
அலட்சியமாய் களைந்த
ஆடைகளையெல்லாம்
பொறுக்கி எடுத்து ...
துவைத்து வைப்பாள்!
தன் வயிறு
காய்வதைப்பற்றி
கவலைப்படாமல் ...
துணிகளை காயவைப்பதில்
கவனமாய் இருப்பவள்!
மிச்சம் ஏதுமின்றி
தின்று வீசிய
பாத்திரங்களை ...
பத்திரமாய் பூசி விடுவாள் !
நாங்கள் வேண்டாமென்று
ஒதுக்கிய உணவுகள் ...
அவளுக்கு அமுதம் !
சொந்தக்குழந்தை
வீட்டில் அநாதையாய் இருக்க...
எங்கள் வீட்டுக்குழந்தைகளை
சொந்தமாக்குபவள்!
ஒருநாள் வராவிடினும் ...
வீட்டை கூவம் என்று அழைப்போம் !
இப்படி
விவரம் தெரிந்த நாள்முதல்
அறிவிக்கப்படாத உறவாக ..
வலம் வருபவள்!
இன்று காலைதான் செய்தி வந்தது:
என் வீட்டு
வேலைக்காரி இறந்துவிட்டாளாம்!
அய்யோ!
நாளை
தேங்கும் வேலையை
யார் செய்வதாம்?
- ரசிகவ் ஞானியார்
9 comments:
//அய்யோ!
நாளை
தேங்கும் வேலையை
யார் செய்வதாம்?
//
:-)
நல்ல கவிதை நண்பா!
aaha rasigav romba arumai aah irukunga kavithai. and its very practical too. avanga illainu nenaikratha vida avanga velaya yaar pakrathunu thaan problem aah irukkum nowadays. keep it up :) ammu
// நாமக்கல் சிபி said...
:-)
நல்ல கவிதை நண்பா! //
நன்றி சிபி...
//Anonymous said...
aaha rasigav romba arumai aah irukunga kavithai. and its very practical too. avanga illainu nenaikratha vida avanga velaya yaar pakrathunu thaan problem aah irukkum nowadays. keep it up :) ammu //
எந்த தேசத்திலிருந்து இந்த அம்மு..
///அறிவிக்கப்படாத உறவாக ..
வலம் வருபவள்!///
அறிவிக்கப்படாத உறவுகள்
எதிர்பார்ப்பினால் உருவாகும்
அகவிருப்பம் சாட்சியாக.
நிலவு நண்பன்
யதார்த்த உண்மை சுடத்தான் செய்கிறது
//மதுமிதா said...
அறிவிக்கப்படாத உறவுகள்
எதிர்பார்ப்பினால் உருவாகும்
அகவிருப்பம் சாட்சியாக.
நிலவு நண்பன்
யதார்த்த உண்மை சுடத்தான் செய்கிறது //
நன்றி மதுமிதா...
I am an Indian :) ammu
//Anonymous said...
I am an Indian :) ammu //
இந்திய மண்ணிலிருந்துதானா... ?
நன்றி..நன்றி..
அருமையான கவிதை ரசிகவ். அப்படியே ஒரு கண்ணாடியா போட்டு உடச்சிட்டீங்க..
//ஜி said...
அருமையான கவிதை ரசிகவ். அப்படியே ஒரு கண்ணாடியா போட்டு உடச்சிட்டீங்க.. //
நன்றி ஜி..இதுதான் நிஜம்..
Post a Comment