Wednesday, August 27, 2008
சாப்ட்வேர் பொறியாளனின் மரணக்குறிப்பு
என்னுடைய மரணத்திற்கு யாருமே காரணமில்லை. என்னால் வேலையை சரியாக செய்ய முடியவில்லை.. மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டேன். எனக்கு தரப்பட்ட வேலையை குறித்த நேரத்திற்குள் முடித்துக் கொடுக்கலாமென நினைத்தேன். ஆனால் இயலவில்லை.
என் மீது அன்பு வைத்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய மன்னிப்பை கேட்டுக் கொள்கின்றேன். ஆனால் இது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
- சந்தீப்
வேலைப்பளு தாங்காமல் உயிர் மாய்த்துக்கொண்டான் இந்த சாப்ட்வேர் சகோதரன். வேலைப்பளு என்றால் வேலையை விட்டு நின்று விடவேண்டியதுதானே..? வேறு வழியா இல்லை ..? என்ன முட்டாள்தனமான முடிவு பாருங்கள்?
கை நிறைய சம்பளம் கலாச்சாரச் சீர்கேடு என்று சப்தமிடுபவர்களே, இது ஐடி துறையின் இன்னொரு வேதனையான பக்கம். அந்த வேலையின் அழுத்தத்தினால் இந்தச் சகோதரன் எடுத்த முடிவைப் பாருங்கள். ஆனால் இது சரியான முடிவு என்று சொல்லவில்லை. எந்த அளவிற்கு மன அழுத்தம் இருந்திருந்தால் இவன் இப்படி வாழவேண்டிய வயதில் இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பான்.
யாரைக் குறைச் சொல்வது? இவனுக்கு மன அழுத்தம் மற்றும் வேலைப்பளுவினைக் கொடுத்தவர்களையா? அல்லது கோழைத்தனமான முடிவெடித்த இவனையா?
நன்றாக படித்திருக்கின்றார்கள். கை நிறைய சம்பளம். இருந்தும் இப்படி முடிவெடுக்கும் தைரியம் எப்படி வருகின்றது இந்த இளைஞர்களுக்கு?
மனம் வேதனைப் படுகின்றது
- ரசிகவ் ஞானியார்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
வேதனைக்குரிய ஒரு விஷயம். சிந்திக்க முடியாத அளவுக்கு மூளை செயல் இழந்துவிட்டது போலும் அதனால் தான் இப்படி ஒரு முட்டாள் தனமான முடிவு என்று தோன்றுகிறது... எது எதற்கெல்லாம் தற்கொலை செய்து கொள்வது என்று வரையரையே இல்லாமல் போய்விட்டது..வேலைப்பளு தான் உண்மையில் இந்தத் தற்கொலைக்கு காரணமா என்று எண்ணக் கூட தோன்றுகிறது.
மிகவும் வேதனைக்குரிய விஷயம்
பாவம்... :(
Post a Comment