
துபாயில் தூங்கி...
இந்தியாவில் விழிக்க ஆசை!
முடியுமா...?
எனக்குத்தெரியாமல்
என் சட்டைப்பைக்குள்
பணம் வைக்கும் தந்தை எங்கே..?
தனக்குப்
பசியெடுக்கும்பொழுதெல்லாம்
என்னை சாப்பிட வற்புறுத்தும்
தாய் எங்கே?
தோழிகள் வீட்டுக்கு
போன் செய்து கொடுக்கும்
தங்கை எங்கே?
என்னால்
திட்டப்படுவதற்காகவே இருக்கும்
தம்பி எங்கே?
வெட்டித்திண்ணையில் பேச,
கூட்டம் கூட்டமாய் சுற்ற,
கிண்டலடித்து மகிழ,
ஆறுதல்படுத்த,
கண்ணிர் துடைக்க,
நண்பர்கள் எங்கே...?
இப்படி
தனியாகப் புலம்பி புலம்பி
தண்ணீர் இல்லாத
பாலைவனத்திற்கு
கண்ணீரைக் கடன்கொடுத்தபடி...
கனவுகளுடனே
தூங்கப்போகிறேன்.
மறுநாள் காலைப்பொழுதில்,
நான் துபாய் வந்ததே - வெறும்
கனவுதான் என்று...
காலம் சாமாதானப்படுத்த,
என் தாய் வந்து
தேநீர் கோப்பையுடன்
எழுப்பிவிட மாட்டாளா...?
துபாயில் தூங்கி
இந்தியாவில் விழித்துவிட
மாட்டேனா...?
அரபிக்கடலின் அலைகள் - என்னை
கன்னியாகுமரியில்
கரைசேர்த்துவிடாதா...?
ஏக்கத்துடனே...
விழித்துப்பார்த்தால்...
மீண்டும் அதே
பாலைவனச்சூட்டிலே
பயணம் தொடர்கிறது...
FM கேட்டுக்கொண்டே
- ரசிகவ் ஞானியார் -
3 comments:
hi this is test comments
நன்றாக எழுதுகிறீர்கள்.
நானும் ஜேர்மனிக்கு வந்த ஆரம்ப வருடங்களில் எனது ஊர்த்தெருவில் நடப்பது போலவும், அம்மா என் அருகில் இருப்பது போலவும்... இன்னும் பலவுமாய் கனவுகள் கண்டு விழித்து... ஜேர்மனியக் கட்டிலில் ஏமாந்து சுருண்டதுண்டு. இப்போ அம்மாவும் ஜேர்மனியில் என்பதால் ஓரளவு ஆறுதல்.
beautiful
Post a Comment