Thursday, December 22, 2005

நில்! கவனிக்காதே! செல்!
பேருந்தில் நான்
நோட்டுப்புத்தகத்தை,,,,
தரும்போதே நீ
திருப்பித்தந்திருந்தால்,,,
இந்தக்காதல் ஏற்பட்டிருக்காதடி!

பத்திரிக்கையில் பிரசுரமாகும்...
என்
காதல் கவிதைகளையெல்லாம்...
நான் உனக்காக எழுதியதென்று
நீயேன்டி நினைத்துக்கொண்டாய்?

என் நண்பனை காண
வகுப்புக்கு வந்தபொழது...
உன்னைப்பார்க்க வந்ததாய்
உன் தோழியிடம் கூறி...
வெட்கப்பட்டாயாமே?என் வீட்டுக்குப்போன்செய்து...
நானென நினைத்து
என் அண்ணனிடம்...
ஏதேதோ உளறினாயாமே?

என்
மம்மியும் அடிக்கடி
முணணுமுணணுக்கிறார்கள்
“தொலைபேசியில்...
யாரோ ஒருத்தி
மாமி என்று அழைக்கிறாளே?
யாருப்பா அது?”

என்
கவிதை ஒலிக்கின்ற
மேடையிலெல்லாம்
முதல் கைதட்டலும் நீதான்...
கடைசி கைதட்டலும் நீதான்...

நான்
பேருந்து வருகிறதா என...
திரும்பிப்பார்க்க,
நீயோ
உன்னைப்பார்ப்பதாய்...
நினைத்துக்கொண்டால்
நான் என்னடி செய்வேன்?

மேகங்கள் இருட்டிவிட்டதாய்
மனசுக்குள்ளே நினைத்துக்கொண்டு...
மழைபொழியவில்லையென ஏனடி
மன்றாடுகிறாய்?

நீ
தூக்கமாத்திரைகளை வைத்துக்கொண்டு- எனை
தூங்கவிடாமல் செய்ததால்
சகாராவில்...
சாரலடிக்கச் சம்மதித்துவிட்டேன் !

வெயில்படாமல் வைத்திருந்த என்
விளையாட்டு மனசை...
குயிலே நீ வந்து
கூட்டிட்டுப்போனாய்!

காற்றுக்குத் தெரியாமலிருந்த என்...
காதல் உணர்வுகளை
புயலுக்கிழுத்துவிட்டு...
புன்னகைப்பவளே!

அமெரிக்கா ஏவுகணைபோல - என்
ஆப்கான் இதயத்தை...
அழித்துவிட்டு,
நேற்றைய மெரினாவில்...
நெஞ்சில் சாய்ந்து அழுகிறாயடி !
“மறந்துவிடுங்கள்” என்று

எத்தனைமுறை
சொல்லியிருக்கிறேன் ...?
"உனக்கு
பார்த்துக்கொண்டிருக்கும் வயசில்...
நானோ
படித்துக்கொண்டிருப்பேன்!
என்னைக் காதலிக்காதே!" என்று


”மறந்துவிடுங்கள்”
இதென்ன
இந்தியகுமரிகளின்...
தேசியகீதமா?


அப்பாவியை அழவைக்கும்...
ஐந்தாண்டுத்திட்டமா?

பரவாயில்லை,
ஒரே ஒரு உதவி செய்!
உன்
துணைக்கு வரும்...
தோழிகளிடமெல்லாம் சொல்லிவிடு !

இனிமேல்
பேருந்தில் யாராவது
நோட்டுப்புத்தகம் கொடுத்தால்...
தயவுசெய்து
திருப்பிக்கொடுக்கச் சொல்லிவிடு !

எங்களுக்கு
உயிரும் இதயமும்...
ஒன்றுதான்
ஒருமுறைதான் போகும் !

- ரசிகவ் கே.ஞானியார்

10 comments:

தேவ் | Dev said...

Vali adhigamo.... ?
venaam azhudhuduvengiriyalaaa...
seri seri ezhuthi thallunga saami
padikka thaan illamtaari paya makka kaathu kidakomlle

Anonymous said...

hi friend

ennode college day-i gnapggam paduthiteenga..nanri..nalla kavithai

srishiv said...

அன்பின் ரசிகவ்
கண்ணை நிரப்பிவிட்டாய் நண்பா :( எனக்குப்பிடித்த வரிகள்:
"என்
கவிதை ஒலிக்கின்ற
மேடையிலெல்லாம்
முதல் கைதட்டலும் நீதான்...
கடைசி கைதட்டலும் நீதான்..."
மெய் சிலிர்த்ததே....
மேலும்,
"எத்தனை முறை சொல்லி இருப்பேன்?
உனக்கு பார்க்க ஆரம்பிக்கும் நேரத்தில்
நான் படித்துக்கொண்டிருப்பேன் என?"
சத்தியமான வரிகள், ஒரே ஒரு ரகசியம் ப்ளீஸ்....சொந்த அனுபவமாத்தெரியல, யாரேனும் தோழனுடையதா? இல்லை தோழியுடையதா? ;) என் வெளியான ஃபீனிக்ஸ் கவிதைதான் நினைவிற்கு வந்தது தோழர், அதன் சுட்டி இதோ: http://keetru.com/literature/poems/srishiv.html
ஹ்ம்ம்ம்....வாழ்த்துக்கள்....
என்றும் அன்புடன்,
ஸ்ரீஷிவ்...

சத்தியா said...

நல்லதோர் கவிதை என் மனதையும் தொட்டுச் சென்றது. வாழ்த்துக்கள்....

Satheesh said...


பத்திரிக்கையில் பிரசுரமாகும்...
என்
காதல் கவிதைகளையெல்லாம்...
நான் உனக்காக எழுதியதென்று
நீயேன்டி நினைத்துக்கொண்டாய்?


Good overall.

நிலவு நண்பன் said...

//சொந்த அனுபவமாத்தெரியல, யாரேனும் தோழனுடையதா? இல்லை தோழியுடையதா? ;) //

சொந்த அனுபவமாகவும் இருக்கலாம் நண்பனின் அனுபவமாகவும் இருக்கலாம். :)

ஆனால் நிஜமான அனுபவம்தான்..

விமர்சித்த ஸ்ரீஷிவ், தேவ் , சதீஷ் சத்தியா அனைவருக்கும் என் நன்றிகள்

srishiv said...

ஹா ஹா ஹா
சூப்பரா குழப்பறீங்க, நன்றீ...
ஸ்ரீஷிவ்...:)

சிந்து said...

உங்கள் ஆக்கங்கள் படித்தேன் சுவைத்தேன் அனைத்தும் அருமை அருமை.

நிலவு நண்பன் said...

//உங்கள் ஆக்கங்கள் படித்தேன் சுவைத்தேன் அனைத்தும் அருமை அருமை. //
நன்றி சிந்து..

விமர்சனங்கள் தங்தவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி

Ranjani said...

//என்
மம்மியும் அடிக்கடி
முணணுமுணணுக்கிறார்கள்
“தொலைபேசியில்...
யாரோ ஒருத்தி
மாமி என்று அழைக்கிறாளே?
யாருப்பா அது?”//

நாங்களும் கேட்கிறோம்
சொல்லுங்க ரசிகவ் யாரு அது..?

இந்தக் கவிதை என் சொந்த வாழ்க்கையில்நடந்தது போல இருக்கின்றது ரசிகவ்.

- ரஞ்சனி

தேன் கூடு