Sunday, June 03, 2007

ஒரு வித்தியாசமான போட்டி

நம்ம வலைப்பதிவு நண்பர்களுக்கு ஒரு போட்டி

தலைக்கவசம் வாங்கணும்னு சொன்னாங்க..அவசரம் அவசரமா எல்லாரும் வாங்கிட்டாங்க...இப்ப தலைக்கவசம் மாட்டாதவர்களை வற்புறுத்தவேண்டாம்னு ஒரு குழப்பமான அறிக்கையை கொடுத்து தேவையில்லைன்னு சொல்லாமல் சொல்லியிருக்காங்க..

சரி இப்ப வலைப்பதிவு நண்பர்களுக்கு ஒரு போட்டி :

இப்ப வாங்கிய தலைக்கவசத்தை, நாம் உபயோகிக்கும்படி எப்படி மாற்றிக்கொள்ளலாம்?

வெற்றி பெற்றவர்களுக்கு ஒரு புத்தகம் பரிசு அளிக்கப்படும். போட்டியில் கலந்து கொள்பவர்கள் சார்பாக புத்தகம் வாங்குபவர்கள் தமிழ்நாட்டிற்குள் இருக்க வேண்டும்.

நகைச்சுவையாக எழுதுங்கள் இறுதி நாள் : 10-06-2007

- ரசிகவ் ஞானியார்

31 comments:

செல்வேந்திரன் said...

தலைகீழா மாட்டி மாட்டி உள்பக்கமா டூத் பேஸ்ட், பிரஷ், வகையராக்களைப் போட்டு வைக்கலாம்.

செம்மண் நிரப்பி, யாருக்கும் பிரயோசனப்படாத ஏதாவது ஒரு அழகுசெடியை நட்டி வாசலில் தொங்க விடலாம்.

சேதுக்கரசி said...

உங்க போட்டிக்காக ஒரு பி.க :-)

Anonymous said...

Ada ennanga neenga avasarapattu ippidi oru potti announce panniteenga!!!! marupadi entha neram venalum helmet podanum nu sattam varalam. Appo marupadi selavu panna vendamenu atha appidiye batharama bureau la vechiten :))))) ammu

மின்னுது மின்னல் said...

திருவோடாக பயன் படுத்தலாம்

(அவ்வளவு வெறுப்பு வருது இவனுவோ மேல)

நிலவு நண்பன் said...

//
செல்வேந்திரன் said...
தலைகீழா மாட்டி மாட்டி உள்பக்கமா டூத் பேஸ்ட், பிரஷ், வகையராக்களைப் போட்டு வைக்கலாம்.

செம்மண் நிரப்பி, யாருக்கும் பிரயோசனப்படாத ஏதாவது ஒரு அழகுசெடியை நட்டி வாசலில் தொங்க விடலாம்.
//

ம் நல்லாதான் இருக்கு பரிசீலனை செய்வோம்... :)

நிலவு நண்பன் said...

//சேதுக்கரசி said...
உங்க போட்டிக்காக ஒரு பி.க :-) //


நன்றி தொடர் உதவிக்கு

நிலவு நண்பன் said...

//Appo marupadi selavu panna vendamenu atha appidiye batharama bureau la vechiten :))))) ammu //

பரவியில்லை எலிகள் தங்குமிடமாக்கிட்டீங்க..

வாசகன் said...

அதை ஒரு கலை இயக்குனரி (ஆர்ட் டைரக்டர்)டம் கொடுத்து ஏதாவது ஒரு காட்டு விலங்கின் தலையைப் போல் பாடம் செய்து சுவரில் மாட்டி வைக்கலாம்! (பிற்காலத்தில் 'பீலா'வுக்கு உதவும்)

ஜி said...

1. பொண்டாட்டியோட பூரிக்கட்டை அடில இருந்து தப்பிக்க உபயோகப் படுத்தலாம். ( நான் இன்னும் பேச்சில‌ர்தான்)

2. மேனேஜர் மேல உள்ளக் கடுப்ப, அந்தத் தலைக் கவசத்த மேனேஜரோட தலையா நெனச்சு மண்டைல குட்டலாம். வெறுங்கையால குத்திடாதீங்க. அப்புறம் தன் வினை தன்னைச் சுட்டுடும்

3. பொருட்காட்சில ஒரு கடைய வச்சு, ஹெல்மெட்ட தலைகீழாக் கவுத்தி வச்சி அதோட ஓட்டைக்குள்ள பந்த கரெக்ட்டா போட்டா பரிசுன்னு சொல்லி சம்பாதிக்கலாம்

4.தெருவிலுல்ல பிச்சைக்காரனுக்கு இதுதான் அதிஷ்டத் திருவோடுன்னு ஏமாத்தி திருவோடா வாடகைக்கு விடலாம்.

Anonymous said...

hehe.yean ellarum helmet na ippadi sound viduringa?malaysia pakkam ellam u must wear.naan "creative" ah think pani solluren.appala varen.bye

Anonymous said...

tv la paatu kekkurengra perla kadalai podunmbodhu, helmet maatikitu mobile headset a vachu pesunaa, thoguppaalini tension aagi tv volume a korainga kuraikka maataanga... namalum romba neram kadalai podalam ;-)...
- bangalorean.

மின்னுது மின்னல் said...

திருவோடாக

Anonymous said...

தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றிருக்கும் பக்கத்து மாநிலத்தாருக்குக் குறைந்த விலையில் அல்லது இலவசமாகக் கொடுத்துவிட்டு பதிலுக்கு நீங்கள் எங்களுக்குத் தேவையான தண்ணியை - I mean - நதிநீரைக் கொடுங்கள் என்று கேட்டு வாங்கிக்கொள்ளலாம்

நிலவு நண்பன் said...

//Anonymous said...
தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றிருக்கும் பக்கத்து மாநிலத்தாருக்குக் குறைந்த விலையில் அல்லது இலவசமாகக் கொடுத்துவிட்டு பதிலுக்கு நீங்கள் எங்களுக்குத் தேவையான தண்ணியை - I mean - நதிநீரைக் கொடுங்கள் என்று கேட்டு வாங்கிக்கொள்ளலாம் //

அட பெயர் சொல்லாமல் போயிட்டீங்களே....நீங்க ஜெயித்தால் புத்தகம் யாருக்கு அனுப்புவதாம்?

நிலவு நண்பன் said...

//துர்கா|†hµrgåh said...
hehe.yean ellarum helmet na ippadi sound viduringa?malaysia pakkam ellam u must wear.naan "creative" ah think pani solluren.appala varen.bye //

அது மலேசியா..இது இந்தியா...

நிலவு நண்பன் said...

//Anonymous said...
tv la paatu kekkurengra perla kadalai podunmbodhu, helmet maatikitu mobile headset a vachu pesunaa, thoguppaalini tension aagi tv volume a korainga kuraikka maataanga... namalum romba neram kadalai podalam ;-)...
- bangalorean. //அட கடலை சாகுபடி நல்லா பண்ணியிருக்கீங்களே.... :)

நிலவு நண்பன் said...

//மின்னுது மின்னல் said...
திருவோடாக //


அழகா மின்னியிருக்கீங்க..சாரி பின்னியிருக்கீங்க

நிலவு நண்பன் said...

//3. பொருட்காட்சில ஒரு கடைய வச்சு, ஹெல்மெட்ட தலைகீழாக் கவுத்தி வச்சி அதோட ஓட்டைக்குள்ள பந்த கரெக்ட்டா போட்டா பரிசுன்னு சொல்லி சம்பாதிக்கலாம்//

ஹா ஹா...ஹா...பின்னால் இருப்பவர்கள் சந்தேகமாய் பார்க்கும்படி சிரித்தேன்.. ஜி

ஜெஸிலா said...

1. வழுக்க தலையில் கொசு கடிக்காம இருக்க கவசமா மாட்டிக்கிட்டு தூங்கலாம்.

2. குளிக்கிற ஜக்கு மாதிரி உபயோகிக்கலாம்

3. டூர் போகும் போது இசை கருவியா பயன்படுத்தி தட்டி தீர்க்கலாம்

4. தேவையில்லாத சாமான்கள் போட்டு வைக்கலாம்

5. குழந்தைகள் வைத்து விளையாடும் பொம்மைக்கு தூளியாக்கலாம்

இன்னும் யோசைனைகள் அடுக்கலாம் பாவம் மற்றவர்களுக்கும் வாய்ப்பு தரணும் என்ற நல்லெண்ணத்தில் விட்டு வைக்கிறேன் ;-)

Anonymous said...

rasigav unga real name enna? by the way I was in Tirunelveli. Neenga entha area? === ammu

Dubukku said...

1. ஜலதோஷம் பிடிச்சு தலைக்கு படாமல் மேல் மட்டும் ஷவரில் குளிக்கவேண்டுமானால் ஹெல்மெட் போட்டுக்கிட்டு குளிக்கலாம் ஜாலி தலை நனையவே நனையாது

2. "இதுக்கு என் புத்திய செருப்பால அடிச்சிக்கனும்" - டயலாக் விடும் போதெல்லாம் ஹெல்மெட் அணிந்து செயல்முறை விளக்கம் ஃபிலிம் காட்டலாம்

நிலவு நண்பன் said...

//Anonymous said...
rasigav unga real name enna? by the way I was in Tirunelveli. Neenga entha area? === ammu //


இதோ இங்கே போய் பாருங்கள்.

http://nilavunanban.blogspot.com/20
06/05/blog-post_25.html

அபி அப்பா said...

உங்க பதிவை ஆழ்ந்து படிக்கும் எனக்கு பரிசாக நீங்க வாங்கின அந்த ஹெல்மெட்டை தரலாம்:-))

வாசகன் said...

என் பின்னூட்டத்தை ஏன் சார் வெளியிடலை? பரிசு தராட்டியும் பரவாயில்லை. வெளியிடுங்களேன்.
கமெண்ட் மாடரேசன் பக்கத்தில் சோதித்துப்பாருங்கள், எதற்கும்.

Anonymous said...

Page not found :( ====ammu

நிலவு நண்பன் said...

//Page not found :( ====ammu //

http://nilavunanban.blogspot.com/2006/05/blog-post_25.html

siva gnanamji(#18100882083107547329) said...

பத்திரமா வச்சிருங்க,மெருகு கலையாமே!
இன்னும் ஆறு மாசத்திலே இதைவிட ஷ்ட்ராங்கா கோர்ட் ஆர்டர் போடும்;
அரசு ஆணையும் வரும். அப்போ அதிகவிலைக்கு வித்துடலாம்.
(ட்ராபிக் ராமசாமி விடமாட்டாரில்லெ)

Sowmya said...

adada..neraya sollalame..

1. kadan vangitu thappika helmet aa use pannalam.

2. veetula vadam kaaya potta..oru kambula karuppu thuni katti viduvangale , athuku badhila intha helmet aa mattalam

3.veetukullaye carg ball la helmet pottukitu cricket vilayadalam

4.veetula ottadai adikarappo thalai mela vizhama irukka helmet maatikitey ottadai adikalam

5. school pasanga , appa paadam solli tharappo thalaila kuttu vizhama helmet maatikalam

6. thalaila helmet maatikitu thoongina, pathu paai thaandura pen ku dimiki tharalam

7.samayathula poo parikara koodaya kooda payanpaduthalam

8.pakkathu veetula paatu satham over aa ketta helmet maatikitu namma velaya parkalam

9.thiruttu bayam athigama irukirapo, helmet aa oru aayuthama kooda payanpaduthalam

10. ha..ha.. thalai vazhukkaiya irukaravanga , kannadila parkarappo helmet maatikitu parkalam.mana baramathu kurayum ..

pothungala...innum venuma !! :P

இறை நேசன் said...

நான் "ஹீரோவா இல்ல காமடியனான்னு" தன்னைத் தானே கேட்டுக்கொண்டே சட்டையை கிழித்துக் கொண்டு அலைபவர்களின் தலைகளில் மாட்டி விட்டு ஜோக்கராக்கலாம். :-)

நிலவு நண்பன் said...

போட்டி முடிந்துவிட்டது..வித்தியாசமாய் நகைச்சுவையாய் கிண்டலாய் எழுதிய வலைப்பதிவு நண்பர்களுக்கு நன்றி..

போட்டியின் முடிவுகளுக்காக காத்திருங்கள்... இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும்

- ரசிகவ் ஞானியார்

Anonymous said...

TAMIL ENTERTAINMENT SITE:
=========================

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்


சூரியன் வானொலி.
தமிழன்
சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........

ரேடியோ.ஹாப்லாக்.காம்
( radio.haplog.com )

சன் டிவி..............
கே டிவி..............
தமிழன்
உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......

டிவி.ஹாப்லாக்.காம்
( Tv.Haplog.Com )

HINDI ENTERTAINMANT SITE:
=========================

Watch more than 250 A to Z High Quality HIndi Movies.

More than 250 A to Z Mp3 Songs with Download options.

Hindi Comedy and Movie Songs in DIVX Format.

http://hindi.haplog.com

TELUGU ENTERTAINMENT SITE:
==========================

Telugu Movies, Video Songs, Comedy and LIVE GEMINI TV...

http://telugu.haplog.com


MALAYALAM ENTERTAINMENT SITE:
============================

MALAYALAM MOVIES, SONGS and LIVE SURYA TV............

http://malayalam.haplog.com


KANNADA ENTERTAINMANET SITE:
===========================

Decent No. of Kannada Movies for live watch....

http://kannada.haplog.com

Also..........

http://photos.haplog.com
http://music.haplog.com

More.........................

தமிழ்.ஹப்லாக்.காம் Telugu.haplog.com Hindi.haplog.com Malayalam.haplog.com kannada.haplog.com music.haplog.com radio.haplog.com tv.haplog.com
(Tamil.Haplog.com)

தேன் கூடு