Tuesday, June 19, 2007

நான் டாக்டராவேன் அண்ணே

Photo Sharing and Video Hosting at Photobucket

பாருங்கள் இந்தப் பையனை..அப்பாவியாய் தோற்றமளிக்கின்றான் அல்லவா?

நேற்று மாலை நானும், எனது நண்பரும் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி அருகே உள்ள ரெஸ்டாரெண்டின் வெளியே அமர்ந்து தேநீர் சாப்பிட்டுக்கொண்டிருந்தபொழுது இந்தச் சிறுவன் வந்து நின்றான்

அண்ணே அண்ணே ஒரே ஒரு பாக்கெட் வேர்க்கடலை பாக்கெட் வாங்கிக்கோங்கண்ணே..?

கைகளில் கூடையுடன் வேர்கடலை பாக்கெட்டுகளை கையில் வைத்து கெஞ்சினான்.

என்ன தம்பி நீ படிக்கிறியா? என்று கேட்டேன்

ஆமாண்ணே அண்ணே வாங்கிக்கோங்கண்ணே என்னிடம் விற்றுச் செல்வதிலையே குறியாக இருந்தான்.

சரிப்பா வாங்குறேன் பா.. பக்கத்தில் சில மருத்துவக் கல்லூரி மாணவர்களை பார்த்தபடியே என்னிடம் கேட்டான்

அண்ணே டாக்டர் படிக்கணும்னா எவ்வளவு செலவாகும்னே? அப்பாவியாய் கேட்டான்

நிறைய செலவாகும்பா..மாசம் 10000... ரூ வேணும்பா..

அட அவ்வளவுதானா நான் சம்பாதிச்சு படிக்கிறேன் என்று சொல்ல எனக்கு சிரிப்புதான் வந்தது. அவனது தன்னம்பிக்கையை நினைத்து ஆச்சர்யப்பட்டேன்.

சரிப்பா நீ எங்கே படிக்கிறே..? உங்கப்பா என்ன பண்றாரு..?

எங்கப்பா மெட்ராஸில வேல பார்க்குறாரண்ணே.. பணமே அனுப்ப மாட்டாரு - வேதனையாய் சொன்னான்

நீ வேலை பார்க்குறியா படிக்கிறியா ? படிக்கலைன்னா உன்னை பக்கத்துல உள்ள பள்ளியில சேர்த்துவிடவா..?

இல்லைண்ணே நான் படிக்கிறேண்ணே..எங்கம்மாதான் படிக்க வைக்கிறாங்க..சாயங்காலம் வேர்க்கடலை விக்கிறேண்ணே..

இந்த சிறுவயதிலேயே வேலைக்கு வந்துவிட்டான்...பாவம்.. அவன் தொடர்ந்தான்.

அண்ணே! எனக்குத் தெரிஞ்சடாக்டர் ஒருத்தருக்கு கால் இல்லைண்ணே..இன்னொருத்தருக்கு உடம்பு சரியில்லை..ஏண்ணே டாக்டருக்கு கூட அப்படி ஆகுமா..? மறுபடியும் டாக்டர் பற்றிக் கேட்டான் பக்கத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்கள் எல்லாம் புன்னகை ததும்பும் இதழ்களோடு சிறுவனின் உரையாடலை ரசித்தனர்..


டாக்டர் என்ன தெய்வமாடா..அவரும் மனுசன்தானே..அவருக்கும் சீழே விழுந்தா வலிக்கத்தானே செய்யும்

ம்..ஆமாண்ணே என்று தலையசைத்துக் கேட்டான்..

நானும் டாக்டருக்கு படிப்பேண்ணே.. நல்லா படிப்பேண்ணே என்று சொன்னான்.

அண்ணே! ஒரே ஒரு பாக்கெட் வாங்குங்கண்ணே! மறுபடியும் வியாபாரத்தை ஆரம்பித்தான்..

நான் உடனே ஒரு பாக்கெட் வாங்கினேன். பக்கத்தில் உள்ள நண்பனிடம் கொடுத்து உன்னோட டியுசன் கிளாஸ்ல யாராவர் நல்லா படிச்சாங்கண்ணா அவங்களுக்கு இதை கொடுத்திருடா என்றேன்..

அந்தச் சிறுவன் உடனே என்னிடம் அண்ணே கடலையை யாருக்குண்ணே கொடுக்குறீங்க..

அவங்க க்ளாஸ்ல படிக்க வர்றவங்களுக்கு பா.. என்று பக்கத்தில் உள்ள நண்பனைக் காட்டினேன்..

அப்படின்னா அவங்க கடலை கொடுக்கட்டும்..உங்களோட கேர்ள் ப்ரண்டோட நீங்க கடலை போடுங்க..

என்று திடீரென்று கூறிவிட்டான்..

நான் இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. பக்கத்தில் உள்ள அனைவரும் சிரித்துவிட்டனர்.

பக்கத்தில் வேறு யாரோ கடலை கேட்டார்கள் என்று கொடுக்கச் சென்றான்.

டேய் டாக்டருக்கு படிக்கப்போறேன்னு சொல்றே..இப்படியெல்லாமாடா பேசுறது..இங்கே வாடா என்று அவனை அழைத்தேன்..

அவன் வந்தான்..

உன்னைய போட்டோ எடுத்து இந்தப் பையன் அசிங்கமா பேசுறான்னு பேப்பர்ல போடுறேன் பாரு.. என்று கேமிரா மொபைலை எடுத்து புகைப்படம் எடுக்க முயல

ஆமாண்ணே! போடுங்கண்ணே எல்லாருக்கும் தெரியட்டும் என்று அவன் அழகாய் போஸ் கொடுக்க ஆரம்பித்தான்.

அவனுடைய புத்திசாலித்தனமாக பேச்சை ரசிக்க முடிந்தாலும் வயதுக்கு மீறிய இந்தப் பேச்சுக்கு காரணம் யார்? அவனுக்கு இதனைக் கற்றுக் கொடுத்தது யார்? சினிமாவா? சீரியலா?

யாராகவும் இருக்கட்டும் முதலில் அவனது குடும்பத்தையும் அவனையும் வழிநடத்த தவறி இந்த வயதிலையே அவன் வேலைக்கு வரக் காரணமான அவனது பொறுப்பற்ற தந்தைதான் இதற்கு முழுப்பொறுப்பு..

அண்ணே அண்ணே ப்ளீஸ்... ஒரு பாக்கெட் வாங்குங்கண்ணே

அங்கே தூரத்தில் யாரிடமோ கெஞ்சிக் கொண்டிருக்கின்றான் பாருங்கள்.. எனக்கு அவங்க அப்பா மீது கோபம் கோபமாக வந்தது...


- ரசிகவ் ஞானியார்

9 comments:

Anonymous said...

very nice funny article - shamsulhaq

Anonymous said...

very funny article -shamsulhaq

ILA (a) இளா said...

சமுதாயக்கேடு, பெற்றோரின் அலட்சியம், நாசமான போன பொருளாதாரம். ஆனால் அவனுள் இருக்கும் லட்சியமோ, கனவுகளோ, வியாபார நோக்கோ ரொம்ப புடிச்சு இருக்கு.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ILA(a)இளா said...
சமுதாயக்கேடு, பெற்றோரின் அலட்சியம், நாசமான போன பொருளாதாரம். ஆனால் அவனுள் இருக்கும் லட்சியமோ, கனவுகளோ, வியாபார நோக்கோ ரொம்ப புடிச்சு இருக்கு. //

உங்கள் கோபம் நியாயமானது இளா..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//very nice funny article - shamsulhaq //

நன்றி சம்சுல் :)

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

//நிறைய செலவாகும்பா..மாசம் 10000... ரூ வேணும்பா.//

தப்பான தகவல். அரசு மருத்துவக் கல்லூரியில் விடுதிக் கட்டணம், சாப்பாட்டுச் செலவுக்கு மாதம் 2,000க்குள் முடிக்கலாம். கல்விக் கட்டணம் ஆண்டுக்கே கூட 10, 000க்கு கீழ் தான் வரும் என நினைக்கிறேன்.

திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், அச்சு - வானொலி ஊடகங்கள் எல்லாவற்றிலும் துடுக்குத் தனமாக வயசுக்கு மீறிப் பேசும் பசங்களைப் புத்தசாலிகள் போல் காட்டுவதும் அதைப் பெற்றோர்கள் ரசிப்பதும், சும்மா இருக்கும் குழந்தைகளையும் இப்படி பேச வைக்கிறது.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// ரவிசங்கர் said...

தப்பான தகவல். அரசு மருத்துவக் கல்லூரியில் விடுதிக் கட்டணம், சாப்பாட்டுச் செலவுக்கு மாதம் 2,000க்குள் முடிக்கலாம். கல்விக் கட்டணம் ஆண்டுக்கே கூட 10, 000க்கு கீழ் தான் வரும் என நினைக்கிறேன்.//




நான் அந்த நேரததில் விளையாட்டாகத்தான் சொன்னது இந்த தொகை...
குறைத்துத்தான் சொல்லக்கூடாது.. அதிகமாகச் சொன்னால் அதற்கேற்றவாறு அவன் தகுதியை வளர்த்துக் கொள்ள முயலலாம் அல்லவா?

நன்றி தகவலுக்கு , ரவிசங்கர்

Anonymous said...

YTK3Qa Hello! Great blog you have! My greetings!

Anonymous said...

Nghcp8 Your blog is great. Articles is interesting!

தேன் கூடு