அன்வர் ராஜா
தமிழ்நாடு என்பதில் பெருமிதம் கொள்வோம் தரையில் விழுந்தே பல சாதனைகள் புரிவோம்
தோளில் விழுந்தால் துண்டு மரியாதைப்படும்! காலில் விழுந்தால் மரியாதை துண்டிக்கப்படும்!
ஜீவானந்தம்
பிறப்பொக்கும் பெரிதுவக்கும் தன் மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
ஜெயக்குமார்
வளைந்து விட்டு
மூங்கிலாய் மீண்டுவிடு
வளைந்தே இருந்தால்
மனிதா நீ மாண்டுவிடு
பாண்டு ரங்கன்
வளைக்க வை
வளையாதே
மரித்துப் போகும்
மரியாதை
பன்னீர் செல்வம்
அருவியாய் விழு
சுனாமியாய் எழு
பொன்னையன்
சிந்திய கௌரவத்தை
பொறுக்கவோ
கோர்க்கவோ?
செம்மலை
யாரங்கே
தன்மானத்தை
தரையில் போட்டது?
சண்முகநாதன்
அம்மா இங்கே வா வா
ஆசிர்வாதம் தா தா
காலில் விழும் எனக்கு
கட்சியில் இருக்கு கணக்கு
தளவாய் சுந்தரம்
கல்தோன்றா மண்தோன்றா காலத்தே
முன் விழுந்த மூத்த குடி
தம்பி துரை
"துறை"க்காக
துரை இங்கே
கறையானதேனோ?
வைத்தியலிங்கம்
விழுந்தால் கட்சி
விழுந்தது கட்சி
வளர்மதி
எழுந்திரு அஞ்சலி
எழுந்திரு
வேலுச்சாமி
பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
எதனைக் கண்டான்...மனிதனைப் படைத்தான்?
- ரசிகவ் ஞானியார்
17 comments:
ha..ha..ha..
Parthaen........
Rasithaen.........
Sirithaen..........
நண்பரே நல்லா இருக்கு!! இந்த காட்சி எதற்கு இப்போது மறு பதிப்பா? தேர்தல் வருகிறது. வெற்றி பெற்றால் அம்மாகாலில்எப்படி விழனும்னு சொல்லி தருகிறீர்களா?
நிலவு நண்பனுக்கு ஒரு ஓ போடு ஓட்டு இல்லை
வயித்தெரிச்சல் ரசிகவ். மானம் போகுது. அவங்களுக்கு எங்க அது புரியுது.
//Parthaen........
Rasithaen.........
Sirithaen.......... //
பார்த்து ரசித்து சிரித்தவருக்குஎனது நன்றி
//நிலவு நண்பனுக்கு ஒரு ஓ போடு ஓட்டு இல்லை //
ஓட்டு போடுவீங்களோ ஓ போடுவீங்களோ தெரியாது
சந்தோசமா இருந்தீங்களே அது போதும்
பழச சீக்கிரம் மறக்க கூடாது நண்பா
//வயித்தெரிச்சல் ரசிகவ். மானம் போகுது. அவங்களுக்கு எங்க அது புரியுது.//
சரி சரி ராகவா வருத்தப்படாதீங்க..என்ன செய்ய..?
படங்கள் மட்டுமல்ல ..... நீங்கள் எழுதிய கவிதையும் தான் புல்லரிக்க வைக்கின்றது.
" காட்சியும் கானமும்" என்று ஒரு கட்டுரை எழுதலாம்னு பார்க்கின்றேன். பின்னூட்டங்கKஐயும் வைத்திதான் . உங்கள் அனுமதி கிடைத்தால் ....தமிழன் மரியாதைப் பண்பை எழுதாமல் விட்டால் அது நாம் மூத்த குடிக்குச் செய்யும் பாவம் அல்லவா ? நீங்கள் என்ன சொல்லுகின்றீர்கள் ?
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து சொல்லடா
சரியா சொன்னீங்க இளந்திரையா..
தாராளமா கட்டுரைக்கு பயன்படுத்திக்கோங்க ஆனா அரசியல்வாதிங்க யாரும் தாக்காம இருந்தா சரிதான்..
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி! பாதபூஜை அம்மாவுக்கு மட்டுமா? இல்ல சின்னம்மாவுக்கும் சேர்த்தா??
கொடுமை..
எனக்கு ஒரு சந்தேகம்.. இப்படி பொது இடத்துல விழறாங்களே.. இவங்களை யாரு மதிப்பாங்க... நமக்கே பார்க்க சகிக்கலையே.. இவங்க எப்படி மனசு வந்து (மதிப்பு கெட்டு) விழறாங்க..
//பாதபூஜை அம்மாவுக்கு மட்டுமா? இல்ல சின்னம்மாவுக்கும் சேர்த்தா?? //
இரண்டு பேருக்கும்தான் மக்கா..
//இவங்க எப்படி மனசு வந்து (மதிப்பு கெட்டு) விழறாங்க.. //
அரசியல்ல இதெல்லாம் சகஜம் அம்மணி
கட்டுரை போட்டாச்சு .... வாசித்து உங்க கவித ஒன்னு போடுங்க ஞானியாரே...
We always make fun of this ..but they are just following
" Seyyum Thozhiley Deivam"
தமிழனை தலை நிமிர வைக்கிறோம் என்று வந்த திராவிட கட்சிகளின் பரிணாம வளர்ச்சி. என்னும் என்ன என்ன நடக்க போகிறதோ?
//நாடு எப்படிங்க உருப்படும் இப்படி பட்ட தலைவர்களை தேர்ந்தெடுத்தா ??//
நாமதானங்கோ தேர்ந்தெடுத்தோம்
//" Seyyum Thozhiley Deivam" //
ம் ம் சரிதான்
//என்னும் என்ன என்ன நடக்க போகிறதோ? //
நாளை விடிவது நம் கைகளில்
சாமான்யன் பரஞ்சோதி மற்றும் பெயர் குறிப்பிடாத புண்ணியவான் ஆகியோருக்கு
நன்றிங்கோ
nice work Nanbaaa
keep it up
நல்லாச் சொன்னீங்க,
நாலு பேருக்கு நல்லது.
nanri samsul...
Post a Comment