Monday, January 30, 2006

என் வழி....வயித்துவலி


ஹாய் ,

என்னுடைய பெயர் 'இளையதளபதி' விஜய். என்னுடைய தந்தையின் பேனரில் நான் தற்போது 'ஆதி' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளேன். ஆனால் படம் பயங்கர பிளாப் ஆகி நான் மிகுந்த நஷ்டத்தில் இருக்கின்றேன்.

மைக்ரோசாப்ட் நிறுவணம் இந்த துயரத்திற்கு உதவுவதாக வாக்கு கொடுத்துள்ளது. நீங்கள் இந்த மின்னஞ்சலை உங்களது உறவினர்களுக்கு நண்பர்களுக்க அனுப்பினால் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு மெயிலுக்கு 10 பைசா வீதம் எனக்கு தந்துகொண்டிருக்கும்.

தயவுசெய்து எனக்கு உதவுங்கள். நிச்சயமாக நான் இனிமேல் என்னுடைய தந்தையின் பேனரில் நடிக்கவே மாட்டேன்.

அதுமட்டுமல்ல நான் இனிமேல் பஞ்ச் டயலாக்கும் பேசமாட்டேன். தயவுசெய்து தயங்காதீர்கள்.

இது உங்களுக்கு சாதாரண மின்னஞ்சல்தான் ஆனால் எனக்கும் இந்த தமிழ் சினிமாவுக்கும் நீங்கள் செய்கின்ற மிகப்பெரிய உதவி இது.

அன்புடன்,
சொல்லி அடிப்பதில் கில்லி
சொல்லாம அடிப்பதில் திருப்பாச்சி
சும்மா சுழன்று சுழன்று அடிப்பதில்
சிவகாசி ...............
சிவகாசி .................
சிவகாசி ...............
உங்கள் விஜய்

(விஜய் ரசிகர்கள் கோவப்படுறது எனக்குத் தெரியுது ஆனா இது என்னோட கைவண்ணம் இல்லைங்கோ..எனக்கு வந்த மின்னஞ்சலை தமிழ்படுத்தினேன் அவ்வளவுதான் )

இப்படிக்கு

என் வழி ... வயித்து வலி..

ச்சே எனக்கும் பஞ்ச் டயலாக் பத்திகிச்சுங்க..

-ரசிகவ் ஞானியார்

21 comments:

சந்தோஷ் aka Santhosh said...

:)) ராகவ் அப்படியா எனக்கு இதுவரைக்கு அது மாதிரு ஒரு மெயில் வரலையே ஒரு வேலை நீங்க எனக்கு அனுப்பவில்லையோ :))

G.Ragavan said...

வயித்துவலி எனக்குந்தான்....சிரிச்சிச் சிரிச்சி....

G.Ragavan said...

வயித்துவலி எனக்குந்தான்....சிரிச்சிச் சிரிச்சி....

நிலவு நண்பன் said...

//வயித்துவலி எனக்குந்தான்....சிரிச்சிச் சிரிச்சி.... //

சிரிச்சி சிரிச்சி காது புண்ணாயிருச்சா ராகவ்..

கைப்புள்ள said...

நைனா துட்டு போட்டு படம் எடுத்தாருனா அதுல பையனுக்கு பேர் கிடைக்காதுங்கறது என் தியரி.
1. S.A.சந்திரசேகர்-விஜய்
2. கஸ்தூரிராஜா-தனுஷ்
3. T.ராஜேந்தர்-சிம்பு
சரி தானுங்களே?

நிலவு நண்பன் said...

//1. S.A.சந்திரசேகர்-விஜய்
2. கஸ்தூரிராஜா-தனுஷ்
3. T.ராஜேந்தர்-சிம்பு
சரி தானுங்களே? //


நல்ல ஆராய்ச்சி கைப்புள்ள..

நிலவு நண்பன் said...

//:)) ராகவ் அப்படியா எனக்கு இதுவரைக்கு அது மாதிரு ஒரு மெயில் வரலையே ஒரு வேலை நீங்க எனக்கு அனுப்பவில்லையோ :))

//


எனக்கு அனுப்பியதே நீங்கதானே சந்தோஷ் : )

saran said...

hai i am also got this kind of mail from ajith's fan

i Replyed like this...

"Sure we will help for vijay,
But who will help for this guy(what is his name i for got that ,paramasivan hero name)???. Don’t forgot this guy also..Can anyone tell me what is his last hit movie name??????????(act pannura avanu ka thariyathu enna kaata eppadi thareum nu kaat ka kuudathu try panni sollunga?) so first we will help for this guy then we will consider about vijay."

விஜயன் said...

'ஆதி'க்கு 'பேதி'யாகி விட்டதா?

மகேஸ் said...

நிலவி நண்பரே,
இந்தப் பதிவை ஏன் அறிவியல்/தொழில்நுட்பத்தில் வகைப்படுத்தினீர்கள் என விளக்க முடியுமா?

மகேஸ் said...

சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகி விட்டது.

நிலவு நண்பன் said...

நன்றி மகேஷ் மற்றும் விஜயன் சரண்.

அன்பு said...

இதுபோன்ற மின்னஞ்சல்/குறுந்தகவல் நமக்கு வருவதோடு நிற்பதில்லை, திரையுலகத்தையும் சென்றடைகிறது என்பது ஒரு சிறப்பு வணக்கம் தமிழகத்தில் பாக்யராஜே கூறியதன் மூலம் தெரியவந்தது. அவர்சொன்னார், 'இப்பல்லாம் மக்களோட awarenessa நினைச்சா கொஞ்சம் பயமாத்தான் இருக்குது படம் எடுக்கறதுக்கு. எனக்கு ஒரு SMS வந்துச்சு. அதுல்ல என்ன போட்டிருந்துச்சுன்னா...

தற்கொலைக்கு முயல்பவர்கள்
கயிறுக்கு இவ்ளோ பணம் செலவழிக்கணும்,
விஷத்துக்கு இவ்ளோ...

....
....

சமீபத்தில வந்த ஒரு பெரிய ஹீரோவோட படத்தை சொல்லி - டிக்கெட் விலை 20தான்..."

என்றிருந்ததாம்!

ஆனால் இது எல்லாருக்கும் போவதில்லை போல...:)

ஆர்த்தி said...

:-)))

நிலவு நண்பன் said...

//பாக்யராஜே கூறியதன் மூலம் தெரியவந்தது. அவர்சொன்னார், //

ம் நானும் பார்த்தேன் அன்பு..

// ஆர்த்தி... said...
:-))) //

:)))

நாமக்கல் சிபி said...

இதே மாதிரி பரமசிவதுக்கும் வந்தது.
ரெண்டு படத்தையும் சரியா வாரிகிட்டிருக்காங்க.

நிலவு நண்பன் said...

// நாமக்கல் சிபி said...
இதே மாதிரி பரமசிவதுக்கும் வந்தது.
ரெண்டு படத்தையும் சரியா வாரிகிட்டிருக்காங்க. //

mmm..sarithan sibi..

Karthik Jayanth said...

S.A.சந்திரசேகர்-விஜய் கூட்டணி ல 2 காலம் இருக்கு.

காதலுக்கு மரியாதைக்கு முண் /பிண்..
கா.ம முண் கூட்டணி படம் எல்லாம்.. என்னத்த சொல்ல....(சபை மருவதி கருதி)

மத்த படி சிப்பு தான் வருது தல :-)))
இப்படிக்கு
சங்கவி மன்றம்

நிலவு நண்பன் said...

//மத்த படி சிப்பு தான் வருது தல :-)))
இப்படிக்கு
சங்கவி மன்றம் //

enna karthik..puthusu puthusa manram vaikkireenga..:)

Karthik Jayanth said...

நிலவு சார்,

சங்கவி மன்றம் எல்லாம் காலேஜ் காலத்து நினைவுகள்.அதை பத்தி பல பதிவுகள் போடலாம்.என்னொட சகாகள் பதிவை படிச்சி,என்னை உயிரோடு வச்சிருந்தால் ...

நிலவு நண்பன் said...

//நிலவு சார்,

சங்கவி மன்றம் எல்லாம் காலேஜ் காலத்து நினைவுகள்.அதை பத்தி பல பதிவுகள் போடலாம்.என்னொட சகாகள் பதிவை படிச்சி,என்னை உயிரோடு வச்சிருந்தால் ... //

ada chumma podunga..sir..appuram paarthukkalaam

தேன் கூடு