Monday, January 09, 2006

ஒண்ணுக்கு அடித்தவனும் தீவிரவாதியா..?




"விஞ்ஞானி பூரி கொல்லப்பட்ட சம்பவத்தில் சென்னையைச் சேர்ந்த தீவிரவாதி பஷீர் பிடிபட்டான். "

இப்படித்தான் வெற்றிகரமாய் முழங்கிக்கொண்டும் தனக்கு கிடைத்த தகவல்களை திரட்டி தயிராக்கி செய்தி வெளியிட்டுக்கொண்டிருந்தது ஊடகங்கள்.

கடந்த 28.12.05 அன்று பெங்களுரில் இந்திய அறிவியல் மைய துப்பாக்கி தாக்குதல் சம்பவத்தில் விஞ்ஞானி பூரி சுட்டுக்கொல்லப்பட்டார்.

இது சம்பந்தமாக நடந்த விசாரணையில் ஆந்திராவைச்சேர்ந்த அப்துல்ரகுமான் என்ற நபரை கைது செய்தனர். அவரிடமிருந்து கிடைத்த தகவல்படி மங்களுர் அருகில் உள்ள பட்கலை சேர்ந்த பஷீரை சென்னையில் பெங்களுர் தனிப்படை போலீசார் கைது பெங்களுர் அழைத்து வந்தனர்.

பஷீரைப்பற்றிய முழுமையான விசாரணைகள் நடந்து முடியாத நிலையில் சென்னையில் தீவிரவாதி பஷீர் பிடிபட்டான் என்று வானத்திலிருக்கும் தொலைக்காட்சியும் சில கட்சித் தொலைக்காட்சியும் மற்றும் சில புகழ்பெற்ற பத்திரிக்கைகளும் படு நாகரீகமாக எடுத்துரைத்தார்கள். இவர்கள் பார்வையில் ஒண்ணுக்கு அடித்துக் கொண்டிருந்தவைனெல்லாம் தீவிரவாதியாம்.

விசாரணையே நடைபெறாத நிலையில் அவர்களுக்கு எப்படி பஷீர் தீவிரவாதி என்று தெரிந்தது? ஒருவேளை அவர்களுக்கும் விஞ்ஞானி பூரி சுட்டுக்கொல்லப்பட்டச் சம்பவத்தில் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ..?

ஒருவேளை பிடித்துச் சென்றவர்கள் இந்த தொலைக்காட்சிகளுக்கும் பத்திரிக்கைகளுக்கும் இரகசிய தகவல்கள் அனுப்பியிருக்க கூடுமோ..? அப்படியென்றால் நமது தேசப் பாதுகாப்பின் மீது எப்படி முழு நம்பிக்கை வரும்?

நேற்று 08.01.06 பஷீரைப் பிடித்துச் சென்ற போலிஸார்கள் பஷீர் ஒரு அப்பாவி என்று விடுதலை செய்துவிட்டார்கள். அதனைச் சொல்லும்போது அந்தத் தொலைக்காட்சிகள்

"பஷீர் விடுதலை செய்யப்பட்டார் "என்று கூறியது. இப்பொழுது தீவிரவாதி என்றப் பட்டத்தை எங்கே தொலைத்தார்களாம்? அவர்கள் தனது மூன்றாவது கண்களால் கண்டுபிடித்த தீவிரவாதிப் பட்டம் இப்போது எங்கே சென்றது? பட்டம் கொடுப்பதற்குத்தான் பல்கலைக்கழகங்கள் இருக்கிறதே இவர்களுக்கேன் வேண்டாத வேலை..?

மக்களுக்கு செய்தி தருகின்ற ஊடகங்கள் ஜனநாயகத்தின் முக்கிய தூண்களில் ஒன்று.

காலையில் தேநீரோடு பத்திரிக்கைகள் படிக்கைவில்லையென்றால் சிலர் தற்கொலை கூட செய்து கொள்வார்கள்.

ஓய்வுபெற்ற அப்பாக்களின் இரண்டாவது மனைவியே இந்தப் பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சி செய்திகள்தான்.

அலுவலகம் செல்கின்ற அவசரத்தில் கூட அவர்கள் நீங்கள் தருகின்ற செய்திகளை உள்வாங்கிக்கொண்டு செல்லும் எத்தனை எத்தனைப் பேரைக் கண்டிருக்கின்றோம்.

இப்படி மக்களின் உச்சகட்ட நம்பிக்கைகளை ஏன் சீரழிக்கின்றீர்கள். ஊடகங்கள் முதலில் மக்களின் நம்பிக்கைத்தன்மையை பெறவேண்டும். ஆனால் இதுபோன்ற பொய்யான தகவல்களை தந்து கொண்டிருந்தால் ஊடகங்களின் போலியான முகத்தை மக்கள் சீக்கிரமே உணர்ந்து கொள்வார்கள்.

அந்த தனிமனிதன் பஷீரின் மனநிலைக்கு வாருங்கள். தீவிரவாதி என்ற அந்த வார்த்தை அவர்மீது சமுதாயத்தின் தனி மனித மதிப்பை இழக்கச்செய்து விடாதா.?

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவரின் குழந்தைகள் வெளியில் யாருடன் விiளாயாடினால் கூட பக்கத்து வீட்டுக்காரர்கள் தன் குழந்தைகளை அந்தக்குழந்தைகளோடு விளையாட விடாமல் தடுக்க நேரிடும். அதில் அந்த பிஞ்சு உள்ளங்கள் பாதிக்கப்படாதா..?

இனிமேல் அவரை எப்படி சுற்றியுள்ள சமூகம் மதிக்கும். ஒருவேளை இவன் தீவரவாதியாக இருப்பானோ என்ற மூன்றாம் தர கண்ணோட்டத்தில் பார்க்காதா..? அந்த பஷீரின் மன உளைச்சலுக்கு என்ன மருந்து தரப்போகிறது இந்த ஊடகங்கள்.

விசாரணை நடைபெறுவதற்கு முன்னரே தீவிரவாதி பஷீர் என்று அறிவித்த அவர்கள் இப்பொழுது விசாரண முடிந்து அவரை விடுதலை செய்த பிறகு தாங்கள் தீவரவாதி என்று சொல்லியதற்காய் மன்னிப்பு கேட்குமா..?

வித்தியாசமாய் இருக்கட்டுமே இப்படி செய்தி சொன்னால்தான் என்ன?

"விஞ்ஞானி பூரி சுட்டுக்கொன்ற வழக்கில் பிடிப்பட்ட பஷீர் என்பவரை நாங்கள் அறிவீனத்தனமாய் தீவிரவாதி என்று குறிப்பிட்டு அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்காய் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம் "

என்று செய்தி சொன்னால் மக்களுக்கு அந்த ஊடகங்கள் மீது பலமான நம்பிக்கை வராதா..?

- ரசிகவ் ஞானியார்

16 comments:

பூனைக்குட்டி said...

என்னை ஏமாத்திட்டீங்க ஞானி,

இதைப்பற்றி கவிதையில்லை எழுதியிருப்பீங்கன்னு ஓடோடி வந்தேன். போங்க உங்கப்பேச்சு கா!!!!

ப்ராக்டிகலா திங்க் பண்ணுங்க ஓய், வெளியவிட்டாங்க்யளே, பாவிப்பயலுங்க இதுமாதிரி தப்பா புடிச்சிட்டு போய் கவுரதிய காப்பாத்துறதுக்காக இன்னும் கம்பிக்கு பின்னால் இருக்கும் நல்லவர்கள் எத்தனைபேர். தவறுதான் இல்லையெனவில்லை. இருந்தும் எல்லாவற்றையும் நல்லவையாக பார்க்கும் மனப்பான்மையை, ஏகவல்லோன் எல்லோருக்கும் பொதுவான இறைவன் உங்களுக்கு தருவாராக.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

நன்றி மோகன்தாஸ் எல்லோருக்கும் இந்த மனநிலையை இறைவன் கொடுக்கட்டுமாக

rajkumar said...

அருமை.

நண்பன் said...

நிலவு நண்பன்,

நீங்கள் - ரவீ ஸ்ரீநிவாஸின் இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரையைப் படித்து இருப்பீர்கள் என நினைக்கிறேன்.

தீவிரவாதிகள் என்று வாய் கிழியப் பேசுகிறவர்கள் - இல்லை, நாங்களும் இந்தியர் தாம் - எங்களுக்கும் தேசப்பற்று உண்டு என்று முழங்கியதைப் பாராட்டி, ஒரு வார்த்தை கூட பேச இயலவில்லை.

நடு நிலைமை வகிக்கும் மற்ற நண்பர்களாவது ஓடி வந்து, யாரோ சிலர் அப்படி நினைப்பதை ஏன் பெரிது படுத்துகிறீர்கள் - நாங்கள் அப்படி நினைக்கவில்லை என்று கூறவில்லை.

நல்லவேளையாக - மதிப்பெண்கள் குத்தி விட்டுப் போனார்கள். தங்கள் அடையாளங்களைக் காட்டி, துணிந்து கருத்துப் பதியாமல், வெறும் முத்திரைகள் மட்டும் குத்தி மகிழ்ந்ததன் காரணம் -

நம் மீது அவர்களுக்கு மதிப்பு இருக்கிறது. ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளப் பயம். தங்களைப் பற்றிய சித்திரம் உடைந்து விடுமோ, தாங்கள் நடுநிலையாளர்கள் என்று தோற்றுவித்த 'இமேஜ்' உடைந்து விடுமோ என்ற பயம்.

இத்தகைய பயந்த மனிதர்கள் பேசும் கொள்கைகள் மீது இப்பொழுது கொஞ்சம் கூட மரியாதை வருவதேயில்லை.

தங்கள் மனசாட்சிபடி, நேர்மயுடன் பேசக்கூடிய சக்தி, எந்த நிர்ப்பந்தமுமின்றி இயங்க முடியும் என்ற வலைப்பதிவாளர்களிடையே இல்லையென்றால் - சுடச்சுட செய்தி பரிமாறி, விநியோகஸ்தைப் பெருக்கி, காசு பார்த்து, லாபம் உண்டாக்கி வாழ்க்கையில் வளம் பெற வேண்டும் என்ற சிந்தனையுடைய முதலாளிகளிடத்தில் மட்டும் இருக்கும் என எப்படி எதிர்பார்க்க முடியும்? அங்கனம் இல்லையென்றால், அதற்காக யாரை நொந்து என்ன பயன்? அத்தகைய பொய் பேசித் திரியும் பத்திரிக்கைகளை விலக்கி விட்டு, நேர்மையைப் பேசும் பத்திரிக்கைகளை நாடிப்போவது ஒன்று தான் அதற்கு மாற்றாக இருக்க முடியும்.

முதலில், தாங்கள் இஸ்லாமியர்கள் என்ற அடையாளத்தை எல்லோரும் வெளிக்காட்டி இத்தகைய நிகழ்வுகளை வன்மையாகக் கண்டிக்க முன் வரவேண்டும். பின்னர் தான் மற்றவர்களை அழைக்க நம்மால் இயலும்.

விடுதலை உணர்வும், தன்மானமும் இருப்பதாகக் காட்டிக் கொள்வதே தங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் என்று நம்புபவர்களை என்ன செய்வது?

தவறுகளைத் தட்டி கேட்கும் துணிச்சலுள்ள மக்களால் தான் எந்த ஒரு தேசமும் வாழ முடியும் என்ற வரலாற்றுப் பாடத்தை மீண்டும் மீண்டும் ஞாபகமூட்ட வேண்டியதிருக்கிறது மக்களுக்கு.

நல்லதொரு பதிவு என்பதை விட, நல்லதொரு மனக்குமுறல் என்பேன்.

பாராட்டுகள் - ரசிகவ் ஞானியார்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//தவறுகளைத் தட்டி கேட்கும் துணிச்சலுள்ள மக்களால் தான் எந்த ஒரு தேசமும் வாழ முடியும் என்ற வரலாற்றுப் பாடத்தை மீண்டும் மீண்டும் ஞாபகமூட்ட வேண்டியதிருக்கிறது மக்களுக்கு.//


தங்களின் விமர்சனத்தில் ஒரு பதிவே போடலாம் போலிருக்கிறது நண்பா..

ஆரோக்கியமான மக்கள் உணர வேண்டிய கருத்துக்கள்

நன்றி ராஜ்குமார் மற்றும் நண்பனுக்கு

நல்லடியார் said...

ரசிகவ்,

எங்கெல்லாம் குண்டு வெடிக்கிறதோ அங்கெல்லாம் பழியை சுமக்க பசீர் போன்ற அப்பாவிகள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். தாடி வைத்து தொப்பி/தலைப்பாகை அணிந்திருந்தால் போதும் பின்லாடனாக்கி விடுவார்கள்.

Anonymous said...

Same as before some dailys published news against a college which is in tirunelveli that One Lecturer & another two staffs involved the Parliament email threaten , after three days they are also proved themselves as innocent, what a shame for those people & College

சீமாச்சு.. said...

Dear Gnaniyar,
completely agree with your views on this
endrendrum anbudan
seemachu

Anonymous said...

Nilavu Nanban..
Its a serious question and we have to think of the reasons that led to this situation.

And this problem is not just in India. In the place where I study, students from Islamic countries are not extended visa immediately. They have to sign a paper that they dont belong to any terrorist organisations listed in a 14 page document. Only after a month or two they are given visas. Indians get on the same day.

Although I dont blame all Muslims, I feel Islamic community has not done enough to change this situation. Incidents like Bangalore is just going to make the situation worse.

Sathish Mayil said...

Dear Gnaniyar,
What you said is quite true. These days, constructive journalism is nowhere to be found. It's time that Indian media sits back and reinvents itself constructively.

மாமன்னன் said...

அன்புடைய ரசிகவ் ஞானியார்,

உங்கள் வாதம் எனக்கு புரிபடவில்லை. ஒருவரை போலீஸ் தேடுகிறார்கள். ஒரு சிலரின் மீது சந்தேகப்படுகிறார்கள். அவர்களை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரிக்கிறார்கள். அவர் இல்லை என்றால் விட்டுவிடுகிறார்கள். நீங்கள் போலீஸாக இருந்தால் என்ன செய்வீர்கள்? ஏதேனும் திடீரென்று ஞான திருஷ்டியில் இவர்தான் குற்றவாளி என்று பட்சி சொல்லுமா? அல்லது போலீஸ் யாரையும் விசாரிக்கவே கூடாதா? அப்துல்ரகுமான் யாரை உடந்தை என்று கைகாட்டினாரோ அந்த பஷீரைத்தான் போலீஸ் பிடித்திருக்கிறது, அப்போது பத்திரிக்கை என்ன எழுதும்? அவரை விட்டதும், போலீஸ் அவரை விட்டுவிட்டது என்று செய்தியும் சொன்னது. இதில் என்ன தவறு? அப்துல் ரகுமானை இன்னும் போலீஸ் வெளியே விடவில்லை.

பத்திரிக்கைகளைப் பற்றி சொல்கிறீர்கள். தமிழ்நாட்டில் எந்தப் பத்திரிக்கையும் வெளியிடாத செய்திகளை இங்கே கொடுத்திருக்கிறேன். இந்த செய்திகளை ஏன் பத்திரிக்கைகள் வெளியிடவில்லை என்று நீங்களே சொல்லுங்கள். ஒவ்வொரு நாளும் நடக்கும் இது போன்ற விஷயங்களை தேதிவாரியாக எழுதியிருக்கிறேன். நீங்களே பார்த்து சொல்லுங்கள்.

செய்தி - ஜனவரி 5, 2006 - இஸ்லாமுக்கு மாற மறுத்ததால் என் மகன் முஸ்லீம்களால் கொல்லப்பட்டான் - ஒரு தாயின் வாக்குமூலம்.
செய்தி - ஜனவரி 4, 2006 - பெண்களுக்கு படிப்பு சொல்லிக்கொடுத்ததற்காக தாலிபான் முஸ்லீம்கள் ஒரு ஆசிரியரியரின் கழுத்தி வெட்டி கொலை செய்தனர்
செய்தி . ஜனவரி 3, 2006. ஜம்மு பிரதேசத்தில் முஸ்லீம்கள் ஒரு இந்து இளைஞரை சித்திரவதை செய்து கழுத்தை வெட்டி கொலை செய்தனர்.
செய்தி . ஜனவரி 2, 2006. மலேசியாவில் மூர்த்தியை முஸ்லீம் முறைப்படி அடக்கம் செய்தது, இந்துக்கள் கிரிஸ்துவர்களிடையே மிகுந்த மனவேதனையை உருவாக்கி வருகிறது.
செய்தி . டிசம்பர் 21, 2005 ஸ்லாமுக்கு எதிராக ஒரு அரபு பெண்ணின் போராட்டம். கதா ஜம்ஷிர் அவர்கள் பஹ்ரெனி டிவிக்கு அளித்த பேட்டி… See the Clip

இவைகள் குற்றங்களா இல்லையா? எத்தனை வலைபதிவர்கள் இவைகளைப் பற்றி அக்கறைப்பட்டீர்கள்? எத்தனை பேர் கொல்லப்பட்டவர்களைப் பற்றி எழுதினீர்கள்?

Anonymous said...

//உங்கள் வாதம் எனக்கு புரிபடவில்லை. ஒருவரை போலீஸ் தேடுகிறார்கள். ஒரு சிலரின் மீது சந்தேகப்படுகிறார்கள். அவர்களை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரிக்கிறார்கள். அவர் இல்லை என்றால் விட்டுவிடுகிறார்கள். ..//

ஆரோக்கியத்திற்கு புயவில்லையா, அல்லது புரியாதது போல நடிக்கிறாரா?

//"விஞ்ஞானி பூரி கொல்லப்பட்ட சம்பவத்தில் சென்னையைச் சேர்ந்த தீவிரவாதி பஷீர் பிடிபட்டான். "//

போலீஸார் யார் மீதாவது சந்தேகப்பட்டு விசாரணை செய்வதில் தவறு ஒன்றுமில்லை. ஒருவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாலேயே அவர் தீவிரவாதிதான் என பத்திரிக்கைகள் எப்படி முடிவெடுத்தன? தனது பத்திரிக்கை பரபரப்பாக விற்க வேண்டும் என்பதற்காக ஒரு அப்பாவியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி விட்டார்களே!

குறைந்த பட்சம் ரசிகவ் ஞானியார் குறிப்பிட்டதுபோல "விஞ்ஞானி பூரி சுட்டுக்கொன்ற வழக்கில் பிடிப்பட்ட பஷீர் என்பவரை நாங்கள் அறிவீனத்தனமாய் தீவிரவாதி என்று குறிப்பிட்டு அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்காய் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம் " என்றாவது மன்னிப்பு கேட்டிருக்க வேண்டாமா?

இப்படிப்பட்ட பத்திரிக்கைகளில் வரும் செய்திகளை ஆதாரமாக கொண்டு அவற்றை ஊதி ஊதி பெரிதாக்க முயல்வது இந்த ஆரோக்கியம் என்பவரின் தொழிலாக இருக்கும்போலும். இவர் குறிப்பிட்டிருக்கும் செய்திகளில் எத்தனை சதவிகிதம் உணமை இருக்கும்?

கைப்புள்ள said...

ரசிகவ்,
இனிய ஈகை திருநாள் வாழ்த்துகள்.

doondu said...

தப்பு தப்பாக போலீசுக்கு தகவல் கொடுப்பது, சாதாரணமாக நடப்பதை ஊதிப் பெரிதாக்குவது எல்லாம் பார்ப்பனர்கள்தான்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

ஆரோக்கியத்தின் ஆரோக்கியமான பதிலுக்கு நன்றி

நண்பரே நான் ஒன்றும் தீவிரவாதிகளை பிடிக்கக்கூடாது என்றும் சந்தேகப்படக்கூடாது என்றும் கூறவில்லை சந்தேகம் என்பது போலிஸாரின் அடிப்படைக் கொள்கைகளுள் ஒன்று.

ஆனால் பிடிபட்டவுடனையே ஊடகங்கள் அந்த நபரை தீவிரவாதி என்று ஏன் சொன்னது. அதனால் என்ன என்று சாதாரண பார்வையில் இதனைத்தள்ளிவிட முடியாது அதன்பின் அவனைச்சுற்றியும் அவன் குடும்பத்தைச் சுற்றியும் நடக்கின்ற சூழi நினைத்துப் பார்த்தால் ரொம்பவும் கொடுமையாக இருக்கும்.

பத்திரிக்கைகள் விற்கவேண்டும் என்பதற்காக பத்தினி வேஷம் போட்டுத்திரிந்து ஜனாநாயகத்தை சாகடிக்கவும் துணிகின்றன சில பத்திரிக்கைகள்.

சந்தேகப்படுங்கள்
ஊர்ஜிதப்படுத்துங்கள் பின்னர் தீர்மானியுங்கள்

நன்றி ஆரோக்கியம் இப்னுபஷீர் கைப்புள்ள மற்றும் டோண்டு மற்றும் பெயர் குறிப்பிடாத புண்ணியவான்கள்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ரசிகவ்,
இனிய ஈகை திருநாள் வாழ்த்துகள்.//

நன்றி கைப்புள்ள தங்களுக்கும் மற்றும் அனைனத்து வலைப்பதிவர்களுக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

தேன் கூடு