Sunday, June 03, 2007

தயவுசெய்து ஹெல்மெட் தலையுடன் உள்ளே வரவேண்டாம்

கட்டாய ஹெல்மெட் அணியும் சட்டமஅமுலுக்கு வந்துவிட்டது.நானும் இந்தச் சட்டம் எப்படியாவது தள்ளுபடியாகிவிடும் என்றுதான் இவ்வளவு நாட்கள் காத்திருந்தேன்.

ஹெல்மெட் வாங்கியபிறகு இந்தச் சட்டத்தை தள்ளுபடி செய்துவிட்டால் அப்புறம் வாங்கி வீணாகிவிடுமே என்று நினைத்தேன். ஆனால் வாங்க வைத்துவிட்டார்கள். நான் மட்டுமல்ல நிறையபேர் இப்படித்தான் இருந்திருக்கிறார்கள் என்று ரோட்டோர பிளாட்பாரங்களில ஹெல்மெட் வாங்க மொய்த்திருக்கும் கூட்டத்தைப் பார்த்து புரிந்து கொண்டேன்.

இனிமேல் அனைவருமே மொட்டையாகச் சுற்றப்போகின்றோம். யார் என்ன ஹேர்ஸ்டைல் வைத்திருந்தாலும் சரி மொட்டைதான். இனிமேல் முடி காற்றில் பறக்க ஸ்டைல் காட்ட முடியாதே என்றுதான் பல இளைஞர்கள் கவலைப்படுகின்றார்கள். பெண்களும் அப்படித்தான் கூந்தலுக்கு 1 மணிநேரம் செலவழித்து செய்கின்ற மேக்கப் எல்லாம் பேக்கப் ஆகிவிடும் என்று கவலைப்படுகின்றார்கள்.

முடிபறக்க பைக்கில் பந்தாவாக செல்ல வேண்டுமானால் ஹெல்மெட்டுக்கு மேலே நாம் விரும்பும் விக் வைத்துக் கொள்ளலாம்.

கொள்ளைக்காரர்கள் மற்றும் ஆட்களைத் தாக்கிவிட்டு ஓடுபவர்களுக்கெல்லாம் ஒரே குஷிதான். பின்னே..? இனிமேல் எல்லாரும் ஒரே மாதிரி மொட்டைத்தலையுடன் சுற்றும்பொழுது இதுபோன்ற குற்றங்கள் அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கின்றதே?

இனிமேல் எதிரில் வருபவர்கள் யாருன்னு கண்டுபிடிப்பது சிரமம்தான். வேணுமுன்னா ஒண்ணு பண்ணலாங்க..

ஒவ்வொரை ஊரையும் கடக்கும்பொழுது செல்பொனில் நெட்வொர்க் உள்ள அந்தந்த ஊரின் பெயர் வருமே அதுபோல ஹெல்மெட்டிலும சென்ஸார் பொருத்திவிடவேண்டும். நமக்குத் தெரிந்தவர்கள் எதிரில் வரும்பொழுது நமது ஹெல்மெட்டில் விளக்கு எரியவேண்டும் அல்லது இந்த ஆள் வருகிறார் ( Display Screen) என்று காண்பிக்க வேண்டும். உடனே நாம் தெரிந்து கொள்ளலாம் அல்லவா? இந்த ஐடியாவை பயன்படுத்தி யாரும் புதிய ஹெல்மெட் கண்டுபிடிச்சாங்கன்னா எனக்கு ராயல்டி வாங்கித் தாங்கப்பா.

Photo Sharing and Video Hosting at Photobucket
நான் இரண்டு நாட்கள் முன்புதான் ஹெல்மேட் வாங்கினேன். கறுப்பு நிற ஹெல்மெட்டில் நீல நிறத்தில் நெருப்பு எரிவதைப்போன்ற படம் இருக்கும். ஆனால் ஹெல்மெட்டைப் பாதுகாக்க பூட்டும் வாங்கணும். பின்னே எங்கே போனாலும் கையில் தூக்கி வைத்துக்கொண்டு போக முடியாது. இப்பொழதே சில இடங்களில் ஹெல்மெட்டை பூட்டியோ பூட்டாமலோ வைத்திருந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல என்று பார்க்கிங் பகுதிகளில் எழுதி வைத்திருக்கின்றார்கள்.


ஒரே வடிவத்தில் நிறைய ஹெல்மெட்டுக்கள் வலம் வருவதால் ஒவ்வொருவரும் அவர்களது ஹெல்மெட்டில் தங்களது பெயரை எழுதி வைத்துக்கொள்ளுங்களேன்.


முதல் நாளான நேற்று (01-06-07) ஹெல்மெட் அணிந்து கொண்டு செல்லும்பொழுது எதிரில் வருகின்றவர்களும் ஹெல்மெட் அணிந்திருக்கின்றார்களா என்றே கவனிக்கத் தோன்றுகின்றது. எதிரில் வருகின்றவர்களும் அவ்வாறே கவனிக்கின்றார்கள்.

ஒரு இளைஞன் ஹெல்மெட் அணியாமல் வந்து எதிரில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களை கண்டு கேலியாக சிரித்துக்கொண்டு செல்கின்றான்.

சிலர் 3 பேராக குடும்பத்தோடு பைக்கில் வந்தாலும் 3 பேரும் ஹெல்மெட் அணிந்து சட்டத்தை ஒழுங்காக பின்பற்றுகின்றார்கள்.


நிறைய காதலர்கள் இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருப்பாங்க. இனிமேல் யாருக்கும் தெரியாமல் முந்தானையால் முக்காடு போட்டுக்கொண்டு காதலனின் பின்னால் அமரவேண்டியது இருக்காது ஒரு ஹெல்மெட் அணிந்தால் போதும் யாரும் கண்டுக்க மாட்டாங்க.

எப்பவாச்சும் விபத்து ஏற்பட்டது என்றால் தலையில் அடிபடாமல் தப்பிப்பதற்காக ஹெல்மெட் அணியவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு இட்டதெல்லாம் சரிதான். நடந்து செல்கின்ற எத்தனையோ பேர் மீது வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின்ற செய்தி தினமும் பத்திரிக்கையில் படிக்கின்றோம். அப்படியென்றால் பாதசாரிகளுக்கும் ஹெல்மெட் அணியவேண்டும் என்று கட்டாயச் சட்டமிட்டால் நிறைய உயிரிழப்புக்களைத் தவிர்ககலாமே?

இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியவேண்டும் என்று சட்டம் சொல்கின்றது. அப்படியென்றால் சைக்கிளில் செல்பவர்களும் அணியவேண்டுமா?


மொட்டைத்தலை அல்லது முழுவதும் வழுக்கையாக உள்ளவர்கள் ஹெல்மெட் அணிவதை தவிர்க்க விரும்பினால் கறுப்பு கலரில் வண்ணம் அடித்து நெற்றியில் நீட்டிக்கொண்டிருக்கும்படி தொப்பியணிந்தால் போதும் போலிஸார்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிடலாம்.

தலைக்காயங்கள் சம்பந்தமாக மருத்துவருக்கு வருமானம் இனிமேல் குறையக்கூடும்
ஹெல்மெட் அணிவதால் வெயிலிலிருந்தும் கடன்காரர்களிடமிருந்தும் எளிதில் தப்பித்துக் கொள்ளலாம்.

இனிமேல் பைக்கில் செல்லும்பொழுது செல்போனில் பேசுபவர்களை காண முடியாது. இதனால் நிறைய விபத்துக்களைத் தவிர்க்கலாம்.

யாரும் லிப்ட் கேட்க மாட்டார்கள். ( லிப்ட் கேட்பவர்கள் கைகளில் ஹெல்மெட் வைத்திருக்கவேண்டுமல்லவா?)


தயவுசெய்து செருப்புக் காலுடன் உள்ளே வரவேண்டாம் என்பது போல
தயவுசெய்து ஹெல்மெட் தலையுடன் உள்ளே வரவேண்டாம்.
ஹெல்மெட்டை வாசலில் கழற்றி விடவும்.
ஹெல்மெட் திருடர்கள் ஜாக்கிரதை
போன்ற பலகைகளை எங்கெங்கும் காணலாம்.


ஹெல்மெட் அணிவதால் வியர்வை வழிந்து முடி கெட்டுப்போய்விடும் என்கிறார்கள்
அட விழுந்தால் முளைக்கின்ற முடிக்கு படுகின்ற கவலையை அவர் உயிருக்கு படுவதாய் தெரியலை

இன்று (03.06.07) பத்திரிக்கையில் ஹெல்மெட் அணியாதவர்களை இடையூறு செய்யவேண்டாம் என்று கருணாநிதி அறிவித்திருப்பதை இனிமேல் ஹெல்மெட் அணியவேண்டாம் என்று மக்கள் எடுத்துக்கொண்டார்கள். குழப்பமான அறிவிப்பு இது. தெளிவாகச் சொல்லியிருக்கலாம்.

நான் இன்று ஹெல்மெட்டோடு வருவதை பார்த்து ஹெல்மெட் அணியாதவர்கள் இளக்காரத்துடன் பார்த்துச் செல்கின்றார்கள். "பார்த்தியா நீ பயந்து போய் சட்டத்திற்கு கட்டுப்படுகிறாய் நான் சட்டத்திற்கு கட்டுப்படவில்லை" என்கிற ரீதியில் அவர்களின் பார்வை இருக்கின்றது.

"என்னப்பா ஹெல்மெட் அணியவேண்டாம்னு சட்டம் வந்திட்டுதே நீ ஏன் இன்னமும் ஹெல்மெட்டுமன் அலைகின்றாய்?" என்று என்னிடம் எதிர்ப்படும் பெரிசுகள் எல்லாம் கேட்கின்றார்கள்.

என்னவோ போங்க இனிமேல் அனைவரும் தலைக்கணத்தோடு அலையவேண்டியதுதான்.


தலைக்கவசம் உங்கள் உயிர் காக்கும்
எங்கள் வயிறு காக்கும்

இப்படிக்கு

தலைக்கவசம் விற்பனையாளர்கள் சங்கம்

- ரசிகவ் ஞானியார்

7 comments:

அபி அப்பா said...

இந்த பதிவை ஆராய்ச்சி பண்ணி பார்த்த போது
ஹெல்மெட் என்னும் வார்த்தை 36 முறையும் தலைகவசம் என்ற வார்த்தை 2 முறையும் ஹெல்மெட் படம் 1 முறையும் உள்ளன.(தலைப்பும் சேர்த்துதான்):-))))

நல்ல பதிவு ரசிகவ்ஞானியார்!!!!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//இந்த பதிவை ஆராய்ச்சி பண்ணி பார்த்த போது
ஹெல்மெட் என்னும் வார்த்தை 36 முறையும் தலைகவசம் என்ற வார்த்தை 2 முறையும் ஹெல்மெட் படம் 1 முறையும் உள்ளன.(தலைப்பும் சேர்த்துதான்):-))))//


அட மெனக்கெட்டு இதைப்போய் எண்ணியிருக்கீங்களாக்கும்..

நீங்க அபி அப்பா இல்லை
அபி வில்லன்...

selventhiran said...

அண்ணாத்தே, நேத்து ரவைக்கே அமைச்சரூங்கோ அல்லாரும் மீட்டிங் போட்டு ஹெல்மெட் அவசியமில்லைனுட்டாங்களே, நூஸ் கேட்கலையா

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//செல்வேந்திரன் said...
அண்ணாத்தே, நேத்து ரவைக்கே அமைச்சரூங்கோ அல்லாரும் மீட்டிங் போட்டு ஹெல்மெட் அவசியமில்லைனுட்டாங்களே, நூஸ் கேட்கலையா //


அட இத முன்னாலையே சொல்லியிருக்க கூடாதா.. வாங்கிய ஹெல்மெட்டை என்ன செய்ய?

Anonymous said...

அட பாவிங்களா! தலைக்கவசம் உலகத்தில் பல நாடுகளில் கட்டாய பாவனையில் உள்ளது. அதன் பயன் ஏன் இந்தியாவில் புரியப்படவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கின்றது?

புள்ளிராஜா

பரமார்த்தகுரு said...

ஹெல்மட்

கவிழ்த்து வைத்த இரும்புபத்திரம் தானை அணிவார்
அவிழ்த்து வைக்க இடமில்லை தான் என்பார்
விழித்து நிற்பார் காவலர் தாம் மறிக்கையேலே அவர்
மகிழ்த்து போவார் அரசின் பல்டியிலே...

வாசகன் said...

தல...
தலைக்கவசத்தை அதிக அளவு உற்பத்தி செய்துவைத்துவிட்டு விற்கத்திணறியவர்களின் சதி போலாகிவிட்டது இந்த சட்டமும் திட்டமும்.

BYW, நீங்க ஏன் விடாப்பிடியா ஹெல்மெட் போடுறீங்கன்னு சொல்லவா?..ஏன்னா நீங்க தானே தல..!

தேன் கூடு