Wednesday, January 04, 2006
துபாய் ஆட்சியாளர் மரணம்
துபாய் ஆட்சியாளர் ஷேக் மக்தூம் பின் ரஷீத் அல் மக்தூம் ( வயது 62) அவர்கள் இன்று அதிகாலை ஆஸ்திரேலியாவில் வைத்து மரணம் அடைந்தார். ( Vice Precident and Prime Minister of UAE and Ruler of Dubai )
இந்த மரணம் ஆட்சியாளர்களை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
அவரது சகோதரர் ஷேக் மஹ்மூது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் ஷேக் மக்தூமுக்குப் பதிலாக துபாய் ஆட்சியாளராக வரலாம் என எதிர்பர்க்கப்படுகிறது.
அமீரக அரசின் செய்தி :
"அமீரகத்தினை மிகப்பெரிய வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு சென்று அமீரக மக்களின் வளமான வாழ்க்கைக்கு ஒரு தூணாக விளங்கிய அமீரக வரலாற்றுப்புகழ் ஷேக் மக்தூம் பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் மரணம் மிகப்பெரிய இழப்பாகும்.
மேலும் கூறியதாவது ஷேக் மக்தூம் அவர்கள் மக்கள் மீது மிகவும் அன்பானவர். ஆவரின் நினைவுகள் மக்களின் உள்ளத்தில் எப்போதும் பதிக்கப்பட்டிருக்கும். அமீரகத்தின் தேசியக்கொடி அவரது மரணம் அனுஷ்டிக்ப்படும் 40 நாட்களும் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் "
அமீரகத்தின் ஆட்சியாளர் ( President of UAE ) ஷேக் கலீபா பின் செய்யது அல் நாயன் அவர்கள் ஷேக் மக்தூம் பின் ரஷீத் அல் மக்தூம் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்தார்.
அவரது நல்லடக்கம் நாளை வியாழக்கிழமை பர்துபாயில் உள்ள உம் குரைர் மயானத்தில் வைத்து நடைபெறும் என்றும் காலை பத்து மணி அளவில் ஜபீல் பள்ளிவாசலில் வைத்து பிரார்த்தனைகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது
அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் 7 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்ரீத் பண்டிகை வருவதால் 14.01.2006 வரை அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அலுவலகங்களுக்கு விடுமுறை. தனியார் அலுவலகங்களுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்படலாம்.
டேய் அப்படின்னா 4 நாளைக்கு லீவுதான்டா செம ஜாலி என்று அந்த மரணத்தில் கூட ஆதாயம் தேடுபவர்களை நினைத்தால்தான் வருத்தமாக இருக்கிறது
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்
- ரசிகவ் ஞானியார்
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
மறைந்த தலைவருக்கு கண்ணீர் அஞ்சலி...
மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்த தலைவரை அமீரகம் இழந்துள்ளது. துபாயின் இன்றைய வளர்ச்சிக்கு அன்னாரது பங்கு அளப்பரியது. இறைவன் பாதங்களை சேர்ந்திருக்கும் அவரது ஆன்மா அமைதியுறட்டும்
Moderate leader, great visions.
Good friend & supporter of Indians.
தங்களோடு சேர்த்து நானும் என்னுடைய கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கிறேன்.
துபாயை இந்த புகழுக்கு கொண்டு சேர்த்தப் பெருமை அவரையே சாரும்
இறைவனடியில் சேர்ந்தவருக்காக பிரார்த்திப்போமாக
துபாயை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றது மட்டுமல்ல அவரது சாதனை.
தீவிரவாதிகள், கடத்தல் காரர்கள், நிழலுலகக் குண்டர்கள் என்று அனைத்து தொல்லைகளும் துபாயினுள் நுழையாமல் பார்த்துக் கொண்டார். அதே வேளையில், பிற இனத்தவரை அரவனைத்துச் சென்றது, அவர்களைத் தங்கள் நாடு போலவே இந்த நாட்டையும் கருதச் செய்தது என பலவழிகளிலும் பிற இஸ்லாமிய நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக துபாயைச் செய்தார்.
அவரின் மரணம் எல்லா தரப்பு மக்களையும் வருந்தச் செய்யும்.
அவரது குடும்பத்தாருக்கு நமது அனுதாபங்களைத் தெரிவிப்போமாக...
அவரின் மரணம் துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஒரு பேரிழப்பாகும்
அவர் துபாயை ஆட்சி செய்தது மட்டுமில்லாமல் அவருடைய தம்பியை நன்கு தயார்படுத்தியுள்ளார்.
அண்ணலாரின் பாவங்கள் மன்னிக்கப்படவும், அவருடைய கேள்வி கணக்குகள் எளிதாக்கப்படவும் மறுமையில் சிறந்த அந்தஸ்து கிடைக்கவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்.
அமீரக அதிபரின் மறைவு அந்நாட்டிற்கு உண்மையிலேயே ஒரு மாபெரும் இழப்பாகும். இன்று துபாய் மேலை நாடுகளையும் மிஞ்சும் வண்ணம் இருக்கிறது என்றால் அதற்கு முழு முதற்காரணம் இவர்தான். அவரை துபாய் நாட்டு மக்கள் என்றும் மறக்கமாட்டார்கள். அவரது ஆன்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்போம்.
மக்கள் நலனுக்காக உழைத்தவரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.
Post a Comment