
அப்பா சொல்லு
அப்பா சொல்லு
அ..ப்..பா
டுர்ர்ர்ர்ர்ர்…
இங்க பாரு காரு
டிக்..டிக்..டிக்
இங்க பாரு பொம்மை
ஸ்..ஸ்..
இங்க பாரு சென்ட்
அப்பா சொல்லு
அப்பா சொல்லு
மூன்று வயசு குழந்தை...
மூச்சு திணறி சொல்லிற்று!
மா..மா.
- அட போங்கடா
நீங்களும் உங்க துபாயும்
- ரசிகவ் ஞானியார்
1 comment:
நல்ல மருந்து தந்துள்ளீர்கள் ரசிகவ்
Post a Comment