Thursday, June 19, 2008

பாம்பின் வாசனை





தூரமாய் இருக்கும்பொழுது
நீ
அலைபேசி வழியாக அனுப்புகின்ற
பூக்களின் வாசனை,
நெருக்கத்திலிருக்கும்பொழுது
இடையில் ஊர்கின்ற
பாம்புகளின் பயத்தில்
வாடிப்போகின்றது!

என்னை எரிச்சல்படுத்திய
உனது ஆளுமையின் முட்களை
எடுத்தெறிய
நினைத்தபொழுது,
கையில் இடறியது
ஓர்
ஓற்றை ரோஜா!

நமக்குள்ளான
காதல் கடிதங்களை மட்டும்
நான் சேமித்திராவிட்டால்,
உன் மீதான கோபத்தை
எந்தக் காரணியாலும்
தீர்க்க முடியாமல் போயிருக்கும்!

- ரசிகவ் ஞானியார்

7 comments:

Anonymous said...

அருமை நண்பரே.. அருமை :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//சேவியர் said...

அருமை நண்பரே.. அருமை :)//


சேவியரிடமிருந்து வாழ்த்து கிடைப்பது மிகவும் அரிது...

நன்றி நண்பரே

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரொம்ப நல்லா இருக்கு ... உண்மையாவும் இருக்கு :))

Anonymous said...

Very nice. .very true :-)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Ezhilanbu said...

Very nice. .very true :-)//


நன்றி மிக்க நன்றி..சரி உங்க நிஜப்பெயரில் பின்னூட்டம் இடவேண்டியதுதானே?

Anonymous said...

yen indha per nalla illaya ?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Ezhilanbu said...

yen indha per nalla illaya ?//

நல்லாயிருக்கு ஆனால் பெயர்க்காரணம் சொல்லுங்கள்

தேன் கூடு