Monday, January 23, 2006
ரவுடிகள் ஜாக்கிரதை
சண்டைக்கோழி
கல்லூரி வாழ்க்கை முடிந்து எல்லோரும் விடைபெற்றுச்செல்ல கதாநாயகன் தன் கல்லூரி நண்பனுடன் அவனது ஊருக்கு சென்று சில நாட்கள் தங்க நேரிடும்போது சந்தர்ப்ப வசத்தால் ஊரில் உள்ள ஒரு ரவுடியின் பகைமைக்கு உள்ளாகின்றான். அந்த ரவுடியால் அந்த நண்பனின் குடும்பத்தில் உள்ள அனைவரும் பாதிக்கப்பட நண்பனின் குடும்பத்தையும் தனது உயிரையும் எப்படி காப்பாற்றிக்கொள்கிறான் என்பதுதான் கதை
கதாநாயகன் : விஷால்
கதாநாயகி : மீரா ஜாஸ்மின்
சண்டைக்கோழி - ரவுடிகள் காலி
சரவணா
கல்லூரி வாழ்க்கை முடிந்து எல்லோரும் விடைபெற்றுச்செல்ல கதாநாயகன் முடிந்து தன் கல்லூரி நண்பனுடன் அவனது ஊருக்கு சென்று சில நாட்கள் தங்க நேரிடும்போது ஊரில் உள்ள ஒரு ரவுடியை பகைக்க நேரிடுகிறது. அந்த ரவுடி நண்பனின் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொன்றுவிட அந்த ரவுடிகளிடமிருந்து கதாநாயகியை அதாவது நண்பனின் தங்கையை எப்படி காப்பாற்றுகிறான் என்பதுதான் கதை
பிரகாஷ்ராஜ் போலிஸாராக வந்து கலக்குகிறார்
கதாநாயகன் : சிம்பு
கதாநாயகி : ஜோதிகா
சரவணா - இனி பார்ப்பேனா?
ஆதி
தனது குடும்பத்தில் உள்ள அனைவரையும் ரவுடிகள் கொன்றுவிட ரவுடியை பழிவாங்கக் கிளம்புகிறார் கதாநாயகன். அதேபோல பழிவாங்க கிளம்பும் கதாநாயகியோடு பழகி காதல்கொள்ளுகிறார். கடைசியில்தான் தெரிகிறது இருவரும் ஒரே குடும்பம் என்று
பிரகாஷ்ராஜ் போலிஸாராக வந்து கலக்குகிறார்
கதாநாயகன் : விஜய்
கதாநாயகி : த்ரிஷா
ஆதி - ரவுடிகளுக்கும் ரசிகர்களுக்கும் பீதி
பரமசிவன்
தனது குடும்பத்தில் உள்ள அனைவரையும் சட்டத்தைக்காக்கும் போலிஸார்களே கொன்றுவிட அவர்களை கொன்றுவிட்டு சிறைச்சாலையில் மரணதண்டனை அனுபவிக்கும் கதாநாயகனை தப்பிக்கவைத்து நாட்டை அழிக்க வந்துள்ள தீவிரவாதிகளை அழிக்கும் கதை.
பிரகாஷ்ராஜ் போலிஸாராக வந்து கலக்குகிறார்
பரமசிவன் - பார்ப்பவன் எவன்?
எல்லாவற்றிற்கும் ரவுடிகள் ஜாக்கிரதை என்று ஒரே பெயராக வைத்தால் நன்றாக இருக்கும்.
- ரசிகவ் ஞானியார்
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
Iniyaavathu thirunthuvaargalaa...Rasigargal
இதுல சண்டக்கோழி மட்டும் சுமார் ரகம். மத்ததெல்லாமே மட்டமாம். எந்தப் படத்தையுமே பாக்கப் பிடிக்கலை. அதுனால பொங்கல் ரிலீசுல எந்தப் படமும் பாக்கலை.
ரசிகவ்,
சண்டைக்கோழிக்கும் சரவணாக்கும் ஒரே விமர்சனத்தை எழுதியிருக்கீங்கனு நினைக்கிறேன்.
சாரி...சாரி
//ரசிகவ்,
சண்டைக்கோழிக்கும் சரவணாக்கும் ஒரே விமர்சனத்தை எழுதியிருக்கீங்கனு நினைக்கிறேன். //
இரண்டுக்கும் ஒரே விமர்சனம்தான் கைப்புள்ள..ஆனால் கதாநாயகர்கள்தான் வேறு வேறு..
சாரியெல்லாம் வேணாம்பா..
//இதுல சண்டக்கோழி மட்டும் சுமார் ரகம். மத்ததெல்லாமே மட்டமாம். எந்தப் படத்தையுமே பாக்கப் பிடிக்கலை. அதுனால பொங்கல் ரிலீசுல எந்தப் படமும் பாக்கலை. //
ம் சரிதான் ராகவா..சண்டைக்கோழியை ரசித்தேன்..மற்றதெல்லாம் கறிக்கோழிதான்
//Iniyaavathu thirunthuvaargalaa...Rasigargal //
நடிகர்களுக்காக படம்பார்க்கும் ரசிகர்கள் இருக்கும்வரை தமிழுலகம் அரைத்த மசாலாக்களைத்தான் அரைத்துக்கொண்டிருக்கும்
//பிரகாஷ்ராஜ் போலிஸாராக வந்து கலக்குகிறார்//
எதுக்கும் "பிரகாஷ்ராஜ் ஜாக்கிரதை"ன்னு ஒரு போர்டை விஜயகாந்த் பாக்கிற மாதிரி வைங்க (பின்ன எப்பவும் அவர் தான தீவிரவாதிகளை அழித்து நாட்டை காக்கற போலீஸ்)
இப்படி ரவுடிஸம் பற்றி வாறதால.? நம்மவர்களிடையே ரவுடிஸம் அதிகரிச்சிடிச்சா இல்லை தயாரிப்பாளர்களுக்கு வேறை துறையில்லையா.??
ஒரே காதலையே பலவாறு சொல்லும் கவிதைகள்.
'காதலித்துப் பார்' - வைரமுத்துவைப் படித்துப் பார்.
'புத்தாண்டு புலம்பல்' -முகவரி மாறி வந்துவிட்டது.
இன்னும் பல சொல்லலாம்.
இவ்வாறு ஒரு கலை வடிவை, அக்கலை வடிவைப் பற்றி (உருப்படியாத்) தெரிந்த யாரும் விமர்சிக்க முடியும். ஆனால், எல்லோரும் சினிமாவில் மட்டும் கைவைப்பது ஏன் என்று தெரியவில்லை.
தங்களின் 'தவமாய் தவமிருந்து' விமர்சனம் பார்த்தேன். சேரன் படத்தை விமர்சிக்க, படம் ஒருமுறை பார்த்திருந்தாலே போதும். அதிலும் சேரன் சொல்லவந்த பல விஷயங்களில், கடைசிகாட்சியில் வரலாறு படிப்பதை மட்டுமே நீங்கள் குறிப்பிட்டு இருந்தீர்கள். அந்த விமர்சனத்தால் ஒரு உபயோகமும் இல்லை. விமர்சனம் என்பது மற்றவர்கள் கவனிக்காத ஒரு நல்ல விஷயத்தைக் கூறுவதாக இருந்தால் மட்டுமே பயன்படும். (நான் சில கூறுகிறேன், இப்போது அநேகமாக வழக்கிழந்து போன காட்சிகள்: 1) அண்ணன் வீட்டைவிட்டு வெளியேறும் போது, செம்பில் தண்ணீர் 2) டூர் போக சின்னவன் அழும்போது, பெரியவன் சிரிப்பான் - அப்பா தோள் மிதிப்பான் 3) மனைவி கர்ப்பமாய் இருக்கும்போது ஒற்றடம் 4) வேறு எந்தப் படத்திலும் நான் பார்க்காத ஒன்று - உறவுகள் பேசிக்கொள்ளூம்போது காட்டப்பட்டு இருக்கும் உண்மையான நேர இடைவெளி 5) இன்னும்பல)
ஒரு கலையை விமர்சிக்க, அக்கலையில் தேரியவன் மட்டுமே தகுதியானவன் என்பது எனது தனிப்பட்ட கருத்து. நீங்கள் சினிமாத் துறையைச் சேர்ந்தவர் என்றால், என்னை மன்னிக்கலாம்.
-ஞானசேகர்
சண்டைக்கோழியில் மீராவும் ராஜ்கிரணும் அசத்துகிறார்கள்.
//ஒரு கலையை விமர்சிக்க, அக்கலையில் தேரியவன் மட்டுமே தகுதியானவன் என்பது எனது தனிப்பட்ட கருத்து.//
இதில் என் தனிப்பட்ட கருத்து, ஜனரஞ்சக ஊடக படைப்புக்களை பொருத்தவரை அதனை பாவிப்பவர் தனக்கேற்பட்ட தாக்கத்தை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ள அக்கலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியதில்லை. அதுவே அத்துறை சார்ந்த மதிப்புரை குழு என்றால் ( இங்கு திரைப்பட விழா ஜூரிகள்) ஞானசேகர் சொல்வது சரி.
வணக்கம்.. ஒர் வித்தியாசமான் வலைப்பதிவு... வாழ்த்துக்கள்!
// கோபி:
(பின்ன எப்பவும் அவர் தான தீவிரவாதிகளை அழித்து நாட்டை காக்கற போலீஸ்) //
ஆமா கோபி ..பேசாம விஜயகாந்தை பார்டர்ல கொண்டு போய் விடலாம். சண்டையிட்டு ஜெயித்துவிடுவார்
// கயல்விழி :
இப்படி ரவுடிஸம் பற்றி வாறதால.? நம்மவர்களிடையே ரவுடிஸம் அதிகரிச்சிடிச்சா இல்லை தயாரிப்பாளர்களுக்கு வேறை துறையில்லையா.?? //
நம்மிடமும் ரவுடியிசமும் இருக்கின்றது. தயாரிப்பாளர்களிடமும் வேற கதை இல்லை.
//இவ்வாறு ஒரு கலை வடிவை, அக்கலை வடிவைப் பற்றி (உருப்படியாத்) தெரிந்த யாரும் விமர்சிக்க முடியும். ஆனால், எல்லோரும் சினிமாவில் மட்டும் கைவைப்பது ஏன் என்று தெரியவில்லை.//
இந்த இரண்டில் காதலித்துப்பார் மட்டும்தான் காதல்கவிதை புத்தாண்டுப் புலம்பல் காதல் கவிதை இல்லை ஞானசேகர்
//இவ்வாறு ஒரு கலை வடிவை, அக்கலை வடிவைப் பற்றி (உருப்படியாத்) தெரிந்த யாரும் விமர்சிக்க முடியும். ஆனால், எல்லோரும் சினிமாவில் மட்டும் கைவைப்பது ஏன் என்று தெரியவில்லை.//
மணியன் பதில்களோடு ஒத்துப்போகிறேன்
//விமர்சனம் என்பது மற்றவர்கள் கவனிக்காத ஒரு நல்ல விஷயத்தைக் கூறுவதாக இருந்தால் மட்டுமே பயன்படும். //
கவனிக்காத நல்ல விசயம் என்பதை திருத்திக்கொள்ளவும். நான் கவனித்த மற்றவர்கள் அந்த காட்சியினை அலட்சியம் செய்தவைகளைத்தான் குறிப்பிட்டிருக்கின்றேன்.
//ஒரு கலையை விமர்சிக்க, அக்கலையில் தேரியவன் மட்டுமே தகுதியானவன் என்பது எனது தனிப்பட்ட கருத்து. நீங்கள் சினிமாத் துறையைச் சேர்ந்தவர் என்றால், என்னை மன்னிக்கலாம்.//
நல்லது நான் சினிமாத்துறையைச் சார்ந்தவன் அல்ல நண்பரே
//இதில் என் தனிப்பட்ட கருத்து, ஜனரஞ்சக ஊடக படைப்புக்களை பொருத்தவரை அதனை பாவிப்பவர் தனக்கேற்பட்ட தாக்கத்தை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ள அக்கலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியதில்லை//
நன்றி மணியன்.
// revatechnic said...
வணக்கம்.. ஒர் வித்தியாசமான் வலைப்பதிவு... வாழ்த்துக்கள்! //
நன்றி சகோதரி
Hello Rasikow Sandaikkoaliyyil Kathanayahanin Nanbanin Kudmbam Athuvvum Paathikkapadaathu, Nandraha Kavaniyynghal, Kathanayahan voorukku Killambum neram " bus " la villan voruvvanai vetta varumpoathu athai thadukum kathanayahanukkum villanukkum arppadum pahai , anal saravana vil appadiyyalla villanal kathanayahanin nanbanin kudumbam (Prakash Raj & Co ) Paathikkappaduhhirathu anavvey sandaikkoliyum saravanaavum voandralla kavanikkavum
விஜயகாந்தும் அர்ஜுனும்தான் நாட்டைக் காக்கும் ஹீரோக்கள். இவங்க படத்துல வில்லன் பேரு "கண்டிப்பாக" முஸ்லிம் பெயரா இருக்கனும். உ.ம். வாசிம்கான், கரீம்பாய்.....
முன்னாடியெல்லாம் தேங்காய் சீனிவாசன் குஞ்சு தாடி வச்ச முஸ்லிமா பச்சை ஜிப்பாவுல வருவார். பெரும்பாலும் குதிரை வண்டி ஒட்டிக்கொண்டிருபார்! சலாமலேக்கும் சொல்வார். ஆனால் அர்ஜூன்+ விஜயகாந்து புண்ணியத்துல இப்பல்லாம் நாட்டையே அழிக்க திட்டம் போடும் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுறாங்க.
கற்பழிக்கிற சீன் இப்பல்லாம் இருப்பதில்லை. மலிவான கவர்ச்சிக்காக அந்த சீன்கள் சேர்க்கப்பட்டன. ஆனா இப்பதான் கதாநாயகிகள், கற்பழிப்பு சீன்ல தெரியறத விட அதிகமாக காட்டுறாங்களே. ஹி..ஹி,,
Post a Comment