
"அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
இலையில் என்னைப் போட்டு
தீயின் சூட்டைப் போக்கு ! "
இது
மழலைப் பாட்டல்ல...
எரியும்பொழுது கதறிய
மழலைகளின் மரணப்பாட்டு!
தாயின் தழுவல் போதாதென்றா - இந்தத்
தீயின் தழுவல் ...?
நெருப்போடு நீ வெந்த...
நிஜத்தை கேட்டு
பொறுப்போடு ஓடி வந்தேன்
பெத்த மகனே!
உன்னை
கறுப்போடும் கரியோடும்...
கண்ட காட்சி!
என்
கருப்பையின் துடிப்பெல்லாம்...
நின்றே போச்சு!
தீபாவளிக்குத்தானே...
பட்டாசு கேட்டாய்!
ஏன் நீ
தீபாவளிக்கு முன்னே...
பட்டாசு ஆனாய் ?
உன்னை
மதிப்பெண் பட்டியலில்தான்...
தேட நினைத்தேன் - ஆனால்
மார்ச்சுவரி பட்டியலில்...
தேட வைத்துவிட்டாயே ?
மகனே!
பள்ளிமுடிந்ததும்...
பொருட்காட்சிக்குப் போகலாமென்றாய்?
ஆனால் இங்கே
உடல் காட்சியாக நீயே...
வாழை இலைகளில்...
உணவா ? உயிரா?
அக்கினிக்குஞ்சுகள் எல்லாம்...
அக்கினியிலேயே அழிந்துவிட்டார்களே ?
புரியும்படி பாடம் நடத்த சொன்னால் ...
எரியும்படி நடத்திவிட்டார்கள் !
என்னை
வீட்டுப்பாடம் செய்யச் சொல்லி...
அடம்பிடித்தவன்- இன்று
வீட்டில் படமாக...
பத்திரிக்கையில்
உன் புகைப்படம் வர...
ஆசைப்பட்டது உண்மைதான் !
இப்படியா
"புகையோடு" வருவது ?
விறகுக்குப் பஞ்சமென்று என்
சிறகை சிதைத்த நெருப்பே!
முட்களை விட்டுவிட்டு - ஏன்
ரோஜாப்பூக்களை கருக்கினாயோ?
இனி நீ
தீக்குச்சியைக்கூட தீண்டக்கூடாது!
தீயே
சமையல் கட்டிற்குள்ளே உன்
சாமராஜ்யம் முடிந்துவிடக்கூடாதென்றா...
உலகப் பத்திரிக்கையில்
இடம்பிடித்தாய்?
புகழுக்காக...
புழுக்களை எரி! - ஆனால்
பூக்களை விட்டுவிடு!
சமையல் நெருப்பு கூட - மகனின்
சாவையை ஞாபகப்படுத்துவதால்
நான் இனிமேல்
சமைக்கப்போவதில்லை!
தீக்குள் விரல்விட்டேன் நந்தலாலா - எனைத்
தாக்கும் சூடுதனைத் தாங்குவேனோ? -இங்கே
பூக்கள் கரிந்தனவே என்செய்வேன்? -அந்தச்
சூட்டின் வலிதனை எனக்கும் தாராய்!
மடியில் விளையாடிய பிள்ளைதனை...
மாடியில் வைத்து எரித்தாய் - ஒரு
பிடியு மில்லாத வாழ்க்கை இனி
நொடிகள் நகர்வது எங்கே?
மகனே!
நிச்சயமாய் ...
இன்றுதானப்பா உணர்கிறேன் - உன்
பிரசவ வேதனையை...
" அம்மா இங்கே வா! வா!
ஆசை முத்தம் தா! தா!
இலையில் என்னை போட்டு...
தீயின் சூட்டைப் போக்கு ! "
அந்த
ஒன்றாம் வகுப்பு அறையிலிருந்து...
இன்னமும்
கேட்டுக்கொண்டேயிருக்கிறதாம்...
ஓரு சோக ஒலி!
ரசிகவ் ஞானியார்
12 comments:
அருமையான கவிதை.
உணர்வுகள் தூண்டும் கவிதை
அன்பின் ஞானி என் கண்கள் குளமாகிவிட்டது..உம் கவிதையில் உணர்வு கொட்டி கிடக்கிறது. அந்த பிஞ்சு குழந்தைகளின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுவோம்.
ரசிகவ் ஞானியார்,
Really excellent and touches the heart !!!
Pl. forgive me for writing in English, here !
பல நாட்கள் தலையணையை ஈரமாக்கிய சம்பவம். இன்று மீண்டும் கண்ணீர் பெருக்கெடுக்கிறது உங்கள் நெஞ்சைப் பிழியும் கவிதையால்.
கவிதை அஞ்சலிக்கு நன்றி
Pls..forgive me for writting in english here..
and your poem makes me to cry..
கருப்பொருள் மனதைக் கசக்குகிறது.
கவிதைநயம் அருமையாக இருக்கிறது.
ரசிகவ்,
பிரச்சினையின் தீவிரத்தை அப்பட்டமாய் உணர்த்தும் வரிகள்.
கவிதை அற்புதமய்யா...
தொடரட்டும்...
தீயில் கருகிய பூக்கள் கண்களை பனிக்க வைக்கிறது.
// ஜெஸிலா said...
தீயில் கருகிய பூக்கள் கண்களை பனிக்க வைக்கிறது//
விமர்சனத்திற்கு நன்றி ஜெஸிலா....
மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்சலி சமயத்தில் மறுபடியும் அந்த சம்பவங்களை ஞாபகப்படுத்தியுள்ளீர்கள்.. இன்னமும் எரிகின்றது மனது...
//sethu said...
நண்பா
கவிதை வரிகள் ஒவ்வொன்றும் கண்ணீர் துளிகளை வரவழைக்கிறது //
என் கண்ணீர் நன்றிகள் தோழா
//enRenRum-anbudan.BALA said...
ரசிகவ் ஞானியார்,
Really excellent and touches the heart !!!
Pl. forgive me for writing in English, here ! //
//PositiveRAMA said...
அன்பின் ஞானி என் கண்கள் குளமாகிவிட்டது..உம் கவிதையில் உணர்வு கொட்டி கிடக்கிறது. அந்த பிஞ்சு குழந்தைகளின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுவோம். //
//Moorthi said...
கண்ணோரம் நீரய்யா! //
//siragugal said...
Pls..forgive me for writting in english here..
and your poem makes me to cry.. //
//பத்மா அர்விந்த் said...
கவிதை அஞ்சலிக்கு நன்றி //
//Ramya Nageswaran said...
பல நாட்கள் தலையணையை ஈரமாக்கிய சம்பவம். இன்று மீண்டும் கண்ணீர் பெருக்கெடுக்கிறது உங்கள் நெஞ்சைப் பிழியும் கவிதையால். //
//Raja Ramadass said...
அருமையான கவிதை.
உணர்வுகள் தூண்டும் கவிதை //
// சுதர்சன்.கோபால் said...
ரசிகவ்,
பிரச்சினையின் தீவிரத்தை அப்பட்டமாய் உணர்த்தும் வரிகள்.
கவிதை அற்புதமய்யா...
தொடரட்டும்... //
//Chandravathanaa said...
கருப்பொருள் மனதைக் கசக்குகிறது.
கவிதைநயம் அருமையாக இருக்கிறது. //
நன்றி ...
அந்த வேதனை இன்னமும் நெஞ்சம் விட்டகலவில்லை..
Post a Comment