Saturday, January 28, 2006

பேராசிரியர் அப்துல்காதர்
என்னுடைய கணித துறை பேராசிரியர் . மலையாளம் கலந்த தமிழில் பேசுபவர். யாருடைய வகுப்பை தவறவிட்டாலும் இவருடைய வகுப்பை நான் தவறாமல் கலந்துகொள்வேன். அந்த அளவிற்கு தன்னுடைய பாடம் நடத்தும் திறமையால் எங்களை சுண்டியிழுப்பார்

அவர் உடை அணிந்து வரும் அழகே தனி அழகுதான். மலையாள நடிகர் முரளி தெரியுமா..அதான்பா ஜெமினி படத்துல விக்ரமுக்கு உதவுற போலிஸ்காரராக வருவாரே..அவர மாதிரி இருப்பார்

யாராவது தவறு செய்தால் போதும் மலையாளம் கலந்த தமிழில் கண்டிப்பார். நான் கல்லூரி மாணவர்ப்பேரவையின் சார்பாக ஒருமுறை கல்லூரி போராட்டத்தில் கலந்துவிட்டு தாமதமாய் வந்தபொழுது ,

எந்தப்பா நீ கோலேஜ்க்குதான் ( அப்படித்தான் உச்சரிப்பார் College- ஐ) செகரெட்டரி எனக்கு இல்ல..புரியுதா. என்று மலையாளம் கலந்த தமிழில் கடிந்து கொண்டார்.

அவர் மீது எனக்கு மிகுந்த மதிப்பு இருப்பதால் அவர் பேசினால் நான் ஒன்றுமே சொல்ல மாட்டேன்.

மதியம் ஒருமுறை கட் அடித்துவிட்டு கல்லூரியிலிருந்து நண்பர்கள் மொத்தமாக கல்லூரியை விட்டு வெளியே போகும்போது எதிரில் அவர் தன்னுடைய வெள்ளை அம்பாசிடரில் வந்து கொண்டிருக்க நாங்கள் கல்லூரியை கட் அடித்துச் செல்வது தெரிந்தால் சத்தம் போடுவாரோ எனப்பயந்து மீண்டும் அவர் வரும் திசைக்கு எதிர்திசையில் அதாவது மீண்டும் கல்லூரி நோக்கியே செல்லுவதுபோல சென்றோம்.

அவர் வாகனம் கடந்து சென்றவுடன் மீண்டும் பேருந்து நிலையத்தை நோக்கி கால்களை திருப்பினோம்.

மறுநாள் அவர் கட் அடித்த எல்லா மாணவர்களையும் கொஞ்ச நேரம் வெளியில் நிறுத்தி வைத்துவிட்டு பின் அனுமதியளித்துவிட்டார்.

படிங்கப்பா படிங்க..கோலோஜ் முடிஞ்சு வெளியே போனாதான் தெரியும் கஷ்டம்..இப்பவே படிங்கப்பா..

அவரை மிகவும் விரும்பியதற்கு காரணம் அவரின் உடையழகு - பாடம் எடுக்கின்ற முறை - நாகரீகமான அணுகுமுறையைக் காட்டிலும் மிக முக்கிய காரணம் என்னவென்றால் நான் விரும்பும் பெண்ணுக்கு அவர்தான் மறக்கு முடியாத ஆசான் அதுதான் முக்கிய காரணம். என்ன நியுட்டனின் 3 வது விதி ஞாபகம் வருதா?

- ரசிகவ் ஞானியார்

12 comments:

கைப்புள்ள said...

//நாங்கள் கல்லூரியை கட் அடித்துச் செல்வது தெரிந்தால் சத்தம் போடுவாரோ எனப்பயந்து மீண்டும் அவர் வரும் திசைக்கு எதிர்திசையில் அதாவது மீண்டும் கல்லூரி நோக்கியே செல்லுவதுபோல சென்றோம்.//

தங்கள் ஆசிரியர் மீது தாங்கள் வைத்திருக்கும் மரியாதை தெளிவாகிறது.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//தங்கள் ஆசிரியர் மீது தாங்கள் வைத்திருக்கும் மரியாதை தெளிவாகிறது//

இதன் மூலம் தாங்கள் என்மீது வைத்திருக்கும் மதிப்பு தெரிகிறது. நன்றி கைப்புள்ள..

கைப்புள்ள said...

உண்மை ரசிகவ். நானும் வாத்தியார் புள்ளையாச்சுங்களே! நெடுநாள் மாணவன் யாரேனும் என் தந்தையைக் காண வரும் போது, அவர் முகத்தில் தெரியும் மகிழ்ச்சி இருக்கிறதே...கிட்ட இருந்து பாக்கணும் அதை!

இன்னும் நம்மளை மறக்காம பார்க்க வந்திருக்கான் பார். ஆசிரியர் பணியில் இந்த மரியாதை தான் மன நிறைவினைத் தருவது என்றும் வேறு பணியில் இல்லாத சிறப்பு இதுவென்றும் அடிக்கடி கூறுவார்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ஆசிரியர் பணியில் இந்த மரியாதை தான் மன நிறைவினைத் தருவது என்றும் வேறு பணியில் இல்லாத சிறப்பு இதுவென்றும் அடிக்கடி கூறுவார். //ம் அது ஆசிரியர்களுக்கே உண்டான சிறப்பு நண்பரே..

ஆர்த்தி said...

உங்களின் பல கல்லூரி அனுபவங்கள், பதிவுகளாக படித்தேன், ரசித்தேன்..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ஆர்த்தி...
உங்களின் பல கல்லூரி அனுபவங்கள், பதிவுகளாக படித்தேன், ரசித்தேன்.. //ஆர்த்தி ,

அடிக்கடி விஜயம் செய்து
எடுக்கிறீர்கள் ஆரத்தி..நன்றி

Pandhu said...

ம்ம்ம்.. இந்த மாதிரி சில பேரு, அப்பப்போ நம்ம வாழ்க்கையிலே cross பன்னி போறதுண்டு.
அவுங்களை கப்புனு புடிச்சு அவுங்ககிடேந்து நல்ல விஷயங்களை கத்துக்கனும்...

Time போனா திரும்பி வராது..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// revatechnic said...
ம்ம்ம்.. இந்த மாதிரி சில பேரு, அப்பப்போ நம்ம வாழ்க்கையிலே cross பன்னி போறதுண்டு.
அவுங்களை கப்புனு புடிச்சு அவுங்ககிடேந்து நல்ல விஷயங்களை கத்துக்கனும்...//

அட ஏதோ முயலைப் புடிக்கிறமாதிரி சொல்றீங்க..

ம் வாழ்க்கையை கிராஸ் பண்ணி போனவங்கள விட இதயத்தை கிராஸ் பண்ணி போனவங்களத்தான் மறக்க முடியல..:)

முத்துகுமரன் said...

//நான் விரும்பும் பெண்ணுக்கு அவர்தான் மறக்கு முடியாத ஆசான் அதுதான் முக்கிய காரணம். என்ன நியுட்டனின் 3 வது விதி ஞாபகம் வருதா?//

யாரும் இதை கவனிச்சதா தெரியலையே...

வாழ்த்துகள் ரசிகவ்:-)))))))))

Anonymous said...

உங்கள் பதிவுகள் படிக்கத்துவங்கினாலே
நேரம் போவதே தெரியாது ஞானி..!
சுவாரசியமாய் இருக்கும்
அது என்னமோ உங்கள்
எழுத்து நடை விப்பவர்களை
நிறையவே கவர்கிறது..!!

நேசமுடன்
-நித்தியா

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//யாரும் இதை கவனிச்சதா தெரியலையே...

வாழ்த்துகள் ரசிகவ்:-))))))))) //


நீங்களாவது சரியா கவனிச்சீங்களே குமரா..நன்றி

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// நித்தியா said...
உங்கள் பதிவுகள் படிக்கத்துவங்கினாலே
நேரம் போவதே தெரியாது ஞானி..!
சுவாரசியமாய் இருக்கும்
அது என்னமோ உங்கள்
எழுத்து நடை விப்பவர்களை
நிறையவே கவர்கிறது..!!//நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜயம் செய்திருக்கிறீர்கள் போலிருக்கிறது நித்தியா..நன்றி..

தேன் கூடு