Sunday, December 25, 2005

மரணம் நிகழப்போகிறது



நீங்கள் இதனைப் படித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு குழந்தை இறந்திருக்கக்கூடும்.

இந்த நிலநடுக்கம் பல லட்சம் மக்களின் வாழ்க்கையை நிரந்தரமாக பாதித்துவிட்டது. அவர்களின் வாழ்க்கைப்போக்கை அடியோடு மாற்றிவிட்டது
- இப்படி எழுதுகிறார் இஸ்லாமாபாத்திலிருந்து எழுத்தாளர் முரளிதர் ரெட்டி
பாதிப்புகளின் அடிப்படையில் பார்த்தால் அக்டோபர் 8 - 2005 நிலநடுக்கம் டிசம்பர் 6 சுனாமியை விடவும் மிகவும் மோசமானது. அதுபோன்ற அழிவுகள் தலைமுறைக்கு ஒருமுறைதான் நடைபெறுகின்றது
- என்கிறார் ஐக்கிநாட்டுச்சபையின் நிவாரண ஒருங்கிணைப்பாளர் ஜான் ஈக்லேண்ட்.

இது மிகப்பெரிய தேசியத்துயரம் - பிரதமர் மன்மோகன் சிங்.

அக்டோபரில் நடைபெற்ற பூகம்பத்தில் இந்தியாவில் பல ஆயிரக்கணக்கான மக்களும் பாகிஸ்தானில் 75000 பேர்களும் இறந்துள்ளனர் 10000 த்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் யாருமில்லாத அனாநையாக்கப்பட்டுள்ளார்கள்.

இப்படி ஒரு நிலநடுக்கும் மக்களை சின்னாபின்னாமாக்கி சீரழித்தப்போதும் உலகம் அதற்கு தரவேண்டிய முக்கியத்துவத்தை சரியான முறையில் தரவில்லை.

இது மிகவும் மோசமான பாதிப்பு என்று கூறிய ஜக்கியசபை நாடுகள் கூட இதற்குச் சரியான முக்கியத்துவம் தரவில்லை.

இந்துப்பத்திரிக்கையின் முன்னால் தலைமை ஆசிரியரும் இப்போதுள்ள கட்டுரையாளருமான கல்பனா சர்மா இப்படிக் கூறியுள்ளார் :

The story of the continuing tragedy in the mountains of Kashmir on both sides of the line of control( LoC) dividing India and Pakistan has slipped off the main news columns. While Pakistan has seen a response by non-governmental groups and from Pakistanis from around the world, in India the response of civil society remains muted. Although there was some mention of corporate offering help, none has been evident on the ground on our sid eof Kashmir

- Kalpana Sharma in ( The Hindu ) 13.11.05
- Email : Sharma@thehindu.co.in-

"காஷ்மீர் மலைகளில் தொடர்ந்து கொண்டிருக்கும் துயரங்கள் நமது பத்திரிக்கைகளில் பிரதான இடத்தைப் பிடிக்கத்தவறி விட்டன.

நாகரீகமடைந்த சமுதாயங்களிலிருந்து வரவேண்டிய கருணையும் உதவியும் எதிர்பார்த்த அளவு வரவில்லை. சில நிறுவனங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக உதவிகளை அறிவித்தாலும் காஷ்மீர் பகுதியிலிருந்து எதுவும் தென்படவில்லை.

பத்திரிக்கைகள் அந்த சம்பத்திற்கு தரவேண்டிய சாதாரண அளவு முக்கியத்துவத்தைக் கூட தரவில்லை "என்றுதான் ஆதங்கப்படுகிறார்
கல்பனா சர்மா.

யோகேந்தர் சிக்கந் என்னும் பத்திரிக்கையாளர் காஷ்மீரின் இருபகுதிகளுக்கும் சென்று வந்து சொல்லும் செய்தியோ இன்னும் சோகமானது.

காஷ்மீரின் பெரும் பகுதிகளுக்கு உணவு - குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் உடைகள் ஆகியவைகள் சென்று சேர்ந்திடவில்லை. இதனால் இந்த டிசம்பர் இறுதிக்குள் அல்லது ஜனவரியில் பல குழந்தைகள் இறந்துவிடக்கூடும்.

இதில் கொடுமையும் வேதனையும் என்னவென்றால் , இந்தியாவில் சில நல்லுள்ளம் படைத்தவர்கள் மற்றும் பாகிஸ்தான் மக்களிடமிருந்து வந்த பழைய துணிகள் காஷ்மீர் மக்களின் குளிரைப் போக்குவதற்குண்டான துணிகள் அல்ல..அவர்களின் கலாச்சாரத்திற்குப் பொருந்தாதவை.

கலாச்சாரத்திற்கு பொருந்தாதவை என்பதை விட அவர்களின் குளிரைப் போக்கும் சக்தி உடையதான இல்லை.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களின் சோகமோ இன்னமும் கோரமானது. ஹெலிகாப்டரில் வந்து நிவாரணம் வழங்குபவர்களாhல் தாழ்வான பகுதிகளுக்குச் செல்ல முடியவில்லை.

ஆகவே அவர்கள் மலைமீது உணவு பொருட்களை இட்டுச் செல்வதால் வயதானவர்கள் எல்லாம் அந்த மலை உச்சிக்கு நடந்து சென்று அந்த நிவாரணப் பொருட்களை பொறுக்க வேண்டியதாக இருக்கிறது.

யோகேந்தர் சிக்கந் என்னும் பத்திரிக்கையாளர் சொல்கிறார் "
"75 வயதான கண்பார்வை மங்கியவர் தன் மனைவியின் கையைப்பிடித்துக்கொண்டு 5300 அடி உயரமுள்ள அந்த மலை உச்சிக்குச் சென்று,

1 கிலோ சர்க்கரை
5 பிஸ்கட் பாக்கெட்
2 தண்ணீர் பாட்டில்கள்

ஆகியவற்றை பெற்றுக்கொண்டு கரடுமுரடான அந்த மலைப்பகுதியிலிருந்து மீண்டும் 5300 அடி இறங்கி வருகிறார். அதுவும் அவர் அதனை தனக்காகச் செய்யவில்லை. தனது குடும்பத்தில் எஞ்சியுள்ள ஒரு 5 வயது குழந்தைக்காகத்தான்.

அவர் மலைக்குச் செல்லும் சமயத்தில் அந்தக்குழந்தையை பக்கத்து வீட்டுக்காரர்களின் பாதுகாப்பில் விட்டுவிட்டுச் செல்கிறார். அதுவும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அவர் இவ்வாறு 5300 அடி ஏறி இறங்க வேண்டியதாக இருக்கிறது. அந்தப்பயணமும் இனி மேல் தொடரப்போவதில்லை. எதிர்வருகின்ற குளிர்காலத்தில் அந்தப்பாதைகள் பனிகளால் மூடி மேலும் கரடு முரடாக மாறிவிடும்..அதன் பிறகு அவர்கள் என்ன செய்திடக்கூடும்?"
என்ற ஏக்கத்தில் அவர் இப்படிக் குறிப்பிடுகின்றார் :

“After that All they can do is wait to die “

"அதன்பிறகு அவர்களால் செய்ய முடிந்ததெல்லாம் அவர்கள் காத்திருந்து மரணிக்கலாம் "

இது பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில் ஒரு குடும்பத்தின் கதை. மற்ற குடும்பத்தின் கதை..?

5300 அடி ஏறி இறங்குவது என்பது சாதாரண விசயமல்ல..கொஞ்சம் நினைத்துப்பாருங்கள் அந்தச் சூழலை..?

இந்த டிசம்பர் இறுதிக்குள் இல்லையென்றால் ஜனவரி மாதத்திற்குள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் கடுங்குளிரால் இறந்துப் போகக் கூடும் என்ற செய்தி மனதை மிகவும் வாட்டுகின்றது.

மரணத்தை அறிந்தவன் இறைவன் மட்டுமே. ஆனால் நமக்கு இப்போது கண்கூடாகத் தெரிகின்றது அந்த உயிர்கள் இன்னும் சில மாத்திற்குள் இறந்துவிடக்கூடும் என்று.

இதற்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டாமா..? இந்தியப் பகுதிகளிலும் பாகிஸ்தான் பகுதிகளிலும் சுமார் 3 லட்சம் மக்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் சுமார் 1 லட்சம் மக்கள் இன்னும் சில வாரங்களுக்குள் இறந்துவிடக்கூடும்.

இப்போது உயிரோடு இருக்கும் பலர் அடுத்த வாரம் உயிரோடு இருப்பார்களா என்பது சந்தேகமே..?

பாருங்கள் இந்த வேடிக்கையை நம் கண்களுக்கு முன்னால் சில மரணங்கள் நடக்கப்போகிறது எனத் தெரிந்தும் நாம் அலட்சியமாக இருக்ப்போகிறோமா..?

யோகேந்தர் சிங் அவர்கள் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வேண்டி மக்களிடம் ஒரு விண்ணப்பத்தை வைத்திருக்கிறார். அவரை பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

www.kashmirquakerelief.org

( நன்றி : விடியல் வெள்ளி )

ஆகவே அன்பர்களே! உயிரைக்காப்பாற்றும் உன்னதப் பொறுப்பு உங்கள் கைகளில் இப்பொழுது.

சமீபத்தில் நடிகர் கமல் ஒரு பேட்டியில் குறிப்பிட்டது ஞாபகம் வருகின்றது:
"நான் வாழுகின்ற இந்தப் பூமியில்தான் பட்டினிச்சாவுகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்று நினைக்கும்போது எனக்கு வெட்கமாக இருக்கிறது "

அதுபோல சகோதர சகோதரிகளே! அவர்களை மரணிக்கவிட்டுவிட்டு நாம் அலட்சியமாக இருந்தால் அந்த மரணத்திற்கு நாமும் ஒரு காரணமாகி விடுவோம்.

தூக்குதண்டனை கைதி மரணம் நிச்சயிக்கப்பட்டு தூக்கிலிடப்படுவதையே நம்மில் சிலர் இங்கே எதிர்த்து வருகின்ற நிலையில் எந்தத் தவறுமே செய்யாமல் இன்னும் சில நொடிகளிலோ, நிமிடங்களிலோ , நாட்களிலோ ,வாரங்களிலோ, மாதங்களிலோ மரணத்தை எதிர்நோக்கப் போகும் அவர்களுக்காய் கருiணைப்பாவையை வீசுங்களேன்...



தாங்கள் ஒரு பெப்சி அல்லது டீ குடிக்கின்ற காசை மட்டுமாவது அனுபப்புங்களேன். தாங்கள் ஜீரணிப்பதற்காய் குடிக்கின்றீர்கள் நான் ஜீவன் வாழவேண்டுமே எனத் துடிக்கின்றேன்.

குழந்தைகளுக்கு பொம்மை வாங்கும் காசில் ஒரு உயிருள்ள ஜீவனை காப்பாற்றுங்கள்.

இதைப்படித்து முடிந்தவுடன் , "ச்சே கிளம்பிட்டாங்கப்பா வசூலிக்க".."நாம எவ்வளவுதான் கொடுக்கிறது" என்று அலட்சியமாக நினைத்து "அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்" என்று இருந்து விடாதீர்கள். நீங்கள் ஒத்திவைக்கின்ற நேரங்கள் அங்கே உயிர்களின் மூச்சுக்கள் நிறுத்திவைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.


"இப்படி நடக்கவா போகின்றது? "

"இதெல்லாம் கட்டுக்கதை "

"நாம ஒருத்தன் கொடுக்கலைன்னா என்ன ஆகப்போகிறது .. "

"எந்த இளிச்சவாயனாவது கொடுப்பான் "


என்று சோம்பல் பட்டுவிடாதீர்கள் நண்பர்களே. உங்கள் சோம்பலில் எத்தனை உயிர்கள் சாம்பல் ஆகிவிடும் தெரியுமா..? ஒன்றல்ல இரண்டல்ல சுமார் பத்தாயிரம் குழந்தைகள். ஒரு குழந்தை பெறவே கொஞ்சம் கால தாமதமாகிவிட்டால் , மருத்துவரிடம் பணம் இறைத்து சோதனைகள் செய்கின்றோம் - ஆலமரம் சுற்றுகிறோம் - இறைவனிடம் வேண்டுகிறோம். ஆனால் பத்தாயிரம் குழந்தைகள் என்றால் நினைத்துப்பாருங்கள்..எத்தனை தாய்களின் வலி அது..?


வீட்டில் கொஞ்சம் ஏசியை அதிகமான வைத்தாலே நம் குழந்தைகள் குளிரில் நடுங்கி போர்வையை இழுத்துக்கொண்டிருக்கும் காட்சி தங்கள் ஞாபகத்திற்கு வரக்கூடும். ஆனால் அதிகமான மைனஸ் டிகிரியில் ஒதுங்க இடம் - உடுக்க ஆடை கூட சரிவர இல்லாமல் நடுங்கிக் கொண்டிருக்கும் அந்தப் பச்சிளங்குழந்தைகளை நினைத்துப்பாருங்கள் அன்பர்களே!

வாடகை வீடாம் பூமியிலே..
மனிதநேயம் ஒரு கதவு!
பாடையிலே நீ போகுமுன்னே..
பத்துப் பேருக்கு உதவு!


மறுபடியும் ஞாபகப்படுத்துகிறேன்.


நீங்கள் இதனைப் படித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு குழந்தை இறந்திருக்கக்கூடும்.



இதயம் பிரார்த்தனையுடன்

ரசிகவ் ஞானியார்







8 comments:

நண்பன் said...

கண்ணீர் வரவழைக்கும் கட்டுரை - ரசிகவ். துபாயிலிருந்து நீங்கள் பொறுப்பேற்றுக் கொண்டு உதவிகளை வழங்க ஏற்பாடு செய்யுங்கள் - உதவிக்கு நாங்கள் வருகிறோம்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

நண்பன் அவர்களே
தங்களின் மனிதாபிமான பதிலுக்கு நன்றி. மன்னித்துக்கொள்ளுங்கள் . பண வசூல் விசயத்தில் நான் தலையிட விரும்பவில்லை. ஏனென்றால் எந்த நம்பிக்கையில் என்னிடம் பணம் தருவார்கள்.?
ஆகவே நான் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள இணையத்தில் உள்ள முகவரிக்கு டிடி எடுத்து அனுப்புவது நல்லது என நினைக்கிறேன்

Anonymous said...

நல்ல மனிதாபிமான சிந்தனை நிலவுநண்பா...பாராட்டுக்கள்..

கண்டிப்பாக என்னால் முடிந்த பணத்தை உடனே அனுப்புகிறேன்.

Anonymous said...

very nice article brother,

parattukkal..i try to send money for them..

Anonymous said...

முதல்ல தமிழ்நாட்டு மக்களை காப்பாற்றுவோம். பின்பு காஷ்மீரைப் பார்த்துக் கொள்ளலாம்.

உனக்கே வேட்டியில்லை..நீ
ஊர் மேயப் போகிறாயோ..?

இதயம் வெறுப்புடன்

எவனோ

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//எவனோ //

தங்களுக்கு தங்கள் குடும்பத்தினர் நல்ல பெயர் வைத்திருக்கிறார்கள் சகோதரா..பாராட்டுக்கள்

மஞ்சூர் ராசா said...

உன் கட்டுரை கல் நெஞ்சையும் கரைய செய்கிறது. அதிலும் கொதிநீர் ஊற்றி வேடிக்கைப் பார்க்கும் கல்நெஞ்சர்கள் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்பொழுது ....ச்சே

என்னால் முடிந்ததை செய்கிறேன்.
நன்றி.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//கொதிநீர் ஊற்றி வேடிக்கைப் பார்க்கும் கல்நெஞ்சர்கள் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்பொழுது ....ச்சே//


கொதிநீர் ஊற்றுபவர்கள் மீதும்
நாம் குளிர்நீரை ஊற்றுவோம்..
பாவம் அவர்களுக்கு என்ன மன உளைச்சலோ.?


//என்னால் முடிந்ததை செய்கிறேன்.
நன்றி. //

நன்றி மஞ்சூர் ராசா.

தேன் கூடு