வாக்களித்து ஏமாற்றும்...
என்னவளும்
அரசியல்வாதிதான்!
என்னவளை
சட்டசபையில்
சேர்த்துவிடுங்கள்!
ஆம்
என்மீது
செருப்பை வீசுகிறாள்!
என்னவளை
எப்படியாவது
எம் எல் ஏ ஆக்கிவிடுங்கள்!
ஆம்
அவளைப்பார்த்தே
நாளாகிவிட்டது!
என்னவளை
பாராளுமன்றத்திற்குப்
போகச்சொல்லுங்கள்!
ஆம்
திடீரென்று
கவிழ்க்கிறாள்!
என்னவளை
கஷ்டப்பட்டாவது
கவர்னராக்கிவிடுங்கள்!
ஆம் அடிக்கடி
இதயப்பல்கலைக்கழகத்திற்கு...
கிறுக்கன் பட்டம் தருகிறாள்!
லஞ்சஊழல் போலவே
நெஞ்சஊழல் செய்கிறாள்!
இவளுக்கு நன்றாக
நடிக்கவும் தெரிகிறது!
ஆகவே
என்னவளை
அரசியல்வாதி ஆக்கிவிடுங்கள்!
- ரசிகவ் ஞானியார்
3 comments:
காதல் தேர்தல்ல நின்னு 'டெபாசிட்' இழந்த மாதிரி தெரியுது!
வித்தியாசமான கவி நன்றாக உள்ளது. உங்களவள் அரசியல்வாதி ஆனால் நீங்கள் பொதுசனமா? கடவுளே உருப்பட்ட மாதிரித்தான்.
Hi
Kaadhalaa? nadaththunga.
Yes.. this poem is different..good
Post a Comment