Monday, April 03, 2006

உறுத்தல்




மணநாளின் ..
மாப்பிள்ளை ஊர்வலத்தில்
தற்செயலாய் கவனித்தேன்.!

கடைசி வரிசையில்
கண்ணீருடன்
சபித்துக்கொண்டே.. ..
என்னைக் காதலித்தவள்!



-ரசிகவ் ஞானியார்

10 comments:

பொன்ஸ்~~Poorna said...

ஒரு காலத்தில் காதலித்தவள் சபிக்கவும் செய்வாளா? எங்கிருந்தாலும் வாழ்க என்று சொல்ல மாட்டாளா என்ன?? எனக்குத் தெரிந்து, தமிழ்நாட்டு சீரியலில் வரும் பெண்கள் மட்டும் தான் காதலித்தவனையே பழிவாங்கப் புறப்படுகிறார்கள் :)


எப்படியோ கல்யாணத்திற்கு வாழ்த்துக்கள்.. சொன்னபடி கூப்பிடாமயே விட்டுட்டிங்களே சார்.. ;)

Anonymous said...

ரசிகவ்

அப்படியும் சபிப்பாங்களா என்ன..?

அனுபவமா?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ரசிகவ்

அப்படியும் சபிப்பாங்களா என்ன..?

அனுபவமா? //


சபிக்கிறவங்களும் இருக்காங்க பா..

நம்ம அனுபவமெல்லாம் இல்லை..


//பொன்ஸ் said...

எப்படியோ கல்யாணத்திற்கு வாழ்த்துக்கள்.. சொன்னபடி கூப்பிடாமயே விட்டுட்டிங்களே சார்.. ;) //

கண்டிப்பா வாங்க ஆசிர்வாதத்திற்காக

எனக்கு சபிக்கும் படி யாருமில்லைன்னு பொய் சொல்ல மனம் வரவில்லை..

Anonymous said...

//கடைசி வரிசையில்
கண்ணீருடன்
சபித்துக்கொண்டே.. ..
என்னைக் காதலித்தவள்!//


"என்னைக் காதலித்தவளா" இல்லை
"நான் காதலித்தவளா" ரசிகவ்..?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//"என்னைக் காதலித்தவளா" இல்லை
"நான் காதலித்தவளா" ரசிகவ்..? //


நான் காதலித்தவளை திருமணம் செய்யலாம்;
என்னைக் காதலித்தவளை நான் என்னங்க செய்வேன்..?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

/ஷாஜி said...
நல்ல கவிதை.. அருமை நண்பரே..

நீங்கள் தொடருங்கள்.. நான் அளவின்றி ரசிப்பவன் //

தங்களின் ரசனைக்கும் ஆதரவுக்கும் நன்றி ஷாஜி..

Anonymous said...

உங்களுக்கு ஒருத்திதான்
கண்ணில்பட்டால் போல?

யாருக்குத் தெரியும் ஞானியின்
குறும்புக்கும்.. லொள்ளுக்கும்
அவர் கவிதைக்கும்...

அனேகமா.. எப்படியும் ஒன்றுக்கு
மேலாக இருந்திருக்கும்..
கண்ணீர்விடுபவர்கள் பட்டியலில்
:-) :-)


கவிதை நல்லா இருக்கு :-)

நேசமுடன்..
-நித்தியா

Anonymous said...

உங்களுக்கு ஒருத்திதான்
கண்ணில்பட்டால் போல?

யாருக்குத் தெரியும் ஞானியின்
குறும்புக்கும்.. லொள்ளுக்கும்
அவர் கவிதைக்கும்...

அனேகமா.. எப்படியும் ஒன்றுக்கு
மேலாக இருந்திருக்கும்..
கண்ணீர்விடுபவர்கள் பட்டியலில்
:-) :-)


கவிதை நல்லா இருக்கு :-)

நேசமுடன்..
-நித்தியா

Anonymous said...

உங்களுக்கு ஒருத்திதான்
கண்ணில்பட்டால் போல?

யாருக்குத் தெரியும் ஞானியின்
குறும்புக்கும்.. லொள்ளுக்கும்
அவர் கவிதைக்கும்...

அனேகமா.. எப்படியும் ஒன்றுக்கு
மேலாக இருந்திருக்கும்..
கண்ணீர்விடுபவர்கள் பட்டியலில்
:-) :-)


கவிதை நல்லா இருக்கு :-)

நேசமுடன்..
-நித்தியா

Gnaniyar @ நிலவு நண்பன் said...

/ நித்தியா said...
உங்களுக்கு ஒருத்திதான்
கண்ணில்பட்டால் போல?//



அட நீங்க வேற குடும்பத்தில குழப்பத்தை உண்டு பண்ணிறாதீங்கம்மோவ்..

தேன் கூடு