தோழன்மீர்,
வாசிப்பு மட்டுமே நம்மை சுற்றி இருக்கும் உலகினை நேசிப்புக்கு உள்ளாக்கும். வாசிப்பு மட்டுமே உலகின் பிரம்மாண்டங்களையும், அழகினையும், அழகியலையும், வாழ்வையும், வலிகளையும் நமக்கு விரிவாக எடுத்துரைக்கும். மாறி வரும் வேகமான சூழ்நிலைகளில் வாசிப்பு குறைந்து வருகின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை. கணிப்பொறி சார்ந்தவர்கள் என்று எடுத்துக்கொண்டால் வாசிப்பதற்கு நேரம் மிகக்குறைவு.
கணிப்பொறி வல்லுனர்கள் என்றால் வார விடுமுறையில் கூத்து கும்மாளமிட்டு திரிபவர்களாக இச்சமூகம் கணித்து வைத்திருக்கின்றது. இலக்கிய உலகத்திலும் அவர்களின் பங்களிப்பு அதிகம் இருக்கிறது என்பதை அனைவருக்கும் எடுத்துரைக்கவும் அவர்களை இம்முயற்சியில் ஈடுபடுத்தி மற்றவர்களை ஊக்கப்படுத்தவும் இந்த இதழ் வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறோம்
இந்த சூழலில் நண்பர்கள் சிலரின் யோசனையில் புதிதாய் உருவெடுக்கின்றது ஒரு மென்னிதழ்.
உள்ளடக்கம்: சிறுகதை, கவிதை, கட்டுரை, நேர்காணல், புதிய வடிவங்கள்
வடிவம் : PDF கோப்புகளாக வெளிவரும்.
மென்னிதழ் இணைய இதழாக மட்டும் வெளிவரும்.
படைப்புகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் : 30/06/2008
ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மென்தமிழ் வெளிவரும்.
வாசகர்கள் ஒரு மடலிட்டால் மென் தமிழின் ஒவ்வொரு இதழும் தங்கள் அஞ்சல் பெட்டிக்கே வந்து சேரும்.
வாருங்கள் நாம் கை கோர்த்து ஓரு புதிய பொலிவான உலகினை படைப்போம்.
- மென் தமிழ் ஆசிரியர் குழு
11 comments:
அருமையான ஒரு தொடக்கம், அறை எண் 305 ஆல் விளைந்த விளைவா இது? ;)
//ம் சரியாகச் சொல்லிவிட்டீர்கள். அதுகூட காரணமாக இருக்கலாம்//
ம் சரியாகச் சொல்லிவிட்டீர்கள். அதுகூட காரணமாக இருக்கலாம்
:) நல்ல முயற்சி. வெற்றியடைய வாழ்த்துகள் தோழர்களே!
இணையத்தில் உதன் முதலாக தமிழ் வரக் காரணமே கணனி சம்மந்தப்பட்ட தொழில் வல்லுனர்கள் தானே?? அதை மறுக்க முடியாது! அவர்களைப் பின் தொடர்ந்தவர்கள் தான் இன்றைய இணைய தமிழ் ஆர்வலர்கள்.
உங்களுடைய இந்த முயற்சிக்கு தமிழை நேசிக்கும் அத்தனை உள்ளங்களும் நன்றி சொல்லும்..
அன்புடன்
சுவாதி
//Blogger ஸ்வாதி said...
:) நல்ல முயற்சி. வெற்றியடைய வாழ்த்துகள் தோழர்களே!
இணையத்தில் உதன் முதலாக தமிழ் வரக் காரணமே கணனி சம்மந்தப்பட்ட தொழில் வல்லுனர்கள் தானே?? அதை மறுக்க முடியாது! அவர்களைப் பின் தொடர்ந்தவர்கள் தான் இன்றைய இணைய தமிழ் ஆர்வலர்கள்.
உங்களுடைய இந்த முயற்சிக்கு தமிழை நேசிக்கும் அத்தனை உள்ளங்களும் நன்றி சொல்லும்..
//
ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றி சுவாதி
வாழ்த்துக்கள் மக்கா
நல்ல தொடக்கம்
சிறப்புடன் வளர்ந்து செழிக்கட்டும் படைப்புகள். (என்னோட பேரயும் சேர்த்துக்கோங்க படிக்க மட்டும் படைப்புகளுக்கு அல்ல :) )
ஆமா மக்கா வுமென் தமிழ் தனியா ஆரம்பிக்கிற ஐடியா இருக்கா என்ன :)
//Blogger மீறான் அன்வர் said...
வாழ்த்துக்கள் மக்கா
நல்ல தொடக்கம்
சிறப்புடன் வளர்ந்து செழிக்கட்டும் படைப்புகள். (என்னோட பேரயும் சேர்த்துக்கோங்க படிக்க மட்டும் படைப்புகளுக்கு அல்ல :) )
ஆமா மக்கா வுமென் தமிழ் தனியா ஆரம்பிக்கிற ஐடியா இருக்கா என்ன :)//
நன்றி மீறான்...
இங்கேயும் இடஒதுக்கீடு பிரச்சனையை ஆரம்பிச்சுட்டீங்களா?
//இது கணினிவல்லுனர்களுக்கான இதழ், ஆதலால் அவர்களை மையமாக வைத்து படைப்புகள் வருதல் சிறப்பு//
கணிணி வல்லுனர்களை மையமாக கொண்ட படைப்புகளுக்கு சிறப்பு என்பது சரியாக எனக்குப் படவில்லை. அனைத்து வகைப் படைப்புகளுக்குமான சிறந்த களமாக இருக்குமானால் நலம்.;-)
//யோசிப்பவர் said...
கணிணி வல்லுனர்களை மையமாக கொண்ட படைப்புகளுக்கு சிறப்பு என்பது சரியாக எனக்குப் படவில்லை. அனைத்து வகைப் படைப்புகளுக்குமான சிறந்த களமாக இருக்குமானால் நலம்.;-)//
நிச்சயமாக அனைத்து வகைப் படைப்புகளுக்குமான சிறந்த களமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்...
//ச்சின்னப் பையன் said...
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்...//
நன்றி சின்னப்பையன்...
மிக நல்ல முயற்சி.
வாழ்த்துக்கள் நண்பர்களே.
இதே போன்ற எமது இதழ் 'கணிமொழி'
http://kanimozhi.org.in
முற்றிலும் ஓபன் சோர்ஸ் மென்பொருட்கள் பற்றியது.
Post a Comment