sollum

eamatru(cheating) kootathidam..

vazkaiyaem tholaithu..Ilammaiyaum

tholaitha vargal ethanay

pear..!!!

Ethanay Ethanay nali(tomorrow)..

Etahnay Ethanay oru naal....

Ezuthugalil matumay naaan

partha

ezuchigalail ithuvum ondru....

Meerun naalill Ethanay

kalaraigaloooo!!!!!!!

Meerapadum naalil

Malargal irukum....

soodikolla yarum

irupargala???

பொன்ஸ்~~Poorna said...

//நாங்கள்
விட்டுவந்தது ..
தாய் மண்ணைத்தான்
தைரியத்தை அல்ல..
//

நல்ல கவிதை.. ஆனால், இந்தப் பக்கத்தைத் திறக்கத்தான் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். மிக மிக மெதுவாகத் திறக்கிறது.. திறந்து வைத்தால், மற்ற பக்கங்கள் திறக்க நேரமாகிறது.. இன்று ரொம்ப சுலபமாகத் திறந்து விட்டேன், இரண்டு நாட்களாக முயன்றபின்..

நிலவு நண்பன் said...

//poons said...


நல்ல கவிதை.. ஆனால், இந்தப் பக்கத்தைத் திறக்கத்தான் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். மிக மிக மெதுவாகத் திறக்கிறது.. திறந்து வைத்தால், மற்ற பக்கங்கள் திறக்க நேரமாகிறது.. இன்று ரொம்ப சுலபமாகத் திறந்து விட்டேன், இரண்டு நாட்களாக முயன்றபின்..//

நன்றி பொன்ஸ்
இந்தப்பக்கத்தை திறக்க கடினப்பட்டாலும் அடிக்கடி விமர்சனம் தந்து என் இதயப்பக்கத்தை எளிதாய் திறந்து விடுகிறீர்கள்.

நிலவு நண்பன் said...

//Dharan said...
Ilainargal thaan nalaiya

thalaivargal....endru sollum

eamatru(cheating) kootathidam..

vazkaiyaem tholaithu..Ilammaiyaum

tholaitha vargal ethanay

pear..!!!//என்ன தரண் தமிங்கிலக்கவிதையா இது..

நன்றி

Dharan said...

Sorry Rasigav,

I tried to type in tamil but i couldn't able to find a lot of

words in my keyboard.

So i just typed it through english.

Thank you

நிலவு நண்பன் said...

//Dharan said...
Sorry Rasigav,

I tried to type in tamil but i couldn't able to find a lot of

words in my keyboard.//


தமிழில் தட்டச்சு செய்ய வசதியிருந்தும் தமிங்கிலத்தில் தட்டச்சு செய்கிறீர்களோ என நினைத்தேன்.

மன்னித்துக் கொள்ளுங்கள்
விளக்கத்திற்கு நன்றி தரண்..
அன்புடன்

ரசிகவ் ஞானியார்

Anonymous said...

இனிமேல் உங்களுக்கு
நான் கருத்துத் தெரிவிப்பதில்லை
என்று முடிவு செய்துவிட்டேன்
:-)

நேசமுடன்..
-நித்தியா

ராஜகுமார் said...

அன்புள்ள நிலவு நண்பனுக்கு வணக்கம்
உங்களது கவிதைகளும் உணர்ச்சிமிக்க கதைகளும் கண்டு நான் வியந்தேன்
அட அட என்ன ஒரு அருமையான கருத்து. உங்கள் கருத்துக்கள் மிகவும் இனிமையான தமிழில் உள்ளன. உங்களது வெப் பக்கங்களை படிக்கும் போது திரில்லாகவும் இனிமையாகவும் இருந்தது. தமிழை எளிய நடையில் சிறப்பாக புரிந்து கொள்ளும் வகையில் சமர்பித்த உங்களுக்கு. எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் நிலவு நாண்பன் அல்ல தமிழ் நாண்பன். இனிதே தொடங்கட்டுன் நமது உறவுகள். ஒரு வேண்டுதல் எனது வெப்சட் பக்கமாக வரும் போது கூகிள் தொடுபுக்களை கிளிக் பண்ணவும். இது கட்டளை அல்ல வேண்டுதல்.நன்றி உங்கள் தொடுப்புகளை எதிர் நோக்கி இருக்கும் ராஜகுமார்

உடன் பதில் மறுமொழிகளில் அனுப்பவும் http://kurinchitamil.blogspot.com
http://mazhalaitamil.blogspot.com

Anonymous said...

அன்புள்ள நிலவு நண்பனுக்கு வணக்கம்
உங்களது கவிதைகளும் உணர்ச்சிமிக்க கதைகளும் கண்டு நான் வியந்தேன்
அட அட என்ன ஒரு அருமையான கருத்து. உங்கள் கருத்துக்கள் மிகவும் இனிமையான தமிழில் உள்ளன. உங்களது வெப் பக்கங்களை படிக்கும் போது திரில்லாகவும் இனிமையாகவும் இருந்தது. தமிழை எளிய நடையில் சிறப்பாக புரிந்து கொள்ளும் வகையில் சமர்பித்த உங்களுக்கு. எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் நிலவு நாண்பன் அல்ல தமிழ் நாண்பன். இனிதே தொடங்கட்டுன் நமது உறவுகள். ஒரு வேண்டுதல் எனது வெப்சட் பக்கமாக வரும் போது கூகிள் தொடுபுக்களை கிளிக் பண்ணவும். இது கட்டளை அல்ல வேண்டுதல்.நன்றி உங்கள் தொடுப்புகளை எதிர் நோக்கி இருக்கும் ராஜகுமார்

உடன் பதில் மறுமொழிகளில் அனுப்பவும்.

http://kurinchitamil.blogspot.com
http://mazhalaitamil.blogspot.com

செல்வேந்திரன் said...

நாங்கள்
பாயில் தூங்கிய ...
நாட்களை விடவும்,
பயத்தில் தூங்கிய ..
நாட்கள்தான் அதிகம்!

மிக அருமையான வார்த்தைகள் !!

மேலும் வளர்க !!

நிலவு நண்பன் said...

// நித்தியா said...
இனிமேல் உங்களுக்கு
நான் கருத்துத் தெரிவிப்பதில்லை
என்று முடிவு செய்துவிட்டேன்
:-)//


ஏன் நித்தியா..கவிதை பிடிக்கவில்லையா..?

நிலவு நண்பன் said...

// ராஜகுமார் said...
அன்புள்ள நிலவு நண்பனுக்கு வணக்கம்
உங்களது கவிதைகளும் உணர்ச்சிமிக்க கதைகளும் கண்டு நான் வியந்தேன்

உடன் பதில் மறுமொழிகளில் அனுப்பவும் http://kurinchitamil.blogspot.com
http://mazhalaitamil.blogspot.com
//நன்றி ராஜ்குமார் அவர்களே..

கண்டிப்பாக உங்களது வலைப்பூவந்து மறுமொழியிடுகிறேன். வுரலைன்னா அடிச்சிருவீங்க போலிருக்குது..

நிலவு நண்பன் said...

//செல்வேந்திரன் said...
நாங்கள்
பாயில் தூங்கிய ...
நாட்களை விடவும்,
பயத்தில் தூங்கிய ..
நாட்கள்தான் அதிகம்!

மிக அருமையான வார்த்தைகள் !!

மேலும் வளர்க !! //


வாழ்த்துக்கு நன்றி செல்வேந்திரன்..

குறும்பன் said...

இவ்வளவு அருமையாக எழுதும் நீங்கள் ஏன் பார்ப்பன வெறியன்கள் பதிவில் எல்லாம் சென்று ஆதரவு அளிக்கிறீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை.

நிலவு நண்பன் said...

//குறும்பன் said...
இவ்வளவு அருமையாக எழுதும் //

நன்றி குறும்பன்..

உங்க நிஜப்பெயரே இதுதானா..?

உங்கள் நண்பன் said...

really very nice dear nilavu nanban ,neenkal nilavu nanbal alla niivil vaithirukka veintiya nanban,
do u know one thing last week i went to palaymkottai that time i saw ur college appollam unka niyaabagam thaan .... thnaks for a friend( i wnat type tamil but i dont know how can i)

நிலவு நண்பன் said...

//Saran.C said...
really very nice dear nilavu nanban ,neenkal nilavu nanbal alla niivil vaithirukka veintiya nanban,
do u know one thing last week i went to palaymkottai that time i saw ur college appollam unka niyaabagam thaan .... thnaks for a friend( i wnat type tamil but i dont know how can i) //நன்றி நண்பா..நீங்கள் மட்டுமல்ல..என்னுடைய சில பதிவுகளை படித்துவிட்டு என்னுடைய கல்லூரியைக் கடந்து சென்ற சிலர் இதே மாதிரி எழுதியிருக்கிறார்கள்.

தமிழில் இகலப்பையை தங்களது கணிப்பொறியில் டவுண்லோடு செய்து கொள்ளுங்கள்
மேலும் விளக்கத்திற்கு

http://www.ezilnila.com/help/index.htm

இந்தச் சுட்டியை பார்க்கவும்

Anonymous said...

//கவிதையின்
அர்த்தம் புரிந்தவர்கள்
மௌனமாய் இருக்கிறார்கள்!

கவிதையின்
அரைகுறையாய் புரிந்தவர்கள்
கைதட்டுகிறார்கள்!

நீங்கள் எப்படி..

மௌனமாய் இருப்பீர்களா ..?
கைதட்டுவீர்களா...?//


மெளனமாய் இருப்பதே மேல்
:-):-)

நேசமுடன்..
-நித்தியா

ராஜகுமார் said...

நிலவி நண்பனுக்கு வணக்கம் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும். தவறுகளை சரிச்செய்வதற்க்கு உதவும் படி வேண்டுகிறேன்.

நிலவு நண்பன் said...

//மெளனமாய் இருப்பதே மேல்
:-):-)

நேசமுடன்..
-நித்தியா //


ம்..அது..

கவிதையை மௌனமாய் பாராட்டியதற்கு நன்றி

நிலவு நண்பன் said...

// ராஜகுமார் said...
நிலவி நண்பனுக்கு வணக்கம் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும். தவறுகளை சரிச்செய்வதற்க்கு உதவும் படி வேண்டுகிறேன். //

என்ன தவறு ..
எதனை சரி செய்ய ..? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்

தேன் கூடு