
ஓட்டை வீடான..
ஓட்டு வீடு,
மாடி வீடாக..
மாறிப்போனது!
நகைக்கடை விளம்பர
நகைகள்..
வீட்டுப்பெண்களின்
கைகளிலும், கழுத்திலும்..
ஏறத்துவங்கின!
கடன்காரர்களின் வருகை..
குறைய ஆரம்பித்தது!
கனவாகப்போய்விடுமோ? என்ற
தங்கையின் திருமணம்
நான் இல்லாவிடினும்
லட்சம் இருந்ததால்..
லட்சணமாய் முடிந்தது!
அயல்நாட்டிலிருந்து
காசோலை மூலமாய்
வாழ்க்கை நடத்தியவன்..
இப்பொழுது
காசோடு வந்திருக்கின்றேன்!
இழந்துபோன காலத்திற்கும்
சேர்த்து வாழ..
தந்தையின் நினைவைச்சுமந்து
தனியாய் ஆடிக்கொண்டிருந்த..
சாய்வு நாற்காலிச்சப்தம் வந்து
காதுகளில் ..
கிறீச்சிடுகிறது!
தந்தையின் இறுதிநாட்களுக்கு கூட
வரமுடியாமல்..
விசாவினால் விலங்கிடப்பட்ட
எனக்கு,
யாரேனும் திருப்பித்தரக்கூடுமா?
தந்தையின் இறுதிச்சடங்குக்கு
முந்தைய நாளை?
நிம்மதி இல்லாமல் போகின்ற
இந்த பகலின்..
முந்தைய இரவுக்காக
காத்திருக்கின்றேன்!
யாரேனும் திருப்பித்தாங்களேன்?
- ரசிகவ் ஞானியார்
7 comments:
மனசு வலிக்குதுங்க. கவிதைய படிச்சு.
சில உண்மைய மட்டும்தான் நாம பொய்யாக்க விரும்பறோம், அதுல இதுவும் ஒண்ணு,
சென்ஷி
//மனசு வலிக்குதுங்க. கவிதைய படிச்சு.//
ஆமாங்க...:((
//சென்ஷி said...
மனசு வலிக்குதுங்க. கவிதைய படிச்சு.
//
//சீனு said...
ஆமாங்க...:(( //
தண்ணீருக்குள் மீன் அழுதால்
கண்ணீரை யார் அறிவார்?
வலிக்கத்தான் செய்கிறது அனால் மீள முடியவில்லை
வருத்தமளிக்கும் கவிதை....
வெளிநாட்டில் உல்லாசமாக இருக்கிறான் என்று மத்தவங்க ஏளனம் செய்வார்கள்... ஆனால் பிரிந்து வாழும் நமக்கல்லவா தெரியும் அதன் வலி... :((((
//ஜி said...
வெளிநாட்டில் உல்லாசமாக இருக்கிறான் என்று மத்தவங்க ஏளனம் செய்வார்கள்... ஆனால் பிரிந்து வாழும் நமக்கல்லவா தெரியும் அதன் வலி... :(((( //
உண்மைதான் ஜி..
சரியாகச் சொன்னீர்கள் ;;;
இவ்வளவு இன்னல்களும் பணத்துக்காக மட்டுமே .....
Post a Comment