Sunday, January 22, 2006
மாமாப்பயலுவ
நேற்று துபாய் - டெய்ரா என்னும் பகுதியில் உள்ள சப்கா பேருந்து நிலையம் அருகே உள்ள படகுத்துறைப் பகுதியிலிருந்து அறை நோக்கி வந்து கொண்டிருந்தேன்.
எதிரே பங்காளி நாட்டைச் சேர்ந்த ஒருவன் என்னை நோக்கி கண்களை மேலும் கீழும் அசைத்தான் அந்த சைத்தான். எனக்கு புரிந்துவிட்டது அவன் மாமாப்பய என்று.
அவனுடைய அந்த கண்ணசைப்புக்கு என்ன அர்த்தம் என்றால் என்னிடம் எல்லா நாட்டு பெண்களும் இருக்கின்றது நீ வர்றியா என்று பொருள். தொலைக்காட்சியில் ஊமைச் செய்திப் பார்த்திருப்பீர்களே அதுபோல இமைகளை மேலும் கீழும் சுருக்கி மெதுவாக பக்கம் வந்து காதில் ஓதுவான் மன்ந்த என்று.
( இந்தியில் மன்ந்த என்றால் வேணுமா என்று பொருள்)
ஒருமுறை என்னிடம் அவன் அப்படி கேட்டபொழுது எனக்கு என்னையே எரித்துக்கொள்வது போன்று எனக்கு அவமானமாய் தோன்றும்.ச்சே நம்மகிட்ட வந்து கேட்டுட்டானே என்று
இது ஒன்றும் புதிதல்ல. எனக்கு மட்டும் கிடைக்கின்ற அனுபவம் இல்லை. அந்தப்பகுதியை கடப்பவர்கள் வழக்கமாக பார்த்து புளித்துப் போன விசயம். அந்தப்பகுதியை யார் கடந்து சென்றாலும் அவன் கண்களிடம் இருந்து தப்பிக்க முடியாது.
நாம் அவனுடைய கண்களிலிருந்து தப்பிக்க ஒரே வழி என்ன வென்றால் அவன் நம்மை பார்க்குமுன் நாம் தலைகுனிந்து கொள்ளுவதுதான். அப்படியே அவன் பார்த்தாலும் அவனுடைய பார்வையை அலட்சியப்படுத்தி சென்று விடவேண்டும்.
என்னை அவன் பார்க்கும்பொழுதெல்லாம் அப்படித்தான் தலைகுனிந்துகொண்டோ அல்லது அலட்சியப்படுத்தியோ சென்றுவிடுவேன். எனக்கு அவன் அப்படி சைகை காட்டும்பொழுதெல்லாம் அப்படியே அவனைப் பிடித்து
மாமாப்பயல உனக்கு அறிவில்லையாடா.. பொம்பளய கூட்டிக்கொடுக்கிறாயே இப்படி ஒரு கேவலமான தொழிலைச் செய்கிறாயே..வெட்கமா இல்ல உனக்கு என்று கேட்கவேண்டும்போல இருக்கும்
ஆனா கேட்டால் அவ்வளவுதான் அவனுடைய சாதியைச் சார்ந்த பலர் சுற்றிக்கொண்டு இருப்பார்கள். பாய்ந்து வந்து தாக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஆகவே கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்க வேண்டும்.
டேய் அவங்களுக்கெல்லாம் வேறு வழியில்லைடா பாவம்டா..
என்று என்னுடைய நண்பர் அவர்கள் மீது பரிதாபப்பட்டிருக்கிறார்.
அவங்களெல்லாம் என்ன சுதந்திர போராட்ட தியாகிகளா..? அவர்கள் என்ன வலுக்கட்டாயமாகவா இந்த தொழிலுக்கு வந்திருக்கிறார்கள்.. என்று நான் பலமுறை அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றேன்.
மாமாப்பயலுகள் பெரும்பாலும் பங்காளிகள்தான். பெரும்பாலும் பங்காளிகள் லாண்டரிக்கடைகள் தான் வைத்திருப்பார்கள். இங்கே குறைந்த சம்பளத்தில் வேலை பார்ப்பதால் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணி இதுபோன்ற முதலீடில்லாத பார்ட் டைம் பார்க்கிறார்கள். சிலர் கல்லிவல்லி விசாவில் ( முறையற்ற விசா) இருந்து கூட இந்த தொழிலில் ஈடுபடுவார்கள்.
அவர்கள் இந்தத் தொழிலில் காட்டும் அக்கறையையும் தொழில் நுணுக்கத்தையும் ஏதாவது ஒரு நிறுவனத்தில் எக்ஸிகியுட்டியாக வேலைபார்த்தால் அந்த நிறுவனத்தை எங்கேயோ கொண்டு சென்று விடுவார்கள். அந்த அளவிற்கு திறமையாக வாடிக்கையாளர்களை கவருவார்கள்.
இந்த மாமாக்களின் புகைப்படத்தை எடுப்பதற்குள் மூச்சே போய்விட்டது. நான் எடுப்பதை அறிந்து அவன் தனது முகத்தை திருப்பிக்கொண்டான்
பெரும்பாலும் ஏதாவது சந்தின் முனையில் - அவர்களது வாழ்க்கையைப்போலவே பாதி இருட்டு, பாதி வெளிச்சம் உள்ள பகுதிகளில் - போலிஸார் வந்தாலும் தப்பித்து செல்லக்கூடிய வசதியோடுதான் நிற்பார்கள்.
ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாதிப்பார்கள் என்று தெரியாது. பத்திரிக்கையாளன் போல யாரையாவது அழைத்து பேட்டி எடுக்கலாம் என்று கூட நினைத்தேன் . அப்புறம் நான் பேட்டி எடுப்பதைப்பார்த்துவிட்டு ஊர்க்காரர்கள் எவராவது ரேட் பேசுவதாக தவறாக நினைத்துகொள்வார்களோ எனப் பயந்து சூழ்நிலைகளின் இறுக்கம் கருதி அந்த முயற்சியை விட்டுவிட்டேன் .
எப்படியும் ஒரு நாளைக்கு குறைந்து இந்திய மதிப்புக்கு 1000 ரூ வரை சம்பாதிக்க கூடும். வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால் வியாழக்கிழமை இரவுகளிலும், குளிர் காலங்களிலும் அதிகமாக பொருள் ஈட்டுவார்கள்.
இருட்டுக்குள் அந்த மாமாப்பசங்களுடன் பேரம் பேசுகின்ற நிறைய பாகிஸ்தானியர்களைப் பார்த்திருக்கின்றேன். கொஞ்சமாய் அதிகமாய் அதிகமாய் கொஞ்சமாய் என்று தமிழ் முகங்களையும் கண்டிருக்கின்றேன்.
அப்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன். அவர்களின் பெற்றோர்களோ அல்லது மனைவியோ அவர்கள் மீது எத்தனை நம்பிக்கை வைத்திருப்பார்கள். அவர்களின் நம்பிக்கையை திர்ஹத்தால் முலாம் பூசுகிறார்கள் இந்தத் தமிழர்கள்.
"கற்பு நிலையென்று சொல்ல வந்தார் இரு
கட்சிக்கும் அது பொதுவில் வைப்போம்"
ஒரு ஊரில் ஒரு பெண் கற்பிழந்து விட்டால் என்றால் எங்கேயோ ஒரு ஆணும் கற்பிழந்து விட்டான் என்றுதானே அர்த்தம் என்று அன்றே சொன்ன பாரதியின் புரட்சிதான் ஞாபகம் வருகிறது.
மனைவியை அங்கே தவிக்க விட்டுவிட்டு இங்கே கண்டவளுடன் உறவு கொள்ளுவது எவ்வளவு பெரிய நம்பிக்கைத் துரோகம்..? அடப்பாவி உனக்குள்ள உணர்ச்சிதானடா அவளுக்கும் இருக்கிறது. உன் கற்பைமட்டும் ஏன் நீ கடலில் கரைத்துவிட்டாய்..?
எப்படி வரப்போகிற பொண்டாட்டி பத்தினியா இருக்கணும்னு நீ விரும்புறியோ அதுபோல நீயும் பத்தனனா இருக்க வேண்டாமாடா..?
ஆசைப்பட்ட பொருளை வாங்க முடியாமல் விலை மட்டும் பார்த்து ஏங்குபவர்களைப்போல ஒரு சிலர் சாலையோரம் நிற்கின்ற மாமாப்பயலுகளிடம் விலைப்பட்டியலை மட்டும் கேட்டு அதில் குளிர் காய்கின்றனர்.
என்னுடைய நண்பர் ஒருவர் மிகவும் பக்தியாளர். அவர் ஒரு முறை கடைவீதியில் வந்துகொண்டிருக்கும்பொழுது ஒரு மாமாப்பய கையைப்பிடித்து அழைத்திருக்கின்றான். அவர் மிகவும் அமைதியானவர். நண்பர் அவனிடம் கோபப்படாமல் கேட்டிருக்கிறார்
"உன்னுடைய மதம் உனக்கு இந்த வேலை செய்யத்தான் கத்துக்கொடுத்திருக்கிறதா..? இது பாவமில்லையா.? "
அவனோ அலட்சியமாக "வர்றதா இருந்தா வா..இல்லைனா -------------- போயா "என்று திட்டி அனுப்பியிருக்கிறான்
எங்களிடம் வந்து அவர் வருத்தப்பட்டு சொல்ல எங்களுக்கோ சிரிப்புதான் வந்தது. "அவன்கிட்ட போய் ஏன் நீங்க அட்வைஸ் பண்ணிணீங்க.."என்று அவரைக் கடிந்து கொண்டோம்..
மாமாக்கள் தொல்லை ஒருபுறமிருக்க முதலாளிகளே சிலநேரம் களத்தில் இறங்கி விடுவார்கள். அதான்பா அந்த விலை மாதுக்களைச் சொல்றேன்.
பெரும்பாலும் கறுப்பின மற்றும் ரஷ்யா மற்றும் சைனாவைச்சார்ந்த அழகிகள்தான் இந்தத்தொழிலில் ஈடுபடுகிறார்கள். ச்சே அவர்களைப் போய் ஏன் அழகிகள் என்று சொன்னேன். ?
விபச்சாரம் செய்த அழகிகள் கைது.
குற்றாலத்தில் பிடிபட்ட விபச்சார அழகிகள்
செல்போன் மூலம் விபச்சாரத்திற்கு அழைத்த அழகிகள் 3 கைது
என்று பத்திரிக்கைகளில் இதுபோன்ற செய்திகளைப் படித்த பழக்கத்தினால் அப்படிச் சொல்லி விட்டேன். அவர்களை ஏன் அழகிகள் என்று எழுத வேண்டும். அழகிகள் அல்ல அழுக்கிகள்.
அந்த அழுக்கிகள் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பாதையின் ஓரமுள்ள இருட்டுச் சந்துக்குள் அரைகுறை ஆடையில் நின்றுகொண்டு சிரிப்பது - கண்ணடிப்பது , அத்து மீறிய செயலாக கையைப்பிடித்து இழுப்பது என்று தொழில் நுணுக்கத்தை காட்டிக்கொண்டிருப்பார்கள்.
கொஞ்சம் மனம் தளர்ந்தவனாக இருந்தால் அவ்வளவுதான் பணம் இழந்துவிடுவான். பணம் மட்டுமல்ல அடிக்கடி கற்பையும் , ஊரில் உள்ளவர்கள் அவர்கள் மீது வைத்த நம்பிக்கையையும்.
எப்போவாவது வருகின்ற பாலை மழையைப்போல போலிஸார்களின் உஷார் நடவடிக்கைகளை கண்டிருக்கின்றேன். திடீரென்று அவர்கள் நிற்கின்ற அல்லது பகுதியைச் சூழ்ந்து கொண்டு ஒவ்வொருவராய் கைது செய்து வேனில் ஏற்றிக்கொண்டிருப்பார்கள். ஆனால் மாமாப்பயலுக மட்டும் எப்பவுமே மாட்டுவதில்லை.
மாட்டிக்கொண்ட அழுக்கிகளும் அந்த மாமாப்பயலுகளை காட்டிக்கொடுக்காமல் தொழில் தர்மத்தை காப்பார்கள். செய்யும் தொழிலே தெய்வமல்லவா..?
தமிழ்நாட்டில் தூத்துக்குடியைச் சார்ந்த ஒரு இளைஞன் இங்கே உள்ள அரசாங்கப் பணியில் இருக்கின்றான். தனது சக நண்பர்கள் இரவு நேர நடன விடுதிக்கு வற்புறுத்தி அழைத்ததால் அங்கே செல்ல ஆரம்பிக்க இறுதியில் அங்குள்ள நடனப்பெண்களில் ஒருத்தியின் மீது ஆர்வம் கொண்டு அவள் மீது பைத்தியமாகி தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் லோன் எடுத்து அந்தப்பெண்ணோடு சுற்றி செலவழித்துவிட்டான். இப்போது எடுத்த லோனை அடைபப்பதற்காக ஊருக்கும் பணம் அனுப்ப முடியாமல் கடனில் தவித்து சீரழிந்து கொண்டிருக்கிறான்.
எனது பகுதியைச் சார்ந்த ஒருவர் இந்த நபருடன் கூட்டுசேர்ந்து நடன விடுதிக்குச் சென்று தகாத பழக்கம் ஏற்பட்டு சம்பாதித்த காசுக்களை எல்லாம் இங்கேயே இழந்து
கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்
இதுபோன்ற எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள் மாமாக்களின் இலக்கு. நடனவிடுதியின் வாசலில் உள்ளே இருந்து வருபவர்களையும் துரத்திச் சென்று பேரம் பேசிக்கொண்டிருப்பார்கள்.
ஒருமுறை நான் நண்பர்களோடு பக்கத்தில் உள்ள கோல்ட்சூக் என்னும் பேருந்து நிலையத்திற்கு கிரிக்கெட் விளையாட சென்றபொழுது வழியில் விலைமாதுக்கள் கற்பை சிதைத்த துண்டை எடுத்து பல்லில் ஒட்ட வைத்த தங்கத்துண்டைக் காட்டி சிரித்துக்கொண்டே பக்கத்தில் வந்த எனது நண்பனை அந்த கறுப்பின அழுக்கி ( அழுக்கி என்று அவர்கள் செய்யும் காரியத்தைதான் குறிப்பிட்டேன் தவிர அவர்களின் நிறத்தை வைத்து அல்ல ) வந்து இடித்து சைகை காட்டியிருக்கிறாள்.
அவன் பயந்து போய் கையில் கொண்டு வந்த கிரிக்கெட் மட்டையை அப்படியே போட்டுவிட்டான். அந்த பெண்ணின் தொடுதலில் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவன் மிகவும் நடுக்கத்துடனே இருந்தான். ச்சே இப்படி பண்ணிட்டாளே என்று புலம்பல் வேறு. அவனைப்பார்க்க பாவமாய் இருந்தது.
கிரிக்கெட் விளையாடிவிட்டு திரும்பி வரும்பொழுது அந்த விலைமாதுக்களை பயமுறுத்துவதற்காக அவர்களை நோக்கி நாங்கள் வேகமாய் ஓடிச்செல்ல அவர்களோ நாங்கள் கையில் கிரிக்கெட் மட்டை ஸ்டெம்ப் வைத்துக்கொண்டு ஓடிவருவதைக்கண்டு அடிக்க வருகிறார்களோ எனப்பயந்து தலைதெறிக்க ஓடி தூரத்தில் சென்று திரும்பி பார்த்தார்கள். எங்களுக்கோ சிரிப்பாக இருந்தது அவர்கள் தலைதெறிக்க ஓடியதைப்பார்க்க.
பின்னே என்னங்க..? கையைப்பிடித்து இழுத்து விபச்சாரத்திற்கு அழைப்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்தானே..? அது எவ்வளவு பெரிய அவமானச்செயல். அவர்களுக்கு எங்கே அவமானம் இருக்கப்போகிறது. ஆனால் இழுக்கப்பட்டவனுக்கு இருக்குமல்லவா?
----------------------------------------
நான் இருக்கின்ற பில்டிங் அருகேயே ஒரு ஹோட்டலில் விபச்சார வியாபாரம் அமோகமாய் நடக்கின்றது. இரவும் பகலும் காற்றை விடவும் அதிகமான மாமாக்கள் சுற்றிக்கொண்டிருப்பார்கள்.அப்பொழுதெல்லாம் நான் பக்கத்தில் உள்ள பூத்திலிருந்து போலிஸார்க்கு போன் செய்து இங்கே விபச்சாரம் நடக்கிறது என்று தெரிவிக்க நினைப்பேன்.
போலிஸாரும் தகவல் கிடைத்தால் இங்கே வந்து சோதனையிட்டு அனைவரையும் கைது செய்து அழைத்துச்சென்று விடுவார்கள். பின்னர் ஒரு வார துக்க அனுஷ்டித்தப்பிறகு மீண்டும் ஆரம்பித்து விடுவார்கள். போன் செய்த விசயம் மட்டும் ஹோட்டல் நிர்வாகத்திற்கோ அல்லது மாமாப்பயலுக்கோ தெரிய வந்தால் அப்புறம் உயிருக்கே ஆபத்து என்பதால் அமைதியாய் போகவேண்டியதிருக்கிறது.
நேற்று இரவு அந்த ஹோட்டலின் புகைப்படப்படத்தைப் பிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. ஹோட்டல் நிர்வாகமோ அல்லது மாமாப்பயலுகள் யாரும் கவனிக்க கூடாதே என்ற பயத்தில் அந்த ஹோட்டலுக்கு அருகே நண்பனை நிற்க வைத்து அவனை புகைப்படம் எடுப்பது போல் எடுக்க நேர்ந்தது.
---------------------------------------------
ஒரு முறை எனது அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு மலையாளி மிகவும் குஷியோடு இன்னொரு மலையாளி நண்பனிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். என்னவென்று விசாரித்தால் நடிகை ஷகிலா விசிட் விசாவில் துபாய் வந்திருக்கிறாளாம். அவளின் தொலைபேசி எண் கிடைத்துவிட்டதென்று குதிக்கிறார்கள்.
ஒருவன் ஷகிலாவிடம் தொலைபேசியில் பேச ஆரம்பித்துவிட்டான். கால்மணி நேரத்திற்கும் மேலாக பேசிக்கொண்டே இருக்கின்றான். நான் அப்பொழுது இன்னொரு நண்பனிடம் கூறினேன்.
என்னைக்காவது பெத்த தாய்ட்ட இவன் இவ்வளவு நேரம் பேசியிருப்பானாடா?
நான் சொல்வதைக்கேட்டு அவன் சிரிக்க ஆரம்பித்துவிட்டான். அவனுக்கு அது காமெடியாய் தெரிந்திருக்கிறது. எனக்கோ அது கழிசடையாய்; தெரிந்தது.
-----------------------------------------------
இங்கே பாகிஸ்தானியர்கள் மற்றும் பங்காளிகள்தான் வீட்டை விட்டு பிரிந்து அதிகமான காலங்கள் இங்கேயே தங்கிவிடுகிறார்கள். வீட்டைப் பிரிந்து என்பதை விடவும் வீட்டை மறந்து என்றுதான் சொல்லவேண்டும்.
சில இந்தியர்களும் அவ்வாறு வீட்டை விட்டு பிரிந்து அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற வேட்கையில் இங்கேயே தங்கிவிடுகிறார்கள். எனக்குத் தெரிந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் 8 வருடங்களாக இங்கேயே தங்கியிருக்கிறார். நல்லவேளை அவருக்கு திருமணமாகவில்லை.
ஆனால் திருமணத்திற்குப் பிறகு கூட சிலர் மனைவியைப் பிரிந்து நீண்ட நாட்கள் இங்கே தங்குகிறார்கள். காலப்போக்கில் தங்களது உடல்தேவைகளை பூர்த்தி செய்ய இப்படி உலகளாவிய அளவில் உடலுறவு கொள்ள ஆரம்பித்து வாழ்க்கையை நரகமாக்கிக்கொள்ளுகிறார்கள்.
ஆனால் இவர்களின் வருகைக்காக அங்கே கனவோடும் கற்போடும் காத்துக்கொண்டிருக்கும் மனைவிமார்களுக்கு இவர்களின் அதே உணர்ச்சிதானே இருக்கும் என்பதை மறந்து போய்விட்டனரா முட்டாள்கள்.?
இதுபோன்ற ஆட்களை குறிவைத்துதான் மாமாக்கள் உருவாகிக்கொண்டு இருக்கிறார்கள். இல்லை உருவாக்கப்படுகிறார்கள்.
மாமாக்கள் இவர்கள் மனிதக்குறைகள்.
இதனை அரசாங்கம் தடைசெய்யாததற்கும் கண்டு கொள்ளாததற்கும் முக்கிய காரணம் தங்களின் நாட்டுப் பெண்களின் கற்பை பாதுகாப்பதற்காத்தான்.
இதற்கெல்லாம் தீர்வு என்னவென்றால் மற்ற நாட்டுக்காரர்களுக்கு கண்டிப்பாக 2 அல்லது 3 வருடங்களுக்குப் பிறகு இத்தனை மாதங்கள் என்று கட்டாய விடுமுறை அளித்து அனுப்பி விட வேண்டும். இங்கேயே விடுமுறையே இல்லாமல் நீண்ட நாட்கள் தங்குவதற்கு அனுமதியளிக்கக் கூடாது.
இதனால் குற்றங்கள் கொஞ்சம் குறைய வாய்ப்பு உண்டு. ம் என்னதான் சட்டதிட்டங்கள் இயற்றினாலும் தனி மனித ஒழுக்கம் ஏற்படாதவரை ஏதும் புண்ணிமில்லைப்பா..
டேய் டான்ஸ் கிளப்புக்கு வர்றியா என்று யாராவது என்னிடம் கேட்டால் அவர்களுக்கு ஒரே ஒரு பதில்தான் வைத்திருக்கிறேன்.
படைத்தவன் பார்க்காத இடம் ஒன்றில் தவறுசெய்ய ஆசைப்படுகிறேன்.? எங்கேயிருக்கிறது அந்த இடம்?
- ரசிகவ் ஞானியார்
Subscribe to:
Post Comments (Atom)
28 comments:
// படைத்தவன் பார்க்காத இடம் ஒன்றில் தவறுசெய்ய ஆசைப்படுகிறேன்.? எங்கேயிருக்கிறது அந்த இடம்? //
ரசிகவ், அப்படி ஒரு இடமேயில்லை. அதுனால உங்களுக்குத் தப்பு செய்யும் பாக்கியம் இல்லைன்னுதான் நினைக்கிறேன். இப்படியே தொடருங்க. அதுதான் நல்லது.
ராகவ் நல்ல பதிவு. உங்க கோபம் நியாயமானது தான், உங்களுடைய தீர்வும் ஒரளவு நல்ல பலனை தரும். உங்களுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு உண்டு கிழக்கரை போன்ற பகுதிகளில் கணவர்கள் வெளிநாடு சென்றபின் மனைவிமார்கள் கள்ள தொடர்பு வைத்து இருப்பது போன்ற நிகழ்வுகளை நிறைய கேட்டு இருக்கிறேன். இவர்கள் இவ்வாறு வாழ்ந்து, சம்பாரித்து என்ன சாதிக்கப்போகிறார்கள் என்று நிறைய முறை யோசித்து இருக்கிறேன்.
மற்றைய தொழில் மாதிரிதான் இதுவும் அதுவும் ஒரு மிக பழைமையான தொழில், இதில் அருவருப்பு (என் கண்ணோட்டத்தில்) அடைய ஒன்றும் இல்லை ரசிகவ்! அதை சந்தைப்படுத்தும் முறைவேண்டுமானால் அருவருப்பாய் இருக்கலாம்!
மற்றது (என் கண்ணோட்டத்தில் )இந்த கற்பு கன்றாவி என்று ஒன்றுமே கிடையாது, இந்த கற்பு என்ற "மாயை குதிரை" நீங்கள் வைத்திருக்க விரும்பினால் வைத்திருக்கலாம் ஆனால் மற்றவர்களும் வைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்பதுதான் தப்பு!!!
உடலை விற்கும் பெண்களை பற்றி கொஞ்கமாவது சிந்தித்து பாத்தீர்களா? அவர்களை விமர்சிக்க உங்களுக்கு தகுதியுண்டா? அவர்கள் யார்? ஏன் இந்த (உங்கள் கண்ணோட்டத்தில் இளிவான) தொழிலை செய்ய முன்வந்தார்கள்? வேற தொழில்லே இல்லையா? நிப்பந்திக்கபட்டார்களா? பெத்த பெற்றோர்களாள் விற்கப்பட்டார்களா? இவர்களுடைய ஊதியம் என்ன? இது செரியா தவறா? முடிவு பண்னுபவர்கள் யார்? ஏன்? இதன் பின்விளைவுகள் என்ன? இப்படி எவ்வளவோ கெள்விகள் உண்டு ரசிகவ்! உங்கள் மாயை திரையை விலக்கி வெளியில் வெர வெண்டாம் கொஞ்சம் எட்டி பாக்கவாவது முயற்சி செய்யுங்க!
நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் ஒரு தேவை இருக்கு.... அதை மறக்ககூடாது!!!!
உங்கள் ஆதங்கத்தைக் கொட்டியிருக்கிறீர்கள் ரசிகவ். பதிவு நன்றாக இருந்தது. ஆனால் இம்மாதிரி விஷயங்களைத் தவறு செய்பவன் உணரும் வரை எவ்வளவு சட்டம் போட்டாலும் முழுவதுமாக ஒழிக்க முடியாது என்பது என் கருத்து.
தங்கள் 'Investigative Journalism' முயற்சி நன்றாக வந்துள்ளது. ஆனாலும் இம்மாதிரி சமூக விரோதிகளை போட்டோ எடுக்கும் போது சற்று கவனமாக இருங்கள்.
//ரசிகவ், அப்படி ஒரு இடமேயில்லை. அதுனால உங்களுக்குத் தப்பு செய்யும் பாக்கியம் இல்லைன்னுதான் நினைக்கிறேன். இப்படியே தொடருங்க. அதுதான் நல்லது. //
நன்றி ராகவா ..நான் மட்டுமல்ல நண்பா..பொதுவாக படைத்தவன் பார்த்துக்கொண்டிருக்கின்றான் என்ற பணம் இருந்தாலே போதும் யாருக்கும் தவறு செய்யத்தோன்றாது. எப்படி நமது அலுவலகத்தில் ஒரு கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படும்பாழுது நாம் உஷாராக வேலை பார்க்கின்றோமோ அதுபோலத்தான்
அன்புடன்
ரசிகவ் ஞானியார்
//கிழக்கரை போன்ற பகுதிகளில் கணவர்கள் வெளிநாடு சென்றபின் மனைவிமார்கள் கள்ள தொடர்பு வைத்து இருப்பது போன்ற நிகழ்வுகளை நிறைய கேட்டு இருக்கிறேன்//
சந்தோஷ்,
வெளிநாட்டில் வாழும் எல்லா கணவனும் கெட்டவனல்ல நண்பா. அதுபோலத்தான் ஊரிலும். சில சில சம்பவங்கள் ஆங்காங்கே சந்தர்ப்பங்கள் அமைவதால் நடைபெறுகின்றது. குறிப்பிட்ட இடங்களை மட்டும் கூற வேண்டாம் நண்பா. அங்கேயும் நடந்திருக்கலாம்
//மற்றது (என் கண்ணோட்டத்தில் )இந்த கற்பு கன்றாவி என்று ஒன்றுமே கிடையாது, இந்த கற்பு என்ற "மாயை குதிரை" நீங்கள் வைத்திருக்க விரும்பினால் வைத்திருக்கலாம் ஆனால் மற்றவர்களும் வைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்பதுதான் தப்பு!!!//
அது தங்களுடைய கருத்து நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. என்னை திருத்திக்கொள்ள எனக்கு உரிமை உண்டு. இது தவறு என்று மற்றவர்களுக்கு எடுத்து சொல்லவும் எனக்கு உரிமை உண்டு. ஆனால் நான் கேட்கமாட்டேன் என்று கூறுபவர்களை நான் ஒன்றும் தடுக்க முடியாது.
//தங்கள் 'Investigative Journalism' முயற்சி நன்றாக வந்துள்ளது. ஆனாலும் இம்மாதிரி சமூக விரோதிகளை போட்டோ எடுக்கும் போது சற்று கவனமாக இருங்கள்.//
தங்களின் அக்கறைக்கு நன்றி கைப்புள்ள .
எனக்கு அதுபோன்ற முயற்சிகள் செய்ய பிடிக்கும். என்னுடைய விருப்பமான துறையே பத்திரிக்கைதான். ம்..ஜர்னலிசம் படிக்க முயற்சித்தேன் சூழ்நிலைகள் சரியில்லாததால் முடியாமல்
போய்விட்டது..
இப்ப கூட பத்திரிக்கை துறைக்கு யாராவது அழைத்தால் ஓடோடி வந்துடுவேன்..
//உங்களுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு உண்டு கிழக்கரை போன்ற பகுதிகளில் கணவர்கள் வெளிநாடு சென்றபின் மனைவிமார்கள் கள்ள தொடர்பு வைத்து இருப்பது போன்ற நிகழ்வுகளை நிறைய கேட்டு இருக்கிறேன்//
சந்தோஷ்,
நீங்கள் பின்னூட்டமிட எடுத்துக் கொண்ட நேரம் கூட போதும், வீட்டிலுள்ளவர்கள் கற்பை இழக்க! கீழக்கரையில் முஸ்லிம்கள் மட்டும் வெளிநாட்டில் இருக்கிறார்கள் என்று நினைத்து அவ்வாறு சொல்லி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். "மாமாப்பயலுகல"ப் பத்தி சொன்னால், உங்களுக்கு கோபம் வருவதில் அர்த்தமில்லை.
ரசிகவ்,
உங்கள் சமீபத்திய பதிவுகள் சமூக அவலங்களை கவிதை கலந்து சொல்கின்றன. வாழ்த்துக்கள்.
17:32 நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள். நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.
இங்கே திருவல்லிக்கேணியில் எனக்குத் தெரிந்த பாஷ்யம் ஐயங்கார்கூட கூட்டிக் கொடுக்கும் மாமா வேலைதான் செய்கிறார். நன்றாக வசூல் ஆவதாக என்னிடத்தில் சொன்னார். எந்த வேலை பார்த்தால் என்ன? ஏமாற்றாமல் பொய் சொல்லாமல் வேலை பார்த்தால் சரிதான்.
//ரசிகவ்,
உங்கள் சமீபத்திய பதிவுகள் சமூக அவலங்களை கவிதை கலந்து சொல்கின்றன. வாழ்த்துக்கள்.//
நன்றி நல்லடியார் அவர்களே
//Dondu(#4800161 : ஏமாற்றாமல் பொய் சொல்லாமல் வேலை பார்த்தால் சரிதான். //
அப்படியென்றால் தாங்கள்....?
சகோதரர் நிலவு நண்பனுக்கு,
உங்களுடைய ஆதங்கம் புரிகிறது. எனினும் நீங்கள் ஓர் ஆண் மகனின் பார்வையில் இதனைப் பார்ப்பதால் உங்களுக்கு இது தவறாகப் படுகிறது என நினைக்கிறேன்.
உடல் இச்சையை அபாயமின்றி எவ்வாறு பெண்கள் பூர்த்தி செய்து கொள்வது? என்பதற்கு ஒருவர் ஆலோசனை வழங்குவதாகவே இதனை நான் காண்கிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது?
உடல் இச்சை என்பது இருபாலருக்கும் பொதுதான். தற்சமயம் பெண்கள் தங்கள் இச்சைகளை வெளிப்படுத்துவதில் அதிகம் தயங்குவதில்லை. அவ்வாறு ஒரு பெண் தனது உடல் இச்சையை தணித்துக் கொள்ள,
* இப்படி அப்படி என்று இருந்தாலும் மற்றவர்களுக்கு தெரியாமல் எச்சரிக்கையுடன் நட்ந்து கொண்டால் பின்விளைவுகளிலிருந்து தப்பிக்கலாம்.
* குஷ்பு சொன்னதையே நானும் பின்மொழிகிறேன். பெண்கள் தங்கள் உடல் இச்சையை தணித்துக்கொள்ளட்டும். ஆனால் மிகுந்த தற்பாதுகாப்புடன் செயல்படவேண்டும்.. கருவுறக் கூடாது. கருகலைப்பு உடலுக்கு கெடுதல். பால்வினை நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆணுறை உபயோகத்தை வலியுறுத்த வேண்டும். ரொம்ப முக்கியம், பரம ரகசியமாகச் செயல்படவேண்டும். மாட்டிக் கொள்ளக் கூடாது. என்னதான் இருந்தாலும் இப்போது இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகள் கடுமையானவை. ஆகவே மாட்டிக் கொள்ளக் கூடாது.
* ஒரு மாதவிடாய் வந்தால் அதற்கு முன் எவ்வளவு உடலுறவு கொண்டாலும் கணக்கில் வராது. ஆகவே தேவையில்லாது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம்.
* ஆனால் ஒன்று. எந்த செயலுக்கும் எதிர்வினை வரும். ஆகவே அதற்கெல்லாம் துணிந்தவர்கள்தான் இதையெல்லாம் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு? fire-தான்.
இது போன்ற பிரயோஜனமான ஆலோசனைகளை ஒருவர் கொடுக்கும் போது அப்பெண் அந்த ஆலோசனையின் படி கவனமாக தனது உடல் இச்சையை தீர்த்துக் கொள்ள ஏற்ற (ஆணுறை பயன்படுத்த சம்மதிக்கும்) ஆட்களை தேடி பிடிக்கும் மகத்துவமான பணியைத் தானே இவரும் செய்கிறார். இதில் என்ன தவறை நீங்கள் கண்டீர்கள் என்று எனக்குப் புரியவில்லை.
ஒரு விதத்தில் இந்த நபர்கள் உடல் இச்சையுள்ள பெண்களுக்கு அவர்களின் இச்சையை தீர்க்க வழி ஏற்படுத்திக் கொடுப்பதோடு, "சும்மா போவதை" வைத்து ஒரு வருமானமும் உண்டாக்கி கொடுத்து அவர்களுடைய "செழிப்பான!" வாழ்விற்கு துணை புரிகிறார்கள் என்று தான் கூற வேண்டும்.
இதற்காக ஒரு பதிவு வேறு போட்டு உங்கள் பழமைவாத சிந்தனையை இங்கு திணிக்க முயல்கிறீர்களே!. இது நியாயமா? இதில் வேலை மெனக்கெட்டு அந்த மகத்தான சேவை (கூட்டி கொடுக்கும்) செய்யும் நபரை புகைப்படம் வேறு எடுக்க முயன்றுள்ளீர்கள். அதற்கு அந்த நபர் முகத்தை மறைப்பது போன்ற ஓர் புகைப் படத்தையும் இட்டுள்ளீர்கள். நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறீர்கள் எனத் தெரியவில்லை!
பெண்கள் தங்களுடைய உடல் இச்சையை எப்படி தீர்த்துக் கொள்வது என ஆலோசனை கூறுபவர்கள் தற்போதெல்லாம் தனது முகத்தை மறைக்க விரும்புவதில்லை என்பதை நீங்கள் அறியவில்லையா?
சாதாரணமாக இவர்களுக்கெல்லாம் வெட்கம் என்பதெல்லாம் இருப்பதில்லை என்பது என் யூகம். அந்த நபரை இனி காணும் பாக்கியம்(!) கிடைத்தால் அவருடைய தொழில்(!) விருத்தியடையும் விதத்தில் தக்க ஆலோசனைகளை பெண்களுக்கு வழங்கும் நபர்களெல்லாம் தற்போது இப்படி முகத்தை மறைத்து ஓடி ஒழிவதில்லை என்பதை தெரிய படுத்துங்கள்.
நீங்களும் வேறு ஏதாவது இது போன்ற "சொந்த சகோதரியோ, தாயோ, மகளோ படிக்க நேர்ந்தால் உங்கள் முகத்தில் காறி உமிழும் படியான" சிறந்த, பெண்களின் இச்சையை பாதுகாப்பாக தீர்ப்பது எப்படி? என்பது பற்றிய பதிவுகளை போடுங்கள்.
"அந்த" நபர்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும்.
கடைசியாக நிலவு நண்பனிடம் ஒரு கேள்வி!
இந்த தொழிலுக்கு கூட்டி கொடுப்பவர்களுக்கு நீங்கள் "மாமா" பெயரை வழங்குகிறீர்கள் எனில், மேலே கண்டது போன்ற இந்த தொழிலுக்கு பிரயோஜனமான, "அவ்வாறு போகும்" பெண்கள் எப்படி தங்களை பாதுகாப்பது என்ற அபூர்வமான(!), சிறந்த(!) ஆலோசனைகளை கூறும் நபரை எப்படி அழைப்பீர்கள்?
"மாமா" என்று தானே!
அன்புடன்
இறைநேசன்.
I think 'Poli Dondu' has written the comments in the name of Dondu .
I'm not Dondu.. I'm just trying like that funny 'Poli dondu' using the 'other' option.
தம்பி,
போன வருஷம், வீட்டு வேலைக்கு என்று பெண்களை அழைத்துவந்து இத்தொழிலில் வலுக்கட்டாயமாய் ஈடுப்படுத்தும் ஒரு கூட்டம் ஷார்ஜாவில் பிடிப்பட்டது என்று செய்திதாளில் வந்ததே பார்தீர்களா? இந்த விஷயத்தில் நானும் ஒரு பெண் என்பதால் இந்த ஆட்களின் மேல் வரும் கோபம் அப்பெண்கள் மீது வருவதில்லை, பாவமாய்தான் தோன்றுகிறது. நேற்று கல்ப் நியூஸ் பார்தீர்களா? துபாயில் வன்புணர்வு
அதிகரித்து வருகிறது என்றும் பெண்கள்தான் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும் என்று பெரிய கட்டுரை வந்துள்ளது.
என்ன சட்டங்கள், போலீஸ் கெடுபிடி இருந்தாலும், இத்தகைய குற்றங்கள் கரப்பான் பூச்சியைப் போல, அழித்தாலும் மறைந்திருந்து
தலையெடுக்கும்.
மேலே இறை நேசன் பெயரிலும் டோண்டு பெயரிலும் எழுதியது நான் தான் ...நான் மலேஷியாவில் மாமா வேலைதான் பார்க்கிறேன் . எனக்கு புத்தி பேதலிக்கும்போது இந்த மாதிரி பல பெயர்களில் அசிங்கமாக எழுதுவேன்
//இது தவறு என்று மற்றவர்களுக்கு எடுத்து சொல்லவும் எனக்கு உரிமை உண்டு.//
எது சரி எது பிழை என ஒரு சராசரி மனிதனால் சிந்திக் முடியும்! எதுக்கும் நீங்கள் எழுதிய கட்டுரையை மறுவாசிப்பு செய்யவும்!! நீங்கள் எடுத்துச்சொன்னதாய் எனக்குப் படவில்லை உங்கள் கருத்தை தினிக்க முயச்சி செய்கிறீர்கள்!
நிறங்களில் தனிய கறுப்பும் வெள்ளையும்தான் உண்டு என நீங்கள் நினைக்கிறீர்கள், உண்மையில் வண்ணங்கள் பல உண்டு!!!
//தம்பி,
இந்த விஷயத்தில் நானும் ஒரு பெண் என்பதால் இந்த ஆட்களின் மேல் வரும் கோபம் அப்பெண்கள் மீது வருவதில்லை, பாவமாய்தான் தோன்றுகிறது. என்ன சட்டங்கள், போலீஸ் கெடுபிடி இருந்தாலும், இத்தகைய குற்றங்கள் கரப்பான் பூச்சியைப் போல, அழித்தாலும் மறைந்திருந்து
தலையெடுக்கும். //
அக்கா
தங்களின் கருத்துக்கள் நியாயமானதுதான். ஆனால் அந்த பெண்களின் மீது பாவப்பட என்ன இருக்கிறது? இங்கே குறிப்பிட்டுள்ள விலைமாதுக்கள் வலுக்கட்டாயமாக வருவதில்லை. இவர்களாகவே விரும்பி முன்வந்து விசிட் விசாவில் வந்து இதுபோன்ற தொழிலைச் செய்கிறார்கள். வலுக்காட்டமாக்கப்டுதலின் மீது பரிதாபப்படலாம் ஆனால் விரும்பி வருபவரகள்;மீது எப்படி பரிதாபப்பட?
//மேலே இறை நேசன் பெயரிலும் டோண்டு பெயரிலும் எழுதியது நான் தான் ...நான் மலேஷியாவில் மாமா வேலைதான் பார்க்கிறேன் . எனக்கு புத்தி பேதலிக்கும்போது இந்த மாதிரி பல பெயர்களில் அசிங்கமாக எழுதுவேன் //
வெடித்து கிளம்பியிருக்கிறீர்கள். மூர்த்தி
//மனிதனால் சிந்திக் முடியும்! எதுக்கும் நீங்கள் எழுதிய கட்டுரையை மறுவாசிப்பு செய்யவும்!! நீங்கள் எடுத்துச்சொன்னதாய் எனக்குப் படவில்லை உங்கள் கருத்தை தினிக்க முயச்சி செய்கிறீர்கள்!
நிறங்களில் தனிய கறுப்பும் வெள்ளையும்தான் உண்டு என நீங்கள் நினைக்கிறீர்கள், உண்மையில் வண்ணங்கள் பல உண்டு!!! //
நண்பா..எடுத்துச் சொல்கிறேனோ இல்லை கருத்தைத் திணிக்கிறேனோ ஆனால் என்னுடைய பார்வையில் என் மனதின் வடிகாலாக எழுதியுள்ளேன்.
நல்லதென்றால் தொட்டுச்செல்லுங்கள்
பொல்லாதது எனில் விட்டுச் செல்லுங்கள்
//இதற்காக ஒரு பதிவு வேறு போட்டு உங்கள் பழமைவாத சிந்தனையை இங்கு திணிக்க முயல்கிறீர்களே!. இது நியாயமா? இதில் வேலை மெனக்கெட்டு அந்த மகத்தான சேவை (கூட்டி கொடுக்கும்) செய்யும் நபரை புகைப்படம் வேறு எடுக்க முயன்றுள்ளீர்கள். //
அதுபோன்ற மகத்தான சேவைபுரிந்து வாழ்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள்
//நல்லதென்றால் தொட்டுச்செல்லுங்கள்
பொல்லாதது எனில் விட்டுச் செல்லுங்கள்//
இத்தோடு விட்டுச்செல்கிறேன், அடுதமுறை அந்த தொழிளாளர்களை விமசரிக்கிறத்துக்கு பதிலாய் தையிரியமாக பேட்டி எடுத்துப்போடவும்!!!
//// படைத்தவன் பார்க்காத இடம் ஒன்றில் தவறுசெய்ய ஆசைப்படுகிறேன்.? எங்கேயிருக்கிறது அந்த இடம்? //
எது சரி, எது தவறு என்பதை இறைவன்(என்று ஒன்று இருந்தால்) முடிவு செய்யட்டும்.
மேலும் Morality என்பது ஒருவரின் mental constitutionஐ பொருத்தது.
"சரி", "தவறு" என்ற இந்த இரண்டும் relative terms.ஒன்று இருந்தால் தான் இன்னொன்றுக்கு மரியாதை.
***தவறே செய்யாதோர் கல் எறியட்டும்.***
கடைசியாக நான் எப்போது தவறு செய்தேன் அதை எப்படி சரி செய்வேன் என்று யோசிப்பதே நலம். :-)
The worlds 3 oldest professions are farming, soldiering and prostitution - neither of these can be eliminated. This profession caters to the physiological needs of humans, (mainly of men).
//அந்த தொழிளாளர்களை விமசரிக்கிறத்துக்கு பதிலாய் தையிரியமாக பேட்டி எடுத்துப்போடவும்!!! -Anonymous said: //
//கடைசியாக நான் எப்போது தவறு செய்தேன் அதை எப்படி சரி செய்வேன் என்று யோசிப்பதே நலம். :-) - Samudra //
நல்லது நண்பர்களே
//மேலே இறை நேசன் பெயரிலும் டோண்டு பெயரிலும் எழுதியது நான் தான் ...நான் மலேஷியாவில் மாமா வேலைதான் பார்க்கிறேன் . எனக்கு புத்தி பேதலிக்கும்போது இந்த மாதிரி பல பெயர்களில் அசிங்கமாக எழுதுவேன் //
இங்கே சகோதரர் மூர்த்தியின் பெயரை வைத்து யாரோ விளையாடுகிறார்கள் என நினைக்கிறேன். ஏனெனில் மேலே உள்ள இறைநேசன் பெயரிலுள்ள பின்னூட்டம் இட்டதே நான் தான்.
அந்த பின்னூட்டத்தை என்னுடைய "காந்தியை மறக்கிறோமா நாம்" பதிவிலும் மறுபதிப்பு செய்துள்ளேன்.
//இந்த மாதிரி பல பெயர்களில் அசிங்கமாக எழுதுவேன்// யார் இந்த பின்னூட்டம் இட்டிருந்தாலும், என்னுடைய பின்னூட்டத்தில் என்ன அசிங்கத்தை கண்டார் எனச் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்கிறேன்.
என்னுடைய பின்னூட்டத்தின் சூடு தாங்க முடியாமல் அரிப்பு எடுத்தவன் சுறிந்து கொள்கிறான் என் நினைக்கிறேன்.
அன்புடன்
இறைநேசன்.
நல்லடியார்,
நான் கோபப்பட்டதாக நீங்கள் எப்படி கண்டுபிடிச்சிங்க. எனக்கு தெரிந்த ஒரு செய்தியை சென்னேன் தவிற I did not really mean anything wrong. என்னுடைய நண்பர்கள் பலர் அந்த பகுதியை சேர்ந்தவர்கள், அவர்கள் பல முறை இவ்வாறு செல்வதை கேட்டு இருக்கிறேன் அதை நான் இங்கு சென்னேன்.
//ஆலோசனைகளை கூறும் நபரை எப்படி அழைப்பீர்கள்?
"மாமா" என்று தானே!
//
நீதானா போலி டோண்டு அளவுக்கு இவ்வளவு கேவலமாக எழுதுவது ,... த்த்தூ.. த்த்தூ ..இறைநேசன் என்று பெயர் வைத்துக்கொண்டு .. வெட்கமாயில்லை .. டோண்டு எழுதியதை நான் சரி என்று சொல்லவில்லை .. ஆனால் சகவலைப்பதிவரை மாமா என்று கூறும் அளவுக்கு சென்றும் அதனை தவறென்றும் உணராத நீயெல்லாம் இறைநேசன் ..
//சகவலைப்பதிவரை மாமா என்று கூறும் அளவுக்கு சென்றும் அதனை தவறென்றும் உணராத நீயெல்லாம் இறைநேசன் .. //
அனானிமஸ் சகோதரரே!
தவறு செய்பவரை, தவறு செய்பவர் என்று கூறுவதில் என்ன தவறு இருக்கிறது.அதற்கு உங்களுக்கு இவ்வளவு கோபம் வர வேண்டிய அவசியம் என்ன?
என் பக்கத்து வீட்டுக்காரர், கொலை செய்வதை எப்படி யாருக்கும் தெரியாமல் செய்வது என்று ஆலோசனை வழங்கிக் கொண்டு இருக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அதனை தவறு என பலர் எடுத்துக் கூறியும் அவர் அதனை தவறு என இது வரை ஒத்துக் கொள்ளவில்லை என்றும் வைத்துக் கொள்ளுங்கள். மட்டுமல்ல அது தான் சரி என வாதிட்டுக் கொண்டும் அவர் இருந்தால் நான், அவர் என்னுடைய பக்கத்து வீட்டுக் காரர் என்பதற்காக "உத்தம புருஷர்" என அழைக்க வேண்டுமோ?
சில கேள்விகளை அவர் தனக்கு விருப்பம் உள்ளது போல் வெட்டி மாற்றுவது போல் நீங்களும் ஏன் செய்கிறீர்கள் எனத் தெரியவில்லை.
சுய அறிவுள்ள யாராவது //ஆலோசனைகளை கூறும் நபரை எப்படி அழைப்பீர்கள்?
"மாமா" என்று தானே!// என்று கேள்வி கேட்பார்களா?
என் கேள்வியை வெட்டி எழுதியிருக்கிறீர்களே! ஒரு வேளை நீங்கள் என் கேள்வியை சரியாக படிக்காததால் தான் இப்படி என் மேல் கோபப் படுகிறீர்கள் என நினைக்கிறேன். என் கேள்வியை ஒரு முறை கூட படியுங்கள்!
//கடைசியாக நிலவு நண்பனிடம் ஒரு கேள்வி!
இந்த தொழிலுக்கு கூட்டி கொடுப்பவர்களுக்கு நீங்கள் "மாமா" பெயரை வழங்குகிறீர்கள் எனில், மேலே கண்டது போன்ற இந்த தொழிலுக்கு பிரயோஜனமான, "அவ்வாறு போகும்" பெண்கள் எப்படி தங்களை பாதுகாப்பது என்ற அபூர்வமான(!), சிறந்த(!) ஆலோசனைகளை கூறும் நபரை எப்படி அழைப்பீர்கள்?
"மாமா" என்று தானே!//
இனி உங்களைப் போன்று "ஆதங்கப் பட்டிருந்த" டோண்டு அவர்களுக்கு என் பதிவில் பதிலளித்திருந்தேன். அதையும் கொஞ்சம் படித்து விடுங்கள்!
//வெட்கமாயில்லை//
சகோதரரே! "அந்த" வேலை பார்ப்பவர்கள், "அதனை எப்படி பாதுகாப்பாக செய்யலாம்" என ஆலோசனை வழங்குபவர்கள் தங்களது நிலையைக் குறித்து ஒரு சிறிதும் வெட்கப் படாத போது, அவர்களை அதற்குண்டான பெயரைச் சொல்லி அழைப்பதில் நான் ஏன் வெட்கப் பட வேண்டும்.
என் பக்கத்து வீட்டுக் காரரை "கொலைகாரனுக்கு கூட்டு நிற்பவர்" என்று கூறுவது
தவறு தான். ஆனால் என்ன செய்ய? அது தானே உண்மை - அவர் நிலையை அவர் மாற்றிக் கொள்ளும் வரை.
என் தவறை திருத்திக் கொள்ள எனக்கு சம்மதமே! ஒரே ஒரு நிபந்தனை - அவர் அவருடைய "அந்த" கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.
சகோதரர் அனானிமஸ் கொஞ்சம் அதற்கும் முயற்சித்துப் பாருங்களேன்.
அன்புடன்
இறைநேசன்
Post a Comment