Saturday, December 31, 2005

ஒரு புத்தாண்டுப் புலம்பல்


பிறந்து விட்டது புத்தாண்டு
இறந்துவிட்டது மனிதநேயம்
இருந்தாலும்
வழக்கம்போலவே உன்னை
வரவேற்கிறேன் புத்தாண்டே!

நீ வரும்போது
குழந்தையாகத்தானே வருகிறாய்..?
திரும்பிச்செல்லும்போது ஏன்..
தீவிரவாதியாகிறாய்;.?
கையில் தடியோடு..

சென்ற ஆண்டில் கிழிக்கப்பட்டது
காலண்டர் மட்டுமல்ல ...
மனிதநேயமும்தான்!

கணிப்பொறிக்கு கூட
மனிதநேயம் இருக்கிறது
ஆம்
ஏழை - பணக்காரன்
எவர் தொட்டாலும்..
ஒரே பதிலைத்தான் தருகிறது!
ஆகவே புத்தாண்டே!
இனி பிறக்கும்
குழந்தைகளை ...
கணிப்பொறிகளாகவே பிறக்கவை!

சாதிகளோடு ...
சம்பந்தம் பேசிக்கொண்டிருக்கும்
குடிமக்களின் தலையில்
குட்டி குட்டி ...
விரலின் ரேகை
வீணாணதுதான் மிச்சம்!

ஆகவே புத்தாண்டே
நீ
நீதியையெல்லாம்..
நிலைநிறுத்த வேண்டாம்!
முதலில்
சாதியை நிறுத்து போதும்!


இப்பொழுது
பாபரும் ராமரும்
இருந்திருந்தால் கூட
பரஸ்பரம் நண்பர்களாகியிருப்பார்கள்!
ஆனால் இவர்கள்
பாபருக்கும் இராமருக்கும்
போரிட்டு போரிட்டு ...
பொருளாதாரத்தை இழக்கிறார்கள்!
கூடவே
மனிதத்தன்மையையும்!

பிறக்கும் குழந்தைகளுக்கெல்லாம்
பாலூற்ற மறுத்துவிட்டு..
பாபர்- ராமர் புராணம்தான்
பக்குவமாய் ஊட்டப்படுகிறது!
ஆகவே புத்தாண்டே!
பாபர்பாடும் ராமர்பாடும் போதும்
கொஞ்சம்
பண்பாடும் கற்றுக்கொடுப்போம்!

சிலரின் இரத்தம் குடிப்பவர்கள்
நிரபராதியாம்!
சிகரெட் குடிப்பவர்கள்
குற்றவாளியாம்!
ஆகவே புத்தாண்டே
மனிதர்களோடு
புகை பிடிப்பவர்களை...
தண்டித்து விட்டு பின்
புகை பிடிப்பவர்களை தண்டி!

தண்டச்சோறுக்கு மத்தியிலும்
தன்மானத்தோடு வாழும்
இந்திய முதுகெலும்பாம் எம்
வேலையில்லா பட்டதாரிகளுக்கு...
கனவிலாவது ஒரு
கவர்மெண்ட் வேலை கொடு புத்தாண்டே!

ஏழைகள் திருடினால்
குற்றமல்ல என்று
புதுச் சட்டமியற்று
புத்தாண்டே!
இல்லையென்றால்
ஏழைகளுக்கு ...
பசிக்காத வயிறொன்றைப்
படைத்துக்கொடு!


வரதட்சணை வாங்கி
பெண் வீட்டாரின்
தன்மானத்தோடு..
வாலிபால் விளையாடும்
வாலிபர்களுக்கெல்லாம்..
மரணதண்டனை கொடு புத்தாண்டே!

சினிமா கதாநாயகர்களையெல்லாம் - தன்
வீட்டுக்காரனாக நினைத்துக்கொண்டிருக்கும்
விட்டில் பூச்சிகளாம் எம்
முதிர் கன்னிகளுக்கு..
கதாநாயகன் வேண்டாம்!
வில்லனையாவது..
வீட்டுப்பக்கம் அனுப்பு புத்தாண்டே!

எல்லோருக்கும்
காதல் உணர்ச்சியை
அதிகமாய் தூண்டு புத்தாண்டே!
ஆம்
தீவிரவாதிகளே
உருவாக மாட்டார்கள்!

ஒவ்வொரு புத்தாண்டிலும்
ஏதாவது ஒரு
கெட்டப்பழக்கத்தை
நிறுத்த வேண்டுமாம்!
ஒன்று செய்வோம்..
இந்தப்புத்தாண்டிலிருந்து
அரசியலை நிறுத்திவிடுவோமா..?

- ரசிகவ் ஞானியார்

9 comments:

பொன்னம்பலம் said...

அண்ணே!

இது என்ன நமக்குப் போட்டியா பாட்டுலே பொலம்ப ஆரம்பிச்சிட்டீங்க.
நம்ம பொழப்பில கைவைக்காதீங்க!

சிங். செயகுமார். said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே!

Anonymous said...

nice and necessary pulampal.. : )

நிலவு நண்பன் said...

//நம்ம பொழப்பில கைவைக்காதீங்க! //


சரிப்பா சரி கோவப்படாதீங்க..இனி உங்க பொழப்புல கை வைக்கலப்பா...


//புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே!
//

புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி
ஜெயக்குமார்.


சென்ற ஆண்டுத் துக்கமெல்லாம்
வரும் ஆண்டில் வடிந்துப் போகட்டும்

எல்லாருடைய மனதிலும் இறைவன் அமைதியை நடட்டுமாக..

அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கைப்புள்ள said...

சமூக சிந்தனையுடன் எழுதப்பட்ட அழகான கவிதை. 2005-உண்மையிலேயே மனிதநேயத்துக்கு கல்லறை கட்டிய ஆண்டு. ஆனா 2006 எல்லாருக்கும் நல்லா இருக்கும்னு நம்புவோம். புத்தாண்டு வாழ்த்துகள்.

நிலவு நண்பன் said...

//ஆனா 2006 எல்லாருக்கும் நல்லா இருக்கும்னு நம்புவோம்.//

தங்களின் எண்ணம் போல நடக்க பிரார்த்திப்போம்

அது என்ன "கைப்பிள்ளை..? "

ச்சே ச்சே ச்சே ச்சே
என்ன சின்னபுள்ளத் தனமால்ல இருக்கு : )

G.Ragavan said...

புத்தாண்டு வாழ்த்துகள் ரசிகவ். இந்த ஆண்டு இனிய ஆண்டாக அமைய எனது வாழ்த்துகள்.

கைப்புள்ள said...

Kaipullainu peru edhukkuna ellam therinja madhiri oru bandha viduvom..oru alambal...oru gethu...oru padam kaattuvom. Yaaravadhu vishayam therinjavanga lighta sound vitta appadiye pammiduvom.

Nilavunanbannu nalla paiyan perai vechikkittu idhellam seiya mudiyuma sollunga? Arasiyal vaazhkaiyile idhellam sagajamappa!

மஞ்சூர் ராசா said...

தம்பி, புத்தாண்டிலெ நல்லாத்தான் புலம்பியிருக்கே. உம்... ஒரு சின்ன ஆசை தான். இந்த வருஷமாவது நல்லா இருக்கட்டும்னு.

இதெல்லாம் சகஜமப்பா

தேன் கூடு