Tuesday, January 24, 2006

சுப்பிரமணிக்கு கல்யாணம் டோய்







யார் இந்த சுப்பிரமணி? இளங்கலை கணிதம் பயிலும்போது என்னுடைய கல்லூரியில் சீனியர். பிறகு நான் எம்.சி.ஏ படிக்கும்போது வகுப்புதோழராக மாறினார்.

இன்று வந்த மெயிலில் இன்விடேஷன் ப்ரம் சுப்பிரமணி என்று வந்ததுமே பரபரப்பாய் திறந்து பார்த்தேன். அவருடைய திருமண அழைப்பிதழ். வருகின்ற ஞாயிறன்று திருநெல்வேலியில் உள்ள ராஜ்மஹால் மண்டபத்தில் வைத்து காலை 9 மணிக்கு நடைபெறுகின்றது.

மணமகளின் பெயர் : ஆர் சுபாஸ்ரீ
மணமகன் பெயர் : வி. சுப்பிரமணியன்

நாங்கள் வகுப்பறை தோழர்கள் என்பதை விடவும் டீக்கடை தோழர்கள் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் வகுப்பறையை விடவும் டீக்கடைகளில்தான் எங்களின் சந்திப்புகள் அடிக்கடி நிகழும்.

டீக்கடை சம்பாஷணைகள் மிகவும் சுவாரசியமாக இருக்கும். க்ளாஸ் கட் அடித்து விட்டு அல்லது இரண்டு க்ளாஸ்க்கு இடைப்பட்ட நேரத்தில் பாளையங்கோட்டை ஹைகிரவுண்டில் உள்ள விஎம்எஸ் கல்யாண மண்டபத்திற்கு எதிரே டீக்கடைதான் எங்களின் குட்டி வகுப்பறை. வருகைப்பதிவேட்டை வகுப்பறையில் எடுப்பதை விடவும் டீக்கடையில் எடுத்தால் வருகை எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

கிண்டல்

"அண்ணே ரெண்டு டீ - க்ளாஸை கழுவி போடுங்கண்ணே "என்று ஆரம்பிப்பேன்.

சுப்பிரமணி கொஞ்சம் பயந்த சுபாவம். "ஞானி அடி வாங்கப்போறோம் ஒருநாள். அவர் காதுல கேட்டுற போதுடா" என்று பயந்துபோவார்.
அந்த டீக்கடை மாஸ்டரின் காதினில் கேட்டாலும் சிரித்துக்கொண்டே இருப்பார் ஒன்றும் சொல்ல மாட்டார்

"அண்ணே இந்த ஏரியாவுல நல்ல டீக்கடை எங்கண்ணே இருக்கு" என்று கேட்டுவிட்டு டீ மாஸ்டருடன் சேர்ந்தே சிரிப்போம்.

மதிய வேளையில் மொத்தமாக சென்று அந்த டீக்கடையின் பக்கத்தில் உள்ள கடையில் புரோட்டா சாப்பிடுவோம். சாப்பிடும்போது ஹலோ அந்த பாட்டை மாத்துங்க இந்த பாட்டை மாத்துங்க .ஹிந்தி பாட்டு போடுங்க..தமிழ் பாட்டு போடுங்க..என்று ஒரே நமச்சல்தான்.

தர்மசங்கடம்

பின்னர் அங்குள்ள விஎம்எஸ் திருமண மண்டபத்தில் நடைபெறும் யார் வீட்டு திருமண விழாவுக்கோ நாங்கள் சென்று விருந்தினர்கள் போல சாப்பிட்டுவிட்டு வருவோம்.

ஒருநாள் அப்படித்தான் எல்லோரும் ஒரு திருமண விழாவிற்கு நாங்கள் அழைக்காத விருந்தினர்களாய் சாப்பிடச் சென்றபொழுது எங்கள் குழுவில் உள்ள ஒருவனின் அண்ணனும் வந்துவிட்டான்.

டேய் அது என்னோட கஸ்டமர் ஒருவரோட திருமணம்டா உனக்கு யாரைடா தெரியும் இங்கே ..என்று அந்த அண்ணன்காரன் கேட்க

நாங்கள் குறுக்கே புகுந்து இல்லைண்ணே பொண்ணோட மாமாப்பையன் எங்ககூடதான் படிக்கிறான் அவன்தான் இன்வைட் செய்தான் என்று ஏதோதோகூறி சமாளிக்க வேண்டியதாகிப் போய்விட்டது

பந்தயம்

பின்னர் எம்சிஏ வகுப்பறையின் வாசலில் அமர்ந்துகொண்டு தேவதைகளை ரசிப்பது. ஒரு நாள் முதலாண்டு பெண்ணிடம் பேச முடியுமா என்று என்னிடம் பந்தயம் கட்டினார்.

நான் என்ன பேசுவது எனத்தெரியாமல் ஒரு துண்டுச் சீட்டில்

gnaniyar2k@rediffmail.com
www.rediffmail.com
India


என்று எழுதி அந்தப்பெண்ணிடம் சென்று ஹலோ உங்களுக்கு பாளையங்கோட்டை என்ஜிஓ காலனி பக்கம்தானே.

ஆமா என்று பயந்தபடி சொல்ல

இந்த அட்ரஸ் எங்கேன்னு சொல்லுங்களேன் ப்ளீஸ் என்று கூறி அவளிடம் அந்த துண்டு சீட்டைக் கொடுக்க அவளோ சீரியஸாய் பார்த்துவிட்டு படித்ததும் என்னை நிமிர்ந்து பார்த்து ,

இந்த அட்ரஸ் எங்க வீட்டு பக்கம்தான்.
எங்க வீட்டுப்பக்கத்துல ஒரு பர்வுசிங் செண்டர் இருக்கு அங்கதான் இருக்கு
என்று போட்டாலே ஒரு போடு. எனக்கு அவமானமாய் போய்விட்டது

அவரிடம் வந்து காலரை தூக்கிக்கொண்டேன்.பார்த்தீங்களா பேசிட்டேன் என்று. ஆனால் அங்க அந்தப்பொண்ணு என்ன பேசினான்னு அவர் கேட்கவேயில்லை.


குரூப் ஸ்டெடி

நாங்கள் குரூப் ஸ்டெடி வைக்கும் நாட்கள் ஜாலியாக இருக்கும். சுப்பிரமணி திருநெல்வேலி ஜங்ஷனில் உள்ள சிந்துபூந்துறை என்ற பகுதியில் தனது நண்பனின் அறையில் தங்கியிருந்து படித்து வந்தார் அவரது பூர்வீகம் தென்காசி.

நானும் சில நண்பர்களும் தேர்வு சமயங்களில் அங்கு வந்துதான் ஒன்றாக படிப்போம்.

பிட் எழுதுவது
எந்த கேள்விகள் எல்லாம் வரும் என்று அலசுவது
இடையிடையே போரடிக்காமல் இருக்த திருநெல்வேலி ஜங்ஷன் பேருந்து நிலையம் வந்து டீ அடிப்பது
வகுப்பறையின் எதாவது பிகர்களைப்பற்றி பேசுவது என்று மிகவும் ஜாலியாக இருக்கும். படிப்பது 40சதவிகிதம் தான். மற்ற 60 சதவிகிமும் நாட்டு நடப்புகள்தான்.

திடீரென்று யாருக்காவது போன் செய்து டேய்! நீ படிச்சிட்டியா! நீ படிச்சிட்டியா! என்று தொலைபேசி செய்து தொல்லை கொடுப்போம்.

இரவு முழுவதும் படித்து விட்டு பரிட்சைக்கு சென்று திரும்பி அந்த அறையில் வைத்து ச்சே இது எனக்கு தெரிஞ்ச கொஸ்டின்தான் எழுதாம போயிட்டேனே
ச்சே இது நான் எழுதுன கொஸ்டின்தான் பிட் எடுக்காம போயிட்டேனே
என்று ஆளாளுக்கு புலம்ப ஆரம்பித்துவிடுவோம்.

அந்த சுப்பிரமணி மட்டும் எதுவுமே புலம்பமாட்டார். பிட் அடித்தால் எங்கே மாட்டிக் கொள்வோமோ என்று பயந்து பிட் அடிக்கமாட்டார். பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டு எழுதியிருக்கலாம் . ஆனால் அவர் பிட் அடித்து நான் கேள்விப்பட்டதில்லை.


பரிட்சை நேரங்களில் பாளையங்கோட்டையில் உள்ள சேவியர் கல்லூரியில் வைத்து மாலை நேரங்களில் மரத்தடியில் அமர்ந்து படிப்போம். அங்கு வீசுகின்ற காற்றைப்போலவே பாடங்களும் மிக மென்மையாக மனதில் பதியும். எனக்குண்டான சந்தேகங்களை அழகாக தீர்த்து வைப்பார்.

நான் படிக்க சோம்பல் படும்பொழுதெல்லாம் இன்னும் ஒரே ஒரு கொஸ்டின்தான் ஞானி படிச்சுருவோம் என்று ஊக்கம் கொடுத்து என்னை படிக்க வைப்பார். பின்னர் படித்ததை அவர் என்னிடமும் நான் அவரிடமும் ஒப்பித்துக்கொள்வோம். மறக்கமுடியாத நாட்கள் அவை.

கோபம்

கல்லூரியின் கடைசி நாளில் எல்லோரும் ஆட்டோகிராப் வாங்கிக்கொண்டிருக்க நான் அவருடைய ஆட்டோகிராப் டைரியை எடுத்து அதில் வகுப்பு தோழி ஒருத்தி அவருக்கு எழுதியதை வகுப்பின் முன்சென்று வாசித்தேன்

சுப்பிரமணி உங்களை முதன்முதலாக பாளையங்கோட்டை பெல் பின்ஸ் நிறுவனம் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போதுதான் பார்த்தேன் என்று ஆரம்பிக்கும் அந்தப் பெண் எழுதிய ஆட்டோகிராப்.

நான் வாசிப்பதை தெரிந்து எழுதிய அந்தப்பெண்ணும் வெட்கப்பட மாணவர்கள் கத்த ஆரம்பிக்க சுப்பிரமணிக்கு தர்ம சங்கடமாகப் போய்விட்டது. பின்னர் அந்த டைரியை என்னிடமிருந்து கோவமாய் பிடுங்கினார்.அதன்பிறகு யாரிடமுமே ஆட்டோகிராப் வாங்கவில்லை

அவர் என்மீது கோவப்பட்டாலும் எதுவுமே திட்டாமல் என்னிடம் பேசபாமல்அமைதியாக இருந்தார். ஆனால் கோவத்தில் திட்டுவதை விடவும் அவரின் அமைதி என்னை மிகவும் பாதித்தது. பின்னர் அவரிடம் மன்னிப்பு கேட்டேன்.

திருமணவாழ்த்து

அவருடைய திருமணத்திற்கு எதிர்பாராத விதமாக சென்று டேய் நம்ம சுப்பிரமணிக்கு கல்யாணம் டோய் என்று மற்ற நண்பர்கள் மத்தியில் கத்தி அவரை கிண்டலடிக்க ஆசையாக இருக்கிறது.

கல்யாண மேடையில் அவரது மனைவியிடம் ஹலோ உங்க ஆளு காலேஜ்ல என்ன சேட்டை செய்வார் தெரியுமா என்று கூறி அவரது மனைவியையும் அவரையும் வெட்கப்படவைப்பது என்று ஏதோதோ கனவுகள்

ம் எல்லாம் வெறும் கனவுதான்.

அவருடைய திருமணத்திற்கு
நிறைய நண்பர்கள் வரக்கூடும். ஆனால் இந்த
நிலவு நண்பனால் மட்டுமே வரமுடியாது. ஆகவேதான் அந்த ஞாபகத்தில் இந்த பதிவு.

இந்த பதிவுக்கு விமர்சனம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை எனக்காக ஒரு வாழ்த்தை எனது நண்பனுக்கு தெரிவித்துவிட்டுப்போங்களேன்பா.

"அட முகம் தெரியாத நண்பர்கள் கூட நம்முடைய திருமணத்திற்காக வாழ்த்து அனுப்பியிருக்கிறார்களே ரொம்ப நன்றிடா ஞானி.."என்று அந்த நண்பர் மகிழ்ச்சியடையக்கூடும்.

ஏனென்றால் அவருடய திருமண பரிசாக இந்த பதிவைத்தான் அனுப்பபோகிறேன். அவர் இன்றோ நாளையோ இதனை படிக்ககூடும்.

நண்பா!
மாணவனாய் இருந்து
மணமகனாய் மாறுகிறாய்.

எப்பொழுதும் மாறாமல்
என்னுடைய நண்பனாய்
நீ இருப்பாய் என்ற நம்பிக்கையில் ..
வாழ்த்துகிறேன்

உன் திருமணத்தில்
தெளிக்கப்படுகின்ற
பன்னீரில் எனது - ஆனந்தக்
கண்ணீரும் கலந்திருக்கும்


கடல்தாண்டி வருவதற்கு...
இயலவில்லை நண்பா!
நான்
வரவில்லையென்று நீ
வருத்தப் படாதே!
வாசலில் கையேந்தி நிற்கின்ற
ஏதாவது ஒரு பிச்சைகாரனின்
வயிற்றுப்பசியை நிரப்பு!
இங்கே
உன் திருமணவிருந்தின் சுவையறிவேன் நான்.


- ரசிகவ் ஞானியார்

49 comments:

G.Ragavan said...

அன்பு நண்பருக்கு வாழ்த்துகள் கேட்கிறீர்கள். கண்டிப்பாக.

நண்பர் சுப்பிரமணி சிறப்பாக திருமணம் கொண்டு சீரும் சிறப்புமாக சுப்பிரமணியர் அருளால் நீடு வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்,
கோ.இராகவன்

Anonymous said...

ungal nanbar subramanikku UK nanbargal kuzhu saarpaga vaazhthkkal

Anonymous said...

சுப்பிரமணிக்கு வாழ்த்துக்கள்.
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க

(ரசிகவுக்கு எப்போ?)

Anonymous said...

சுப்பிரமணிக்கு வாழ்த்துக்கள்.
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க

(ரசிகவுக்கு எப்போ?)

நிலாரசிகன்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ungal nanbar subramanikku UK nanbargal kuzhu saarpaga vaazhthkkal //

பெயர் தெரியாத புண்ணியவான் அவர்களே தங்களின் UK குழு அனைவருக்கும் நன்றி
UK- உத்திரன் கோட்டைதானே..?

//சுப்பிரமணிக்கு வாழ்த்துக்கள்.
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க//

இரண்டு முறை வாழ்த்தியதுக்கு நன்றி நிலா ரசிகா

//ரசிகவுக்கு எப்போ? //

06-06-06 அன்று என் திருமணத்தை வைக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். பார்ப்போம் அவுக என்ன சொல்றாங்கன்னு

முபாரக் said...

எங்கள் அன்பான நண்பர் கவிஞர் ரசிகவ்-இன் நண்பராகும் பாக்கியம் பெற்ற நண்பர் சுப்பிரமணி எல்லா பாக்கியங்களும், வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

Anonymous said...

//கல்லூரியின் கடைசி நாளில் எல்லோரும் ஆட்டோகிராப் வாங்கிக்கொண்டிருக்க நான் அவருடைய ஆட்டோகிராப் டைரியை எடுத்து அதில் வகுப்பு தோழி ஒருத்தி அவருக்கு எழுதியதை வகுப்பின் முன்சென்று வாசித்தேன்//

அடுத்தவங்க டைரிய படிக்கிறது அநாகரிகமா தெரியலயா

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//நண்பர் சுப்பிரமணி சிறப்பாக திருமணம் கொண்டு சீரும் சிறப்புமாக சுப்பிரமணியர் அருளால் நீடு வாழ வாழ்த்துகிறோம்.அன்புடன்,
கோ.இராகவன் //

//முபாரக் said...
நண்பர் சுப்பிரமணி எல்லா பாக்கியங்களும், வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
//

வாழ்த்து தந்தமைக்காக நண்பர் முபாரக் அவர்களுக்கும் ராகவன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//அடுத்தவங்க டைரிய படிக்கிறது அநாகரிகமா தெரியலயா //

அதான் மன்னிப்பு கேட்டுட்டேன்ல..விட்டுடுங்கப்பா..

Unknown said...

Happy married life

Ur friend is our friend

Dr.Srishiv said...

சுப்பு வாழ்க பல்லாண்டு,
வழக்கம் போல ஞானி டச் வச்சி அசட்திட்டீங்க நண்பா கடைசி வரிகளில்....வாழ்க வளமுடன்,
ஸ்ரீஷிவ்...

Dr.Srishiv said...

நண்பா,
06-06-06 ஆ? வேண்டாம் நண்பா வேண்டாம், இப்படி 05-05-05 என்று நாள் வைத்தேன் நான் :( , சரி , பார்ப்போம், எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும்...இறைவன் என்றும் உங்கள் துணை இருப்பாராக...
ஸ்ரீஷிவ்...

ENNAR said...

என்ன புதுகையாரே

//டோய்// என்றால் என்ன?

Anonymous said...

Hi
Best wishes to your friend Subramani for a happy married life

மணியன் said...

நிலவுநண்பரின் நண்பருக்கு திருமண வாழ்த்துக்கள்.
உங்கள் வாழ்த்துமடல் பதிவு அருமையான கருத்து.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// DEV said...
Happy married life

Ur friend is our friend //

your prayer is my prayer. Thanks pa

//சுப்பு வாழ்க பல்லாண்டு,
வழக்கம் போல ஞானி டச் வச்சி அசட்திட்டீங்க நண்பா கடைசி வரிகளில்....வாழ்க வளமுடன்,
ஸ்ரீஷிவ்... //

நன்றி ஸ்ரீஷிவ்

//06-06-06 ஆ? வேண்டாம் நண்பா //

என்ன ஸ்ரீஷிவ் அந்த நாளில் என்ன..? எல்லாம் இறைவன் செயல்

//Ennar: என்ன புதுகையாரே

டோய் என்றால் என்ன? //

எல்லாம் ஒரு பாசம்தான்

அது என்ன "புதுகையாரே"

பட்டமா? திட்டா?

//Anonymous said...
Hi
Best wishes to your friend Subramani for a happy married life //


முகம் தெரியாவிட்டாலும் மனசு தெரிகிறது நன்றி

Anonymous said...

நண்பர் சுப்பிரமணிக்கு...முகம் தெரியாத ஒர் நண்பரின் வாழ்த்துக்கள்.- விழியன்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//மணியன் said...
நிலவுநண்பரின் நண்பருக்கு திருமண வாழ்த்துக்கள்.
உங்கள் வாழ்த்துமடல் பதிவு அருமையான கருத்து. //


நன்றி மணியன்

Anonymous said...

Another simple little wish for WONDERFUL couple.

Wishing them both a lifetime of togetherness and for their long joyfull journey.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Anonymous said...
நண்பர் சுப்பிரமணிக்கு...முகம் தெரியாத ஒர் நண்பரின் வாழ்த்துக்கள்.- விழியன் //

//ஆர்த்தி... said...
நண்பரே, உங்கள் நண்பருக்கு திருமண வாழ்த்துக்கள்.//

//sangi said...
Another simple little wish for WONDERFUL couple.

Wishing them both a lifetime of togetherness and for their long joyfull journey. //

எனது நண்பருக்காக வாழ்த்திய ஆர்த்தி விழியன் சங்கிக்கு வாழ்த்துக்களை (இதய)வலையில் அனுப்புகிறேன்

Anonymous said...

Congradulations Mr.Subramani
on behalf of our class mates i wish subramani, Best wishes Subramani !! what happend to murru.....ok ok forgot all and start new life !!1

கீதா said...

நண்பர் சுப்பிரமணி & சுபாஸ்ரீக்கு என் திருமணவாழ்த்துக்கள்.

"கருத்து வேறுபாடுகள் பல எழுந்தாலும் மனமொத்து வாழ்ந்து மேன்மேலும் உயர என் வாழ்த்துக்கள்"

:)

ரசிகவ்.. இன்று என் மைத்துனனுக்கு திருமணம்.. போக இயலாமல் மனதை அனுப்பிவிட்டு தவித்துக்கொண்டு இருக்கிறேன்.. ஹ்ம்..

அன்புடன்
கீதா

ENNAR said...

இப்படி ஒரு கேள்வி தாங்கள் கேட்க வேண்டும் என்பதற்காக சும்மா?

Dubukku said...

அன்புள்ள சுப்பிரமணி தம்பதியினருக்கு
வாழ்வில் நீங்கள் எல்லா நலமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.

எனக்கும் திருநெல்வேலி தான் (அம்பாசமுத்திரம்). இருப்பது லண்டனில் (ஞானி ...எது இந்த பத்தமடை தாண்டி இருக்கே அதான்னு கேக்காதீங்க...ஒரிஜினல் லண்டன் தான் ;) )

Anonymous said...

Wish You A Verry Happy Married Life Friend. The evergreen memories ur friend shared with us is really great. Have a happy long living!

Dasi
dasitharan@hotmail.com

காயத்ரி said...

My hearty marriage wishes to ur friend mr.subramani.

சிங். செயகுமார். said...

சுப்பிரமணி உங்களுக்கு எனது திருமண வழ்த்துக்கள்.அப்பிடியே நம்ம ஞானிக்கும் அந்த பந்தல்ல ஒன்னு தேடி கண்டு பிடிங்க இங்க இம்ச தாங்க முடியல!

Pandhu said...

நேற்றுவரை சுப்பிரமணி யாரோ நான் யாரோ, ஆனால், இன்று இந்த பதிவைப் படித்தப் பிறகு, அவர் என் நண்பனும் கூட ஆகி விட்டார்...
திருமண வாழ்த்துக்கள்...

Santhosh said...

ராகவ் நம்ம சுப்பிரமணிக்கு நான் கல்யாணத்துக்கு வரமுடியாட்டியும் என் வாழ்த்துக்கள் உண்டு அப்படின்னு செல்லுங்க. உங்களுக்கு எப்ப கல்யாணம். எனக்கு என்னவே பக்கத்து இலைக்கு பாயசம் போல படுது இந்த பதிவு.

பிரதீப் said...

சுப்பிரணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Pon Subramanian said...
Congradulations Mr.Subramani
on behalf of our class mates i wish subramani, Best wishes Subramani !! what happend to murru.....ok ok forgot all and start new life !!1 //

நன்றி பொன் சுப்பிரமணி..மத்த கதையெல்லாம் நமக்கெதுக்கு விடுப்பா..




//Geetha said...
நண்பர் சுப்பிரமணி & சுபாஸ்ரீக்கு என் திருமணவாழ்த்துக்கள்.
//

நன்றி கீதா உங்க மைத்துனனின் திருமணமும் நன்றாக நடைபெற வாழ்த்துக்கள்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Dubukku said...
அன்புள்ள சுப்பிரமணி தம்பதியினருக்கு
வாழ்வில் நீங்கள் எல்லா நலமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.

எனக்கும் திருநெல்வேலி தான் (அம்பாசமுத்திரம்). இருப்பது லண்டனில் (ஞானி ...எது இந்த பத்தமடை தாண்டி இருக்கே அதான்னு கேக்காதீங்க...ஒரிஜினல் லண்டன் தான் ;) ) //


நன்றி டுபுக்கு..சரி சரி நம்புறேன் நீங்க லண்டன்தான்

// gayathri said...
My hearty marriage wishes to ur friend mr.subramani. //

Thanks for your kind comments Geetha


// சிங். செயகுமார். said...
சுப்பிரமணி உங்களுக்கு எனது திருமண வழ்த்துக்கள்.அப்பிடியே நம்ம ஞானிக்கும் அந்த பந்தல்ல ஒன்னு தேடி கண்டு பிடிங்க இங்க இம்ச தாங்க முடியல! //

என்ன ஜெயக்குமார் ரொம்ப நாளா ஆளையே காணோம்.. கல்யாணம் பண்ணிகிட்டீங்களோன்னு நினைச்சேன்..

எனக்கா..? அந்த கல்யாண மேடையிலா..? எனக்கு ஒண்ணு போதும் நண்பா

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// revatechnic said...
நேற்றுவரை சுப்பிரமணி யாரோ நான் யாரோ, ஆனால், இன்று இந்த பதிவைப் படித்தப் பிறகு, அவர் என் நண்பனும் கூட ஆகி விட்டார்...
திருமண வாழ்த்துக்கள்... //

நேற்று வரை நீங்கள் யாரோ நான் யாரோ..இன்று எனது நண்பனை வாழ்த்தியது மூலமாக நல்ல நண்பியாக மாறிவிட்டீர்கள்..இதுதான் நியுட்டன் மூன்றாம் விதிங்கோ..

//Satheesh said...
நண்பர் சுப்பிரமணி & சுபாஸ்ரீக்கு என் திருமணவாழ்த்துக்கள். //

நன்றி சதீஷ்..( எனக்கு கூட சதீஷ்ன்னு ஒரு உயிர் நண்பன் உண்டு..இப்ப நீங்க இரண்டாவது )

//Santhosh said...
ராகவ் நம்ம சுப்பிரமணிக்கு நான் கல்யாணத்துக்கு வரமுடியாட்டியும் என் வாழ்த்துக்கள் உண்டு அப்படின்னு செல்லுங்க. உங்களுக்கு எப்ப கல்யாணம். எனக்கு என்னவே பக்கத்து இலைக்கு பாயசம் போல படுது இந்த பதிவு. //

புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்களே சந்தோஷ்..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//பிரதீப் said...
சுப்பிரணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க! //


நன்றி பிரதீப்..

"பதினாறு பெற்று""..

அய்யோபதினாறு வகை செல்வத்தைதானே சொன்னீங்க..நான் குழந்தைகள்னு நினைச்சேன்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Anonymous said...
Wish You A Verry Happy Married Life Friend. The evergreen memories ur friend shared with us is really great. Have a happy long living!

Dasi
dasitharan@hotmail.com //


தங்களின் அன்பான கனிவான வாழ்த்துக்கு நன்றி

Anonymous said...

I wish your friend Mr.Subramanian a happy married life.

with love
sampath

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//I wish your friend Mr.Subramanian a happy married life.

with love
sampath //

தேடி வந்து வாழ்த்து தந்தமைக்கு நன்றி சம்பத்

முத்துகுமரன் said...

மணமக்களுக்கு எனதினிய வாழ்த்துகள்.

அனைத்து நலங்களையும் வளங்களையும் இறைவன் அருள் புரிவானாக.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//மணமக்களுக்கு எனதினிய வாழ்த்துகள்.

அனைத்து நலங்களையும் வளங்களையும் இறைவன் அருள் புரிவானாக. - முத்துகுமரன்
//

நன்றி முத்துக்குமரா

நட்சத்திரப் பணியிலிருந்து விடுபட்டு வரும் முத்துக்குமரனுக்கும் வாழ்த்துக்கள். விடுபட்டதற்காக வாழ்த்தவில்லை..மறுபடியும் பெறுவதற்காக வாழ்த்துகிறேன்.

அன்பு said...

இனிய நண்பருக்கு திருமண வாழ்த்துக்கள். எல்லா வளமும் பெற்று பல்லாண்டு நீடூழி வாழ்க.

தகவல் தந்த வலையுலக பார்த்திபனுக்கு நன்றி:)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//இனிய நண்பருக்கு திருமண வாழ்த்துக்கள். எல்லா வளமும் பெற்று பல்லாண்டு நீடூழி வாழ்க.

தகவல் தந்த வலையுலக பார்த்திபனுக்கு நன்றி:) //


பெயரில் மட்டுமல்ல உள்ளத்திலும் அன்பு இருக்கிறது தங்களுக்கு
நன்றி அன்பு

"வலையுலக பார்த்திபன்" - அட புதுப்பட்டமா..?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

சுப்பிரமணியின் திருமணம் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நரடபெறுவதாக கூறுனேன். ஆனால் சின்ன தவறு. அவரின் திருமணம் வெளிளிக்கிழமை நடைபெறுகிறது. வரவேற்புரைதான் ஞாயிற்றுக்கிழமை தென்காசியில் வைத்து நடைபெறுகிறது


வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நண்பர் சுப்பிரமணி சார்பில் வாழ்த்துக்கள்;.




ரசிகவ் ஞானியார்

Pot"tea" kadai said...

சுப்பிரமணிக்கும் அவரது வருங்கால துணைவியாருக்கும் எனது மனம் கனிந்த திருமண வாழ்த்துக்கள்!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Pot"tea" kadai said...
சுப்பிரமணிக்கும் அவரது வருங்கால துணைவியாருக்கும் எனது மனம் கனிந்த திருமண வாழ்த்துக்கள்! //





நன்றி பொட்டிக்கடை

பொட்டிக்கடையில் நன்றாக வியாபாரம் நடக்க வாழ்த்துக்கள் நண்பரே.. :)


//ஜலால் said...
நண்பர் சுப்ரமணி மணவாழ்க்கை சிறக்க வாழ்த்துக்கள்//


நன்றி ஜலால்
தங்களின் வலைப்பதிவின் தலைப்பு விழு முன் எழு அருமை

Anonymous said...

நண்பர் சுப்ரமணிக்கு வாழ்த்துக்கள்.

-அபுல்

Sathish Mayil said...

"வாசலில் கையேந்தி நிற்கின்ற
ஏதாவது ஒரு பிச்சைகாரனின்
வயிற்றுப்பசியை நிரப்பு!
இங்கே
உன் திருமணவிருந்தின் சுவையறிவேன் நான்."

ஞானி இந்த வார்த்தைகள், ரொம்பா அருமை, நிகிழ
வெச்சுடீங்க

உங்கள் நண்பர், எங்கள் நண்பர் சுப்புவிற்கு இனிய திருமண வாழ்த்துக்கள்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Mayil said...
"வாசலில் கையேந்தி நிற்கின்ற
ஏதாவது ஒரு பிச்சைகாரனின்
வயிற்றுப்பசியை நிரப்பு!
இங்கே
உன் திருமணவிருந்தின் சுவையறிவேன் நான்."//

//நண்பர் சுப்ரமணிக்கு வாழ்த்துக்கள்.

-அபுல் //



ஞானி இந்த வார்த்தைகள், ரொம்பா அருமை, நிகிழ
வெச்சுடீங்க//



நெகிழ்ந்த மயிலுக்கும்
வாழ்த்திய அபுலுக்கும் நன்றி

லதா said...

// சுப்பிரமணி உங்களை முதன்முதலாக பாளையங்கோட்டை பெல் பின்ஸ் நிறுவனம் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போதுதான் பார்த்தேன் என்று ஆரம்பிக்கும் அந்தப் பெண் எழுதிய ஆட்டோகிராப். //

இவங்கதான் அவங்களா ? :-)))

பல நாட்கள் கழித்து இப்போதுதான் தங்கள் பதிவை வாசிக்கிறேன். தங்கள் நண்பருக்கும் அவரின் துணைவிக்கும் வாழ்த்துகளைத் தெரிவிக்கவும்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//இவங்கதான் அவங்களா ? :-)))//

அட அவங்களுக்கும் இவங்களுக்கும் சம்பந்தம் இல்லம்மா.. அவங்க க்ளாஸ் மேட்..இவங்க லைப் மேட்..

//பல நாட்கள் கழித்து இப்போதுதான் தங்கள் பதிவை வாசிக்கிறேன். தங்கள் நண்பருக்கும் அவரின் துணைவிக்கும் வாழ்த்துகளைத் தெரிவிக்கவும் //

நன்றி லதா

தேன் கூடு