Monday, March 06, 2006

நாலு- சங்கிலி பதிவு

அது என்ன சங்கிலிப் பதிவுன்னு தெரியலைங்க..நாலு நாலா எழுதச் சொன்னாங்க.. கொஞ்சம் குறைச்சி இரண்டு இரண்டா ஆக்கியிருக்க கூடாதா..? தங்களுக்குப் பிடிச்ச பதிவுகளில் என்னுடைய வலைப்பூவையும் இணைத்த கைப்புள்ளைக்கும் நித்தியாவுக்கும் நன்றிங்கோ..

எப்படியோ வேலைப்பளுவில் இருந்தவனை கைப்பிடிச்சி தரதரன்னு இழுத்து வந்தப் பெருமை நம்ம கைப்புள்ளையைச் சாரும்.




நான் இருந்த நாலு இடம்

1. மேலப்பாளையம் - திருநெல்வேலி
2. சேத்துப்பட்டு - சென்னை
3. டெய்ரா - துபாய்
4. அவள் இதயம்


விடுமுறைக்குப் போன நாலு ஊர்

1. ஊட்டி
2. கொடைக்கானல்
3. மைசூர்
4. ஒகேனக்கல்

சென்னையில் புடிச்ச நாலு எடம்

1. மெரீனா கடற்கரை
2. கோடம்பாக்கம்
3. திநகர் - ரங்கநாதன் தெரு
4. அயனாவரம்


திருநெல்வேலியில் புடிச்ச நாலு இடம்

1. மேலப்பாளையம்
2. பாளையங்கோட்டை
3. திருநெல்வேலி சந்திப்பு
4. சேவியர் கல்லூரி நூலகம்

ரசிச்சு பாக்குற நாலு டிவி நிகழ்ச்சி

1. அரட்டை அரங்கம்
2. சூப்பர் டென்
3. சன் செய்திகளின் வானிலை அறிக்கை (?)
4. ஜீ மியுசிக்

எப்ப வேணா பாக்க விரும்பும் நாலு படம்

1. தளபதி
2. நாயகன்
3. பன்னீர் புஷ்பங்கள்
4. காதல்

விரும்பி செய்யும் நாலு செயல்கள்

1. எதையாவது எழுதிக்கொண்டேயிருப்பது
2. மிஸ்கால் கொடுப்பது
3. புதுசு புதுசாய் சமைத்து நண்பர்களுக்கு தருவது ( அவனுங்க தலைவிதி )
4. கனவு காண்பது ( அப்துல்கலாம்தானே சொன்னாரு..)

தமிழ் சினிமாவுல புடிச்ச நாலு நடிகர்கள்

1. ரஜினி ( ஸ்டைல்தான்)
2. கமல் ( பேட்டிகளில் கருத்துக்களை தரமாக எடுத்து வைப்பது)
3. பிரசன்னா ( யதார்த்தமான நடிப்பு )
4. பிரகாஷ்ராஜ் ( எப்போதும் ரசிக்க வைக்கும் நடிப்பு)

சினிமாவுல புடிச்ச நாலு அம்மணிங்க

1. மீரா ஜாஸ்மின்
2. மீரா ஜாஸ்மின்
3. மீரா ஜாஸ்மின்
4. மீரா ஜாஸ்மின்

புடிச்ச நாலு சாப்பிடற ஐட்டம்

1. பூரி
2. மிளகு கறி
3. மோர்க்குழம்பு
4. சேமியா பிரியாணி

படிச்ச நாலு இடம்

1. ரஹ்மானியா மேல்நிலைப்பள்ளி - மேலப்பாளையம்
2. சதக் கல்லூரி - பாளையங்கோட்டை
3. ஜெயேந்திரா சரஸ்வதி பள்ளி - ஹைகிரவுண்ட்
4. ளுளுஐ - கம்ப்யூட்டர் சென்டர்


மறக்க முடியாத நாலு நிகழ்வுகள்

1. எனது கவிதையை வைரமுத்து பாராட்டி பல்கலைக்கழக இதழில்
பிரசுரித்தது
2. எஸ்.பி பாலசுப்பிரமணியன் கையால் கவிதைக்கு முதற்பரிசு பெற்றது
3. பானிபட் இதயங்கள் கவிதை வெளியிட்டு விழாவில் எனது தந்தையின்
பெயரைக் கூறியவுடன் கலெக்டர் உட்பட எழுந்து நின்றது.
4. கல்லூரி மேடையில் நான் பேசுவதைக் கேட்டு கண்ணீர் மல்ல எனது
அம்மா பார்த்துக்கொண்டிருந்தது

நெஞ்சம் வெடிக்க வைக்கும் நாலு சோகங்கள்

1. குஜராத் கோத்ரா கலவரத்தில் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றிலிருந்து
சிசுவை எடுத்தது
2. அரசியல் லாபத்திற்காக கல்லூரி பேருந்தை கொளுத்தி 3 மாணவிகளை
உயிரோடு எரித்தது
3. மக்களை மரணத்திற்கு பினாமி ஆக்கிய சுனாமியின் அட்டூழியங்கள்
4. கண்ணுக்கு முன்னால் உயிரோடு எரிந்து போன அந்தப் பெண்

மறக்கமுடியாத நாலு காதல் நிகழ்வுகள்

1. காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொண்ட பக்கத்து தெரு
நண்பனின் காதல்
2. உயிருக்குயிராய் என் நண்பனை காதலித்து கடைசியில் கைவிட்டுப்போன
கல்லூரிநேரக் காதல்
3. அவள் காதல்
4. என் காதல்

நிராசைகளாகிப் போன நாலு ஆசைகள்

1. ஜர்னலிசம் படிப்பது
2. ஜர்னலிசம் படிப்பது
3. ஜர்னலிசம் படிப்பது
4. ஜர்னலிசம் படிப்பது


தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் ஞாபகம் வரக்கூடிய நாலு பெண்கள்

1. அம்மா
2. தங்கை
3. மனைவியாகப் போகிறவள்
4. காதலிப்பதாக சொன்னவள்

எனக்கு பிடிக்காத நாலு உணவு வகைகள்

1. மீன் வகைகள்
2. பாகற்காய்
3. குடல்
4. கத்தரிக்காய்


நான் ரசித்து சிரிக்கும் நாலு சேட்டைகள்

1. தமிழ் வகுப்பில் தமிழ் வாத்தியாரிடம் அதிகமாக கிண்டலடித்து
விளையாடியது
2. கல்லூரி ஸ்ட்ரைக்கில் பிரின்ஸ்பால் அறையில் 5 பைசாவாக
விட்டெறிந்தது
3. கல்லூரித் தோழிகளின் மதிய உணவை சாப்பிட்டுவிட்டு சாரி என்று
எழுதி வைத்தது.
4. பக்கத்தில் அமர்ந்து சாப்பிட்ட ஒரு பெரியவரின் இலையில் இருந்து
அப்பளம் எடுத்து சாப்பிட்டது

நான்கு திகில் அனுபவங்கள்

1. களக்காடு காட்டில் யானைகள் வருகின்ற ஒத்தையடிப்பாதையில்
பயத்துடன் நின்றது

2. நாகர்கோவில் காளிகேசம் என்னும் காட்டில் தனியாக மாட்டிக்கொண்ட
ஒரு இரவு

3. சென்னையில் இரயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது
போலிஸாரிடம் மாட்டிக்கொண்டு பைன் கட்டியது

4. எங்கள் ஊரில் நடந்த இந்து - முஸ்லிம் கலவர நேரம்.


நான் செல்ல விரும்பும் நாலு இடம்

1. ஆக்ரா
2. சிம்லா
3. கேரள படகு சவாரி
4. ஹஜ்


நான் படிக்கும் நாலு தமிழ்ப் பதிவுகள்(நாலே நாலு அல்ல)

1. ராமசந்திரன் உஷா - பதிவுகளில் நல்ல பக்குவம்
2. மனுஷ்ய புத்திரன் - கவிதைகளில் நல்ல பக்குவம்
3. நிலா - ஒரு தூரத்து நடுநிலைமைப் பார்வை
4. சுவாரசியமான தலைப்புகளில் வருகின்ற மற்ற அனைத்து பதிவுகளும்

சங்கிலி பதிவைத் தொடர நான் அழைக்கும் நாலு பேர்

1. ஜி. ராகவன்
2. சிங்.ஜெயக்குமார்
3. ஆசிப் மீரான்
4. இந்தப் பதிவை பார்க்கும் ஏனையோர்கள்




-ரசிகவ் ஞானியார்

14 comments:

Anonymous said...

nice and superp...

கைப்புள்ள said...

ஐயா! உங்க நாலடியாருக்குள்ளயே பல கதைங்களுக்கும் பதிவுகளுக்கும் விஷயம் இருக்கும் போலிருக்கே?

//2. மிஸ்கால் கொடுப்பது//
இதுக்கு பின்னாடி என்ன மர்மமோ?

//சினிமாவுல புடிச்ச நாலு அம்மணிங்க
1. மீரா ஜாஸ்மின்
2. மீரா ஜாஸ்மின்
3. மீரா ஜாஸ்மின்
4. மீரா ஜாஸ்மின்//
அட்றா சக்கை...அட்றா சக்கை!

//4. ளுளுஐ - கம்ப்யூட்டர் சென்டர்//
இது என்னான்னு சொன்னாலே ஆச்சு!!!அது வரைக்கும் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கவும் தயார்.

//3. பானிபட் இதயங்கள் கவிதை வெளியிட்டு விழாவில் எனது தந்தையின்
பெயரைக் கூறியவுடன் கலெக்டர் உட்பட எழுந்து நின்றது.
4. கல்லூரி மேடையில் நான் பேசுவதைக் கேட்டு கண்ணீர் மல்ல எனது
அம்மா பார்த்துக்கொண்டிருந்தது//

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவந்தந்தை எந்நோற்றான் கொலென்னுஞ் சொல்

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

//3. கல்லூரித் தோழிகளின் மதிய உணவை சாப்பிட்டுவிட்டு சாரி என்று எழுதி வைத்தது.//
சாரியாச்சும் கேட்டீங்களே! அதுக்கே உங்களைப் பாராட்டலாம்.

//2. நாகர்கோவில் காளிகேசம் என்னும் காட்டில் தனியாக மாட்டிக்கொண்ட ஒரு இரவு//
நல்ல காலம் யாரும் அப்ப வரலை!

Anonymous said...

en kathal aval kathal appadeenu pirichu ezhuthi irukeenga??? not fair ok?
ore nadigai pera ivalavu thadava solli irukeenga..!! sari illai.

romba nalla irukku.. parka padikka.. vimarsikka thoondum oru pathivu.

- யெஸ்.பாலபாரதி said...

பேரூந்தில் பலியான மாணவிகளின் மரணம் மூன்று அல்ல.. நான்கு நண்பரே...

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//இதுக்கு பின்னாடி என்ன மர்மமோ?//

காதல் வந்தால் சொல்லி அனுப்பு

//இது என்னான்னு சொன்னாலே ஆச்சு!!!அது வரைக்கும் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கவும் தயார்.//

SSI - Computet Center

//ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்//

நன்றி கைப்புள்ள

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//en kathal aval kathal appadeenu pirichu ezhuthi irukeenga??? not fair ok?//

அவள் மீது நான் வைத்த காதல்
என் மீது அவள் வைத்த காதல்

கைப்புள்ள said...

//SSI - Computet Center//

என்னங்க இப்படி சப்புன்னு முடிச்சிட்டீங்க?

சிங். செயகுமார். said...

நானும் ரசிகவ் இன் நண்பர் என்பதில் சந்தோஷம் நண்பரே!


கனவு காண்பது ( அப்துல்கலாம்தானே சொன்னாரு..)


நீங்கள் அழைத்த இருவரும் முன்பே நாலு நாலு சொல்லிட்டாங்க!

Chandravathanaa said...

பானிபட் இதயங்கள் கவிதை வெளியிட்டு விழாவில் எனது தந்தையின்
பெயரைக் கூறியவுடன் கலெக்டர் உட்பட எழுந்து நின்றது.

Chandravathanaa said...

வாழ்த்துக்கள்

தாணு said...

வித்தியாசமான நாலு பகிர்தல்கள்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// எஸ்.பாலபாரதி said...
பேரூந்தில் பலியான மாணவிகளின் மரணம் மூன்று அல்ல.. நான்கு நண்பரே... //


தகவலுக்கு நன்றி பாலபாரதி

// சிங். செயகுமார். said...
நானும் ரசிகவ் இன் நண்பர் என்பதில் சந்தோஷம் நண்பரே//



நன்றி செயகுமார். ரொம்ப நாளா ஆளையே காணோம்..?

// Chandravathanaa said...
பானிபட் இதயங்கள் கவிதை வெளியிட்டு விழாவில் எனது தந்தையின்
பெயரைக் கூறியவுடன் கலெக்டர் உட்பட எழுந்து நின்றது//

நன்றி சந்திரவதனா.

Bharani Shivakumar said...

Nambinaal oru unmai solla thayaar.

Naan 'blog' apadingara ulagukkae pudhusu!

Inniku naanunga bloga mattum 4.5 mani neram rasichu padichirukken.Romba naal kazhichu oru nalla palsuvai puthagam paditha unarvu! Thangalin edharthathirku en vanakkangal.

Naanum romaba naala thamizhla aarvama ellam padippen. Aana indha blog mattum thamizh unicodela epdi seyaradhunu theriyala. Adha purijuka inniku okkandha naan. Idha padichitu mathadhayellam marundhutten. Enakku andha 'thamizhil blog' pathina vishayangal mattum therindhu kolla udhavavum.

Endrum anbudan,
Bharani

pin kurippu:
ennoda blog: http://www.yesbeeyes.blogspot.com/
(padam release aagi rendu naal thaan agudhu).

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Inniku naanunga bloga mattum 4.5 mani neram rasichu padichirukken.Romba naal kazhichu oru nalla palsuvai puthagam paditha unarvu! Thangalin edharthathirku en vanakkangal.//


நன்றி நண்பா...தங்களை வலைப்பதிவு உலகத்திற்கு வரவேற்கின்றேன்..வாழ்த்துக்கள்

தேன் கூடு