இன்று காலையில் தினத்தந்தியை திறந்தேன் ஒரு சோகமான செய்தி.
பட்டதாரி பெண்ணை காதலித்து கற்பழித்து கொன்ற வாலிபர் கைது :
தூத்துக்குடியை சேர்ந்த பேச்சியம்மாள் என்ற 24 வயது பட்டதாரி பெண் வீட்டை விட்டு காதலனோடு ஓடினாள். அவள் காதலன் அவளை அழைத்து சென்று கொல்லம் விடுதியில் வைத்து அவளை கற்பழித்து கொலைசெய்து விட்டு அவளுடைய 40 பவுன் நகையையும் பறித்துகொண்ட காதலன் கைது.
என்ற செய்தியை படித்தவுடன் மனசுக்குள் சுர்ரென்று அந்நியன் மாதிரி ஒரு கோபம். என்னடா காதல் இது? ச்சே ..அந்த காதலனை சவுதியில கொடுக்கிற தண்டனைய போல தலையை எடுக்ககூடாது. என்ன திமிர் அவனுக்கு..?
தான் ஆண் என்ற திமிர்.களவு செய்கையில் ஈடுபட்டால் தன்னை விட பெண்மைக்குதான் பாதிப்பு என்ற
ஆண்மையின்
அதிகாரத்துஷ்பிரயோகம்..
அவனை காதலன் என்று போடாதீர்கள் பத்திரிக்கையாளர்களே..அது காதலுக்கும் உண்மையாய் காதலிப்பவர்களுக்கும் அசிங்கம்.
அந்தபெண்ணுக்கும் அறிவு எங்கே போச்சு? எந்த நம்பிக்கையில் அவனை காதலிக்கிறாள்..? அட பொண்ணுங்களுக்கு ஏம்பா இப்படி அறிவு போகுது. ஒருத்தன் வீட்டை விட்டு ஓடி வான்னு கூப்பிட்டா போயிடறதா…அதுவும் நகையோட..
சரி அந்தபைணன்தான் ஓடி வான்னு கூப்புடுறான்..நகையை கொண்டுட்டா ஓடுறது. ஏன் காதலிக் தெரிஞ்ச அந்த நாய்க்கு பொண்டாட்டிய வச்சு காப்பாத்த வக்கில்லயா...?
என்னோட நிஜம் என்ற கவிதை ஒண்ணு ஞாபகம் வருது
"கட்டிய சேலையோடு வாடி"
என்கிறது உதடு
"கொஞ்சம்
கட்டுப்பணத்தோடும் வாயேன் "- என
கதறுகிறது மனசு.
அதுக்குத்தான் சொன்னேன்..
காதலிக்கும்போது அன்பு - மனசு - இதயம் - பீச் - பார்க் - தியேட்டர்..அப்படி ஜாலியான வார்த்தைகள்தான் காதில் விழும்..வாழ்க்கைன்னு வரும்போதுதான் தெரியும். வீட்டு வரி - கரண்ட் பில் - வாடகை - இதெல்லாம் இருக்குதுன்னு..
அட காதலிங்கம்மா வேண்டாம்னு சொல்லல...ஆனா வீட்டை விட்டு ஓடுறது ரொம்ப அசிங்கம்மா..அது சுயநலம் இல்லையா? சரி வீட்டுல எதிர்த்தாங்களா..போராடுங்க. .. போராடுங்க..போராடிகிட்டே இருங்க....
அந்தப்பெண்ணோட தந்தைக்கு எந்த அளவுக்கு வலி இருந்திருக்கும்?
காதலியின் பார்வையில் இருந்து சிந்திக்க வேண்டாம்
காதலனின் பார்வையில் இருந்து சிந்திக்க வேண்டாம்
அந்த பெண்ணின் தந்தை - அண்ணன் பார்வையில் இருந்து சிந்தியுங்கள்.
சினிமாவுல வர்ற காதல் எல்லாம் ஓடிப்போகறது வரை காட்டானுங்க..அதுக்கு பிறகு என்ன நடக்குதுன்னு காட்டுங்கப்பா..?
ஓடிப்போனவளுக்கு அக்கா தங்கைன்னு இருந்தா அவங்களுக்கு மாப்பிள்ள அமையறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?
"அந்த பொண்ணா! அவ தங்கச்சி எவனோடவோ ஓடிப்போனா..இவ மட்டும் எப்படி இருப்பா?"
போன்ற கமெண்ட்ஸ்கள் வர ஆரம்பித்துவிடும். ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை அமைவது எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது தெரியுமா இப்பொழுது? நிச்சயம் பண்ணப்பட்ட பிறகும் கூட அந்தப் பெண்ணைப்பற்றி கிளம்பிய வதந்திகளால் எத்தனையோ திருமணம் நிறுத்தப்பட்டிருக்கிறது.
இது தேவையா..? எவனோ ஒருவனுக்காக சகோதரிகளின் வாழ்க்கையை நடுத்தெருவில் விடுவது பச்சை பொறுக்கிதனம் இல்லையா...
இதெல்லாம் விடுங்க அந்தப்பெண்ணோட தந்தையை நினைச்சு பாருங்க...? பார்த்து பார்த்து பொண்ணை வளர்த்து படிக்க வச்சு அவ அழகுக்கு அவ விரும்புற நகையை போட்டு ...இப்படி எல்லாம் செஞ்ச பொண்ணுக்கு ஓடிப்போகும்போது ..சமுதாயத்தில அவருக்கு என்ன மரியாதை கிடைக்கும்..அதுமட்டுமில்ல அவரு போட்ட நகையும் |சேர்த்து எடுத்துட்டு போயிடுறாங்க... எவ்வளவு பாடுபட்டு அந்த நகையை சேர்த்திருப்பாரு அவரு..?
இந்த காலத்துல பொண்ண பெத்து வளர்க்கிறதுன்கிறது சாதாரண விசயமில்ல..
கண்ணாடி சில்லின் மீது நின்று கொண்டு
கபடி ஆடுவதை போன்றது.
ரொம்ப கவனமா இருக்கணும். கொஞ்சம் பிசகுனாலும் அவ்வளவுதான்...
இதுக்குத்தான் பெண்களே ...நவநாகரீக போதையில் ஆபாசமாய் ஆடை அணியாதீர்கள்...அது கயவர்களின் காம இச்சைக்கு தூண்டுகோலாய் அமையும். காதலன் என்ற உரிமை இருக்கட்டும். அவனை தொட்டு பேசுவதற்கு தயவுசெய்து அனுமதிக்காதீர்கள். அப்படி தொட்டு பேசுவதைதான் அவன் விரும்புகிறான் என்றால்..அவன் காதலன் அல்ல..சைத்தான்...
அவன் தொட்டு பேசுவதை விரும்புகிறான் என்றால் அவன் தங்கையோ அல்லது அக்காவோ எவனுடனாவது தொட்டு பேசுவதை பார்க்க நேரிட்டால் அவன் மனம் என்ன பாடு படும்...?
இந்த கவிதையில் உள்ளது போல தனக்கென்று வந்தால்தான் தெரியும் காய்ச்சலும் காதலும்.
ஒரு பட்டாம்பூச்சி பேசுகிறேன்
கடைவீதியில்
கலாச்சாரத்தை விற்கின்ற
ரோமியோக்களே!
உங்களை நோக்கி
ஒரு
பட்டாம்பூச்சி பேசுகிறேன்
நீங்கள்
எதுவேண்டுமானாலும் செய்யலாம்
பேருந்தில்
கணக்கு நோட்டை
கொடுக்கும் சாக்கில்
கையைப் பிடித்தும் கிள்ளலாம்
நாங்கள்
நடந்துவரும் வீதியிலே
நக்கலடித்தும் செல்லலாம்
இந்தியா வீசிய
இராக்கெட்டை விடவும் வேகமாக
காகித அம்பும் வீசலாம்
தனியே வரும் பெண்களிடம்
தரக்குறைவாய் பேசலாம்
நீங்கள்
எதுவேண்டுமானாலும் செய்யலாம்
ஐ லவ் யு சொல்லதவள் மீது
ஆசிட்டும் ஊற்றலாம்
எங்கள் கூட்டத்தினுள்
பைக்கில் நுழைந்து
பதறவும் வைக்கலாம்
பின்னால் வந்து
ஹாரன் அடித்து
அலற வைக்கலாம்.
சிட்டி பெண்ணின் உடையைகண்டு
சீட்டி அடித்து விளையாடலாம்
எது வேண்டுமானாலும் செய்யலாம்
கல்லூரிக்குச் சென்ற உன்
தங்கையின் ஞாபகம்
தலைதூக்காதவரை
நீங்கள்
எதுவேண்டுமானாலும் செய்யலாம்.
- ரசிகவ் ஞானியார்
இந்த நாகரீக உலகில் நான் சொல்வது தவறுகள் போல தெரியலாம். ஆனால் சிந்தித்து பாருங்கள் உண்மை புலப்படும்
ஆபாசமாய் ஆடை அணிய வேண்டாம்
ஆண் நட்பை எல்லைக்குள் வைத்திருங்கள்.
காதலனை தொட்டு பேச அனுமதிக்க வேண்டாம்.
டேட்டிங் -
அது
விபச்சாரத்தின்
ஹைக்கூ......
இப்படி கூறினால் உடனே பெண்மைக்கு எதிராய் பேசுவதாக குதிக்க வேண்டாம். சிந்தித்து பாருங்கள்.
இதயம் நெகிழ்வுடன்
ரசிகவ் ஞானியார்
3 comments:
உங்கள் கருத்து உண்மைதான். படங்கள் எப்பொழுதும் ஒரு பக்கத்தை மட்டுமே
காண்பிக்கிறார்கள். இதில் சிக்கிக்கொண்டு வாழ்க்கையை வீணாக்கியவர்களின்
கதைகளை யாரும் பேசுவதில்லை.
நல்லா மண்டையில உறைக்கிற மாதிரி சொல்லிருக்கீங்க ரசிகவ்.
Hi
This essay is too good. It conveys the openion of the public. Flow in the esaay is an aditional advantage for the success of the essay.
Good.. write more.
M. Padmapriya
Post a Comment