Wednesday, December 07, 2005

என் இனிய முட்டாள்களே!





என் இனிய முட்டாள்களே!
சாதிகளுக்கு...
சாம்பிராணி போடாதீர்கள்!
மனிதத்தை மறந்து...
மதத்தில் மூழ்காதீர்கள்!

கோயில் -மசூதி- தேவாலயம் சுற்றும்
மாடப்புறாக்கள் எல்லாம்
மதம் பார்ப்பதில்லை!
அதற்குத் தெரியும் ..

இருப்பது...
ஒரு கடவுள்!

பிரித்தது..
பல மனிதன் என்று!


லெப்பைக்கு காய்ச்சல் என்றால்...
பாதிரியாரும்,
பூசாரியும் ,
ஓடிவரட்டும்!
பேதம் பார்க்காத ...
புறாக்களைப்போல!

ஜானின் ...
சாவுச்செய்தி கேட்டு
கண்ணன்கள் ...
கதறி அழட்டும்!
ஜாகீர் உசேன்கள்...
சவப்பெட்டித் தூக்கட்டும்

இறைவா!
சாதி மத வெறியர்களை
சுத்தப்படுத்துவதற்காய் ஒரு
சுனாமியை அனுப்புவாயா..?

இனிமேல்
யானைக்கு கூட
மதம் பிடிக்கக்கூடாது!


- ரசிகவ் ஞானியார்

4 comments:

Unknown said...

இதெல்லாம் மதப்பற்றுக் கொண்டவர்கள்( எல்லா மதங்களிலும்) கேட்பாங்கன்னு நினைக்குறீங்க?

மனிதனுக்காக மதம் என்றில்லாமல் என்று மதத்திற்ககாக மனிதன் என்றாகிப்போனதோ அன்றே எல்லாத் தொல்லைகளும் வந்து விட்டது. மதமும், மதம் சார்ந்த நம்பிக்கைகளும் ஒருவன் இளைப்பாறும் இடமாக இருக்க வேண்டுமே தவிர அதுவே எல்லாம் ஆகி, அதைச் சுற்றியே வாழ்க்கயை அமைத்துக் கொண்டால் பிரச்சனைதான்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

கல்வெட்டு சொன்னதை கல்வெட்டில் எழுதிவைக்கலாம்..

Suka said...

// இருப்பது...
ஒரு கடவுள்!//

அது யார் என்பது தான் இப்போது பிரச்சனையோ?

அவர் இல்லையென நம்பினால்/உணர்ந்தால் ஒருவேளை நீங்கள் விரும்பும் நிலைவருமோ!

சுகா

புரட்சி தமிழன் said...

இருப்பது ஒரு கடவுளாக இருக்கும் பட்ச்சத்தில் ஏன் இந்த நிலைமை அவர்வந்து நேராக இந்த பிரச்சினையை தீர்த்துவைக்கலாமே அரசியல் பன்னவேண்டுமானால் அரசன் ஆட்ச்சி செய்யவேன்டுமானால் கன்டிப்பாக கடவுள் தேவைப்படிகிறான் இல்லை என்னில் அனைவரும் சிந்தித்தால் அனீதியை எதிர்ப்பார்களே தட்டிகேட்ப்பார்களே அனைவரும் ஒன்றுபட்டுவிடுவார்களே காட்டெருமைகள் ஒன்றுபட்டால் சிங்கங்களின் கதி என்ன யூ டியுபேயில் பாருங்கள் lion vs baffelow fights

தேன் கூடு