Monday, January 28, 2008

தயவுசெய்து லால்பாக் போகாதீங்க





நான் 1998 ம் வருடம் பெங்களுர் லால்பாக்கிற்கு உறவினர்களுடன் வந்திருக்கின்றேன். அப்பொழுது உள்ள கற்பனையிலையே இருந்திருக்கலாம். நண்பர்களின் வற்புறுத்தலின் காரணமாக சமீபத்தில் அங்கு செல்ல நேரிட்டது. ஏண்டா போனோம்னு வருந்துகின்றேன்.

பெங்களுர் லால்பாக்கிற்கு நீங்கள் உங்களுக்குத் தெரிந்த எல்லா மொழிகளிலும் எவ்வளவு கெட்ட வார்த்தை இருக்கின்றதோ அவ்வளவு கெட்டவார்த்தையை கொண்டு அழைக்கலாம்.

யாருடைய படுக்கை அறைக்குள்ளோ நுழைந்துவிட்டதைப்போன்ற உணர்வினைத் தருகின்றது. மிக மிக மிக மிக மோசமான செய்கைகளில் காதலர்கள் இல்லை இல்லை வெளி உலகத்திற்கு அப்படி அடையாளப்படுத்திக் கொண்ட விபச்சாரர்கள் அவர்கள்.

உள்ளே நுழையும்பொழுதே ஒரு ஜோடி முத்தங்கள் பரிமாறிக்கொண்டிருக்கின்றனர். அதனைக் கண்டே ஆத்திரமாய் வந்தது. என்னடா பொது இடம் கூட பார்க்காமல் இப்படி நடக்கின்றார்களே என்று?

ஆனால் உள்ளே சிறிது தூரம் சென்று விட்டு திரும்பிய பொழுது அந்த ஜோடிதான் இருப்பதிலையே மிகவும் நாகரிகமான ஜோடி என்று உணர வைக்கும் அளவுக்கு உள்ளே மோசமான நிகழ்வுகள்.

ஒரு மரத்தின் உச்சியில் இருந்து ஒரு காதல் ஜோடி கதைத்து கொண்டிருக்கின்றார்கள் ஒருவேளை மிக உயர்ந்த காதல் என்று சொல்கின்றார்களே அது இதுதானோ?


நாங்கள் ஒரு ஜோடியை கடந்து சென்றோம். அந்தப்பையனுக்கு 16 வயது கூட இருக்காது. தன் வயதை ஒத்த ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தான்.

பேசிக்கொண்டிருந்தான் என்பதை விடவும் உரசிக்கொண்டிருந்தான் என்று சொல்லலாம்.





ஆனால் நெருங்க நெருங்க மனம் துடித்துப்போனது. எந்த செய்கைகள் பொது இடங்களில் வைத்து செய்யக்கூடாதோ- அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது.

அந்த இடத்தை கடந்து செல்ல எங்களுக்கு கூச்சமாக இருந்தது. நாங்கள் பார்த்துவிட்டால் அவர்களுக்குத்தான் அவமானம், ஆனால் அவர்கள் என்ன நினைத்தார்கள் என்றால், நாங்கள் கடந்து சென்றால் எங்களுத்தான் அவமானம் என்ற நினைப்பில் அலட்சியமாய் தங்களது பணியை தொடர்ந்தார்கள்.

நான் அவர்கள் கேட்கும் தூரத்தில் சென்று "ஹலோ போலிஸ்" என்று எனது செல்போனில் உரக்க கூறி இங்கு விபச்சாரம் நடப்பதாகவும் உடனே வரும்படியாகவும் சத்தம் போட்டு பேச அவர்கள் மட்டுமல்ல பக்கத்தில் மறைந்து இருந்த இன்னொரு ஜோடியும் அவசர அவசரமாய் இடத்தை காலி செய்தார்கள்.

சாதாரணமாய் கடந்து செல்பவர்களே இந்தக் காட்சிகளெல்லாம் காணும்பொழுது கர்நாடகா அரசின் காதுகளுக்கு இது எட்டாமலா இருக்கும்? ஏன் இதனை அலட்சியப்படுத்துகின்றார்கள்?

பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொள்ளும் இதுபோன்றவர்களை அலட்சியப்படுத்தினால் அவர்களுக்கு இது சரிதானோ என்ற தோற்றத்தைதான் ஏற்படுத்தும். அது மட்டுமல்ல அந்தத் தலைமுறையினரை பார்த்து வளருகின்ற மற்றவர்களும் அதனையே பின்பற்ற தொடங்கிவிடுவர். இவங்கள எல்லாம் கண்டிப்பதற்கு ஒரு வழியும் இல்லையா..?

தயவுசெய்து பெங்களுர் வந்தால் லால்பாக்கிற்கு போகவேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் கைவிட்டு விடுங்கள்.

லால்பாக்கில் மட்டுமல்ல பொது இடங்களில் கூட இந்த அத்து மீறல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றது. பேருந்து நிறுத்தங்களின் ஓரங்களில் உடல் உரசல்கள் விடைபெறும் பொழுது தழுவல்கள் முத்தங்கள் மேலைநாட்டுக்குள் நுழைந்து விட்டோமோ என்ற பிரமிப்பைத் தருகின்றது.

வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கின்றார்களோ இல்லையோ வீதிக்கு ஒரு காதலர்கள் தோன்றுகின்றார்கள். உண்மையான காதலர்களாகவே இருக்கட்டுமே அதற்காக இப்படியா பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொள்வது..?

ஓவ்வொரு பேருந்து நிறுத்தங்களின் மறைவிலும் தவறுகள் நடக்கின்றது. அவர்கள் ஆண் பெண் நட்பின் பெருமையை வெளிப்படுத்துவதாக இருந்தால் தைரியமாக மறைவுக்கு வெளியே நின்று பேசலாமே?

நான் தங்கியிருந்த பிடிஎம் பகுதியில் ஒரு பெண்கள் விடுதியின் வாசலில் சரியானக் கூட்டம். இளம் வயது வாலிபர்கள் நாயைப் போல காவல் நிற்கின்றார்கள். முத்தங்கள் எல்லாம் சுவாசிப்பதைப்போல அனிச்சை செயலாக பரிமாறப்பட்டு வருகின்றது.

திருநெல்வேலியைச் சார்ந்த எனக்குத் தெரிந்த நண்பி ஒருவர் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கின்றார். ஒருநாள் அவர்கள் கம்பெனியில் பார்ட்டி என்று தனது தாயாரையும் அழைத்துச் சென்றிருக்கின்றார்கள்.

தமிழ்நாட்டில் கலாச்சார பெருமை வாய்ந்த ஒரு ஊரில் இருந்து வந்து அங்கு வேலை பார்க்கும் சில தமிழ்பெண்டிர்கள் தனது சக தோழர்களுடன் தோளில் கை போட்டுக்கொண்டு பேசுவதும், பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு ஜோக் அடிக்கின்ற சாக்கில் தொடைகளைத் தட்டுவதுமாக, மிக சாதாரணமாக மிக மிக சாதாரணமாக விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவர்கள் கொதிப்படைந்து அந்தப் பெண்களைக் கண்டித்திருக்கின்றார்கள்.

ஏம்மா நீ எந்த ஊர்ல இருந்து வந்தேன்னு உனக்கு ஞாபகம் இருக்கா?..இங்கு வந்தா என்ன இப்படித்தான் இருக்கனும்னு சட்டமா என்ன..? இனிமே நீ இப்படி இருப்பதைப் பார்த்தால் நான் உங்க வீட்டுக்குத் தகவல் அனுப்பிருவேன் என்று சத்தமிட்டிருக்கின்றார்கள்.

சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்தால் என்ன கலாச்சார சீர்கேட்டினையும் கிரகித்துக் கொள்ளவேண்டும் என்கிற எழுதப்படாத சட்டமேதும் இருக்கின்றதா என்ன? அவர்கள் வேலை பார்ப்பது வேண்டுமானால் அமெரிக்க கம்பெனிக்காக இருக்கலாம் ஆனால் அவர்கள் வசிப்பது இந்தியாவில்தான் என்பதை ஏனோ மறந்து போகின்றார்கள்.

இங்குள்ள கலாச்சார மோகம் நம்மவர்களை மிகவும் மாற்றி விடுகின்றது. எத்தனையோ பெண்கள் குடும்பத்தை காப்பாற்றும் கட்டாயத்தில் இங்கு வந்து வாழ்க்கையோடும் கலாச்சாரத்தோடும் நாகரீகமாய் போராடிக்கொண்டுமிருக்கின்றார்கள். ஆனால் இந்தக் கடலுக்கு மத்தியில் அந்த நீரத்துளிகள் காணாமல் போய்விடுகின்றன.

- ரசிகவ் ஞானியார்

30 comments:

Unknown said...

//அவர்கள் வேலை பார்ப்பது வேண்டுமானால் அமெரிக்க கம்பெனிக்காக இருக்கலாம் ஆனால் அவர்கள் வசிப்பது இந்தியாவில்தான் என்பதை ஏனோ மறந்து போகின்றார்கள்.//

;)

நாடோடி இலக்கியன் said...

நல்ல பதிவு!
சென்னைக்கு ஒரு மெரினாபோல் பெங்களூருக்கு ஒரு லால் பார்க்கா?.
அப்புறம் இந்த சாப்ட் வேர் (நீங்கள் குறிப்பிட்ட) ஒரு சில அம்மனிகள்,நாகரிகம் என்பதனை தவறாக புரிந்து கொண்டதின் வெளிப்பாடுகள்.ஆண்,பெண் நட்பு தவறே அல்ல,ஆனால் உடல் சீண்டி விளையாடுவதெல்லாம் அபாயகரமானது.எந்த நாகரீகத்தாலும் இயற்கையை விஞ்ச முடியாது என்பது அந்த சகோதரிகளுக்கு தெரியுமோ,தெரியாதோ?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//நெல்லை காந்த் said...



;)//

அது என்னங்க நெல்லைகாந்த்..வித்தியாசமா இருக்கே

வருகைக்கு நன்றி

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// நாடோடி இலக்கியன் said...

ஆண்,பெண் நட்பு தவறே அல்ல,ஆனால் உடல் சீண்டி விளையாடுவதெல்லாம் அபாயகரமானது.எந்த நாகரீகத்தாலும் இயற்கையை விஞ்ச முடியாது என்பது அந்த சகோதரிகளுக்கு தெரியுமோ,தெரியாதோ?
//


சரியாகச் சொன்னீர்கள் இலக்கியன்..

ஏதோ ஆண் நண்பர்களோடு உடல் சீண்டுதல் அல்லது தீண்டுதல் இல்லையென்றால் தாங்கள் கிராமத்து பெண்கள் என்று நினைத்து விடுவர்களோ என்று பயந்து அந்த பெண்டிர்கள் அவ்வாறு செய்கின்றார்கள்

எங்கே போய் முடியுமோ தெரியல..?

TBCD said...

இதில் ஏதோ ஆதிக்கம் தொனிக்குதே.. ;)

அவர்கள் செய்வதின், பொறுப்பை அவர்கள் ஏற்பார்கள்.

அதற்கு இவ்வளவு ஆத்திரம் ஏன்.

கலாச்சாரம் என்று நீங்கள் சொல்லவது எதை..என்றுச் சொல்ல முடியும்மா..

அதற்கும் கீழான செய்கைகளை உங்கள் வீட்டின் உள்ளே தொலைக்காட்சியில்..பார்க்கும் போது கொதித்ததா..

வேண்டும் என்றால்..ஒரு "A" போர்டு வைக்கச் சொல்லலாம்...

TBCD said...

அடுத்த தமிழ்மணத்தின் சண்டை இந்தப் பதிவில் என்று ஒரு குருவி சொல்லிச்சு.. ;)


உரையாடல்..நடத்தலாம்..

என்ன சொல்லுறீங்க..

Anonymous said...

நமக்கு எதுவும் மாட்டமாட்டேங்குதுன்னு தானே ஞானியார் எரிகிறார் :)))))))))

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Blogger TBCD said...

இதில் ஏதோ ஆதிக்கம் தொனிக்குதே.. ;)//

ஆதிக்கம் இல்லை நண்பா ஆதங்கம்..

// அவர்கள் செய்வதின், பொறுப்பை அவர்கள் ஏற்பார்கள்.

அதற்கு இவ்வளவு ஆத்திரம் ஏன்.//


அப்படியென்றால் கண்டுகொள்ளாமல் விடவேண்டுமா என்ன? ஏதாவது ஒரு எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால் லால்பாக் அல்ல இலவச விடுதி என்று மாற்றிக் கொள்ளலாம்

// கலாச்சாரம் என்று நீங்கள் சொல்லவது எதை..என்றுச் சொல்ல முடியும்மா..

அதற்கும் கீழான செய்கைகளை உங்கள் வீட்டின் உள்ளே தொலைக்காட்சியில்..பார்க்கும் போது கொதித்ததா..//

சம்பந்தம் இல்லாமல் சொல்கின்றீர்கள்..

// வேண்டும் என்றால்..ஒரு "A" போர்டு வைக்கச் சொல்லலாம்...//


ம் நல்ல ஐடியா அவரவர் வீட்டு தொலைக்காட்சி முன்பும் அதே போர்டை மாட்டலாம்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// TBCD said...

அடுத்த தமிழ்மணத்தின் சண்டை இந்தப் பதிவில் என்று ஒரு குருவி சொல்லிச்சு.. ;)
உரையாடல்..நடத்தலாம்..

என்ன சொல்லுறீங்க..//

விவாதம் நடத்தலாம். தங்களுக்கு முடிந்தவரை என் விளக்கங்களை நேரமிருக்கும்பொழுதெல்லாம் தருகின்றேன்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// Anonymous said...

நமக்கு எதுவும் மாட்டமாட்டேங்குதுன்னு தானே ஞானியார் எரிகிறார் :)))))))))//

தங்களுடைய மன ஓட்டத்தை என்னிடம் பகிர்ந்து கொள்கின்றீர்களா நண்பா...?

Never give up said...

Namma oorleya Gandhi Mandapam, Valluvar Kottam, all the beaches ellam vittuteengale.

Never give up said...

Namma oorla Gandhi Mandabamum appadithaan iruku. College poramadhi morning 8.30 Stopping vasala wait pannraanga. We cannot take our children to Gandhi Mandabam nowadays. Idhu enga poi mudiyumnu theriayale. Paarka naamale thappu pannra madhiri romba avamaanama iruku.

புரட்சி தமிழன் said...

கலஞர் தொலைக்காட்சியில் வரும் நமீதவின் ஆடையைவிடவா. இவைகளெல்லாம் நாகரீகத்தின் அடையாளங்களாக சித்தரிக்கப்படுகிறதே கேட்கவேன்டியவர்களே இப்படி என்றால் கேட்கப்போவது யார்?
'முதலில் நம்ம ஊருக்கு வாங்க பிறகு அடுத்த ஊருக்குப் போகலாம்'

Unknown said...

:-((

Yogi said...

இந்த மாதிரிக் கூத்துக்கள் லால்பாக் மட்டுமல்ல பெங்களூரில் பரவலாக எல்லா இடங்களிலும் நடக்கின்றன. முதன்முதலில் ஃபோரம் போன போது அங்கே வெளியில் எல்லோர் முன்னிலும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த ஜோடியைப் பார்த்து அதிர்ந்து போனேன்.

Anonymous said...

///தங்களுடைய மன ஓட்டத்தை என்னிடம் பகிர்ந்து கொள்கின்றீர்களா நண்பா...?///

சும்மா காமெடிக்காக கலாய்த்தோம். விபச்சாரம், காதல், களவு ஆகியவை மனிதகுலம் உருவானதில் இருந்து இருக்கிறது. அதனால் அதனை கண்டும் கானாமல் விட்டுவிட்டு கடந்துசெல்வதே முறையாகும். அய்யோ அய்யோ என்று வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொள்ளுதல் பழமைவாதமாகும்.

நீங்கள் இதுபோன்ற காட்சிகளை காணவிருப்பம் இல்லை என்றால் பாக்கிஸ்தான் வசீரிஸ்தானிலோ, ஆப்கன் தலீபன் கட்டுப்பாட்டுப்பகுதிக்கோ சென்று குடியேறும்...

Anonymous said...

who will tie the bell around the cat's neck?????????

Thandanaikal kadumai yakapattal than ithu pondra anahareegamana seyalkalai thaduka iyalum ....

ஸ்ரீ சரவணகுமார் said...

விபச்சாரம், காதல், களவு ஆகியவை மனிதகுலம் உருவானதில் இருந்து இருக்கிறது. அதனால் அதனை கண்டும் கானாமல் விட்டுவிட்டு கடந்துசெல்வதே முறையாகும். அய்யோ அய்யோ என்று வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொள்ளுதல் பழமைவாதமாகும்.

முற்றிலும் உண்மை

//ஏம்மா நீ எந்த ஊர்ல இருந்து வந்தேன்னு உனக்கு ஞாபகம் இருக்கா?..//
//தமிழ்நாட்டில் கலாச்சார பெருமை வாய்ந்த ஒரு ஊரில் இருந்து வந்து அங்கு வேலை பார்க்கும் சில தமிழ்பெண்டிர்கள்//
நீங்கள் அந்தந்த ஊரில் சென்று பாருங்கள், எங்கெல்லாம் மறைவான இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் இது போன்ற நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

உண்மைத்தமிழன் said...

ஞானியாரே உங்களது வருத்தங்கள் அனைவருக்கும் இருக்கக் கூடியவைதான் என்றாலும் எல்லா ஊரிலும் இது போன்ற சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன.

தனிமனித உரிமை என்பது எதுவரை என்பது பற்றி மக்களுக்கும், அரசுகளுக்கும் பரிந்துணர்வு வராதவரையில் இது போன்ற நிகழ்வுகளை நீங்களோ, நானோ தடுக்க முடியாது.. வருத்தம் மட்டுமே பட முடியும்..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Never give up said...
Paarka naamale thappu pannra madhiri romba avamaanama iruku.
//

என்ன செய்வது நியாயத்திற்கு கட்டுப்படுபவர்கள் இப்படித்தான் நினைக்கத் தோன்றுகின்றது....நாம் தடுக்காமல் இருப்பது நமது தப்புதான்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ஞானியாரே உங்களது வருத்தங்கள் அனைவருக்கும் இருக்கக் கூடியவைதான் என்றாலும் எல்லா ஊரிலும் இது போன்ற சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன.
//

அதனை நாம் நினைத்தால் மாற்றலாமே?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ஸ்ரீசரண் said...
நீங்கள் அந்தந்த ஊரில் சென்று பாருங்கள், எங்கெல்லாம் மறைவான இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் இது போன்ற நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
//

அங்கெல்லாம் கடுமையான சட்டம் பாயவேண்டும்.

//Mrs.Karl Marx said...
who will tie the bell around the cat's neck?????????

Thandanaikal kadumai yakapattal than ithu pondra anahareegamana seyalkalai thaduka iyalum ....

//

ம் உண்மைதான் நண்பா..கடுமையான சட்டம்தான் இதற்கு தீர்வு

//anonymous:நீங்கள் இதுபோன்ற காட்சிகளை காணவிருப்பம் இல்லை என்றால் பாக்கிஸ்தான் வசீரிஸ்தானிலோ, ஆப்கன் தலீபன் கட்டுப்பாட்டுப்பகுதிக்கோ சென்று குடியேறும்...
//

தவறு செய்பவர்களை அங்கு போகச் சொல்லுங்களேன்..உங்களின் தீர்ப்பு வித்தியாசமாக இருக்கின்றது..நன்றி நியாயமான தீர்ப்புக்கு


//பொன்வண்டு said...
அங்கே வெளியில் எல்லோர் முன்னிலும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த ஜோடியைப் பார்த்து அதிர்ந்து போனேன்.

//

கட்டிப்பிடிப்பதெல்லாம் சாதாரணமாகிவிட்டது இப்பொழுது



// சுல்தான் said...
:-((

//

:( மாறவேண்டும்


//புரட்சி தமிழன் said...

'முதலில் நம்ம ஊருக்கு வாங்க பிறகு அடுத்த ஊருக்குப் போகலாம்'
//

இந்தியா நம்ம ஊருதானுங்க?

Anonymous said...

nice article rasikav..

- kumar

G.Ragavan said...

ரசிகவ், கட்டுப்பாடான சட்டம் எதற்கு? இதைத் தெருவில் செய்யாமல் இருப்பதற்கா? உடனே எல்லாரும் பாதுகாப்பான இடங்களுக்குப் போவார்கள். மொத்தத்துல கண்ணுக்கு தெரியுறதுதான் உறுத்துதல்னு தோணுது. தெரியாட்டி..நடக்குதா இல்லையான்னே தெரியாதே...

ஆனா ஒன்னு....இப்படி இருக்கக்கூடாதுன்னு சொல்ல ஒங்களுக்கு எவ்வளவு உரிமையிருக்கோ...அந்த அளவுக்குச் சமமான உரிமை அவங்களுக்கும் இருக்கு. அதையும் மறக்கக்கூடாது.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// G.Ragavan said...
ஆனா ஒன்னு....இப்படி இருக்கக்கூடாதுன்னு சொல்ல ஒங்களுக்கு எவ்வளவு உரிமையிருக்கோ...அந்த அளவுக்குச் சமமான உரிமை அவங்களுக்கும் இருக்கு. அதையும் மறக்கக்கூடாது.
//

ம் அது சரி ராகவன்...ஆனால் அவர்களுக்கு அந்த உரிமையை கொடுத்தது யார்..? சட்டத்தின் பயமின்மைதானே..? கண்ணுக்கு முன்னால் நடக்கின்ற தடுக்க முடிகின்ற அநியாயங்களை தனிமனிதனால் தடுக்க முடியாதா...?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//nice article rasikav..

- kumar//

நன்றி குமார்

Anonymous said...

//சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்தால் என்ன கலாச்சார சீர்கேட்டினையும் கிரகித்துக் கொள்ளவேண்டும் என்கிற எழுதப்படாத சட்டமேதும் இருக்கின்றதா என்ன? அவர்கள் வேலை பார்ப்பது வேண்டுமானால் அமெரிக்க கம்பெனிக்காக இருக்கலாம் ஆனால் அவர்கள் வசிப்பது இந்தியாவில்தான் என்பதை ஏனோ மறந்து போகின்றார்கள்//
அலுவலகங்களில் ஆணிந்து வரும் உடைகளும் அப்படித்தான் இருக்கின்றன. நானும் சில பேரும் அப்படி உடை அணிந்து வரும் பெண்களை வைத்த கண் வாங்காமல் 'அதனையே' பார்ப்பது உண்டு. சில நேரங்களில் ஏண்டா இங்க பார்க்குற என்று கேட்டால், உடை அணிந்திருக்கும் உனக்கே கூச்சம் இல்லாத போது , பார்ப்பதற்கு ஏன் கூச்சப்ப்படனும்? என்று கேட்டால் shit! என்று திட்டிக் கொண்டே செல்வார்கள். சில முறை அவர்கள் மேலிடத்தில் புகார் அளித்த போதும் நாங்கள் அளித்த பதிலும் இதே. அவர்களாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போது கொஞ்சம் கட்டுக்குள் இருக்கிறது.

முஹம்மது ,ஹாரிஸ் said...

அவரு சொன்ன விசயத்தை யாரும் சரிய புரியலை, பூங்கா என்பது சிறுவர் முதல் பெரியவர்கள் வரை வரும் இடம் அங்குபோய் இப்படி நடந்தால் எப்படிப்ப ஏதுக முடிய்ம்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//தங்கத்தமிழன்ஹாரிஸ் said...
அவரு சொன்ன விசயத்தை யாரும் சரிய புரியலை, பூங்கா என்பது சிறுவர் முதல் பெரியவர்கள் வரை வரும் இடம் அங்குபோய் இப்படி நடந்தால் எப்படிப்ப ஏதுக முடிய்ம்
//

சரியாகச் சொன்னீர்கள் நன்றி தங்கத்தமிழன்...

Anonymous said...

migachirantha pathivu...

vazhthukal...

தேன் கூடு