Friday, August 08, 2008

திருநெல்வேலி - 50 ஆண்டுகளுக்கு முன்பு

திரு இசக்கி அண்ணாச்சியின் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. திருநெல்வேலியின் பழைய ஞாபகங்களை அப்படியே பதி செய்து வைத்திருந்தார்.


தினத்தந்தி பத்திரிக்கையின் விலை 25 காசு என்று தொங்கவிடப்பட்டுள்ள பெட்டிக்கடை மற்றும் 50 ஆண்டுகளுக்கு முந்தைய குற்றால மலையருவி - வீட்டுக்கு வீடு கார்களை பார்த்த நமக்கு அப்பொழுது வீட்டுக்கு வீடு மாட்டுவண்டிகளை பார்க் செய்து வைத்திருக்கும் காட்சி - மாட்டு வண்டி பயணத்தின் போது இடையில் தங்கி இளைப்பாறுதல் - கார்களால் நிரம்பும் திருநெல்வேலி சாலையில் மனிதர்களே இல்லாமல் ஆடுகள் உலா வருகின்ற காட்சி - சகோதரனை சைக்கிளின் பின் அமர்த்தி செல்லும் சகோதரி இப்படி பழைய ஞாபகங்களை கிளறுகின்ற புகைப்படங்கள். இதோ நீங்களும் பாருங்களேன்.


50 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள திருநெல்வேலியை இப்பொழுது பார்ப்பது மிகவும் பரவசமான காட்சிதான்


- ரசிகவ் ஞானியார்

17 comments:

சகாதேவன் said...

சென்னை வந்த நான் ஒரு வாரம் தங்க வேண்டியதாயிற்று.அரிய வாய்ப்பை தவற விட்டேனே. உங்க்ள் பதிவில் நல்ல போட்டோக்கள் பார்த்தேன். நன்றி.

சகாதேவன்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Blogger சகாதேவன் said...

சென்னை வந்த நான் ஒரு வாரம் தங்க வேண்டியதாயிற்று.அரிய வாய்ப்பை தவற விட்டேனே. உங்க்ள் பதிவில் நல்ல போட்டோக்கள் பார்த்தேன். நன்றி.

சகாதேவன்//

புகைப்படக்கண்காட்சி திருநெல்வேலியில் நடைபெற்றது ஆகஸ்ட் 1 முதல் 3 வரை.

தவற விட்ட வாய்ப்பை இங்கு பயன்படுத்தியதற்கு நன்றி சகாதேவன்

நானானி said...

கொக்கிரகுளம் சாலையிலிருந்து சுலோச்சனமுதலியார் பாலம், டவுனில், பார்வதி ரதனா தியேட்டர்களுக்கிடையே உள்ள ஆர்ச் இவை ரெண்டும்தான் புரிகிறது. மற்றவையெல்லாம் 50 வருடங்களுக்கு முன் நெல்லைகாட்சிகள்!! அருமை!!
கார்களே அதிகமில்லாத அந்த காலத்தில்
வண்ணர்பேட்டை ரோட்டில் கார் ஓட்டிய அனுபவம் நினைவுக்கு வந்தது!!!

தமிழ்சினிமா said...

படங்கள் டாப்... யதார்த்தமான இந்த படங்களை பதிவு செய்தமைக்கு நன்றி.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Blogger தமிழ்சினிமா said...

படங்கள் டாப்... யதார்த்தமான இந்த படங்களை பதிவு செய்தமைக்கு நன்றி.//

தங்கள் விமர்சனத்தை இங்கு பதிவு செய்தமைக்கும் நன்றி

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Blogger நானானி said...

கொக்கிரகுளம் சாலையிலிருந்து சுலோச்சனமுதலியார் பாலம், டவுனில், பார்வதி ரதனா தியேட்டர்களுக்கிடையே உள்ள ஆர்ச் இவை ரெண்டும்தான் புரிகிறது. மற்றவையெல்லாம் 50 வருடங்களுக்கு முன் நெல்லைகாட்சிகள்!! அருமை!!
கார்களே அதிகமில்லாத அந்த காலத்தில்
வண்ணர்பேட்டை ரோட்டில் கார் ஓட்டிய அனுபவம் நினைவுக்கு வந்தது!!!//

ம் நன்றி நண்பா

அப்பவே கார் வைத்திருந்தீர்கள் என்றால் நீங்கள் பெரிய ஆளுதான்

சில் said...

அருமையான படங்களின் தொகுப்பு.

ஆடுமாடு said...

நானானி சொன்ன மாதிரிதான்.

முதல் படம் சந்தி பிள்ளையார் முக்கு, அப்புறம் பார்வதி ரத்னா தியேட்டர்
ஆர்ச், நியூராயல் தியேட்டர் பின்பக்கம்/ லட்சுமி தியேட்டர் ஏரியா... இதுதான் தெரியுது. கேப்ஷன் கொடுத்திருக்காலாமே...

நல்லாருந்துச்சு. நன்றி.

ராமலக்ஷ்மி said...

அருமையான படங்கள். நன்றி நிலவு நண்பன். பார்த்ததும் எனக்குப் புரிந்தவை ந்யூராயல் பின்பக்கம், சுலோச்சன முதலியார் பாலம், தெப்பக்குளத்துக்கு சற்று முன் வரும் ரத்னா பார்வதி தியேட்டர் ஆர்ச் ஆகியவை. மாட்டு வண்டிப் படங்களும் சூப்பர்.
எழுபதுகளில் நாங்கள் வசித்த சிந்துபூந்துறையிலிருந்து பாளையங்கோட்டைக்கு காரில் பள்ளிக்குச் செல்லுகையில் கிட்டத்தட்ட அதே தூரத்தைக் கடக்க மாட்டு வண்டிகளே பல மாணவர்களுக்குப் பயன்பட்டு வந்தன இந்தக் கால ஸ்கூல் ஆட்டோக்கள் போல. குதிரை வண்டிகளும் உண்டு. வரிசை கட்டி கிட்டத் தட்ட 20,25 வண்டிகள் பயணப் படும். இப்போது அது வழக்கத்தில் இருக்க வாய்ப்பே இல்லையென்றுதான் நினைக்கிறேன்.

ராமலக்ஷ்மி said...

நான் சொல்லும் வண்டிகள் மேலே குடையுடன் கூடியவை.

வடுவூர் குமார் said...

பழைய கால நினைவுகளை கண் முன் கொண்டுவருகிறது.
என்ன? அப்ப விவசாய நிலத்துக்கு பக்கத்தில் இருந்தோம் இப்போ.அது உள்ளேயே இருக்க ஆரம்பித்துவிட்டோம்.

கோவை விஜய் said...

தரணி போற்றும் பரணி பாயும் நெல்லையின் 50 வருடங்களுக்கு முன்னால் புகைப்படங்கள் அருமை.

கோவை விஜய்

நெல்லை எக்ஸ்பிரஸ் said...

அனைத்தும் அருமை

KRP said...

பார்வதி ரத்னா திரையரங்குகள் பக்கத்தில் வெயிலே தெரியாத அளவுக்கு மரங்களை கவனித்தீர்களா ?

அருமையான புகைப்படங்கள். நன்றி நிலவு .


அன்புடன்
கே ஆர் பி
http://visitmiletus.blogspot.com/2008/05/blog-post_07.html

தாமிரா said...

krp ://பார்வதி ரத்னா திரையரங்குகள் பக்கத்தில் வெயிலே தெரியாத அளவுக்கு மரங்களை கவனித்தீர்களா //

இதெல்லாம் பாக்கச்சொல்லோ கண்ணுல தண்ணி தண்ணியா வருதுபா..இதெல்லாம் பாக்கச்சொல்லோ கண்ணுல தண்ணி தண்ணியா வருதுபா..

(சொல்ல மறந்துட்டேனே.. டெம்ப் பிளேட் ஸூப்பர்ப்பா)

புருனோ Bruno said...

//கொக்கிரகுளம் சாலையிலிருந்து சுலோச்சனமுதலியார் பாலம், டவுனில், பார்வதி ரதனா தியேட்டர்களுக்கிடையே உள்ள ஆர்ச் இவை ரெண்டும்தான் புரிகிறது. மற்றவையெல்லாம் 50 வருடங்களுக்கு முன் நெல்லைகாட்சிகள்!! அருமை!!
கார்களே அதிகமில்லாத அந்த காலத்தில்
வண்ணர்பேட்டை ரோட்டில் கார் ஓட்டிய அனுபவம் நினைவுக்கு வந்தது!!!//

கொக்கிரகுளம் சாலையிலிருந்து சுலோச்சனமுதலியார் பாலம், டவுனில், பார்வதி ரதனா தியேட்டர்களுக்கிடையே உள்ள ஆர்ச் இவை இரண்டையும் தவிர மீதி காட்சிகளையெல்லாம் இன்று கூட திருநெல்வேலியில் காணலாம்.


பார்வதி ரதனா தியேட்டர்களுக்கிடையே உள்ள ஆர்ச் அருகில் சாலை சிறிது குறுகியுள்ளது

அவ்வளவுதான் :) :)

எருமை மாடு said...

அண்ணாச்சி,
இந்த புகைப்பட கண்காட்சி பத்தி தினகரன் நெல்லை பதிப்பில்(31 சூலை-2008, 3 வது பக்கம் என்று நினைக்கிறேன்) வந்தது. அதில் திருநெல்வேலி சந்திப்பு புகைப்படம் வெளியாயிருந்தது...

தேன் கூடு