Saturday, January 14, 2006

நொண்டி - பழசு




நொண்டி


"ஏலே நொண்டி"
மூன்று சக்கர வாகனத்திலிருந்து
முகம் திருப்பினேன்!
அங்கே ஓர்
இதய நொண்டி!

- ரசிகவ் ஞானியார்






பழசு

இன்று
போகிப்பண்டிகையாம்
பழசாகிப் போனதெல்லாம்
அக்னியிலே!
ஆம்
அவனுடைய தாய்
அநாதை விடுதியிலே!


- ரசிகவ் ஞானியார்





6 comments:

Anonymous said...

Rasikov,

both are very nice thoughts. U have described a big matter in this small poems. Keep it up.

Anonymous said...

great poem

parattukkal nanbare

- manivannan

கைப்புள்ள said...

கடுகு சிறுத்தாலும் காரம் போகவில்லை. சிறப்பாக இருந்தது.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

நன்றி கைப்புள்ளை மற்றும் பெயர் குறிப்பிடாத புண்ணியவான்களுக்கு

G.Ragavan said...

ரசிகவ், நல்ல கவிதை முயற்சி.

இந்த இதய நொண்டி கான்செப்டில் ரொம்ப நாளைக்கு முந்தி ஒரு சிறுகதை படித்தேன். எதில் என்று மறந்து விட்டது.

கூட்டமான பஸ்ஸில் இட நெருக்கம். ஒரு ஊனமுற்றவர் பஸ்ஸில் நின்று கொண்டு வருவார். ஊனமுற்றவர் இருக்கையில் ஒருவர் உட்கார்ந்திருப்பார். சுற்றியிருப்பவர்கள் எழுந்திருக்கச் சொன்னாலும் எழுந்திருக்க மாட்டார். அப்போது அந்த ஊனமுற்றவர் சொல்வார். "விடுங்க....அவரும் ஊனமுற்றவர் தான. எனக்குக் காலில் ஊனம். அவருக்கு மனசில் ஊனம்."

உங்கக் கவிதையைப் படிச்சதும் எனக்கு அந்தக் கதை நெனவுக்கு வந்துருச்சு.

அது சரி. நடூல நம்ம வலைப்பூவுக்கு வந்துட்டிருந்தீங்க. இப்பல்லாம் ஆளக் காணோம்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

நன்றி ராகவன்.. அந்தக்கதை மனசை நெகிழச்செய்கிறது.

வர்றேம்பா.. கொஞ்சம் பிசியாயிட்டேன்.. பாசக்காரனாயிருக்கீங்களப்பா..

தேன் கூடு