Monday, June 06, 2005

கால் நனைத்தவர்கள்

என் வாழ்க்கையின் பல்வேறு காலக்கட்டங்களில் என் வாழ்க்கை நதியில் கால் நனைத்துவிட்டு ஓடியவர்களைப்பற்றி எழுதலாமென நினைத்தேன். இப்பொழுதுதான் ஆரம்பித்திருக்கிறேன். கால் நனைத்துச் சென்றவர்கள் எல்லோரைப் பற்றியும் எழுதலாமென ஆசை..ஆனால் காலம் அனுமதிக்க வேண்டும்.இப்பொழுதான் ஆரம்பித்திருக்கிறேன்..
முடிவு ஞாபகத்தின் கைகளில்..

முதலில் என் தாயிடம் காட்டினேன்..ரசித்துவிட்டு கூறினார்கள்..எப்படிடா அந்த வயசில் நடந்தது எல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கிறது என்று?
கண்ணாடிக்குத் தெரியாமல் அவர்கள் கண்கலங்கியது எனக்கு மட்டும் தெரிந்தது.
எனக்கு எந்த விருதுமே தேவையில்லை
அந்த கண்ணீர்தான் என் கவிதையின் பரிசு.

2 comments:

Ganesh Gopalasubramanian said...

நண்பரே நன்றாயிருக்கிறது தொடருங்கள்
அருகிலிருக்கும் ஆத்மாக்களை ஆத்மார்த்தமாக உணர்ந்திருக்கிறீர்கள்.
நானும் எழுத ஆரம்பிக்கனும் சைக்கிள் கடை தாத்தா, பக்கத்து வீட்டு செல்வி அக்கா_ன்னு.
உங்கள் பதிவு வைரமுத்துவும் "இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்"ஐ நினைவு படுத்துகிறது. படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

முத்துகுமரன் said...

நல்ல பதிவு ரசிகவ், போலியில்லாத அந்தக் கணங்களை வாசிப்பது மனதிற்குள் ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. நீங்களும் துபாய்தானா . வாய்ப்பிருந்தால் விரைவில் சந்திக்கலாம்

தேன் கூடு