Wednesday, July 06, 2005

தொலைத்தல்

உன்னை
சந்திக்க வரும்பொழுதெல்லாம்
எதையாவது
தொலைத்துவிடுகிறேன்.

முதல்நாள்
உன் வீட்டிற்கு வந்தபோது
செல்போன்

மறுநாள்
உன் அலுவலகம் வந்தபோது
கீ செயின்

இப்பொழுது
இதயம்

ரசிகவ் ஞானியார்

5 comments:

Maravandu - Ganesh said...

எப்படியோ நீங்களும் அப்படியே
தொலைஞ்சு போயிடுங்க

என்றும் அன்பகலா
மரவண்டு

ஏஜண்ட் NJ said...

எல்லாருமே இந்த கல்யாணத்துக்கு முந்தி
இப்டிதாங்க, அத தொலக்கிறது, இத தொலக்கிறது எல்லாம்;
கல்யாணம் மட்டும் முடிஞ்சி,
ரெண்டு வருஷம் ஆச்சுன்னாப் போதும்ங்க,
எங்கயாது திருவிழாவுக்கு கூட்டிப்போயி,
பொண்டாட்டிய தொலச்சுரலாமான்னு தோணும்!

- ஞானபீடம். <<==இங்க வரலேன்னாக்க, தொலச்சுடுவேனாக்கும்!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

ஹா ஹா ஹா

ஏனுங்க அனுபவம் பேசுதோ..? இருந்தாலும் இது நல்ல ஐடியாவா இருக்கு முஙள்சி பண்றேன்

Anonymous said...

ஞானபீடம் லொல்லு., எங்களுக்கு கூடத்தான் உங்கள(ஆண்களை)ப் பொருட்காட்சிக்கு கூட்டிட்டுப் போய் 'தொலைக்கணும்னு' ஆசை. ஆனா கரெக்டா வந்து சேந்திர்ங்களே?. நிலவு நண்பா என்னாச்சு கொஞச நாளா ஆளக்காணோம்?

Anonymous said...

Oh!Ho!Tholaiyumo appadi?Veetukku poi paru.Onga ayya unna tholaichiduvaru.

தேன் கூடு